Daily Archives: பிப்ரவரி 25th, 2011

சலுகைகள் அள்ளி வந்தது ரயில்வே பட்ஜெட்

மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய பட்‌ஜெட்டில் நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே தொழிற்சாலைகள், புதிய ரயில்வே பாதை , மற்றும் பயணிகள் வசதிக்காக தங்குமிடம், என பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். இந்த ஆண்டு ( 2011-2012 ) ரயில்வே பட்ஜெட்டுக்கு 57 ஆயிரத்து 630 கோடி ஒதுக்கீடு செய்யும் செலவில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே ஊழியர்கள் இந்த நிர்வாகத்தின் சொத்து என்றும் அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு புதிய திட்டம் உருவாக்கி இருப்பதாகவும் இன்று மம்தா பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறினார். பயணிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேற்குவங்கத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய மம்தா நான் எனது மாநிலமான மேற்கு வங்கத்திற்கு செய்வதில் பெருமை கொள்கிறேன். லாலு என்ன செய்து கொண்டிருந்தார், இவரது காலத்தில் பீகாருக்கு கூடுதல் திட்டங்களை அறிவிக்கவில்லையா அப்போது எதுவும் சொல்லாமல் இப்போது ஏன் கூச்சலிடுகின்றனர் என அவையில் கேட்டார். இதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் லாலு திகைத்து பார்த்தப்படி இருந்தார்.


இன்றைய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு :

2010 -2011 ல் ஒரு லட்சம் கோடியை தாண்டி லாபம் கிடைத்துள்ளது.

2010- 2011 ல் 3 ஆயிரத்து 500 கோடி இழப்பு

மேற்குவங்கம் நந்திகிராமில் ரயில்வே தொழிற்பூங்கா,

கோல்கட்õவில் மெட்ரோ ரயில் தொழிற்சாலை.

மணிப்பூரில் டீசல் என்ஜின் ரயில் தொழிற்சாலை.

புதிய ரயில் பாதை 700 கி.மீட்டர் தொலைவு அமைக்கப்படும்.

கேரளாவில் ரயில் தொழிற்சாலை.

ஜம்மு காஷ்மீரில் ரயில் தொழிற்சாலை.

ரேபரேலியில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை .

மகாராஷ்ட்டிராவில் காஸ் அடிப்படை பவர் பிளாண்ட் .

மேற்குவங்கம் சிங்கூரில் மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை.

10 ஆயிரம் கோடிக்கு கடன் பத்திரம் .

புதிய ரயில்பாதைக்கு 9 ஆயிரத்து 853 கோடி ஒதுக்கீடு.

புதிதாக 442 ரயில்வே ஸ்டேஷன்கள் வரும் 2012 க்குள் அமைக்கப்படும்.

டார்ஜிலிங்கில் சிறப்பு மென்பொருள் பூங்கா.

சரக்கு ரயில்பாதை அமைக்க 12 ஆயிரம் ஏக்கர் ஒதுக்கப்படும்.

ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகம்.

குளிர்சாதன மற்றும் ஏசி. மற்றும் குளிர்சாதன இல்லாத டிக்கட் முன்பதிவு கட்டணம் 50 சதம் குறைப்பு.

சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிக்கு புதிய மின்ரயில்கள்.

மதுரை சென்னை இடையே நிற்காத தூரந்தோ ரயில் விடப்படும்.

சென்னை, ஐதராபாத், கோல்கட்டா ஆகியவற்றை முழுமையாக இணைக்கும் நெட்வொர்க் அமைக்கப்படும்.

சென்னை கோல்கட்டா செல்லும் அதிவேக தூரந்தோ ரயில் அறிமுகம்

கன்னியாகுமரியில் இருந்து அசாமுக்கு புதிய ரயில் அறிமுகம் .

கோவை மேட்‌டுப்பாளையம் இடைய புதிய ரயில்.

தூத்துக்குடி கோவை இடையே இணைப்பு ரயில்.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்.

கூடுதலாக 3 சதாப்தி ரயில்கள் அறிமுகம்.

கோல்கட்டாவிற்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள்

முன்னாள் ராணுவத்தினர் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம், மேற்குவங்கம் என இரு மாநில தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை பாதிக்காத வகையில் , கட்டணம் உயர்த்தப்படாமல் இந்த 2011- 2012 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்துள்ளார். கட்டண விலை உயர்வை குறித்து பெரிய அளவி்ல மாற்றம் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா தாக்கல் செய்வது இது 3 வது பட்ஜெட் ஆகும்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த மம்தாவை நிருபர்கள், புகைப்படக்ககாரர்கள் சூழ்ந்து கொண்டு படமெடுத்தனர். ரயில்வே துறையின் நிதி ஆதாரம் கையைப்பிடித்தாலும், பயணிகள் கட்டணத்தில் கை வைக்க மம்தாவுக்கு விருப்பமில்லை . பட்ஜெட் போடப்படுவது மக்களுக்காக , மக்களால் உருவாக்கப்படும் பட்ஜெட் இதனால் இது ஒவ்வொரு சாதாரண மனிதனையும் பாதிக்காது என்று இன்று பார்லி.,க்கு வந்த போது மம்தா கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் , மம்தாவின் ரயில்வே பட்ஜெட்டை பாராட்டியுள்ளார். இந்த பட்ஜெட் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் உள்ளது என கூறியுள்ளார்.

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் எது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது? தொடர்ந்து இயங்கும் பல்கலைக்கழகம் என்று பார்த்தால், எங்குமில்லை என்பதுதான் நமது உடனடி பதிலாக இருக்கும்.

கி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் துவங்கப் பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தருணத்திலே நாளந்தா பல் கலைக் கழகமானது ஓர் ஆப்கான் தாக்குதலில் பக்தியார் கில்ஜி என்ற கொடூர வெற்றி வீரனால் அழிக்கப்பட்டது.

இந்தியாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையமாக ஐந்தாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தனது 700 ஆண்டு இருப்பினை முடித்துக் கொண்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பழமை வாய்ந்த பலோக்னா பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும் போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக் கழகமாகவும் நாளந்தா விளங்குகிறது. அன்று அழிக்கப் படாமல், இன்று வரை நிலைத்திருந்தால் உலகிலேயே தொன்மையான பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கி யிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நாளந்தாவோடு ஒப்பிடப்படும் மற்றொரு பல்கலைக்கழகம் கெய்ரோவில் உள்ள அல்- அசார் பல்கலைக்கழகம். இதுவும் தொடர்ந்து நிலைக்க வில்லை. இது கி.பி. 970- இல் தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்திலே நாளந்தா 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அமைந்திருந்தது.

இது உண்மையிலேயே நாம் பெருமை பாராட்ட வேண்டிய பழமைத்துவமே! தற்போது இந்தப் பல்கலைக் கழகம் மறுபடியும் துவங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இப்பணியின் இடைக்கால நிர்வாகக்குழுவின் தலைவராக நான் இருப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும், 800 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சீரமைப்பதும் மிகவும் கஷ்டமாக கருது கிறேன். நாளந்தா ஒரு பழமை வாய்ந்த கல்வி நிலையம். உலகின் பல நாடுகளிலிருந்து, குறிப்பாக சீனா, திபெத், கொரியா, ஜப்பான் மேலும் ஒருசில ஆசிய நாடுகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் மாணாக்கரும் கவர்ந்திழுக்கப்பட்டனர். தங்கிப் படிக்கும் வசதி கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில் 10,000 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களைப் படித்தனர். சீன மாணவர்கள் குறிப்பாக யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்ற ஏழாம் நூற்றாண்டு மாணவர்கள் நாளந்தாவில் அவர்கள் கற்றதையும், பார்த்ததையும், கல்விமுறைகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

தற்செயலாக, பழைய சீன வரலாற்றைப் படிக்கும்போது நாளந்தாவில் மட்டும்தான் சீன அறிஞர்கள் பயின்றார்கள் என தெரிய வந்தது.

நாளந்தாவோடு, விக்ரமஷீலா மற்றும் ஓடந்தபூரி போன்ற ஏனைய பல்கலைக்கழகங்களும் அருகாமையில் இருந்தன. யுவான் சுவாங் நாளந்தாவில் படித்தாலும், இந்த கல்வி நிறுவனங் களைப் பற்றியும் எழுதியுள்ளார். நாளந்தாவின் பாரம்பரியத்தைப் பற்றி நினைக்கும் தருவாயில், நாளந்தாவின் சமூக கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

விக்ரம்ஷீலா மற்றும் ஓடந்தபூரி போல நாளந்தாவும் ஒரு புத்த மத கல்வி மையம், மேலும் இந்த கல்வி மையங்களின் முக்கிய நோக்கம் புத்தமத தத்துவத்தைப் பற்றியும், பயிற்சியைப் பற்றியும்தான். மருத்துவம், சுகாதார நலம் போன்ற ஒரு சில துறைகள் புத்த கருத்துகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தன. மற்ற துறைகளான கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவை புத்த கலாச்சாரத்தின் தன்மையுடன் இருந்தன. ஏனைய பிற புத்தமத அறிவுசார் கேள்விகளை, பகுத்தாராய்வதில் ஆர்வத்தோடு ஒப்பிட்டு தொடர்புபடுத்தின.

நாளந்தா பல்கலைக்கழக மாணவரான இட்சிங் சமஸ்கிருதத்தி லிருந்து சீன மொழிக்கு தாந்திரீக புத்தகங்களை மொழி பெயர்த்தவர்களுள் ஒருவர். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு களில் தாந்திரீகத்தை பலரும் பின்பற்றினர். தாந்திரீக பண்டிதர்கள் கணிதத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், தாந்திரீக கணித மேதைகள் சீன கணிதத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
ஜோசப் நீதம் கூறுவதுபோல, “”மிகவும் சிறப்பு வாய்ந்த தாந்திரீகர் இஜிங் ஆவார். இவர் சிறந்த சீன வானியல் வல்லுநரும், கணித மேதையும் ஆவார். இட்சிங் நாளந்தாவின் மாணவர் அல்ல. ஆனால் சமஸ்கிருதத்தில் சரளமாக பேசும் திறமையோடு இருந்தார். ஒரு புத்த மத சன்னியாசியாக  இட்சிங் இந்திய மத சார் இலக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் வானியலைப் பற்றிய இந்திய எழுத்துகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய சொந்த மத தொடர்பைக் கடந்து, இட்சிங் அவர்களின் கணித மற்றும் அறிவியல் சம்பந்தமான வேலைகள் மத அடிப்படையில் இருக்கின்றன என்பது தவறாகி விடும். இட்சிங் குறிப்பாக பஞ்சாங்கம் கணக்கிடுவதிலும் கவனம் செலுத்தினார். மேலும் அரசின் ஆணைப்படி, சீன நாட்டுக்கு ஒரு புதிய காலண்டரையும் உருவாக்கினார்.

எட்டாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த இந்திய வானியலாளர்கள் பஞ்சாங்கத்தைப் படிப்பதில் முக்கோணவியலை சிறப்பாக பயன் படுத்திக் கொண்டனர். இந்த இயல்பானது உலகளாவிய கருத்துப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அந்த நேரத்தில் மேற்கு நாடுகளிலும் இது சிறப்பாய் பரவியது. இந்த காலத்தில் தான் இந்திய முக்கோணவியல் அரேபிய நாடுகளில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதுவே எதிர்காலத்தில் ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பொதுவான அறிவு உத்வேகம், குறிப்பாய் ஆராயும் மற்றும் அறிவியல் கேள்விகளின் மேல் உள்ள ஆர்வம்தான் பழைய நாளந்தாவில் இருந்த பாராட்டப்படக்கூடிய விஷயம். ஒரு மதசார் அமைப்பாக இருந்தது நாளந்தாவுக்கு தனிச் சிறப்பு அல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மாறாக நாளந்தா மதத்தையும் தாண்டி பொதுவான அறிவுசார், அறிவியல் படிப்புகளை வளர்த்தெடுத் தது. இது பலருக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியது.

சர் ஐசக் நியூட்டன் மதம் சார்ந்தவர். ஆனால் கடவுளை அறிய முற்படாதவர். இவர் இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வர். ஆனால் அவருடைய கல்லூரியோடு எந்த பிரச்சினையும் கொள்ளவில்லை. இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டுமெனில், பதுவாவில் இருந்த கிறிஸ்தவ கல்லூரியில்தான் கலிலியோ கலிலி படித்தார்.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தகைய பிரச்சினை எழுந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பல ஆவணங்கள் வெளிவந்த பிறகு, நாளந்தாவில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவில் குழப்பங்கள் இருந்ததா என்பதை நாம் அறிந்து கொள்வோம். மிகத் தெளிவாக தெரிவது என்னவென்றால், இந்த புத்தமத அமைப்பானது, நாளந்தா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே பகுத்தாய்வு மற்றும் அறிவியல் பாடங்களை கற்பதற்கு பல வாய்ப்பு களைத் தந்தது.

நாளந்தாவில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் பக்தியார் கீல்ஜி மற்றும் அவரது படை வீரர்களால் தீக்கிரையாகின. ஆகவே, அங்கு படித்த மாணவர்கள் பார்த்தவற்றைப் பதிவு செய்தவற்றைத்தான் நம்பியாக வேண்டும்.

மேலும் யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்றவர்கள் எழுதியதைத்தான் நாம் அதிகம் நம்பிட வேண்டும். அதன் அடிப்படையில் பார்க் கும்போது அங்கு நடத்தப்பட்ட பாடங்களும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட துறைகளானவை, மருத்து வம், பொதுச் சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக் கலை, மதம், வரலாறு, சட்டம், மொழியியல் என்பதும் தெளிவாகிறது.

இட்சிங் மற்றும் யுவான் சுவாங் போன்றோர் கணிதப் படிப்பிலே பங்கேற்கவில்லை.  இந்தியக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இட்சிங் போன்றோர் நாளந்தாவில் படிக்கவில்லை. இந்தியா, சீனா அல்லது உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மற்றவர்கள் இருந்திருக் கலாம். ஆனால் அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. இதைப் பற்றிய ஒரு சாட்சி  கண்டிப்பாக வரும் என்பதுதான் எனது நம்பிக்கை.

ஹேங்ஓவரா? காபி குடித்தால் போதும்!

முந்தின நாள் இரவு பார்ட்டியின் போது, மூக்கு முட்ட குடித்து விட்டு, மறுநாள் காலை எழுந்திரிக்க முடியாமல், கடும் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? “ஹேங்ஓவர்’ எனப்படும் போதை சரியாக தெளியாத இந்த நிலையில் இருந்து தப்பிப்பது எப்படி?
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில், தாமஸ் ஜெப்பர்சன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த நிலை குறித்து ஆராய்ச்சி செய்தனர். சில எலிகளைப் பிடித்து, அதற்கு எத்தனால் ஊசி போட்டனர். சில மணி நேரங்களில், அந்த எலிகள் தலைவலியில் அவதிப்பட்டதை உணர்ந்தனர். பின்னர் காபின் கலந்த ஊசி போட்டதும், எலிகள் சகஜ நிலைக்கு வந்தன. முழு போதை ஏற்றி கொண்டவர்களுக்கு, சூடாக ஒரு கப் காபியும், தலைவலி நிவாரணி மாத்திரையும் கொடுத்தால், அவர்கள் வலி மற்றும் ஹேங்ஓவரில் இருந்து தப்பிப்பர் என, இந்த ஆராய்ச்சியின் போது தெரிய வந்தது.

முழுத்திரையில் பிரிண்ட் பிரிவியூ

டாகுமெண்ட் அச்செடுக்கும் முன் அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பிரிண்ட் பிரிவியூ காட்டும். இதன் தோற்றம் ஸ்கிரீனில் தெரியும் போது டாஸ்க் பார் மற்றும் டூல்பார்களும் காட்டப்படும். இதனால் அதன் தோற்றத்தின் முழு பரிமாணம் நமக்குக் கிடைக்காது. இவற்றைத் தற்காலிகமாக மறைத்து பிரிண்ட் பிரிவியூ காட்சியைக் காட்டும்படி செட் செய்திடலாம்.
இதற்கு டாகுமெண்ட்டைத் திறந்த பின்னர் File மெனுவில் Print Preview தேர்ந்தெடுக்கவும். அதன் பின் மேலாக உள்ள Close பட்டன் அருகே Full Screen பட்டன் கிடைக்கும்.இதில் கிளிக் செய்தால் திரை முழுவதும் டாகுமெண்ட் Print Preview கிடைக்கும். தோற்றத்தை மதிப்பிட்டு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அவற்றை மேற்கொண்ட பின்னர் கீழாக Close Full Screen பிரிவில் கிளிக் செய்திடலாம். அல்லது Esc கீ அழுத்தலாம்.
சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட்
வேர்டில் சில வேளைகளில் பார்முலாக்கள் மற்றும் குறியீடுகள் அமைக்கையில் சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட், (Subscript, Superscript) அதாவது சொல்லுக்கு மேலாகவும் கீழாகவும் சிறிய அளவில் எண் அல்லது எழுத்து அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு Font மெனு சென்று அங்கிருக்கும் கட்டங்களை டிக் செய்து அமைக்க வேண்டும். பின் அதனை நீக்க வேண்டும். இதற்குப் பதிலாக சுருக்கு வழி ஒன்று உள்ளது. சொல்லுக்கு அருகே அமைத்திட வேண்டிய எண் அல்லது எழுத்தை அமைத்திடுங்கள். பின் அதனைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + = ஆகியவற்றை ஒரு சேர அழுத்தினால் சூப்பர் ஸ்கிரிப்டும் Ctrl + = அழுத்தினால் சப் ஸ்கிரிப்டும் கிடைக்கும்.