Daily Archives: பிப்ரவரி 27th, 2011

கோடீசுவர பிச்சைக்காரர்கள்!

இஸ்ரேல் நாட்டில் பிச்சை எடுப்பது லாபகரமான தொழிலாக மாறிவருகிறது என்று அந்நாட்டு சமூகநல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் முன்பு எங்குமே பிச்சைக்காரர்களைக் காணமுடியாது. தற்போது முக்கிய நகரான டெல் அவிவில் நிறைய பிச்சைக்காரர்கள் காணப்படுகின்றனர்.

வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் நாள்முழுவதும் நின்று பிச்சை எடுக்கும் ஒருவர் ஒருநாளைக்கு 5 ஆயிரத்து 625 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 650 ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறார். இந்தப் பிச்சைக்காரர்கள் மாதத்துக்கு ரூ. ஒரு லட்சத்து 65 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். இந்நாட்டுக் குடிமக்களின் சராசரி வருமானத்தை விட இது இருமடங்கு அதிகமாகும்.

பிச்சை எடுப்பவர்களில் பலர் குடிகாரர்களாகவோ, போதைக்கு அடிமையானவர்களாகவோ இருக்கிறார்கள். 1990-களில் ரஷியாவில் இருந்து குடிபெயர்ந்த தர்களால்தான் இஸ்ரேலில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக அந்தச் சமூகநல அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! மவுஸ் ஏன்? எதற்காக?

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில் ‘leftclicking’ எனக் கூறுகின்றனர். ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவுஸின் அம்புக் குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்படுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.
இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை அதற்கான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும்.
ஒரு முறை கிளிக் செய்து அப்படியே பட்டனை விடாமல் மவுஸை இழுத்தால் நாம் தேர்ந்தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும். அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று பட்டனை அழுத்துவதிலிருந்து எடுத்துவிட்டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர்ந்துவிடும்.
டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகிறோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம்.
வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன்றைக் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும். அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செயல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும். அவை: =
Open: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரிவில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்;
Cut: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்குவதற்கு;
Copy: இதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம்.
Create Shortcut: குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்கு வழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவாக்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம்; பைலை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.
Delete: நிரந்தரமாக நீக்கிட; Rename: பைல் அல்லது புரோகிராமிற்குப் புதிய பெயர் தர. மற்றும் Properties: பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மைகளை அறிய இது உதவுகிறது.
மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள். டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லுவோம். அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலையை எளிதாக மேற்கொள்ள இந்த வீல் உதவுகிறது. இதனுடைய பல சிறப்பு பயன்பாடுகள் குறித்து அந்த அந்த சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான டிப்ஸ்களில் பார்க்கலாம்.
வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய வயர்லெஸ் மவுஸ் வெகு நாட்களாகப் புழக்கத்தில் உள்ளது. அதன் பயன்பாடுகளும் மேலே குறிப்பிட்டபடி தான் இருக்கும்.

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த வகையில் ஒருவரின் `மூக்கை’ வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா. இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்…

பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
`பன்றி’ மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
`கிளி’ மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள். மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச்

சீராக நீளும் கச்சிதமான மூக்கு இது.

நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர். இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.

இந்த மூக்கு, உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும். பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.

உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.

மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்’ எடுப்பது இவர்களுக்குப் பிடிக்காது. சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

 

இந்த மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும்.


இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இது.
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம், ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில் சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.

வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு இது.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர். ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.

 

 

நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு இது. மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது


இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும் இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள். நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.

நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.


இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.

 

நன்றி-தினத்தந்தி

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவில்

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான். அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது, உச்சிஷ்ட கணபதி கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் `உச்சிஷ்ட கணபதி’ நமக்கும் தரிசனம் தருகிறார். `உச்சிஷ்ட கணபதி’ என்ற திருநாமம் இருந்தாலும், `மூர்த்தி விநாயகர்’ என்றே இவர் அழைக்கப்படுகிறார்.    பிள்ளையாருடன் வீற்றிருக்கும் அம்பாள், “ஸ்ரீநீலாவாணி” என்று அழைக்கப்படுகிறார். மும்மூர்த்திகளைவிட முதன்மையான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் இருக்கும் அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாக கருதப்படுகிறார்.

இவரது பெயரில் `ஸ்ரீ’ என்பது லட்சுமியையும், `நீலா’ என்பது துர்க்கையையும் குறிக்கிறது. கலைவாணியை கூறும் வகையில் `வாணி’ என்ற பெயரும் இந்த அம்மனுடன் இணைந்துள்ளது.

இங்கு ஜோடியாக வீற்றிருக்கும் `உச்சிஷ்ட விநாயகரை’ வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும். தாம்பத்திய உறவு மேம்படும் என்கிறார்கள்.

குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம். அதோடு, செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 1றி கிலோ மீட்டர் தொலைவில், பை-பாஸ் சாலையை கடந்து சென்றால் இக்கோவிலை சென்றடையலாம்.