Daily Archives: மார்ச் 10th, 2011

ஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும்

‘அன் ஆப்பிள் எ டே, கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது அனைவரும் அறிந்த மொழி. பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.
ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். பழங்களை, குறிப்பாக ஆப்பிளை தேடிச்செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகி உள்ளது.
இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஸென் யூ சென் கூறியதாவது:
ஆப்பிளில் உள்ள பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், உடலில் உள்ள நோய்க்கிருமிகளை பெருமளவில் அழிக்கிறது. இதனால் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்துடன் உடல் பருமன் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதை ஏராளமான ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வும் அதையே வலியுறுத்தி உள்ளது.
தக்காளி, ப்ராகலி, ப்ளூபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு உள்ளது. அவற்றில் பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் ஆயுளையும் அதிகரிக்கிறது. இது ஆப்பிளில் மிக அதிக அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் மற்றும் மூளைச் செல்களின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.

தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு


தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.

நினைவில் கொள்ள சில ஷார்ட்கட் கீகள்

கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.
CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.
CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.
CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.
DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.
SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.
F2 key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட
CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல
CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.
CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.
ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட
F3 key: பைல் அல்லது போல்டரைத் தேட
ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப் படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்;
ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.
CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.
ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.
ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க
F10 key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.
ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.

மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!

நமக்கு ஏதாவது மனக்கவலையோ, மனச்சோர்வோ ஏற்பட்டால், நமக்குத் தெரிந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவோம். மருத்துவர்களின் ஆதரவான வார்த்தைகள், மருந்துகளை விட அதிகப் பலனை அளிக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் அந்த மருத்துவருக்கே கவலையும், மனச்சோர்வும் ஏற்பட்டால் அவர் எங்கே போவார்?

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் இருந்து, பொதுமக்களை விட மருத்துவர்களிடம் தற்கொலை விகிதமும், மதுவால் கல்லீரல் அழற்சி ஏற்படும் விகிதமும் அதிகமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. மனஇறுக்கம், மருத்துவரின் உடல் நலத்தைக் குலைக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

மருத்துவர்களின் பணி நிறைய வருமானம் அளிப்பதாகவும், அதிக சுவாரசியமூட்டுவதாகவும் இருக்கும்போது, அவர்கள் மன இறுக்கங்களாலும், உணர்ச்சிகளாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்? அவ்வாறு பாதிக்கப்பட்ட மருத்துவர்களிடம் சிகிச்சை பெறப் போகும் நோயாளிகளின் நலன்களைப் பாதுகாக்க ஏதாவது ஏற்பாடுகள் இருக்கின்றனவா?    விளம்பர நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பல் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், போலீஸ் அதிகாரிகள், விமானிகள் ஆகியோருக்கு அடுத்தபடியாக மருத்துவர்களுக்குத்தான் அதிக மனஇறுக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் சிலவேளைகளில், தமது நோயாளியின் தலை விதியை, வாழ்வு அல்லது சாவை நிர்ணயிக்கும் நலைக்குத் தள்ளப்பட்டு, ஊண், உறக்கம் இழப்பது உண்டு. அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட மிக மிக அதிகமாக மனஇறுக்கம் ஏற்படுகிறது.

நோயாளிகளுக்குத் தவறான சிகிச்சை அளித்துவிட்டு, அதனால் வம்பு, வழக்குகளில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் மேலைநாட்டு மருத்துவர்களுக்கு மனஇறுக்கத்தை உண்டாக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று.

டாக்டர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், நோயாளிகளை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பது குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

விண்டோக்களை மூடும் வழிகள்

பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து வைத்து செயல்படுவது நம் வழக்கமாகிவிட்டது. இது நம் வேலைத் திறனை ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம். பல வேளைகளில், நாம் பணியாற்றும் விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7 இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது. இந்த வழிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் செயல்பாடு, நாம் செயல்படும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் சுருக்கி வைப்பது. இரண்டாவது அனைத்து விண்டோக்களையும் சுருக்கி வைப்பது.
1. ஏரோ ஷேக் (Aero Shake): விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்பு தரும் ஒரு நவீன தொழில் நுட்ப வசதி இது. நீங்கள் செயல்படும் விண்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் மேலாக உள்ள பிரிவில், லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் மவுஸை சற்று அசைக்கவும். விண்டோவும் அசையும். இப்போது, நீங்கள் செயல்பட்டு, ஷேக் ஆகும் விண்டோ தவிர திறந்திருக்கும் மற்ற விண்டோக்கள் அனைத்து விண்டோக்களும் மறைந்து போகும். இந்த வசதி விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், ப்ரபஷனல், அல்ட்டிமேட் மற்றும் என்டர்பிரைஸ் எடிஷன் பதிப்புகளில் மட்டும் கிடைக்கிறது.
2. விண் +ஹோம்: உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் 7 பதிப்பில் ஏரோ ஷேக் வசதி இல்லையா? கவலைப்பட வேண்டாம்; இந்த விண்டோக்களை மூடும் வேலையை இரு கீகள் மூலம் மேற்கொள்ளலாம். Win + Home கீகளை ஒரு சேர அழுத்தவும். செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மறைவதைப் பார்க்கலாம். விண் ஷேக் வசதி விசேஷமாக உள்ளதே; ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் அது இல்லையே என்று கவலைப்பட்டு, அந்த வசதியினை அனுபவிக்க வேண்டும் என எண்ணினால், விண்ஷேக் என்ற அப்ளிகேஷன் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://members. chello.nl/h.h.j.f.beens/WinShake/Functions.htm
3. விண்டோக்களைச் சுருக்க: திறந்திருக்கும் அனைத்து விண்டோக் களையும் சுருக்கி டாஸ்க்பாருக்குக் கொண்டு செல்ல வேண்டுமா? நீங்கள் அழுத்த வேண்டிய கீகள் Win + D. மீண்டும் இந்த விண்டோக்கள் எழுந்து கொள்ள, அதே கீகளை மீண்டும் அழுத்தவும்.
4. டெஸ்க் டாப் காட்டும் பட்டன்: அடுத்து இது தொடர்பான இன்னொரு வசதியையும் விண்டோஸ் 7 சிஸ்டம் தருவதனைப் பார்க்கலாம். இதன் டாஸ்க்பாரின் முடிவில், விண்டோஸ் கடிகாரம் அருகே, ÷ஷா டெஸ்க்டாப் பட்டன் இருப்பதனைக் காணலாம். இந்த பட்டன் அருகில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று அதனைச் சற்று சுற்றவும். இப்போது திறந்திருக்கும் விண்டோக்கள் அனைத்தும் ஒளி ஊடுருவும் தன்மையுடன் (ட்ரான்ஸ்பரண்ட்) காட்டப்படும். இந்த வசதியில், நாம் எந்த விண்டோவினையும் மினிமைஸ் செய்திடாமல் பார்க்கலாம். இந்த பட்டனில் கிளிக் செய்தால், அது அனைத்து விண்டோக்களையும் உடனே மூடிவிடும். மீண்டும் கிளிக் செய்தால், திறக்கும்.

பெண்களின் கண்ணீர் அவர்களை பாதுகாக்கிறது: ஆராய்ச்சியில் தகவல்


பெண்கள் தங்களது அழுகையினால் காரியம் சாதிக்க கூடியவர்கள் என்று கூறப்படுவதுண்டு. ஒருவரின் காதலியோ அல்லது மனைவியோ அழும்போது அதனை அவரால் தாங்கி கொள்ள முடிவதில்லை. எவ்வளவு கல் நெஞ்சு படைத்தவராக இருந்தாலும் அவரையும் கரையச்செய்து விடும் பெண்களின் அழுகை. இதற்கு அறிவியல் ஆய்வின் அடிப்படையில் விளக்கம் பெறும்போது, பெண்களின் கண்ணீரில் ஒரு வித வேதிபொருள் காணப்படுகிறது. அது அவர்களை பார்க்கும்போது களையிழந்து காணப்படுவது போல் தோன்ற செய்கிறது. அழும் பெண்ணின் முகம் இந்த வேதிபொருளால் பொலிவு இழப்பதால் அவரது துணை அதனை பார்ப்பதற்கு விரும்புவதில்லை. மேலும் கண்ணீரில் காணப்படும் வேதிபொருள் அவர்களை மறைமுகமாக பாதுகாக்கிறது. எவ்வாறென்றால் அழுவதை பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் டெஸ்டோஸ்டீரான் அளவை அது வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது

ஓ.. அப்படியா.. நன்றாக இருக்கிறதே..!’

றவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.

அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது. நான்கு பெண்கள் கூடிவிட்டால் புறணி பேசத் தொடங்கிவிடுவார்கள் என்று சொல்வதுண்டு. ஆண்கள் கூடினாலும் அப்படித்தான். ஆனால் இங்கு நாம் சொல்ல வரும் விஷயம் அர்த்தமற்ற அரட்டையைப் பற்றியதல்ல.

தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.

நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.

பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்… என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.

குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை’ என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.

புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.

உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்’ என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.

அப்படி இருந்தால்தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.

நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்’ என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.

ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.

பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்’ என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி…, அப்படியா…, சரி வேற… என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.

அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.

எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

***