Daily Archives: மார்ச் 17th, 2011

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்


சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர். மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள் அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள் 16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர் வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அணு அணுவாய் அழிக்கும் கதிர் வீச்சு

முடிகொட்டுவது முதல்…

மனித உடலில் பல வகையில் அணுக்கதிர் வீச்சு பரவ வாய்ப்புள்ளது. காய்ச்சல் முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு. தோல் வியாதிகளும் வரும்.
8 தலையில் 100 ரெம் வரை கதிர்வீச்சு ஏற்பட்டால், அதனால் தலைமுடி 2 வாரத்தில் கொட்டி விடும்.
8 வாந்தி, பேதி ஏற்படும். அதனால், வேறு கோளாறுகளும் ஏற்படும்.
8 ரத்தத்தில் கலந்து விட்டால், அதில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ரத்தம் கெட்டு விடும்.
8 ரத்தக்கொதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
8 உடலில் மைய நரம்பு மண்டலம் மிக முக்கியமானது. அதில் கதிர்வீச்சு பாய்ந்தால், மூளையில் இருந்து சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்புண்டு. இதில் 2 ஆயிரம் ரெம் வரை வீச்சு ஏற்படுமாம்.
8 குடலையும் கதிர்வீச்சு பாதித்தால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். கடைசியில் மரணம் தானாம்.

மில்லிரெம் என்றால்

கதிர்வீச்சை கணக்கிடுவது மில்லிரெம் என்று அளவையால் கணக்கிடப்படுகிறது. மனித உடலில் சாதாரணமாகவே ரசாயனம், வெப்பம் போன்றவற்றால் 300 மில்லிரெம் கதிர்வீச்சு உள்ளது. ஆனால், அணுக்கதிர் வீச்சு , உடலில் பரவினால் அதன் ஆபத்துக்கு அளவே இல்லை.

இதுவரை 3 விபரீதம்

கடந்த 1969ல் சுவிட்சர்லாந்தில் லுசென்ஸ் அணுஉலை, 1979ல் அமெரிக்காவில் த்ரீமைல் தீவு அணுஉலை, 1986ல் உக்ரைனில் செர்னோபில் உலை ஆகியவற்றில் இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் இன்னமும் கூட ஊனமாகவும், வியாதிகளால் பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்பது தான் உண்மை. இப்போது இந்த வரிசையில் ஜப்பான் அணுஉலைகள்.

வீட்டுக்குள் முடக்கம்

கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடும். அதைத்தான் ஜப்பான் அரசு, மக்களுக்கு விடுத்துள்ளது. வீட்டுக்குள் முடங்க வேண்டும்; வெளியில் வரகூடாது; ஜன்னல், கதவுகளை காற்றுபுகாவண்ணம் இறுக்கமாக மூட வேண்டும். துணிகளை கூட வெளியில் காயப்போடக்கூடாது என்றெல்லாம் அதிரடி கட்டளைகளை போட்டுள்ளது. மக்கள் இப்போது சோறு, தண்ணீர் சாப்பிடக்கூட பயந்து கதிகலங்கிப்போயுள்ளனர்.

மெல்ட் டவுண்

அணு உலையில், யுரேனியம் கம்பிகள் வரிசையாக இருக்கும். இவை மூலம் அணுக்கள் பிளக்கப்பட்டு, அணு மின்சாரமாக மாற்றப்படும்; அணுகுண்டாக தயாரிக்கப்படும். இது மிகுந்த வெப்பசக்தி கொண்டது என்பதால் எப்போதும், குளிர்நிலையில் வைத்திருக்க தண்ணீர் போன்ற திரவம் இருக்கும். இது குறைந்தால் யுரேனிய கம்பிகள் பாதரசம் போல உருகுவது மட்டுமல்ல, 3200 சென்டிகிரேட் கொடூர வெப்பத்தை பரப்பும். இதனால் தான் உலை வெடிப்பு ஏற்படுகிறது. அணுக்கதிர் வீச்சு, காற்று, தண்ணீர் மூலம் பரவி ஆபத்து தருகிறது.

வாழ்நாளில் 1.2 நிமிடம் போச்சு

உடலில் எந்த வகையிலாவது கதிர்வீச்சு நுழைகிறது. டிவி பார்ப்பதில் இருந்து சிகரெட் பிடிப்பதில் வரை சொல்லலாம். ஒரு மில்லிரெம் கதிர்வீச்சு உடலில் சேர்ந்தால் வாழ்நாளில் 1.2 நிமிடம் குறைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
= கொழுப்பு உணவாக சாப்பிட்டு எடை கூடிப்போவது.
= அடிக்கடி சிகரெட் புகையை இழுத்து விடுவது
= மணிக்கணக்கில் டிவி பார்ப்பது
= பிரிஜ், ஏசி, மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துவது
= காற்று மாசு உள்ள இடத்தில் வசிப்பது
= அடிக்கடி எக்ஸ்ரே, ரேடியேஷன் தெரபி எடுப்பது
போன்றவை மில்லிரெம் கதிர்வீச்சு உடலில் ஏற காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இதிலும்…

ரேடியேஷன் என்பது கதீர்வீச்சு. சூரியஒளி, மொபைல் போன், டிவி, ஏசி, பிரிஜ் என்று எதில் இருந்தும் பரவும் கதீர்வீச்சு ஓரளவுக்கு மேல் வியாதியை தரக்கூடியது தான். அணுக்கதிர் வீச்சு, மிகவும் ஆபத்தானது. இது பட்ட பயிர்கள் பொசுங்கும்; மரங்கள் பட்டுப்போகும்; விலங்குகள், பிராணிகள் முதல் மனிதர்கள் வரை பாதிக்கப்படுவர். சுவாசப்பிரச்னை முதல் கேன்சர் வரை வரும். மொத்தத்தில் அணுஅணுவாய் வதைத்து சாகடிக்கும்.

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி: 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க., லிஸ்ட்

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், நேற்றிரவு வெளியிடப்பட்டது. 160 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. ம.தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, முதல் முறையாக போட்டியிடுகிறார். நாளை (18ம் தேதி) மதுரையில் இருந்து ஜெயலலிதா தேர்தல்
பிரசாரத்தை துவக்குகிறார்.

 

அடுத்த மாதம் 13ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.ஸ்ரீரங்கம் தொகுதியில் முதன் முறையாக ஜெயலலிதா போட்டியிடுகிறார். 2006 சட்டசபைதேர்தலில், ஆண்டிபட்டியில் ஜெயலலிதாபோட்டியிட்டு வெற்றி பெற்றார். ஸ்ரீரங்கம் தொகுதி, ஜெயலலிதாவின் பூர்வீக ஊர்என்பதாலும், அ.தி.மு.க.,வின் கோட்டைஎன்பதாலும் அத்தொகுதியை ஜெயலலிதா தேர்ந்தெடுத்துள்ளார். அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், ஆர்.கே.நகரிலும், முன்னாள்அமைச்சர் வளர்மதி, ஆயிரம்விளக்கிலும் போட்டியிடுகின்றனர். சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணிதொகுதிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.ராயபுரம் தொகுதியில், வடசென்னை மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

 

சைதாப்பேட்டையில், தென் சென்னை மாவட்டச் செயலர் செந்தமிழனும், தி.நகரில், இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநிலச் செயலர் கலைராஜனும்மீண்டும் போட்டியிடுகின்றனர்.துறைமுகம் தொகுதியில், பழ.கருப்பையா, விருகம்பாக்கத்தில், அமைப்பு சாரா ஓட்டுனர்களின் மாநில செயலர் கமலக்கண்ணன், அண்ணாநகரில், மாநில மகளிர் அணிச்செயலர் கோகுலஇந்திரா, மயிலாப்பூரில், ஜானகி ஆகியோர், முதல் முறையாக போட்டியிடுகின்றனர்.திருவொற்றியூரில், முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், கும்மிடிப்பூண்டியில், கோபால் நாயுடு, திருவள்ளூரில், ரமணா, ஆலந்தூரில், வெங்கட்ராமன், பல்லாவரத்தில், தன்சிங்
ஆகியோர்போட்டியிடுகின்றனர்.

 

கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., – இந்திய கம்யூனிஸ்ட் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குழுவினரிடம், நேற்று காலை முதல், மாலை வரை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடந்தது. ம.தி.மு.க.,வுடன் தொகுதி உடன்பாடு குறித்த முடிவும் எடுக்காத நிலையில், நேற்று இரவு, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டது. இதனால், ம.தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., கூட்டணியில்இடம் இல்லை என்பது உறுதியாகி விட்டது. ம.தி.மு.க., வரும் 19ம் தேதி மாவட்டச்செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அறிவிக்கும் என தெரிகிறது.

 

பிரசாரம்: ஜெயலலிதா, நாளை காலை, விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில், மாலையில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

 

கூட்டணி கட்சிகள் தொகுதிகள் பறிப்பு : * அ.தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ., பாலபாரதியின் திண்டுக்கல் தொகுதி பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ., சிவபுண்ணியத்தின் மன்னார்குடி தொகுதி, புதிய தமிழகம் எதிர்பார்த்த ஒட்டப்பிடாரம் தொகுதியும் பறிக்கப்பட்டுள்ளன.

 

* வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 28 பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ வன்னியர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஜே.சி.டி.பிரபாகரன், கிறிஸ்தவ மீனவர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஜெனீபர் சந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
* முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

 

22 நாட்கள் ஜெ., சூறாவளி பிரசாரம் : நாளை மதுரையில் துவங்கி, அடுத்த மாதம் 10ம் தேதி வரை அ.தி.மு.க.,பொதுச்செயலர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் 22 நாள் சூறவாளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

 

அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா 18ம் தேதி (நாளை) மதுரை முழுவதும் பிரசாரம் செய்கிறார். 19ம் தேதி முதுகுளத்தூர், 20ம் தேதி தேனி, திண்டுக்கல், 21ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, 22ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், 24ம் தேதி திருச்சியில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார்.25ம் தேதி திருச்சி, 26ம்தேதி திருச்சி, 27ம் தேதி பெரம்பலூர், 28ம்தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், 29ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், சிதம்பரம், 30ம் தேதி சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, 31ம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, அடுத்த மாதம் 1ம் தேதி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, 3ம் தேதி கோவை, ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை, 4ம் தேதி திருப்பூர், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.அடுத்த மாதம் 5ம்தேதி கோபிசெட்டிபாளையம், கரூர், ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், 6ம்தேதி குமாரபாளையம், சேலம், 7ம்தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், 8ம் தேதி அம்பத்தூர், வடசென்னை, 9ம் தேதி தென் சென்னை, தாம்பரம், 10ம் தேதி மத்திய சென்னையில் ஜெயலலிதா பிரசாரத்தை முடிக்கிறார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அ.தி.மு.க., போட்டியிடும் 160 தொகுதிகள் விபரம் :

 

 

 

1.ஸ்ரீரங்கம் – ஜெயலலிதா
2.கும்மிடிபூண்டி – வி.கோபால்நாயுடு
3.பொன்னேரி (தனி) – பொன். ராஜா
4.திருவள்ளூர் – பி.வி. ரமணா
5.பூந்தமல்லி(தனி) என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்
6.ஆவடி – அப்துல் ரகீம்
7.அம்பத்தூர் – வேதாசலம்
8.மாதவரம் – வி.மூர்த்தி
9.திருவொற்றியூர் -கே.குப்பன்
10.ஆர்.கே.நகர் – வி.மதுசூதனன்
11.பெரம்பூர் – பி.வெற்றிவேல்
12.வில்லிவாக்கம் – ஜெ.சி.டி.பிரபாகரன்
13.திரு.வி.க.நகர்(தனி) – வ. நீலகண்டன்
14.ராயபுரம் – டி.ஜெயக்குமார்
15. துறைமுகம் – பழ.கருப்பையா
16.ஆயிரம்விளக்கு – பா. வளர்மதி
17.அண்ணாநகர் -எஸ்.கோகுல இந்திரா
18.விருகம்பாக்கம் – ஆர்.கமலகண்ணன்
19.சைதாப்பேட்டை – ஜி.செந்தமிழன்
20.தி.நகர் – வி.பி.கலைராஜன்
21.மயிலாப்பூர் -ஆர்.ஜானகி
22.வேளச்சேரி – எம்.கே.அசோக்
23.சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்
24.ஆலந்தூர் – வி.என்.பி.வெங்கட்ராமன்
25.ஸ்ரீபெரும்புதூர் – மௌச்சூர் இரா. பெருமாள்
26. பல்லாவரம் – ப.தன்சிங்
27. தாம்பரம் – டி.கே.சின்னையா
28. செங்கல்பட்டு – கே.என்.ராமச்சந்திரன்
29. திருப்போரூர் – தண்டரை கே.மனோகரன்
30. செய்யூர்(தனி) – வி.எஸ்.ராஜி
31. மதுராந்தகம்(தனி) – எஸ்.கணிதா சம்பத்
32. உத்திரமேரூர் – வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் – வி.சோமசுந்தரம்
34. காட்பாடி – எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்
35. ராணிப்பேட்டை – அ.முகமதுஜான்
36. வேலூர் – டாக்டர் வி.எஸ்.விஜய்
37. ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி
38. ஊத்தங்கரை(தனி) – மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் – கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு – கே.பி.அன்பழகன்
42. அரூர் – ஆர்.ஆர்.முருகன்
43. கலசப்பாக்கம் – அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
44. செஞ்சி – தமிழ்மொழி ராஜதத்தன்
45. மயிலம் – கே.பி.நாகராஜன்
46. திண்டிவனம்(தனி) – டாக்டர் த.அரிதாஸ்
47. விழுப்புரம் – சி.வி.சண்முகம்
48. விக்கிரவாண்டி – சிந்தாமணி ஆர்.வேலு
49. உளுந்தூர்பேட்டை – ரா.குமரகுரு
50. சங்கராபுரம் -பா. மோகன்
51. கள்ளகுறிச்சி(தனி) – அழகுவேல் பாபு
52. ஏற்காடு(எஸ்டி) – செ.பெருமாள்
53. ஓமலூர் – பல்பாக்கி சி.கிருஷ்ணன்
54. எடப்பாடி – கே.பழனிசாமி
55. சேலம் மேற்கு – ஜி.வெங்கடாசலம்
56. சேலம் வடக்கு – விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் தெற்கு – என்.கே.செல்வராஜ்
58. வீரபாண்டி – எஸ்.கே.செல்வம்
59. ராசிபுரம்(தனி) – பா.தனபால்
60. குமாரபாளையம் – பி.தங்கமணி
61.ஈரோடு கிழக்கு – ஆர்.மனோகரன்
62. ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம்
63.மொடக்குறிச்சி – ஆர்.என்.கிட்டுசாமி
64.தாராபுரம்(தனி) – கே. பொன்னுசாமி
65.காங்கயம் – என்.எஸ்.என். நடராஜ்
66.பெருந்துறை – தோப்பு என்.டி.வெங்கடாசலம்
67.பவானி – எம்.ஆர்.துரை
68.அந்தியூர் – எஸ்.எஸ்.ரமணிதரன்
69.கோபிசெட்டிபாளையம் – கே.ஏ.செங்கோட்டையன்
70.ஊட்டி – புத்தி சந்திரன்
71.மேட்டுப்பாளையம் – ஓ.கே. சின்னராஜ்
72.அவினாசி(தனி) – ஏ.ஏ.கருப்புசாமி
73.திருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்
74.திருப்பூர் தெற்கு – ஏ.விசாலாட்சி
75. பல்லடம் – கே.பி.பரமசிவம்
76. சூலூர் – செ.ம.வேலுசாமி
77. கவுண்டம்பாளையம் – வி.சி.ஆறுக்குட்டி
78. கோவை வடக்கு – தா.மலரவன்
79. தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணி
80. கோவை தெற்கு – சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி
81. சிங்காநல்லூர் – ஆர்.சின்னசாமி
82. கிணத்துக்கடவு – செ.தாமோதரன்
83. பொள்ளாச்சி – எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
84. உடுமலைப்பேட்டை – பொள்ளாச்சி வி.ஜெயராமன்
85. மடத்துக்குளம் – சி.சண்முகவேலு
86. பழனி – கே.எஸ்.வேணுகோபாலு
87. ஒட்டன்சத்திரம் – பி.பாலசுப்ரமணி
88. நத்தம் – ரா.விசுவநாதன்
89. திண்டுக்கல் – பி.ராமுதேவர்
90.வேடசந்தூர் – சா. பழனிசாமி
91. அரவக்குறிச்சி – வி.செந்தில்நாதன்
92. கரூர் – வி.செந்தில் பாலாஜி
93. கிருஷ்ணராயபுரம்(தனி) – எஸ்.காமராஜ்
94. குளித்தலை – ஏ.பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை – ஆர்.சந்திரசேகர்
96. திருச்சி மேற்கு – என்.மரியம்பிச்சை
97. திருச்சி கிழக்கு – ஆர்.மனோகரன்
98. திருவெறும்பூர் – டாக்டர் சி. விஜயபாஸ்கர்
99. முசிறி – என்.ஆர்.சிவபதி
100 பெரம்பலூர்(தனி) – இளம்பை ரா. தமிழ்செல்வன்
101 .கடலூர் – எம்.சி.சம்பத்
102. குறிஞ்சிப்பாடி – சொரத்தூர் ரா. ராஜேந்திரன்
103. சீர்காழி(தனி) – திருமதி மா. சக்தி
104. பூம்புகார் – எஸ்.பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் – கே.ஏ.ஜெயபால்
106. கீழ்வேளூர்(தனி) – திருவாரூர் அசோகன்
107. திருத்துறைபூண்டி(தனி) – டாக்டர் கே. கோபால்
108. மன்னார்குடி – சிவா. ராஜமாணிக்கம்
109. திருவாரூர் – குடவாசல் எம்.ராஜேந்திரன்
110. நன்னிலம் – ஆர்.காமராஜ்
111. கும்பகோணம் – ராம.ராமநாதன்
112. பாபநாசம் – ரா. துரைகண்ணு
113. திருவையாறு – எம்.ரங்கசாமி
114. ஒரத்தநாடு – ஆர்.வைத்திலிங்கம்
115. கந்தர்வக்கோட்டை(தனி) – நா.சுப்ரமணியன்
116. விராலிமலை – வி.சி.ராமையா
117. புதுக்கோட்டை – டி.கருப்பையா
118. திருமயம் – பி.கே.வைரமுத்து
119. ஆலங்குடி – கு.பா.கிருஷ்ணன்
120. காரைக்குடி – சோழன். சித. பழனிசாமி
121. திருப்பத்தூர் – ஆர்.எஸ்.ராஜ. கண்ணப்பன்
122. சிவகங்கை – கே.ஆர்.முருகானந்தம்
123. மானாமதுரை(தனி) – ம.குணசேகரன்
124. சோழவந்தான்(தனி) – எம்.வி.கருப்பையா
125. மதுரை தெற்கு – செல்லூர் கே. ராஜூ
126. மதுரை மத்தி – வி.வி.ராஜன் செல்லப்பா
127. மதுரை மேற்கு – கே.சாலைமுத்து
128. திருப்பரங்குன்றம் – ஏ.கே.போஸ்
129. திருமங்கலம் – மா. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி – பா.நீதிபதி
131. ஆண்டிபட்டி – தங்கதமிழ்செல்வன்
132. பெரியகுளம்(தனி) – கே. இளமுருகன்
133. போடி நாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
134. கம்பம் – கே.சந்தனகுமார்
135. ராஜபாளையம் – கே.கோபால்சாமி
136. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) – கே.சீனிவாசன்
137. சாத்தூர் – ஆர்.பி.உதயகுமார்
138. சிவகாசி – கே.டி.ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் – எம்.எஸ்.வி.பி.ரவி
140. அருப்புக்கோட்டை – வைகைசெல்வன்
141. பரமகுடி(தனி) – எஸ்.சுந்தர்ராஜ்
142. முதுகுளத்தூர் – மு.முருகன்
143. விளாத்திகுளம் -ஜி.வி.மணிகண்டன்
144. தூத்துக்குடி – ஜெனிபர் சந்திரன்
145. திருச்செந்தூர் – பி.ஆர்.மனோகரன்
146. ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்
147. ஒட்டபிடாரம்(தனி) – என்.சின்னதுரை
148. கோவில்பட்டி – கடம்பூர் சே.ராஜூ
149. சங்கரன்கோவில்(தனி) – சோ.கருப்புசாமி
150. வாசுதேவநல்லூர்(தனி) – டாக்டர் எஸ். துரையப்பா
151. கடையநல்லூர் – பி.செந்தூர்பாண்டியன்
152. தென்காசி – கே.அண்ணாமலை
153. ஆலங்குளம் – பி.ஜி.ராஜேந்திரன்
154. திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
155. அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா
156. நாங்குனேரி – ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் – எல்.சசிகலா புஷ்பா
158. கன்னியாகுமரி – கே.டி.பச்சைமால்
159. நாகர்கோவில் – நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் – பி.லாரன்ஸ்

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல்

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இன்று வெளியிட்டார். இதன்படி, முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

1. ஆயிரம் விளக்கு – அசன் முகமது ஜின்னா
2. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – ஜெ.அன்பழகன்
3. விருகம்பாக்கம் – க.தனசேகரன்
4. சைதாப்பேட்டை – மகேஷ்குமார்
5. ஆர்.கே.நகர் – சேகர்பாபு
6. கொளத்தூர் – ஸ்டாலின்
7. வில்லிவாக்கம் – க.அன்பழகன்
8. எழும்பூர்(தனி) – பரிதி இளம்வழுதி
9. பொன்னேரி(தனி) – மணிமேகலை
10. திருவள்ளூர் – இ.ஏ.பி.சிவாஜி
11. அம்பத்தூர் – ரங்கநாதன்
12. மாதவரம் – டாக்டர் கனிமொழி
13. திருவொற்றியூர் – கே.பி.பி.சாமி
14. பல்லாவரம் – தா.மோ.அன்பரசன்
15. தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா
16. உத்திரமேரூர் – பொன்குமார்
17. காட்பாடி – துரைமுருகன்
18. ராணிப்பேட்டை – காந்தி
19. கே.வி.குப்பம் – சீத்தாராமன்
20. குடியாத்தம்(தனி) – ராஜமார்த்தாண்டன்
21. திருப்பத்தூர் – ராஜேந்திரன்
22. திருவண்ணாமலை – எ.வ.வேலு
23. கீழ்பெண்ணாத்தூர் – கு.பிச்சாண்டி
24. ஆரணி – சிவானந்தம்
25. வந்தவாசி(தனி) – கமலக்கண்ணன்
26. வானூர் (தனி) – புஷ்பராஜ்
27. விழுப்புரம் – பொன்முடி
28. விக்கிரவாண்டி – ராதாமணி
29. திருக்கோவிலூர் – தங்கம்
30. சங்கராபுரம் – உதயசூரியன்
31. பண்ருட்டி – சபா ராஜேந்திரன்
32. கடலூர் – இள.புகழேந்தி
33. குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
34. திருவிடைமருதூர்(தனி) – கோவி.செழியன்
35. கும்பகோணம் – க.அன்பழகன்
36. திருவையாறு – செல்லக்கண்ணு
37. தஞ்சாவூர் – உபயதுல்லா
38. ஒரத்தநாடு – மகேஷ் கிருஷ்ணசாமி
39. கீழ்வேளூர்(தனி) – மதிவாணன்
40. மன்னார்குடி – டி.ஆர்.பி.ராஜா
41. திருவாரூர் – மு.கருணாநிதி
42. நன்னிலம் – இளங்கோவன்
43. ஸ்ரீரங்கம் – என்.ஆனந்த்
44. திருச்சி மேற்கு – கே.என்.நேரு
45. திருச்சி கிழக்கு – அன்பில் பெரியசாமி
46. திருவெறும்பூர் – கே.என்.சேகரன்
47. லால்குடி – சவுந்திரபாண்டியன்
48. மண்ணச்சநல்லூர் – என்.செல்வராஜ்
49. துறையூர்(தனி) – பரிமளாதேவி
50. பெரம்பலூர்(தனி) – பிரபாகரன்
51. குன்னம் – சிவசங்கர்
52. அரவக்குறிச்சி – கே.சி.பழனிச்சாமி
53. கிருஷ்ணராயபுரம்(தனி) – காமராஜ்
54. குளித்தலை – மாணிக்கம்
55. கந்தர்வக்கோட்டை(தனி) – கவிதைப்பித்தன்
56. விராலிமலை – ரகுபதி
57. புதுக்கோட்டை – பெரியண்ணன் அரசு
58. கெங்கவல்லி(தனி) – சின்னதுரை
59. ஏற்காடு(எஸ்.டி.,) – தமிழ்ச்செல்வன்
60. சங்ககிரி – வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு – எஸ்.ஆர்.சிவலிங்கம்
62. வீரபாண்டி – ஆ. ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு – ஆர்.ராஜேந்திரன்
64. ராசிபுரம்(தனி) – வி.பி.துரைசாமி
65. சேந்தமங்கலம்(எஸ்.டி.,) – கே.பொன்னுசாமி
66. குமாரபாளையம் – செல்வராஜ்
67. பென்னாகரம் – இன்பசேகரன்
68. பாப்பிரெட்டிபட்டி – முல்லைவேந்தன்
69. வேப்பனஹள்ளி – செங்குட்டுவன்
70. தளி – ஒய்.பிரகாஷ்
71. மேட்டுப்பாளையம் – அருண்குமார்
72. கவுண்டம்பாளையம் – சுப்ரமணியம்
73. கோவை வடக்கு – வீரகோபால்
74. கோவை தெற்கு – பொங்கலூர் பழனிச்சாமி
75. கிணத்துக்கடவு – கண்ணப்பன்
76. தாராபுரம்(தனி) – ஜெயந்தி
77. திருப்பூர் வடக்கு – கோவிந்தசாமி
78. மடத்துக்குளம் – மு.பெ.சாமிநாதன்
79. ஈரோடு கிழக்கு – முத்துசாமி
80. அந்தியூர் – என்.கே.கே.பி.ராஜா
81. பவானிசாகர்(தனி) – லோகேஸ்வரி
82. கூடலூர்(தனி) – திராவிடமணி
83. குன்னூர் – க.ராமச்சந்திரன்
84. மேலூர் – ராணி ராஜமாணிக்கம்
85. மதுரை கிழக்கு – மூர்த்தி
86. திருமங்கலம் – மணிமாறன்
87. உசிலம்பட்டி – ராமசாமி
88. மதுரை மத்தி – கவுஸ் பாஷா
89. மதுரை மேற்கு – தளபதி
90. பழனி – செந்தில்குமார்
91. ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
92. ஆத்தூர் – இ.பெரியசாமி
93. நத்தம் – விஜயன்
94. ஆண்டிபட்டி – எல்.மூக்கையா
95. பெரியகுளம்(தனி) – வீ.அன்பழகன்
96. போடிநாயக்கனூர் – லட்சுமணன்
97. கம்பம் – ராமகிருஷ்ணன்
98. திருவாடானை – சுப.தங்கவேலன்
99. முதுகுளத்தூர் – சத்தியமூர்த்தி
100. திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்
101. மானாமதுரை(தனி) – தமிழரசி
102. ராஜபாளையம் – தங்கபாண்டியன்
103. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) – துரை
104. சாத்தூர் – கடற்கரை ராஜ்
105. சிவகாசி – வனராஜா
106. அருப்புக்கோட்டை – சாத்தூர் ராமச்சந்திரன்
107. திருச்சுழி – தங்கம் தென்னரசு
108. சங்கரன்கோவில்(தனி) – உமாமகேஸ்வரி
109. தென்காசி – கருப்பசாமி பாண்டியன்
110. ஆலங்குளம் – பூங்கோதை
111. திருநெல்வேலி – ஏ.எல்.எஸ்.லட்சுமணன்
112. அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
113. பாளையங்கோட்டை – மைதீன்கான்
114. தூத்துக்குடி – கீதா ஜீவன்
115. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
116. ஒட்டப்பிடாரம்(தனி) – ராஜா
117. கன்னியாகுமரி – சுரேஷ்ராஜன்
118. நாகர்கோவில் – மகேஷ்
119. பத்மநாபபுரம் – புஷ்பலீலா ஆல்பன்.

 

வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பெண் வேட்பாளர்கள் 11 பேர். புதிய வேட்பாளர்கள் 53 பேர்.புது மிருகம் – சிறுத்தையா, புலியா? ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

சுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் புலி. உடல் முழுவதும் புள்ளிகள், கோடுகளுடன் காணப்படும் இந்த வகை மிருகங்கள் ஆசிய காடுகளில் அதிகம் காணப் படுகின்றன.
இந்த இரண்டு மிருகங்களின் கலவை போல் காணப்படும் மிருகம் சமீபத்தில் சுமத்ரா, பொர்னியோ காடுகளில் காணப்பட்டன. புலியைப் போன்ற முகத்துடனும், சிறுத்தை போன்ற உடல் அமைப்புடனும் உள்ள இந்த வகை மிருகம் எப்படி உருவானது என ஆராய்ச்சி யாளர்களை குழப்பியுள்ளது. இந்தோ னேசியா நாட்டில் சுமத்ரா காடுகளில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி யாளர்களின் கேமராவில் இந்த மிருகத்தின் நடமாட்டம் பதிவானது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ள லிப்னிஸ் காட்டு மிருக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரஸ் வில்டிங் தலைமையிலான குழு, இந்த மிருகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.
“நகரங்கள் பெருகி வருவதால், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வெவ்வேறு இடங்களில் தனித்தனி குழுக் களாக வசித்த மிருகங்கள், இப்போது ஒரே இடத்தில் அருகருகே வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. இதன் காரணமாக, இவ் வாறு புதுப்புது கலப் பின மிருகங்கள் தோன்றுகின்றன…’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “வெளி உலகத்திற்கு தெரியாமலேயே பல வித மிருகங்கள் காடுகளில் வசிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது…’ என, வேறு சிலர் வாதிடுகின்றனர். உண்மை என்ன என்பது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் தான் தெரிய வரும்.

பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்


ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சீனா, லாவோ, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் மழை காடுகளில் காணப்படும் கிப்பன் வகை குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலும் மனிதனை ஒத்து காணப்படும் இந்த கிப்பன் குரங்குகள் தங்களுக்கென்று பாடல்கள் வைத்திருக்கின்றன. தனது இணையை கவரவும், எல்லைகளை பிறருக்கு தெரியபடுத்தவும், பிறரோடு தொடர்பு கொள்வதற்கும் என்று பல விசயங்களுக்கு பாடல்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதில் டூயட் பாடல்களும் அடங்கும். ஆய்வுக்கு 92 டூயட் பாடல்கள் உட்பட 400 பாடல் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அந்த பாடல்களை ஏறத்தாழ 53 வேறுபட்ட அலைவரிசைகளில் பிரித்து சோதனை செய்தனர். அதில் கம்போடியா, லாவோ மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள் ஒரே மாதிரியான டி.என்.ஏ. அமைப்பை கொண்டிருந்தது. மேலும் 4 ரகமான தனித்தன்மை வாய்ந்த பாடல்களை அவை பாடுவதும் தெரிய வந்தது. குறிப்பாக வடக்கு வியட்நாம், சீனா ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள், தெற்கு பகுதியை சேர்ந்த கிப்பன்களை காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருப்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது

பித்தம் தணிக்கும் கொத்தமல்லி

உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.

மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.

கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.

நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.

கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள்.  அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம்.  ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.

பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி.  இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர்.  இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்.  இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது.   இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.  இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.

இது கார்ப்புச் சுவை கொண்டது.  குளிர்ச்சித் தன்மையுடையது.  சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.

கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்
-அகத்தியர் குணவாகடம்

பொருள் –
சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.

கொத்தமல்லியின் பயன்கள்

· சுவையின்மை நீங்கும்.

· வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

· செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.

· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.  மலச்சிக்கல் நீங்கும்.   இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும்.  மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

· புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

· கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்  கண் சூடு குறையும்.

· சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்.  மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல்.  இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.  மன அமைதியைக் கொடுக்கும்.

· உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும்.  இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும்.  இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

· வாய் நாற்றத்தைப் போக்கும்.  பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.

சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

கொத்தமல்லி இலை     – 1 கைப்பிடி

சின்ன வெங்காயம்    – 5

மிளகு        – 10

சீரகம்        – 2 தேக்கரண்டி

பூண்டு        – 5 பல்

மஞ்சள் தூள்        – 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை    – 1 கொத்து

உப்பு         –  தேவையான அளவு

எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி சூரணம்

கொத்தமல்லி     – 300 கிராம்

சீரகம்        – 50 கிராம்

அதிமதுரம்        – 50 கிராம்

கிராம்பு        – 50 கிராம்

கருஞ்சீரகம்        – 50 கிராம்

சன்னலவங்கப்பட்டை 50 கிராம்

சதகுப்பை        – 50 கிராம்

இவை அனைத்தையும்  இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும்.  இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.

கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும்.  இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.

இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால்  சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

புதுக் கம்ப்யூட்டர் வாங்கியாச்சா!

குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய கூடுதல் திறனுடன் கம்ப்யூட்டர் வாங்குவது இப்போது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. ஏனென்றால், நம் அன்றாடத் தேவைகள் பலவற்றை கம்ப்யூட்டர் தான் முடிவு செய்கின்றன. எனவே நம் தேவைகளைப் பொறுத்து, இரண்டாவதாக, மூன்றாவதாக எனக் கம்ப்யூட்டர்களை வாங்கிக் கொண்டு போகிறோம்.
இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக கம்ப்யூட்டர் வாங்கிய பின் முந்தைய கம்ப்யூட்டரை என்ன செய்கிறோம்? நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. பழையனவற்றை தூக்கிப் போடுவதே இல்லை. இது பல விஷயங்களில் தேவையற்ற ஒன்று என்றாலும், கம்ப்யூட்டர் விஷயத்தில், முந்தைய பழைய கம்ப்யூட்டரைச் சில காலமேனும் வைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கியவுடன் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

1. முதலில் பழைய கம்ப்யூட்டரில் பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவும். இவற்றில் எவை எல்லாம், புதிய கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தேவையாக இருக்கும் என்று அந்த பட்டியலில் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம்களை டிஸ்க் வடிவில் நீங்கள் வாங்கியிருந்தால், அந்த டிஸ்க்குகளை எடுத்து வைத்திடுங்கள். அவை இயக்கப்படும் வகையில் நல்ல நிலையில் உள்ளனவா என்று பார்க்கவும். டவுண்லோட் செய்திருந்தால், மீண்டும் அவை கிடைக்கும் தளங்களுக்கான முகவரிகளைச் சோதித்துக் குறித்து வைக்கவும். இந்த புரோகிராம்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டிருந்தால், அந்த எண்களையும் பாதுகாப்பாக எழுதி வைக்கவும்.

2. அடுத்து புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், ஒரு டயலாக் பாக்ஸ் அல்லது விஸார்ட் உங்களை வழி நடத்தும். முதலாவதாக அட்மினிஸ்ட் ரேட்டர் யூசர் அக்கவுண்ட் திறக்குமாறு கேட்டுக் கொள்ளும். ஏற்கனவே முந்தைய கம்ப்யூட்டரில் என்ன பெயர் பயன்படுத்தினீர்களோ, அதனையே பயன்படுத்தவும். கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் கொடுக்கச் சொல்லி கேட்கும். இங்கு புதிய பெயரைக் கொடுக்கவும். முந்தைய கம்ப்யூட்டருக்குக் கொடுத்த பெயரைத் தர வேண்டாம்.

3. அடுத்து உங்கள் புதிய கம்ப்யூட்டரில், அதனைத் தயாரித்தவர், அவர் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களையும், தன் நிறுவனத்தின் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பதிந்து வைத்து அனுப்பியிருப்பார். இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தேவையற்றதாக இருக்கும். எனவே இவற்றை நீக்குங்கள். இவை எல்லாம் விற்பனைக்கான சில வழிகளே. இவற்றைக் காட்டிப் பின்னர், கட்டணம் செலுத்தி சில புரோகிராம்களை வாங்கச் சொல்வார்கள். இவற்றை எப்படி நீக்கலாம்? கண்ட்ரோல் பேனல் சென்று Add or Remove Programs மூலம் நீக்கலாம். முழுமையாக நீக்கப்படுவதனை உறுதி செய்திட, இந்த புரோகிராம்களை Revo Uninstaller அல்லது Total Uninstall புரோகிராம்கள் மூலம் நீக்கலாம்.

4. தேவையற்றது நீக்கப்பட்டவுடன், இனி, உங்களுக்குத் தேவைப்படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களைப் பதியவும். இந்த புரோகிராம் களைப் பதிந்தவுடன், அந்த புரோகிராம் களைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று, அவற்றிற்கான அப்டேட் புரோகிராம்கள் தரப்பட்டிருந்தால், அவற்றையும் டவுண்லோட் செய்து இண்ஸ்டால் செய்திடவும். இது போன்ற அப்டேட் செய்யக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும், இணைய இணைப்பில் இருந்தவாறே கம்ப்யூட்டரில் அப்டேட் செய்யப்படக் கூடியவையாக இருக்கும். இந்த புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், அவை இயங்க கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க வேண்டும் என நினைவூட்டினால், சோம்பல் படாமல், மீண்டும் ஒரு முறை இயக்கவும். அப்போதுதான், அந்த புரோகிராம் முழுமையாக இயங்குகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

5.கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்பட்ட சவுண்ட் கார்ட், வீடியோ கார்ட் ஆகியவற்றிற்கு,அவற்றிற்கான ட்ரைவர்களை நிறுவத் தேவை இருக்காது. ஆனால் நீங்களாக இணைக்கும் சாதனங்களுக்கு ட்ரைவர் புரோகிராம் களை இன்ஸ்டால் செய்திட வேண்டும். பிரிண்டர், வெப் கேமரா, ஸ்கேனர் போன்றவை இந்த பட்டியலில் அடங்கும். உங்களுடைய மொபைல் போன் களுக்கான அப்ளிகேஷன் களையும், புதிய கம்ப்யூட்டரில் பதிந்திட வேண்டியதிருக்கலாம்.

6. அனைத்து புரோகிராம்களும் பதிந்து முடிக்கப்பட்டவுடன், புதிய கம்ப்யூட்டரை உங்கள் இனிய தோழனாக (தோழியாக!) மாற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும், உங்களுக்குப் பிரியமான புரோகிராம்களை ஸ்டார்ட் மெனு அல்லது டாஸ்க் பாருக்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் அதிகம் நேசிக்கும் வால் பேப்பர், ஸ்கிரீன் சேவர் காட்சிகளை செட் செய்திடுங்கள். முந்தைய கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்தி வந்தால், அதே பெயர்களில், அவற்றை இங்கும் உருவாக்கவும்.

7. இப்போது உங்கள் புதிய கம்ப்யூட்டர் முழுமையாக இயங்க அனைத்து புரோகிராம்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். சரி, அவற்றில் இயங்க டேட்டா வேண்டும் அல்லவா? இவற்றை முந்தைய கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே காப்பி செய்து கொண்டு வரலாம். அல்லது இருக்கின்ற நெட்வொர்க்கில் இரண்டு கம்ப்யூட்டரையும் இணைத்து, இணைத்த நிலையில் எளிதாக மாற்றலாம். அதற்கு முன், புரோகிராம்களுடன் தயாரான நிலையில், உங்கள் புதிய கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை ஒரு இமேஜ் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஒரு எக்ஸ்டர்னல் டிஸ்க் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான இமேஜ் பேக் அப் புரோகிரம் தரப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தலாம். அல்லது Macrium Reflect Free / EASEUS Todo Backup என்ற புரோகிராம்களில் ஒன்றைப் பயன் படுத்தலாம். இரண்டுமே இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய புரோகிராம்களே.
இப்போது உங்கள் டேட்டா பைல்களை (டாகுமெண்ட், ஒர்க்புக், போட்டோ, படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள்) மாற்றுங்கள். புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள். புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்கள் இயங்கத் தொடங்குகையில்தான், பிரச்னைகள் இன்னும் என்ன என்று தெரியவரும். அப்போது முந்தைய கம்ப்யூட்டருக்குச் சென்று அதற்கான பைல்களை மாற்றுங்கள்.
நீங்கள் எக்ஸ்பி பயன்படுத்தியவராக இருந்து, பின்னர் விண்டோஸ் 7க்கு மாறியவராக இருப்பின், சில புரோகிராம்கள், விண்டோஸ் 7 இயக்கத்தில் இயங்க முடியாதவையாக இருப்பதனைக் கவனிக்கலாம். அந்த புரோகிராம் தளங்களுக்குச் சென்று அவற்றின் தன்மை குறித்து அறியவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம் பதிப்புகள் இருப்பின், அவற்றைப் பதியவும். அல்லது விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி மோட் வகையில் அவற்றை இயக்கி டேட்டா பைல்களை மாற்றவும்.