Daily Archives: மார்ச் 5th, 2011

பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸால் நன்மை!

 

மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸை பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதில் முக்கால் கிணறு தாண்டியிருக்கிறார்கள், விஞ்ஞானிகள்.

மனிதர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துபவை `மீசல்ஸ்’ வைரஸ்கள். எளிதாகத் தொற்றும் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் ஊடுருவினால் கடுமையான வலியுடன், சிவப்பு சிவப்பான புள்ளிகள் தோன்றும்.

ஆனால் தற்போது இந்த வைரஸைத்தான் நன்மை புரிவதாக மாற்றும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த வைரஸை புற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேயோ கிளினிக் ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

மீசல்ஸ் வைரஸ்கள், தாங்கள் தாக்கும் செல்லுக்குள் எப்படி ழைகின்றன, வெளியேறுகின்றன என்பதுதான் தங்கள் ஆய்வுக்கு அடிப்படை என்கின்றனர் இவர்கள். குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை மீசல்ஸ் வைரஸ்களை கொண்டு தாக்கி அழிக்க முயன்று வருகிறார்கள். அதற்காக இந்த வைரஸ்கள் செயல்படும் விதத்தை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்த வைரஸ்கள் ஒரு செல்லுக்குள் ஊடுருவுவதில் இரண்டு புரதங்கள் முக்கியமாகச் செயலாற்றுகின்றன என்று ஆரம்பகட்டமாகத் தெரியவந்திருக்கிறது. அவை குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. அந்த ஆய்வு முடியும்போது, புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு முக்கியமான ஆயுதம் பிறந்திருக்கும் என்று உறுதி தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

டும்… டும்…-திருமண வாழ்க்கை


திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மணவாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

***

திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே `இவர் இப்படித்தான்’ என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்துவிட்டு `எனக்கு இவர் வேண்டாம்’ என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

***

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டிவிடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.

திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

***

குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.

***

நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண `ஜோக்கு’களும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். `இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்’ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.

***

மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர்தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.

***

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம்விட்டு பேசுங்கள்.

***

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டுவேலைகளை அதிகம் சுமத்துவது, குறைகூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜ வாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.

***

வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.

***

உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.

தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக் கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

***

மத்திய அரசிலிருந்து விலகல்! – திமுக அதிரடி

மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி – திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர்.

இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்லை. 63 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறிச் சென்ற மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் வரவில்லை.

எனவே திமுக தனது உயர்நிலை செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் கூடி கூட்டணி நெருக்கடி குறித்து விவாதித்தனர்.

இறுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சி விரும்பாததால், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இனி பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் ராஜினாமா..

இந்த முடிவைத் தொடர்ந்து, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலகுகிறார்கள்.

திமுகவின் இந்த அதிரடி முடிவு காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 சீட் ஒதுக்கீடு: ஜெ., – விஜயகாந்த் ஒப்பந்தம்

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் துவங்கினர்.

பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில், இரு கட்சி தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். அதை அதிகரிக்கும் வகையில், ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், விஜயகாந்த் சார்பில் பூங்கொத்து வழங்கப்பட்டது. முதல்கட்ட சந்திப்பில், இரு தரப்பிலும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்ப்பு குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.இதையடுத்து வந்த நாட்கள் தேய்பிறை என்பதால், கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பதற்கு அமாவாசை நாளான நேற்று, நாள் குறிக்கப்பட்டது. இந்த நாளில், ஜெயலலிதா – விஜயகாந்த் சந்திப்பு நிகழும் என்றும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது எனவும், “தினமலர்’ நாளிதழில் கடந்த 2ம் தேதி செய்தி வெளியானது.

இரு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஜெ., – விஜயகாந்த் சந்திப்பு எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்று மதியம், தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த், விருப்பமனு தாக்கல் நடப்பதை பார்வையிட்டார். விருப்ப மனு தாக்கல் செய்ய பெருந்திரளாக வந்திருந்த நிர்வாகிகளும், விஜயகாந்த் எப்போது போயஸ் கார்டன் செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

ஆனால், இரவு 8 மணிக்கு விஜயகாந்த் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால், காலை முதல் நீடித்த பரபரப்பு திசை திரும்பியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு விஜயகாந்த், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், போயஸ் கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், வாசலில் நின்று வரவேற்றனர்.ஜெயலலிதாவும் விஜயகாந்தும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிய பின், 20 நிமிடங்கள் பேசினர். முடிவில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர். ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, விஜயகாந்த் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. அதன்பின், அ.தி.மு.க., தரப்பிலிருந்து 41 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதற்கான ஒப்பந்த நகல் வழங்கப்பட்டது. தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பதை, விரைவில் இரு கட்சித் தலைவர்களும் பேசி முடிவு செய்வர்.

எப்படி இருக்கீங்க விஜயகாந்த்? நலம் விசாரித்த ஜெயலலிதா! போயஸ்கார்டனுக்கு நேற்றிரவு வந்த விஜயகாந்தை, அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் வாயிலில் நின்று வரவேற்றனர். அதன் பின், வரவேற்பறையில் காத்திருந்த ஜெயலலிதாவை விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.தொடர்ந்து, “எப்படி இருக்கீங்க விஜயகாந்த்’ என, ஜெ., முதலில் நலம் விசாரித்துள்ளார். “நல்லாயிருக்கேம்மா’ என்று விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். அடுத்ததாக, “வீட்டில் எல்லோரும் எப்படியிருக்காங்க’ என, ஜெ., விசாரித்துள்ளார்.

தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஜெ., நலம் விசாரித்தார். அவரது மனைவி குறித்தும் கேட்டறிந்தார். தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதிஷிடம், “கல்லூரி எப்படி நடக்கிறது’ என்று விசாரித்தார். முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து விஜயகாந்த் கேட்க, “தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என, பதில் அளித்தார் ஜெ.,”இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தேர்தல், போர் போன்று கடுமையாக இருக்கும். நாம் முழுமூச்சுடன், முழு பலத்துடன் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்’ என, விஜயகாந்திடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெ., – விஜயகாந்த் சந்திப்பு – மணிக்கு மணி எகிறிய டென்ஷன் : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., – தே.மு.தி.க., இடையே கூட்டணி உருவாகியுள்ளது. இரு கட்சி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் சந்திந்து தொகுதி பங்கீடு தொடர்பாக, கடந்த 24ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என்ற தகவல் வெளியானது. இதனால், இருகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேற்று, மணிக்கு மணி நடந்தது என்ன என்பது குறித்த விவரம்:

இடம்: தே.மு.தி.க., தலைமை அலுவலகம்
நேரம்:
காலை 10:00 : ஜெயலலிதா – விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என, தகவல் பரவியது. தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விஜயகாந்தை வழிஅனுப்பி வைப்பதற்காக கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

நேரம்: காலை 11.00 : தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு வாங்கும் வைபவம் மூன்றாம் நாளாக தொடர்ந்தது. கட்சி அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ் அங்கு வந்து விருப்ப மனுக்கள் பெற்றனர். அதே நேரத்தில், மதியம் 1.30 மணிக்கு விஜயகாந்த், போயஸ் கார்டன் செல்வார் என்ற பரபரப்பு எழுந்தது.

நேரம்: பகல் 12.00 : வழக்கமாக காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வரும் விஜயகாந்த், ஒரு மணி நேரம் தாமதமாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களுக்கு இடையில் தனது அறைக்கு சென்றார்.

இடம்: போயஸ் கார்டன்
நேரம்: 1.00 : விஜயகாந்த் நிச்சயம் வருவார் என தகவல் பரவியதால், ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் முன், இரு கட்சி தொண்டர்களும் அதிகளவில் திரண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பகல்:1.30 : விஜயகாந்த் புறப்படாமல் தனது அறையில் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பகல்:2.30 : கட்சி அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த், தனது காரில் வெளியேறி விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். இதனால், தே.மு.தி.க., தொண்டர்கள் சோர்வடைந்தனர். அதே நேரத்தில், மாலை 4.30 மணிக்கு ஜெ., – விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என்ற தகவல் பரவியது. இதனால், தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்.

மாலை 4.00 : மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்ற விஜயகாந்த், மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் செல்லப்போகிறார் என்ற தகவல் வெளியானது. மாலை 5 மணி ஆகியும் அவர் செல்லவில்லை. இரவு 7.30 மணிக்கு செல்வார் என்றனர். அப்போதும் புறப்படவில்லை. மனு தாக்கல் முடிந்ததும், கட்சி நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய விஜயகாந்த், இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார்.அதன்பின் திடீரென வீட்டிலிருந்து விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இருவரும் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். சந்திப்பு குறித்து காலை முதல், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு எகிறிய நிலையில், இரவில் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

நன்றி-தினமலர்

வெந்தயத்தின் மகிமை

உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க்குறவங்க, வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறையும். ரத்தத்துல குளுக்கோசோட அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கு.

`டையோஸ்ஜெனின்’ என்கிற பைடோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, பெண்கள் சாப்பிட உகந்தது. ரத்தம் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றல் இருக்குறதால, பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய உணவுகளைக் கொடுப்பாங்க. ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி உருட்டி தினமும் சாப்பிட்டு வந்தா, நல்லா பசியெடுக்கும். தலையில பொடுகுத்தொல்லை இருக்குறவங்க, வெந்தயத்தை அரைச்சு, தலையில தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். இப்படிப் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக வெந்தயம் பயன்படுது.

எக்ஸெல் – மறைக்கவும் காட்டவும்

எக்ஸெல் தொகுப்பில் சில நேரங்களில் ஒரு சில செல்கள் அல்லது வரிசைகளை மறைக்க வேண்டியதிருக்கும். என்ன செய்கிறோம்? பார்மட் மெனு சென்று பின் ரோ / காலம் சப் மெனு பெற்று அதன் பின் ஹைட்/ அன்ஹைட் கிளிக் செய்து நிறைவேற்றுகிறோம். தேவையான டேட்டாவை மறைத்திட இவைதான் சரியான வழியாக இருக்கும். இதன் மூலம் நாம் நம்முடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அது போல அமைக்க முடிகிறது. எந்த டேட்டாவைக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை மட்டும் காட்ட முடிகிறது. ஆனால் மவுஸால் ஒவ்வொரு மெனுவாகத் தேர்ந்தெடுத்து செயலாற்றுகையில் தான் இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா என்று தோன்றுகிறது. இதற்கான சில கீகளை அழுத்தினால் போதும்; இந்த கீகள் மூலம் இந்த பணியை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் எந்த செல், ரோ, காலம் மறைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குக் கூட மவுஸ் பயன்படுத்த வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஆரோ கீகளை அழுத்தினால் போதும். தேர்ந்தெடுத்த பின்னர் கீழ்க்காணும் வழிகளில் கீகளைப் பயன்படுத்துங்கள்.
Ctrl + 0 (zero) : அழுத்தினால் நெட்டு வரிசை மறைக்கப்படும்.
Ctrl + 9 : அழுத்தினால் படுக்கை வரிசை மறைக்கப்படும்.
அடுத்து மறைக்கப்பட்ட வரிசைகளை மீண்டும் காட்ட என்ன செய்யலாம்? மறைக்கப்பட்ட செல்களை அடுத்து இருபுறமும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுங்கள். பின்னர்
Ctrl + Shift + ) : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட நெட்டு வரிசை காட்டப்படும்.
Ctrl + Shift + ( : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட படுக்கை வரிசை காட்டப்படும்.
எப்படி! மவுஸ் இல்லாமல் கீ போர்டு வழியாகவே இந்த மறைக்கும் மற்றும் காட்டும் வேலை நடைபெற்றுவிட்டதா!

ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசர்

மொஸில்லா நிறுவனம், ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக் கான பயர்பாக்ஸ் பிரவுசரை விரைவில் வெளியிட இருக்கிறது. இதன் சோதனை தொகுப்பு ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் கிடைக்க இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் புக்மார்க், சேவ் செய்யப்பட்ட பாஸ்வேர்ட், ஓப்பன் டேப் மற்றும் பிரவுசிங் ஹிஸ்டரி ஆகிய வற்றை அப்படியே ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கு மாற்றிப் பயன்படுத்தக் கூடிய வசதி தரப்படுகிறது.
இந்த மொபைல் பிரவுசருக்கென ஏறத்தாழ 150 ஆட் ஆன் தொகுப்புகள் தரப்படுகின்றன. இவை பிரவுசருக்குக் கூடுதல் திறன் அளித்து, அதன் செயல்பாட்டினைப் பயனாளர்களின் விருப்பத் திற்கேற்ற படி அமைத் திடும். இந்த வகையில் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகளை வெளியிட்ட பின்னரே, மற்ற பிரவுசர்கள் அவற்றைப் பின்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமின்றி, நோக்கியா நிறுவனத்தின் மேமோ (Maemo) ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் என்900 வரிசையில் உள்ள மொபைல் போன்களிலும் இயங்கும். ஆனால் ஐ-போன்களில் இது இயங்காது. ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் தன் போன்களில் இயங்கும் பிரவுசர்கள், தன்னுடைய வெப்கிட் இஞ்சினைப் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறது.
பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களிலும் இயங்காது. அந்த வகையில் விண்டோஸ் மொபைல் மற்றும் பிளாக்பெரி சிஸ்டங்களில் இயங்காது. இதற்கும் ஒன்றை ஒன்று ஒத்துப் போகாத தொழில் நுட்பங்களே காரணம் ஆகும்.