Daily Archives: மார்ச் 28th, 2011

தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?

வெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால் பயன்
படுத்தப்பட்டது.

உடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.

தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.

ஆல்கஹால் தெர்மாமீட்டர் இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் என்ற பிரெஞ்சுக்காரர் 1731-ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் செல்சியஸ் என்ற வானியலாளர் இதில் முதல்முறையாக `சென்டிகிரேட்’ முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி. கொதிநிலை 100 டிகிரி சென்டி கிரேட்.

தெர்மாமீட்டரில் பாதரசத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துத்தான் 1714-ம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி கேப்ரியல் டேலியல் பாரன்ஹீட்டர் கண்டுபிடித்த தெர்மாமீட்டர் புழக்கத்துக்கு வந்தது. இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு இவரது பெயரான பாரன்ஹீட் அளவு என்று பெயர். இதன்படி தண்ணீரின் உறைநிலை 32 டிகிரி பாரன்ஹீட். கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட்.

பாதரசத்துக்கு மிக அதிகக் கொதிநிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகப்படுத்துகிறார்கள்.

வேற்று கிரக வாசிகள் உள்ளதா இல்லையா?: ஆராய்ச்சியாளர்கள் விவாதம்

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது. இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள், ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர். இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். மேலும் விஞ்ஞானிகள், பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர். கடந்த 10 வருடங்களில், சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம், வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில் இருப்பது போல் வளிமண்டலம், புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கு கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118 ,000, 000,000,000 மைல்கள் அளவிற்கு தூரமும், மேலும் இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இதனையடுத்து வேற்று கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும் வலுவடைந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால் உருவானவை இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ.வில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டி.என்.ஏ.வி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது .ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ‘உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

நமது மூளை: சுவாரசியமான சில உண்மை!

“மனிதன் தனது மூளையால் ஓவியங்களை வரைகிறானே தவிர, கைகளால் அல்ல” என்றார் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ

ஒருவர் சிறு தவறு செய்தாலும் அனிச்சையாக, `மூளையிருக்கா?’ என்று கேட்டு விடுகிறோம். மூளைதான் எல்லா செயல்பாட்டுகளுக்கும் காரணம் என்பது அப்படி நமது உணர்விலேயே ஊறிப் போயிருக்கிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, நினைவுகள், உணர்வுகள், இதயத் துடிப்பு, வளர்ச்சி, செக்ஸ்… ஏன், உயிரும் கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. ஒன்றரை கிலோ எடையுள்ள பழுப்பும், வெள்ளையுமான திசுக்களாலான இந்த `தளதள’ பொருள்தான் நமது மூளை. மூளையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளைப் பார்ப்போம்…

அதிர்ஷ்ட நடிகை

ங்கிலாந்து நாடக நடிகையான ரியான்னன் பிரைதெர்க் (வயது 28), ஒருநாள் தனது மூளையில் ஏதோ வெடிப்பதைப் போல உணர்ந்தார். தொடர்ந்து அவருக்குக் கடுமையான தலைவலியும், வாந்தி உணர்வும் ஏற்பட்டன. பரிசோதனையில் அவரது மூளையில் `சப்அராக்னாய்டு’ ரத்தக் குழாய் சேதம் அடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்நிலை ஏற்பட்டவர், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார். தனது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்த ரியான்னன், தனது நகைகளையும் உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். கடைசியில், `ரிஸ்க்’ எடுத்து ஓர் அறுவைச்சிகிச்சைக்கு உடன்பட்ட அவர், பின்னர் முழுமையாகக் குணமடைந்து இயல்பு நிலையை அடைந்தார்.

மூளைக்கு உணவு

த்திய தரைக்கடல் பகுதி கடல் உணவுகள், மூளைக்கு நன்மையளிப்பவையாக உள்ளன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணையை அதிகமாகச் சாப்பிடுவது, வயதால் ஏற்படும் மூளைப் பாதிப்பைக் குறைக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மீனும், மூளைக்கு நல்லது.

மூளைச் சாவு

`எலக்ட்ரான் செப்பல்லோகிராமில்’ பார்க்கிறபோது மூளை செயல்பாடு இல்லாத நிலையே `மூளைச் சாவு’ எனப்படுகிறது. அப்போது அனைத்து தன்னிச்சையான, தன்னிச்சையற்ற செயல்பாடுகளும் நின்று போகின்றன. அதில் வலி உணர்வும் அடக்கம். மருத்துவரீதியான மரணத்தில், ரத்த ஓட்டம், சுவாசம், இதயத் துடிப்பு ஆகியவையும் நின்று விடுகின்றன. மூளைச் சாவு ஏற்படும்போதுதான் உறுப்பு தானம் செய்யப்படுகிறது.

***

மூளையும், அளவும்

வயது வந்த மனிதன் – 1.360 கிலோ கிராம்
யானை – 4.780 கி.கி
ஒட்டகச்சிவிங்கி – 680 கிராம்
ஆந்தை – 2.2 கிராம்
பாம்பு – 0.1 கிராம்
பல்லி – 0.08 கிராம்
புலி – 265 கிராம்
மேக்பீ பறவை – 5.8 கிராம்
திமிங்கலம் – 7,800 கிலோ கிராம்

***

பிறந்த குழந்தையின் மூளை எடை 400 கிராம்.

ரு மனிதனின் எடையில் மூளையின் பங்கு 2 சதவீதம்.

மூளையின் 25 சதவீதம், பார்வையுடன் தொடர்புடையது.

தயத்தில் இருந்து 20 சதவீத ரத்தம் மூளைக்குப் பாய்கிறது.

மெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளில் 11 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 4 பேருக்கு பணியின்போது அது நேர்ந்தது.

மூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.

று வயதில் மூளை முழு எடையை எட்டுகிறது.

***

கடலில் பணி செய்தால் வருமான வரி கிடையாது: நிபுணர் நரசய்யா பேச்சு

” உலகில் அதிகளவு சம்பளம் பெற்றுத் தரும் கடல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது, என மதுரையில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல்சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ., நரசய்யா
தெரிவித்தார்.கடல்சார் படிப்புகளுக்கான
வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது: உலகில் பெரும்பகுதி கடலாக உள்ளது. கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே கடல் வணிகம் செய்யப்பட்டதை, நாம் மறந்து விட்டோம். கடலை தன்வசம் வைத்திருந்தவர்கள் தான் உலகை ஆள்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் வணிகத்தைப் பொறுத்தது. அந்த வணிகத்திற்கு நாடு அளிக்கும் சேவையைப் பொறுத்து மாறுபடும். பெரிய அளவிலான சேவைகள் அனைத்தும் கடல் வணிகம் மூலமே நடக்கிறது. இதுவே நாட்டின் சக்தியை பெருக்குகிறது.

நாட்டின் பொருளாதாரம் ஐந்து சதவீதம் உயரவேண்டுமெனில், கடல்வழி பொருளாதாரம் 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும். உலக வரிசையில் இந்தியா, சீனா மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்தாலும், சீனாவில் ஆங்கில மொழியறிவு குறைவு. எனவே, சீனர்களால் கடல் பணிகளில் சேர இயலவில்லை. கடல் பணிகளில் சேருவதற்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். வெளிநாட்டு கப்பல்களில் மாலுமிகளாக, சேவையாளர்களாக இந்தியர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்.

மரைன் இன்ஜினியரிங் படிப்பதற்கு பிளஸ் 2 வில் குறைந்தபட்சம் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தனித்தனியாக 60 சதவீதமும், மொத்தமாக 60 சதவீத மதிப்பெண்ணும் பெறவேண்டும். நல்ல உடற்திறன், கண்பார்வை வேண்டும். நாட்டிகல் சயின்ஸ் படிப்பில் மூன்றாண்டுகள் கல்லூரியிலும், ஓராண்டு கப்பலிலும் செய்முறை பயிற்சி பெற வேண்டும். மதுரையில் ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கல்லூரியில் இப்படிப்பு உள்ளது.

இந்தியாவில் மும்பை, கோல்கட்டாவில் உள்ள நான்கு அரசு பயிற்சி மையங்களில் படிக்கலாம். பயிற்சிக்கு பின் இளநிலை பொறியாளராகலாம். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தால், ஓராண்டு மரைன் பயிற்சி பெற்று மரைன் இன்ஜினியர்களாகலாம். கடல் பணிக்கு சென்ற பின், விருப்பமில்லை என சொல்லக் கூடாது என்பதால் இப்படிப்பிற்கு உளவியல் ரீதியாக மனதை அறிந்து கொள்ளும் “சைக்கோமெட்ரிக்’ தேர்வு நடத்தப்படுகிறது.

மாலுமியாவதற்கு எல்லா நிலைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இந்திய மாலுமிகளையே விரும்புகின்றனர். கப்பலில் ஆறுமாதங்கள் மாலுமியாக பணியாற்றினால், ஆறுமாத விடுப்பு கிடைக்கும். தற்போது மனைவி, இரண்டு குழந்தைகள் கப்பலில் செல்லலாம் என்ற சலுகையும் உள்ளது. ஆனால் கப்பலில் பணிசெய்வது சற்றே கடுமையான விஷயம். கடின உழைப்பிருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

கப்பல் போக்குவரத்து, ஆண்டுதோறும் ஏழு சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் போது சேவையாளர்களின் பணியிடங்களும் அதிகரிக்கும். எனவே பணிவாய்ப்பு அதிகமுள்ள துறையாக உள்ளது. இந்தியாவில் கடல்துறை அலுவலர்கள் 8,900 பேரும், வெளிநாடுகளில் 18 ஆயிரம் பேரும், இந்தியாவில் 21 ஆயிரம் சேவையாளர்களும், வெளிநாடுகளில் 34 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். கடலில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கினாலும், வருமான வரி பிடித்தம் செய்வதில்லை. 2015ல் பணியிடத்தின் தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும். பெண்களுக்கு கல்வி கட்டணத்தில் 30 சத சலுகை வழங்கப்படுகிறது. கடல்துறையிலிருந்து வெளியே வந்த பின், பல்வேறு நிறுவனங்களில் தொடர்ந்து பணி வாய்ப்பு பெறலாம், என்றார்.

நன்றி-தினமலர்

எக்ஸெல் டிப்ஸ்-வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல்

வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல்
எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் செல்களின் அகலத்தினை சிலர் அழகாகக் காட்ட, ஒரு வரிசையினை இடை இடையே காலியாக விட்டு, டேட்டாவினை நிரப்புவார்கள். இதனை நாம் நிரப்புகையில் சரியாக இருக்கும். பொறுமையாக நாம் டேட்டாவினை இடுகையில், ஒவ்வொரு படுக்கை வரிசையினை விட்டுப் பின் அடுத்த வரிசையில் நிரப்புவோம். ஆனால் எக்ஸெல் தொகுப்பின் டேட்டா நிரப்பும் டூலினைப் பயன்படுத்தினால், அது வரிசையாகத்தானே நிரப்பும்.
எடுத்துக்காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் டேட்டாவை அப்படியே கீழ் உள்ள அனைத்து செல்களிலும் காப்பி செய்திட வேண்டி இருந்தாலும் அல்லது அடுத்தடுத்து சீரியல் வரிசையில் 1,2,3,4 என நிரப்ப வேண்டி இருந்தாலும் இந்த பில் ஹேண்டிலைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் நிரப்ப வேண்டிய செல்களில் ஹேண்டிலைப் பிடித்து இழுத்தாலே டேட்டா வரிசையாக நாம் தேர்ந்தெடுத்தபடி நிரப்பப்படும். இதில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நிரப்ப வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? இதற்கு முதலிலேயே ஒரு சிறிய அட்ஜஸ்ட்மென்ட் செய்திட வேண்டும். பொதுவாக பில் இன் செய்வதற்கு முதலில் டேட்டா உள்ள செல்லை தேர்ந்தெடுக்கிறோம். பின் பில் ஹேண்டில் (செல் செலக்ஷன் அவுட்லைனில் வலது மூலையில் உள்ள சிறிய கருப்பு கட்டம்) பற்றி இழுக்கிறோம். ஒன்று விட்டு ஒன்று நிரப்ப டேட்டா செல் மற்றும் அதன் கீழே இருக்கும் செல்லினையும் சேர்த்து ஹை லைட் செய்து பின் பில் ஹேண்டிலை இழுங்கள். கீழே காலியாக உள்ள செல்லினையும் தேர்ந்தெடுத்ததால் டேட்டா ஒன்றிலும் அடுத்தது காலியாகவும் தொடர்ந்து நிரப்பப்படும். ஒரு சின்ன ட்ரிக் மேற்கொள்வதால், நம் விருப்பப்படி டேட்டா நிரப்பப்படுகிறதா!

லேபிள்களை தானாக அமைத்திட
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நெட்டு வரிசையாகவும் படுக்கை வரிசையாகவும் உள்ள செல்களுக்கு விளக்கம் தரும் வகையில் லேபிள்களை அமைக்கிறோம். ஒவ்வொரு செல்லுக்கும் புதிய பெயர் லேபிள் அமைக்க வேண்டும் என்றால் ஒவ்வொன்றையும் டைப் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் எண்களில் வரிசையாக அமைக்க வேண்டும் என்றால் எக்ஸெல் தொகுப்பே அவற்றை அமைத்துக் கொள்ளும். எப்படி என்று பார்ப்போமா? இதனைத் தான் பில் சிரீஸ் (fill series) என எக்ஸெல் பெயரிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக முதல் லேபிளாக ஒரு செல்லில் 1/4/11 என அமைக்கிறீர்கள். இது அடுத்தடுத்து 1/5/011, 1/6/11 என மாற வேண்டும் என்றால் முதல் செல்லில் அமைத்தபின், அதன் பில் ஹேண்டிலை இழுக்கவும். இது அந்த செல்லின் கீழாக வலது ஓரம் இருக்கும். இதனை இழுக்க முயற்சிக்கை யில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதனை எக்ஸெல் சுட்டிக்காட்டும். அப்படியே அதனை மேலும் நான்கு செல்கள் இழுத்துச் சென்றால், லேபிள்கள் மேலே காட்டியபடி அடுத்தடுத்த எண்களுடன் அமைக்கப்படும்.

ரூபாய் பைசா புள்ளியுடன் எழுத
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடு கையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் பைசாவிற்கு இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமே அமைக்கும்படி செட் செய்திடலாம். எப்படி என்று பார்ப்போமா!
எடுத்துக்காட்டாக நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் பைசா இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும். எடுத்துக் காட்டாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கீழ்க்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப் படும். நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை:
1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Edit” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இதில் “Fixed decimal” என்னும் பிரிவில் செக் செய்திடவும். இப்போது “Places” என்னும் இடத்தின் முன்னால் “2” என அமைத்திடவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும். இந்த செயல்பாடு தேவையில்லை என்றால் “Fixed decimal” என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
எக்ஸெல் சில அடிப்படைகள்
– ஒரு லெட்ஜரில் எப்படி பல பக்கங்கள் இருக்கின்றனவோ அது போல எக்ஸெல் ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்கள் அமைக்கப்படுகின்றன.
– ஒர்க் ஷீட் என்பது நெட்டுவகையிலும் படுக்கை வகையிலுமாக அமைக்கப்பட்ட செல்களின் தளமாகும்.
– ஒரு செல்லில் கர்சரை அமைக்க மவுஸ், கீ போர்ட், அல்லது எணிகூணி கட்டளை உதவுகின்றன.
– ஒரு ஒர்க்புக்கிலிருந்து ஒரு ஒர்க் ஷீட்டை இணைக்கலாம் மற்றும் நீக்கலாம்.
– ஒர்க் ஷீட்களை வேறு ஒரு ஒர்க்புக்கிற்கு மாற்றலாம்; நகலெடுத்து இணைக்கலாம்.
– ஒர்க் ஷீட்டின் பெயரை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
– ரேஞ்ச் என்பது செல்களை ஒரு குழுவாக அமைப்பது. இந்த ரேஞ்ச்களை செலக்ட் செய்வதற்கும் பல்வேறு வழிகள் உள்ளன.
– செல்களையும் ரேஞ்ச்களையும் அதன் தொடர்புகளை வைத்துச் சுட்டிக் காட்டலாம்
– ஒர்க் ஷீட்களை எக்ஸெல் பார்மட் மட்டுமின்றி வேறு வகையான பைல் பார்மட்டுகளிலும் சேவ் செய்திடலாம்.
– ஒர்க் ஷீட்களை இணைய பக்கங்களாகவும் சேவ் செய்திடலாம்.
– ஒர்க் புக்குகளைத் தேட, பல்வேறு வகையான தேடல் வழிகளை மேற்கொள்ளலாம்.