Daily Archives: மார்ச் 24th, 2011

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை (2011): தாலிக்கு அரை பவுன், இலவச லேப்டாப், விசிறி, மிக்சி, கிரைண்டர்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெண்களின் தாலிக்கு அரைபவுன் தங்கம், குடும்ப பெண்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் என ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைவிபரம் வருமாறு;

* குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி, பயனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

*நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் 5.6 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மூன்று லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மான்யத்துடன் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

* வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வீடுகளுக்கு சூரிய ஒளிமூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.

* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திலுள்ள 6,000ம் கிராமங்களில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அடித்தட்டு மக்களுக்கு நான்கு ஆடு இலவசமாக வழங்கப்படும்.

* அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடை, காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

* பெண்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

* இலவச திட்டங்கள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கும் நீடிக்கப்படும்.

* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வர இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்.

* ஒவ்வொரு யூனியன் பகுதிகளிலும் முதியோர், ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் தங்க சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அங்கு தங்குவோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் அங்கு புத்தக நிலையம், தியான மண்டபம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

* பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும், 25 ஆயிரம் ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கு கிராம் தங்கம் (அரை பவுன்) மணப்பெண்ணின் திருமாங்கல்யம் (தாலி) செய்ய இலவசமாக வழங்கப்படும். இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை, 50 ஆயிரம் ரூபாயும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படும்.

நம் அறியாமையே அவர்களின் ஆனந்தம் (இலவச அரசியல்)

சிலருக்கு சில பொருட்கள் இலவசம் என்ற நிலையிலிருந்து, இப்போது, பலருக்கு பல பொருட்கள் இலவசம் என்றபடி அரசியல்வாதிகளின் தேர்தல் பொருளாதாரம் வளர்ந் திருக்கிறது. இதை, இனி எதுவரை நீட்டிக்க முடியும்? எல்லாருக்கும் தினமும் பஸ்சில், ரயிலில், விமானத்தில் இலவச பயணம். எந்த ஜவுளி கடைக்கும் போய், ஜவுளிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். மளிகைக் கடைகளில் செருப்பு உட்பட எல்லா பொருட்களும் இலவசம். யாரும், எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம். மின்சாரம், பால் எல்லாமே இலவசம்.

எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தால், மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்களே… அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப் பற்றவர்களாக வளர்ப்பார்களே, அது ஒரு சமுதாய அவலமாயிற்றே என்று சிந்திக்கத் தெரியாதவர்களா நம் அரசியல்வாதிகள்… எல்லாம் தெரிந்தவர்கள் தான். ஆனால், சமுதாயத்தின் பொருளா தாரத்தை இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் மூலம் குலைத்தால் தான் சுரண்ட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். எந்த முதல்வர், தான் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து அதைக் கொடுக்கப் போகிறார்… எல்லாம் வரி கொடுப் பவர்களின் பணம் தானே. ஆனால், இலவசங்கள், மக்கள் தரும் வரிப் பணத்திலிருந்து வருவதாக எந்தப் புண்ணிய வான் அரசியல்வாதியும் சொன்னதாகத் தெரியவில்லை. தங்கள் படத்தை, பெயரையும் போட்டுக் கொண்டு, இதையெல்லாம் தாங்களே தருவதாக பசப்புகின்றனர்.

அண்ணாதுரை தன் நிதிநிலைக் கொள்கை, Tap the rich; put the poor என்று சொன்னதாகச் சொல்வர். அவரது பெயரை அனுதினமும் சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்க அரசியல்வாதிகள், “ஏழை மக்களே! உங்களுக்கு உதவுவது, வசதியான உங்கள் சகோதரர்களே’ என்று ஏன் எடுத்துச் சொல்வதில்லை? பணக்காரர்களுக்கு, பெரிய தொழிலதிபர்களுக்கு சலுகைகள் செய்யும் வழியில், தம் சொந்த கஜானாவை அரசியல்வாதிகள் வளப்படுத்திக் கொள்கின்றனர். நலத்திட்டங்கள் என்ற பெயரில் அரசு கஜானாவிலிருந்து வெளியேறும் பணமும் வெவ்வேறு சதவீதங்களில் அரசியல்வாதிகளையும், அதிகாரி களையும் திருப்திபடுத்தி விட்டே செல்கிறது. இதைவிட பெரிய தேசியத் திருட்டு வேறு எதுவும் இல்லை. இந்தத் திருட்டை செய்து கொண்டு ஆட்சியில் இருப்பவர்களுக்கு, ஒரு பிக்பாக்கெட்காரனை போலீஸ் மூலம் பிடித்து கோர்ட் மூலம் தண்டனை தரச் செய்வதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

அரசாங்கத்தின் பணம், ஆள்பவர்களின் பணம். திருட்டுத்தனமாக சேர்த்ததில் ஏதோ ஒரு சொற்ப சதவீதம், மக்களுக்கு, மறைமுகமாக ஓட்டுக்குப் பணம் என்ற பெயரில் தரப்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், அரசாங்க செலவில் அடுத்த தேர்தல் வரை விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்க செலவில் சலுகைகள், மானியங்கள் தரப்படுகின்றன. இவை, அடித்தட்டு மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கி விடுகின்றன. “ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்’ என்ற வாசகத்தின் பொருள், ஏழைகள், ஏழைகளாகவே இருந்தால் தான் எங்கள் இலவசங்களைப் பெற்று, எங்களுக்கே ஓட்டளிப்பர் என்பது தான். சுயமரியாதை, இனமானம் என்றெல்லாம் பசப்பு வார்த்தைகளில் பேசுபவர்களே, அடித்தட்டு மக்களை ஏழை களாகவும், சோம்பேறிகளாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். இது, மக்களுக்கு தெரிந்திருக் கிறது; புரிந்திருக்கிறதா என தெரியவில்லை. “அறியாமை ஆனந்தம்’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பாமரர்களின் அறியாமை, அரசியல்வாதிகளின் ஆனந்தம். வரி செலுத்துபவர்களுக்கு வருவதில்லை ஆனந்தம்.

வீணடித்தால் அபராதம்: சலுகை விலை அரிசி போய், இலவச அரிசி வந்திருக்கிறது. அதை எல்லாரும் பயன்படுத்துவதில்லை. விற்றுவிடுகின்றனர். ஆனால், மட்டமான அரிசி விளைவதில்லை. நம் பராமரிப்பு அவலமானது. அரிசியை மட்டுமல்லாமல் பிற தானியங்களையும் வீணாக்குகிறோம். பொருளாதாரம் நமக்குப் புரிவதில்லை. இதோ ஒரு நிகழ்ச்சி: ஐந்தாறு இந்திய இளைஞர்கள், ஒரு ஜெர்மானிய உணவகத்தில் நுழைந்தனர். மேஜைகளில் உட்கார்ந்திருந்த ஜெர்மானியர், பண்டங்களை வீணாக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நம் இளைஞர்கள், ஒரே நேரத்தில் பல பண்டங்களை வரவழைத்தனர். மூன்றில் ஒரு பகுதியை வீணடித்தனர். “பில்’ கொடுத்துவிட்டு எழுந்து போகும்போது, பக்கத்து மேஜையில் இருந்த ஒரு பெண்மணி, “ஏன் இப்படி உணவுப் பண்டங்களை வீணடிக்கிறீர்கள்’ என்று கேட்க, அவர்களுக்குள் வாக்குவாதம் வந்தது. இந்திய இளைஞர்கள் சொன்னார்கள், “அதனால் உனக்கென்ன நஷ்டம்? நாங்கள் மொத்தத்திற்கு பணம் கொடுத்துவிட்டோமே…’ உடனே அந்தப் பெண்மணி, மொபைல் போனில் யாரிடமோ பேச, அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஜெர்மானிய போலீஸ்காரர், “ஐம்பது மார்க் அபராதம் விதிக்கிறேன். உங்களிடம் பணம் இருக்கலாம். ஆனால், இங்கே வீணாகியிருப்பது ஜெர்மானியர்களின் உழைப்பு. உணவுக்கு தவிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்’ என்றார். அபராதத்தைக் கட்டிய இந்திய இளைஞர், அதன் பிரதியை நண்பர்களிடம் கொடுக்க, அதை அவர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டிவைத்திருக்கின்றனர். சிக்கனத்தை நினைவுபடுத்த! இதேபோல், நம் பணத்தை வீணடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, அபராதம் விதிக்கலாமா? தாராளமாக. எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம். அவர்களும் அதைக் கட்டிவிடுவர், நம் பணத்திலிருந்து!

ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

தி.மு.க.,வுக்கு – அ.தி.மு.க., சளைத்தது அல்ல ., இலவச திட்டங்களை வாரி வழங்கினார் ஜெ

: தமிழக சட்டசபை தேர்தலில் எல்லாமே இலவசங்கள் என்ற கணக்கில் தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., சளைத்ததல்ல என்பதை பறைசாற்றும் வகையில் அ.தி.மு.கவும் மக்களுக்கு கிடைக்கும் இலவச பொருட்களை பட்டியலிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என்ற தி.மு.க., அறிக்கையை மிஞ்சுவதாக காட்டும் வகையில் , பிளஸ்-1, பிளஸ்- 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். என்றும் தி.மு.க., அறிக்கையில் இடம் பெறாத புதிய இலவசமாக ஆடு, மாடுகளும் கிடைக்கும் என்றும் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை கவர முனைந்துள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

 

தேர்தல் அறிக்கை முழு விவரம் வருமாறு: மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ்- 1, பிளஸ் – 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை , பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.

 

ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ அரிசி வழங்கப்படும்.( தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு மட்டும் என்று தெரிவித்திருந்தது. )

 

அ‌னைவருக்கும் 20 கிலோ அரிசி இவலசம்: அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன மூன்றும் இலவசமாக வழங்கப்படும். (‌தி.மு.க.,அறிக்கை‌யில் கிரைண்டர் அல்லது மிக்சி என விருப்பத்தேர்வின் அடிப்படையில் ஒன்று மட்டும் ) நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அனைவருக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்.

 

மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கெ?ள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தெ?ழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.

 

தமிழகத்தை தலை நிமிரச் செய்வது லட்சியம் : தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் ஏடிநமை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிடிந இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம்,நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து – இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம்.

 

விலைவாசியை குறைக்க சிறப்புத் திட்டம் : விலைவாசி உயர்வினால் இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.விவசாய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பயனில்லாமல், இடையில் உள்ள இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களும், மொத்த விற்பனையாளர்கள், ஆன்லைன் வரன்முறையாளர்களினால் திட்டமிட்டு ஏற்றப்படும் விலைவாசியின் ஏற்றம் தடுக்கப்பட்டு, அதைத் தடுக்க அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.

 

விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செடீநுயப்படும். கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இலவசமாக நவீன பசுமை வீடுகள் : வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாடீநு செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாடீநு மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.

 

இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம் : இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம்.

 

கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார்துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும். மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

இலவசங்கள் வழங்குவதில் தி.மு.க.,விற்கு அ.தி.மு.க., சளைத்தது அல்ல என்பதை இக்கட்சியும் நிரூபித்துள்ளது.

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

‘உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

கால் மூட்டு வலி

நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்ற பழமொழி உண்டு.  இந்த பழமொழியின்  பொருளை  நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்.

மனித உடலானது எண்ணற்ற  தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும்.  உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது.  இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது.  இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான்.  இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால் அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும்.  பொதுவாக மனிதனுக்கு நோய் ஏற்படக் காரணம் உண்ணும் உணவும், மன பாதிப்பும்தான்.

நம் முன்னோர்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள்.  அதற்குக் காரணம் அவர்கள் உடலுக்கும், மூளைக்கும் சமமாக போதிய அளவு வேலை கொடுத்தார்கள்.  ஆனால் இன்று மூளைக்கு மட்டுமே அசுர வேலை கொடுக்கப்படுகிறது.  உடல் அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.   இயந்திர மனிதர்கள் போல் மாறிவிட்டனர்.  உணவைக்கூட மறந்து இயங்குபவர்களுக்கு உடற்பயிற்சி என்ற வார்த்தையே மறந்து போய்விட்டது.

நோய்கள் என்றால் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் என்ற பெரிய நோய்கள் மட்டுமல்ல. நம் வேலையை சற்று ஸ்தம்பிக்கச்செய்து உடலைக் கஷ்டப்படுத்தும் அனைத்துமே நோய்கள்தான்.

அப்படிப்பட்ட நோய்களில் அனேக மக்களை வாட்டிவதைக்கும் நோய்தான்  கால் மூட்டுவலி.

இந்த நோய் நடக்க இயலாமல் செய்வதுடன் பயங்கரமான வலியை உண்டாக்கும்.  சிலருக்கு  கால் மூட்டுகளில் வீக்கமும் வலியும் உண்டாகி இதனால் இவர்கள் சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் செய்துவிடும். மாடிப்படிகளில் ஏற முடியாது.

இதற்கு சிலர் மருந்துமாத்திரைகளை உட் கொண்டும், அறுவை சிகிச்சை செய்துகொண்டும், வருகின்றனர்.

மூட்டுவலி பெரிய நோய்களில் ஒன்றாகவே தற்போதைய காலக்கட்டத்தில் கருதப்படுகிறது.

மூட்டுவலி என்பது மூட்டுத் தேய் மானத்தால் மட்டும் வருவதல்ல.  மலச் சிக்கலாலும் இது ஏற்படும்.

ஓதுகின்ற மலக்கட்டை ஒழியவைத்தால் …

என்ற சித்தர் பாடலில் மலச்சிக்கலால் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்புண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மூட்டுவலி வயதான ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும்.  இது ஆயுர்வேத மருத்துவத்தில் சந்திவாதம் என்று அழைக்கப்படுகிறது.

முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித சவ்வு உள்ளது.  இதற்கு கார்டிலேஜ் என்று பெயர் இந்த சவ்வுதான் மூட்டுகளின் அசைவிற்கு உதவுகிறது. இந்த சவ்வுகளில் வாய்வு சேர்ந்து அது வாத நீராக மாறி மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.  அதோடு மட்டுமல்லாமல் குடல் அழற்சி, பித்த அதிகரிப்பு, பித்த எரிச்சல், நெஞ்செரிச்சல் இவைகளால் மூட்டு வலி உண்டாகும்.  பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அதிக ஓய்வில்லாமல் வேலை செய்வதாலும், மாடிப்படிகளில் ஏறி இறங்குவதாலும் கூட மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.  மாதவிலக்கான பெண்களை பழங்காலத்தில் ஓரிடத்தில் அமரச் செய்து ஓய்வு கொடுத்ததன் அர்த்தம் தற்போது புரிகிறது.

தற்போதைய காலகட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை, வேலைப்பளு, ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு அதிகம் மூட்டுவலி வருவதை நாம் காணமுடிகிறது.

கால் மூட்டுவலிக்கான அறிகுறிகள்.

காலையில் எழுந்தவுடன் தலைவைலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி போன்றவை உண்டாகும்.  மலம் சீராக வெளியேறாமல் மலச்சிக்கல் ஏற்படும்.  உண்ட உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வாயுத்தொல்லைகள் உண்டாகும்.  இதனால் பசியின்மை, நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.

கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகி வலியை ஏற்படுத்தும்.  கால் நடுக்கம் ஏற்படும்.  சிறிது தூரம் நடந்தாலே மூட்டுகளில் வலி உண்டாகும்.  நாளடைவில் கால்களை மடக்கி உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமல் செய்துவிடும்.  மேலும் தோள்பட்டை வலி, முதுகுவலி, கழுத்து வலியும் ஏற்படும்.

மூட்டுவலி ஏற்படக் காரணம்

நேரத்திற்கு உணவு அருந்தாமை யாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதாலும் நீண்ட பட்டினி இருப்பதாலும், அஜீரணக் கோளாறு உண்டாகிறது.  இதுபோல் இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதாலும், குடலில் உள்ள அபானவாயு சீற்றம் கொள்கிறது.  பொதுவாக அபான வாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டதாகும்.  ஆனால் அது சீற்றம் கொள்ளும்போது மேல்நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது.  அங்கிருந்து பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச் செல்கிறது.  அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது.  இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது.  இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்தநீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது.  இதனால் வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு ஏற்ப உலர்ந்தும், இறுகியும் தாங்க முடியாத வலியை உண்டு பண்ணி நடக்க இயலாமல் செய்யும்.

மூட்டுவலி ஏற்படாமல் தடுக்க

· நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.

· எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்பது நல்லது.

· குறிப்பாக இரவு வேளைகளில் நாம் உட்கொள்ளும் உணவு  மென்மையானதாகவும், எளிதில் செரிமானமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

· அரைவயிறு உணவே இரவில் நல்லது.

· நீண்ட பட்டினி, அதிகமான டீ, காபி, மது, புகை, போதை வஸ்துக்கள் இவைகளால் குடல் அலர்ஜி ஏற்பட்டு வாயு சீற்றமாகி அதுவே  கால் மூட்டுவலியை உண்டாக்கும்.  இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

· மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.  மலச் சிக்கலைத் தவிர்ப்பது நல்லது.

· அதிக உஷ்ணத்தையும், வாயுவையும் கொடுக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.

· அதிக புளிப்பு காரங்களைத் தவிர்ப்பது நல்லது.

கீரைகள், பழங்கள், காய் கறிகள், மூலிகை சூப் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் 1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.  கை, கால்களை நன்கு வீசி நடக்க வேண்டும்.  குறிப்பாக கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

கால் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை முறையில் முழு நிவாரணம்  கிடைப்பது அரிது. ஆனால், இந்திய மருத்துவ முறைகளில் பூரண குணமடைய மருந்துகள் உள்ளன.

உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் சீராக இருந்தால்  நோயில்லா வாழ்க்கை வாழலாம்.

நன்றி- ஹெல்த்சாய்ஸ்

100 மைல் தொலைவில் இருந்து எதிரிகளை தாக்கும் நவீன துப்பாக்கி: அமெரிக்கா கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் கப்பற்படையில் புதிய வகை துப்பாக்கி ஒன்று சேர்க்கப்பட இருக்கிறது. இதில் இருந்து வெளிப்படும் துப்பாக்கி குண்டு ஒலியை விட எட்டு மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 20 பவுண்டு எடை கொண்ட இந்த துப்பாக்கி குண்டு சிறிய வகை ராக்கெட் போல் காணப்படுகிறது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் அமைந்துள்ள கப்பற்படை மையத்தில் இந்த துப்பாக்கி சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது அது 33 மெகா ஜூல்கள் அளவு ஆற்றலை வெளிப்படுத்தி சீறி பாய்ந்து சென்றது. (ஒரு மெகா ஜூல் என்பது ஒரு டன் எடையுள்ள கார், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்வதற்கு சமம்). ஒரு சில நிமிடங்களிலேயே 100 மைல்கள் தூரம் செல்ல கூடிய இந்த ராக்கெட் மற்ற சாதாரண வகை துப்பாக்கிகளை விட அதிக துல்லியம் வாய்ந்தது. தற்போது அமெரிக்காவின் கப்பற்படையில் 13 மைல்கள் தூரம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த துப்பாக்கிகளே உள்ளன. இவ்வகை துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்த பின் பாதுகாப்பான இடத்தில் இருந்தே எதிரி படைகளை தாக்க இயலும். அதற்கு இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. வரும் 2025-ஆம் ஆண்டில் இருந்து 6 நிமிடங்களில் 200 மைல்கள் சென்று தாக்கும் தன்மை வாய்ந்த நவீன தொழில்நுட்பம் வாய்ந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்!

நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?

பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:

பால் பொருட்கள்:

பால் ஒரு கப்  (225 மிலி) 150 கலோரி
வெண்ணெய் 1 டீ ஸ்பூன்  150
நெய் 1 டீ ஸ்பூன்  45

பழங்கள்:

ஆப்பிள் (சிறியது)  5060
வாழைப்பழம் (நடுத்தரம்)  100120
திராட்சை பழங்கள் (சிறியது) 155060
மாம்பழம் (சிறியது)  100120
ஆரஞ்சு (நடுத்தரம்)  5060

சமைத்த பண்டங்கள்:

அரிசி 25 கிராம்  80
சப்பாத்தி 1க்கு  80
காய்கறிகள் 150 கிராம்  80
வெஜிடபிள் பிரியாணி ஒரு கப்  200

அசைவ உணவுகள்:

மீன் 50 கிராம்  55
இறைச்சி  75
முட்டை  75
மட்டன் பிரியாணி ஒரு கப்  225
கோழிக்கறி 100 கிராம்  225

மற்ற பண்டங்கள்:

இனிப்பு பிஸ்கட் 15 கிராம்  70
கேக் 50 கிராம்  135
கேரட் அல்வா 45 கிராம்  165
ஜிலேபி 20 கிராம்  100
ரசகுல்லா  140

பொதுவாக ஒரு மனிதன் இயங்குவதற்கு அவரது உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து 4000 முதல் 7000 கலோரிகள் வரை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வறண்ட சருமத்தை பாதுகாக்க…

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவுபெறும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவி விடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மறைந்து போவதோடு, முகம் பிரகாசிக் கவும் ஆரம்பித்து விடும்.

“சிடி’ பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற

அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும், கம்ப்யூட்டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கின்றனர்.
முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி வேறு சிடி அல்லது டிவிடிக்குக் கொண்டு செல்வதனை ரிப்பிங் என்கிறோம். இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் இது பெரும்பாலும் மியூசிக் டேட்டா வினையே குறிக்கிறது. சிடியிலிருந்து இசைப் பாடல்களை வெளியே எடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவதுதான் ரிப்பிங். பொதுவாக இந்த பைல்கள் காப்பி ஆகையில் .wma என்ற பார்மட்டில் காப்பி ஆகும். ரிப்பிங் குறித்து தெரிந்து கொண்டால் சிடியிலிருந்து மட்டுமல்ல வேறு மீடியாக்களிலிருந்தும் இன்டர் நெட்டிலிருந்தும் பாடல்களை காப்பி செய்வது எளிதாகும். ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10 அல்லது அதற்குப் பின் வந்தது இருக்க வேண்டும். இதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் எந்த சிடியிலிருந்து பாடலை ரிப் செய்திட வேண்டுமோ அதனை சிடி டிரைவில் போட்டுவிடவும்.
2. வழக்கம்போல், உடனே சிடியில் உள்ள பாடல்கள் இசைக்கத் தொடங்கும். அவ்வாறு பாடல்கள் இசைக்கப் படவில்லை என்றால் File, Open கிளிக் செய்திடுங்கள். அங்கு “Look in:” என்ற டேப்பின் கீழாக சிடி டிரைவில் உள்ள சிடியைத் தேடுங்கள். எந்த மியூசிக் பைல்களை எல்லாம் ரிப்பிங் செய்திட முடிவு செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இவற்றை இயக்க விண்டோஸ் மீடியா பிளேயரில் Open மீது கிளிக் செய்திடவும்.
3. இப்போது தோன்றும் திரையின் மேலாக ஆறு டேப்கள் கிடைக்கும். அவை: Now Playing, Library, Rip, Burn, Sync and Guide. ஆகும். Now Playing பட்டியலில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் பைல்கள் இருக்கும். Rip டேப்பினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் இந்த பாடல் பைல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் வேண்டாமே! சில மட்டும் போதும் என்று எண்ணுகிறீர்களா! அதற்கு வழி உள்ளது.
4. ஒவ்வொரு பாடலின் தலைப்புக்குப் பக்கத்தில் ஒரு செக் மார்க் இருக்கும். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, சிடியில் உள்ள அனைத்து பாடல்களையும் காப்பி செய்திட விரும்பாவிட்டால், நீங்கள் எந்த எந்த பாடல்களை ரிப்பிங் செய்திட வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். விருப்பப்பட்ட பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தவுடன் ஸ்கிரீனில் வலது பக்க மூலையில் Rip என்பதில் கிளிக் செய்திடுங்கள். பாடல்கள் ரிப் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவாகும்.
5. இந்த செயல் முடிந்தவுடன் சிடியை எஜெக்ட் செய்து வெளியே எடுக்கவும். நீங்கள் ரிப் செய்த பாடல்கள் அனைத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரின் லைப்ரேரியில் காணப்படும். லைப்ரேரியில் தான் நீங்கள் எந்த நேரமும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான பாடல்கள் அனைத்தும் இருக்கும்.
6. லைப்ரேரியில் உள்ள பாடல்களை நீங்கள் வழக்கம் போல உங்கள் பிரியப்படி வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். பாடலின் பெயர், பொருள்வகை, மியூசிக் டைரக்டர் என எந்த வகையிலும் வகைப்படுத்தி பைல் செய்து வைத்துக் கொள்ளலாம்.
ஓகே! விண்டோஸ் மீடியா பிளேயர் இல்லாதவர்கள் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? விண்டோஸ் சிஸ்டத்துடன் வந்ததை அழித்து விட்டீர்களா? கவலைப்பட வேண்டாம். http://en.softonic.com/s/freewindowsmediaplayer12 என்ற தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.