Daily Archives: மார்ச் 11th, 2011

விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1

பிப்ரவரி 22 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7க்கான சர்வீஸ் பேக் 1 ஐ வெளியிட்டது. இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft. com/enUS/windows/downloads/servicepacks என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பிற்கான குறியீடுகள், திறன் கூட்டும் வசதிகள், நிலையாக இயங்குவதற்குத் தேவையான புரோகிராகள் மற்றும் சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறா நிலையில், நாம் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டர் தானாகவே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். தாங்களாகவே பெற்று இன்ஸ்டால் செய்திடும் வகையில் செட் செய்து வைத்துள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட தள முகவரி சென்று பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 30 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும். நீங்கள் எந்த வகையில் இதனைப் பதிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், இதற்கு 750 எம்பி முதல் 7400 எம்பி வரை உங்கள் ஹார்ட் ட்ரைவில் இடம் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு இந்த பணியை மேற்கொள்ளவும்.
இந்த சர்வீஸ் பேக் வெளியிடுவதற்கு முன் வந்த தொகுப்பினை (prerelease version of SP1) இன்ஸ்டால் செய்திருந்தால், அதனை முழுமையாக அன்இன்ஸ்டால் செய்த பின்னர் இந்த பேக்கினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். சில வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகள், இந்த சர்வீஸ் பேக்கினைச் சரியாக இன்ஸ்டால் செய்திட அனுமதிக்காது. வைரஸ் என்று எண்ணிக் கொண்டு தடை விதிக்கும். எனவே ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்குவதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நல்லது.
இத்தொகுப்பினை இன்ஸ்டால் செய்வது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்துள்ள குறிப்புகளைப் படிக்க http://windows.microsoft.com /enUS/windows7/learnhowtoinstallwindows7servicepack1sp1 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.

அட்டகாசமான வீட்டுக்குறிப்புகள்

தெரிந்து கொள்வதற்காக இதோ எளிய வீட்டு உபயோகக் குறிப்புகள்:

பாதுகாப்பு:

* அந்துப் பூச்சி வராமலிருக்க நெல் மூட்டையைச் சுற்றிலும், அதன் இடுக்குகளிலும் புங்கை இலை, வேப்ப இலைகளை பறித்துப் போட்டு வைக்கவும்.

* பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.

* புளியை நீண்ட நாட்கள் வைத்துக் கொள்ள பானையில் போட்டு வைக்கவும். பானையின் அடியில், புளியைப் போட்டு அதன் மேல் கொஞ்சம் உப்பைத் தூவினால் புளி கெடாமல் இருப்பதோடு, காய்ந்து போகாமலும் இருக்கும்.

* மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமாயின் நறுக்கி, வெயிலில் காய வைத்து வற்றல் போல் உலர்த்திக் கொள்ளவும். பின் எப்போது ஊறுகாய் வேண்டுமோ அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம்.

* தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைப் போட்டு வைப்பதால், பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

சமையல்:

* காலிப்ளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காளிப்ளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்து விடும்.

* தோசைக்கு, இட்லிக்கு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் தோசை, இட்லி பூவாயிருக்கும்.

* சாதம் மிஞ்சி விட்டால், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். சாதம் கொதிக்கும் போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வேக வைக்கலாம்.

* காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போலாகி விடும்.

* போளி தட்டும் வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

* கொதிக்கும் பாலை உடனே உறை ஊத்த வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர் ஊற்றவும். குளிர் நேரத்தில் தயிர் உறையாது. எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மீது பாத்திரத்தை வைத்தால் தயிர் விரைவில் உறைந்து விடும்.

* தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.

* உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால், முட்டைக்குப் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.

* கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.

* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும். வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.

* வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டால் பாகு முற்றாது.

* வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்­ரில் போட்டு உரிக்கவும். கண்ணும் கரிக்காது.

* புளித்த தயிரை தலையில் தேய்த்துக் கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

* தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.

* தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

* சமையலுக்குப் பின் எஞ்சியிருக்கும் இஞ்சியை மண்ணில் புதைத்து வைத்தால் வேண்டும் போது எடுத்துக் கொள்ளலாம்.

* குளிர் சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் கருவேப்பிலை, கொத்தமல்லிகளை பாட்டில்களில் போட்டு வைக்கலாம்.

* சமையலறையின் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருந்தால் தேவையான பொருட்களை குறித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

* கேக் அல்லது பிஸ்கட் செய்து முடித்த பின் ஓவன் சூடாகவே இருக்கும். அப்போது சிறிது பழைய பிஸ்கட், முறுக்கு போன்றவற்றை உள்ளே வைத்தால் புதிது போல் முரமுரப்பாக இருக்கும்.

துணிமணிகள்:

* துணிகளுக்கு நீலம் போடும் சமயம் சிறு முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்தால் நீலம் ஒன்று போல் தண்­ரில் பரவும்.

* நீலம் கலந்த நீரில் பாத்திரம், கண்ணாடி, பாட்டில் முதலியவற்றைக் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

* வெள்ளை நிற சட்டைகளை, நீல நிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

* பட்டுப் புடவைகளை துவைக்கும் போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் சாயம் போகாமலும் பூச்சி வெட்டாமலுமிருக்கும்.

* டீக்கரையைப் போக்க சீனியை உபயோகிக்கலாம். வெள்ளைத் துணிகளில் உள்ள கரையைப் போக்க தண்­ரில் ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உபயோகிக்கலாம்.

* டாய்லெட் சோப் மேலுரைகளை துணி அலமாரிகளில் போட்டு வைத்தால் மணமாக இருக்கும்.

* எண்ணெய் கறையை போக்க துணியின் மேலும் கீழும் ப்ளாடிங் பேப்பரை வைத்து அயர்ன் பண்ண வேண்டும்.

* ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

* பழைய துணிகளையும் நன்கு சலவை செய்து, மடிப்புக் கலையாமல் அலமாரிகளில் அடுக்கி வையுங்கள். அல்லது பழைய சூட்கேஸ், பிரயாணப் பைகளில் சேமித்து வைக்கவும்.

உங்களுக்குத் தெரியுமா! இணையமும் இந்தியாவும்

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரிய அளவில் நாம் இலக்குகளை எட்டவில்லை என்றாலும், இந்திய இன்டர்நெட் குறித்து நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
கூகுள் தேடல் இஞ்சின் இயக்கத்தினை நிர்வகிக்கும் அலுவலர் ஒருவர், இன்றைய இணையப் பயன்பாடு குறித்த தகவல்களை அண்மையில் கொல்கத்தா வில் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது உலக அளவில் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 30 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா 20. 7 கோடி பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் இன்னும் 4 கோடியாகத்தான் உள்ளது. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் உயர்ந்திடும் எனவும் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் இந்திய இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கை 2 கோடியாகத்தான் இருந்தது. தற்போது இது 20 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு இன்டர்நெட் பயன்படுத்து வோரில் அதிகம் பேர் பாடல்களைத் தான் தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன் முதல் .com என்ற துணைப் பெயருடன் தன் இணையதள முகவரியை இந்தியாவில் பதிந்த முதல் நிறுவனம் rediff.com ஆகும்.
இந்தியாவில் 1,80,000 சைபர் கபே மையங்களும், 75 ஆயிரம் சமுதாய சேவை மையங்களும் மக்களுக்கு இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றன.
இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் தேடப்படுவதும், ரயில்வேக்குச் சொந்தமான http://www.irctc.in என்ற தளம் தான்.
84% இணையப் பயனாளர்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்குச் செல்கிறார்கள்.
இங்கு மொபைல் இன்டர்நெட், பெரும் பாலும் இமெயில் செக் செய்வதற்கும், தகவல்களைத் தேடுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது.
.com மற்றும் .net துணைப் பெயர் களுடன் இந்தியாவில் 10 லட்சத்து 37 ஆயிரம் தளங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

பாடாய்படுத்தும் பாதவலி!

நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து தரையில் கால் வைத்ததும் பாதத்தில் வலி ஏற்படுகிறதா? பின்னர் நடக்க நடக்க வலி குறைந்து விடுகிறதா? இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணம் பிளான்டர் பியடிஸ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நோய்தான் என்று கூறுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள சவ்வுகளின் அழற்சியால் இந்த வலி ஏற்படுகிறது.

இதற்கு முதலில் உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலையை தவிர்க்கவும். பின்னர் உங்கள் பாதத்திற்கு தகுந்தவாறு காலணிகளை தேர்ந்து எடுக்கவும். அதாவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி, உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு தக்கபடி அமைப்பு உடையதாக, பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே, காலுக்கு தகுந்த பயிற்சிகளை செய்யுங்கள். முதலில் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மசாஜ் செய்தால், எழுந்து நடக்கும்போது வலி குறைவாக இருக்கும்.

அடுத்து முழங்காலுக்கு கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளை தேய்த்துவிட வேண்டும். பின்னர் உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக அழுத்தி வைத்து, கால்விரல்களை மட்டும் மேலே உயர்த்தவும். பிறகு பெரு விரலால் தரையை தொடவும். இப்படி தொடர்ந்து செய்வது பாதத்தின் வலியை குறைக்கும். வலி தொடர்ந்து இருந்தால் மருத்துவரை நாடவும்.