Daily Archives: மார்ச் 20th, 2011

அன்பு சகோதரியின் அன்பு வைகோ மீது எப்போதும் மாறாமல் இருக்கும்: வைகோவுக்கு ஜெ., கடிதம்

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க., அறிவித்ததையடுத்து ஜெ., வைகோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் கூட்டணியில் தொகுதிகள் தருவது குறித்து தாங்கள் அடைந்துள்ள அதிருப்திக்கும், வெளியேறுவது என்ற முடிவுக்கும் தாம் வருந்துவதாகவும் , என்றும் அன்பு சகோதரியாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஜெ., அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க.,வில் தங்களது தலைமையிலான ம.தி.மு.க.,வும் கடந்த 2006 ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகிறது. நடைபெற இருக்கும் 2011 ம் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் சூழ்நிலைகளையும், அ.தி.மு.க,., தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதையும் முதிர்ந்த அரசியல்வாதியான நீங்கள் நன்கு அறிவீர்கள் . எனவே உங்கள் கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்க முடியாது. 12 தொகுதிகள் ஒதுக்கி தருகிறோம் என்று பொருளாளர் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மூலம் உங்களுக்கு சொல்லி அனுப்பினேன். இருப்பினும் தாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் என்ற அறிவிப்பு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. தங்களது கட்சியின் முடிவு நிலை குறித்து தாங்கள் முடிவு எடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. இருப்பினும் உங்கள் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் உங்கள் மீது எப்போதும் இருக்கும். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க., தங்களை முழுமையாக காயப்படுத்தி விட்டதாகவும், ஜெ.வின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், தொடர்ந்து அகந்தையுடன் இருப்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ம.தி.மு.க,. அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் அ.தி.மு.க, தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அவசர, அவசரமாக , கூட்டணி கட்சி தலைவர்களை ஜெ., சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து பார்வர்டுபிளாக் கட்சி, மனிதயேமக்கள் கட்சி, புதிய தமிழகம், இ.கம்யூ., மார்க்., கம்யூ என அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் ,சமத்துவ மக்கள் கட்சி, என அனைத்து கட்சிகளுக்கும் கேட்டபடி தொகுதிகளை ஒதுக்குவதாக ஜெ., சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டடது. 2 நாளாக தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தே.மு.தி.க.,விற்கு தொகுதி ஒதுக்கீடு பிரச்னை முடிவுக்கு வந்தது.இதனை இன்னும் விஜயகாந்த் உறுதி செய்யவில்லை. இவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இக்கட்சியின் அவைத்தலைவர் பன்ருட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என அதிருப்பதியில் இருந்தனர். இதனையடுத்து ம.தி.மு.க., நேற்று சனிக்கிழமை காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதிக்கப்பட்டது. மாலையில் மாவட்ட செயலர்களுடன் 2 முறை வைகோ கலந்து பேசினார்.முன்னதாக அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர்.

இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது. இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகம் மற்றும் புதுவையில் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வைகோ கூறியுள்ளார்.

இது தெடர்பாக அவர் மேலும் கூறுகையில்,தொகுதி பங்கீட்டு முறையில் அ.தி.மு.க., நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கு தங்களை கடுமையாக காயப்படுத்தி விட்டதாகவும், சுயமரியாதை இழந்து பதவிகளை பெறற வேண்டிய அவசியம் இல்லை. 3வது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம் வருமாறு:

2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடைபெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் கழகம் இடம் பெற்றது. தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த வைகோ : மறுமலர்ச்சி தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், கழகத்தில் பெரும்பாலோருடைய கருத்தினை ஏற்று, அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால், கழகத்தின் பொதுச்செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன. அந்தத் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் போட்டியிட்ட தொகுதிகளைக் குறிவைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.கழகம், தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, கழகம் போட்டியிட்ட தொகுதிகளில், பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் : ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது; பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று.அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப் பிரச்சாரம், அண்ணா தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை ஆகும். அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகம், உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.தமிழக சட்டமன்றத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து முழுமனதோடு இணைந்து செயல்பட்டது.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அண்ணா தி.மு.கழகம் தானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக் கொண்டது. கம்பம், தொண்டாமுத்துடர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அண்ணா தி.மு.க.வின் முடிவை, மறுமலர்ச்சி தி.மு.கழகமும் ஏற்றுக் கொண்டது.

ஈழத்தமிழர் பிரச்சினையில், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் உள்ளிட்ட, முக்கியமான கொள்கைகளை,மறுமலர்ச்சி தி.மு.கழகம், கூட்டணிக்காக ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது இல்லை. இதனை, அண்ணா தி.மு.க. தலைமை நன்றாகவே அறியும். ஏனெனில், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ஈழத்தமிழர் பிரச்சினையில், ம.தி.மு.க.வின் நிலைப்பாடு, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கூட்டணி பிரித்து கொள்வதில் நடந்தது என்ன ? :நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அண்ணா தி.மு.க. குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது.இரண்டாவது சுற்றுப் பேச்சுகளின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போதுதான், ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.குறைந்தபட்சம், 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கழகத்தின் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டபோதும், மார்ச் 12 ஆம் தேதியன்று, மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது. மறுநாள், 13 ஆம் தேதி, அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து, 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.மார்ச் 14 ஆம் தேதி காலை 11 மணி அளவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, அவரது இல்லத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் சந்தித்த, திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், மார்ச் 13 ஆம் தேதி அன்று, அ.தி.மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளைக் கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியைக் குறைத்து, ஏழு தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்கச் சொன்னதாகக் கூறி விட்டுச் சென்றார்கள்.

இதன்மூலம், ம.தி.மு.க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது. அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதல் நாள் கூறியபடி, 8 தொகுதிகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாக, அ.தி.மு.க.தலைமையின் சார்பில் கூறினார்கள்.

15 ஆம் தேதி இரவு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரின் பிரதிநிதிகள், வைகோ அவர்களைச் சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தர முடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள்.மறுநாள், 16 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில், மீண்டும் அதே பிரநிதிகள், முதல் நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிப்படுத்தி, இதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இட வருமாறு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம்; நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால், உடன்பாடு குறித்துப் பேசுவோம்; அதைத் தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை’ என்று கூறி விட்டார்.

அன்று மாலையிலேயே, ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை என்பதை, அ.தி.மு.க. தலைமை அறிவித்தே விட்டது. 2006 ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், திட்டமிட்டே உதாசீனப்படுத்தி விட்டது. மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால், 19 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், ம.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை, தாயகத்தில் சந்தித்து, 12 தொகுதிகளைத் தருவதாக, அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள். ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளைத் தருவதாக இருந்தால், தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. தரப்பில், அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.தொகுதிப் பங்கீட்டில், அனைத்திந்திய அண்ணா தி.மு.க. தலைமை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும், கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்தி விட்டது.

ஜெ., போக்கில் மாற்றமில்லை :அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்களுடைய நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டி இடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு, ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற, துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

நன்றி-தினமலர்

85 வயது `மன்மத தாத்தா!

85 வயது `மன்மத தாத்தா!

`பிளேபாய்’ கிளுகிளு பத்திரிகையின் நிறுவனரான ஹக் ஹெப்னர், நிஜ வாழ்க்கையிலும் `ஜிலுஜிலு’வென்று வாழ்பவர். எப்போதும் இளம்பெண்கள் சூழ்ந்திருக்க, மன்மதராசாவாய் வலம் வருபவர். இளமங்கைகளுடன் களியாட்டம், தண்ணி பார்ட்டி என்றே நாட்களைக் கழிக்கிறார், இந்த மன்மதத் தாத்தா.

ஒரே நேரத்தில் அதிக பட்சமாய் 7 பெண்களுடன் சுற்றித் திரிந்திருக்கும் ஹெப்னர் (காதில் புகை வருதா?), `வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற கொள்கை கொண்டவர்.

ஹெப்னர் ஏற்கனவே `அதிகாரப்பூர்வமாய்’ 2 முறை திருமணம் செய்து பிரிந்திருக்கிறார். அடுத்து கிரிஸ்டல் ஹாரிஸ் என்ற அழகு நங்கையைக் கரம் பிடிக்கப் போகும் இவர், `இதுதான் எனது கடைசித் திருமணம்’ என்கிறார்.

`செக்ஸ் நல்லது தான். ஆனால் அதுவே வாழ்க்கையில் முக்கியமான விஷயமல்ல’ என்றும் வேதம் ஓதும் ஹெப்னர், இனி தனது வருங்கால மனைவியின் அனுமதியில்லாமல் வேறு பெண்ணுடன் `செல்ல’ மாட்டேன் என்றும் `நல்ல பிள்ளையாய்’ சொல்கிறார்.

இந்தப் பேட்டியில், சீண்டலான கேள்விகளுக்கும் தனது பாணியில் ஜாலியாக பதில் சொல்கிறார் ஹெப்னர்.

ஒருநாளாவது ஹெப்னர் போல வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணாத மனிதரே இருக்க மாட்டார் இல்லையா?

“நிறையப் பேர் என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை.”

நீங்கள் நினைத்தால் எந்தப் பெண்ணையும் உங்கள் படுக்கையறைக்கு வரவழைக்கலாம். அப்படிச் செய்தும் இருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, கிரிஸ்டலுடன் ஏன் வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்ள வேண்டும்?

“உண்மையைச் சொன்னால் இது விதி. இப்படிப்பட்ட சூழல் உருவாகும் என்றே நான் நினைக்கவில்லை. `திருமணம் என்பது நம்பிக்கையின் சாவு’ என்று பிரபல நடிகர் வூடி ஆலன் ஒரு படத்தில் கூறுவார். எனது முதல் இரு திருமணங்களில் எனக்கு அதிக அதிர்ஷ்டமில்லை. நானும் கிரிஸ்டலும் இரண்டரை ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம். இனி எஞ்சிய காலத்தை வேறு ஒரு பெண்ணுடன் கழிக்க முடியாது என்று தோன்றுகிறது. இதை விடச் சிறந்த ஒன்றை நான் அடைய முடியாது. அதாவது, நாங்கள் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குகிறோம். அதுதான் முக்கியம்.”

திருமண தேதி?

“ஜூன் 18. திருமணத்தின்போது எனக்கு எனது சகோதரன் முதன்மைத் துணைவனாகவும், எனது இரண்டு மகன்கள் மார்க்ஸன், கூப்பர், உதவித் துணைவர்களாகவும் இருப்பார்கள்.

`போயும் போயும் ஒரு 80 வயது ஆசாமியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா’ என்று நிறையப் பேர் பேசியிருப்பார்களே? ஹெப்னர் அப்படியென்ன வசியம் செய்தார்?

கிரிஸ்டல்: “நான் ஹெப்பை காதலிக்கிறேன். நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் அருமையான மனிதர் இவர். ஹெப்புடன் நான் வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்கிறேன். இவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பதே கஷ்டமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, நான் எனது பிறந்தநாளின்போது `பவுலிங்’ விளையாடப் போகலாம் என்றேன். அவர் தனது பிறந்தநாளின் போதோ, லாஸ்வேகாசில் உள்ள இரண்டு `நைட் கிளப்’புகளுக்கு போகலாம் என்றார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். இப்படித்தான் எங்கள் பொழுது போகிறது.”

ஹெப்னர் குறுக்கிட்டு கூறுகிறார்: “நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன்- வயது என்பது வெறும் எண்ணிக்கைதான். நீங்கள் எந்த வயதுப் பெண்ணுடன் பழகுகிறீர்களோ, அதுதான் உங்கள் வயது. இளம்பெண்கள் என்னை இளமையாக உணர வைக்கிறார்கள். இளமையான ஒருவருடன் பழகுவது உங்களை உயிர்ப்புடன் வைக்கிறது”

கிரிஸ்டலை மணந்த பின்பு அவருக்கு உண்மையாக இருப்பீர்களா?

“ஆமாம்.”

விசுவாசமாக இருப்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?

“வெற்றிகரமாக அமையாத எனது கடைசித் திருமணத்திலும் நான் விசுவாசமாகவே இருந்தேன்.”

அப்படியானால் உங்களுடன் இருக்கும் மற்ற பெண்களின் கதி என்னவாகும்?

“அவர்கள் எப்போதும் போல வந்து போகலாம் – வார இறுதிகளில் அவர்களுக்கு அனுமதியுண்டு.”

அவர்களுக்கு எதுவரை அனுமதி?

“படுக்கை அறைக்குள் மட்டும் அவர்களை அனுமதிக்க மாட்டேன்.”

***

சுறா புட்டு

சுறாப்புட்டு, அசைவப் புட்டு வகையாகும். மாவுடன் சர்க்கரை சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடும் புட்டு ருசியில் சிறந்தது. எல்லோருக்கும் உகந்தது. அது போலவே சுறாப்புட்டும் சுவையில் சிறந்தது. சத்து மிகுந்தது.

 

சுறா புட்டு

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/2 கிலோ

சாம்பார் வெங்காயம் – 200 கிராம்

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணை – 1/2 குழிக்கரண்டி

செய்முறை

* ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சுறாவை வேக விடவும்.

* சுறா வெந்த பிறகு தோல், முள் நீக்கி விடவும், சதைப் பகுதியை மட்டும் உதிரி உதிரியாகச் செய்து கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கறி வேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

* வெங்காயத்தை சேர்த்து முக்கால் பாகம் வதக்கவும். பின் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* பின்பு சுறாவை சேர்த்துக் கிளறவும். உப்பை சரி பார்க்கவும்.

* ரொட்டித் துண்டு மாதிரி சுறா வெந்து உதிரி உதிரியாக வந்ததும் இறக்கி விடவும்.

* இது பார்ப்பதற்கு முட்டைப் பொரியல் மாதிரி இருக்கும். சுவை சூப்பராக இருக்கும்.

`செப்’ தாமு



இரண்டு மவுஸ் கிளிக்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், சில விஷயங்கள் நமக்கு எந்த நேரமும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும். அவற்றில் ஒன்று, மவுஸ் கொண்டு கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பது. பல வேர்ட் ப்ராசசர், இமெயில் டெக்ஸ்ட் எடிட்டர்கள், இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றில் இந்த மவுஸ் கிளிக் பயன்பாடு நமக்குக் கிடைக்கிறது.
ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய்கிறோம்? டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்க மவுஸ் கர்சர் அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை ஹைலைட் செய்திடுகிறோம்.
இதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது ஒரு சொல் எனில், அதன் மீது எங்கேணும் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று இரு முறை கிளிக் செய்திடுங்கள். அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்திடுங்கள். அந்த பத்தி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
இனி நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை எப்படி வேண்மானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஸ்ரீரங்க சிறப்புகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு என்று பல தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றில் சில…

* தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் தலம்.

* புராணப்படி இக்கோவிலானது திருப்பாற்கடலில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.

* சுயம்பு சேத்திரங்களில் ஒன்று இது.

* சயன கோலத்தில் மூலவரான பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது.

* மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம்தான்.

* ராமாவதாரம் முடிந்த பிறகு தோன்றிய பழமையான கோவில் இது.

* பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11-வது தலமான திருச்சிறுபுலியூருமே அந்த திருத்தலங்கள்.