Daily Archives: ஏப்ரல் 8th, 2011

தனிமையா…? `சிக்கன் சூப்’ குடிங்க!

`தனிமையில் வாடுகிறீர்களா…? `சிக்கன் சூப்’ பருகுங்க’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

`சிக்கன் சூப்’, உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் `மக்ரோனி’ போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

உளவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவர்கள் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நன்றாக இருக்கும் அல்லது திருப்திகரமான உணர்வைத் தரும் என்று உறுதி கூறுகிறார்கள்.

இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது” என்கிறார்.

இவருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டவர் ஷிரா கேப்ரியல். சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரியவர் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை நலமளிக்கும் உணவும் ஏற்படுத்துமா என்று டிராய்சி யோசித்திருக்கிறார்.

“நாங்கள் செய்த ஆய்வில், பொதுவாக நலமளிக்கும் உணவுகள், நமக்குப் பிடித்தவர்கள் விரும்பிச் சாப்பிடுபவை என்று தெரியவந்துள்ளது” என்கிறார் டிராய்சி.

“குறிப்பிட்ட உணவுகளைப் பற்றி நினைப்பது அல்லது சாப்பிடுவது, நமக்கு நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்துகிறது. நாம் பிறருடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறோம் என்று உணர மக்கள் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் என்பதை எங்கள் ஆய்வு உணர்த்துகிறது” என்று முடிக்கிறார், ஜோர்டான் டிராய்சி.

சிறுமூளை… பெரும் வேலை..!


மூளையின் புறஅடுக்குக்குக் கீழாக, மூளைத்தண்டுக்கு மேலாக சிறுமூளை இருக்கி றது. மூளையின் இரண் டாவது பெரிய பகுதி யான இது, பலவகை யிலும் முக்கியத்துவம் மிக்கது. தசை இயக் கங்களை ஒருங்கி ணைப்பது, சமநிலை யைக் காப்பது, தோற் றம், அனிச்சை இயக் கம், பல்வேறு இயக்கச் செயல்பாடுகளுக்கான நினைவைப் பெற்றி ருப்பது என்று இதன் பொறுப்புகள் அதிகம். மூளையின் மொத்த அளவில் சிறுமூளை 10 சத வீதமே இருந்தாலும் மூளை நரம்புகளில் (நியூரான்கள்) பாதிக்கு மேல் இது கொண்டி ருக்கிறது.

அதிசய குழந்தை

அமெரிக்காவின் நியூயார்க்கில் சேஸ் பிரிட்டன் என்ற குழந்தை, சிறுமூளை இல்லாமல் பிறந்தது. மூளைத் தண்டின் ஒரு பகுதியும் இல்லாத அக்குழந்தைக்குப் பார்வை தெரிய வில்லை. சிறுமூளை, மூளைத்தண்டின் பகுதி இல்லாத இடங்களில் ஒருவிதத் திரவம் நிரம்பி யிருந்தது. டாக்டர்கள் அந்த மூன்று வயதுக் குழந் தையை `காய்கறி நிலையில்’ இருப்பதாகக் கூறிய போதும் அது தவழவும், உட்காரவும், நடக்கவும், ஓட வும் செய்தது. சிறப்புப் பள்ளியில் படித்துவருகிறது. தங்கள் குழந்தையால் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் பிரிட்ட னின் பெற்றோர்.

சிறுமூளையைத் தாக்கும் `கிக்’!

மதுப்பழக்கம், சிறுமூளைக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அவையாவன:

* இயக்கங்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் (அசினர்ஜியா)

* தூரத்தைக் கணிக்க முடியாமை (டிசிமெட்ரியா)

* நடுக்கம்

* தள்ளாட்ட நடை (அடாக்சிக் கெய்ட்)

* சமநிலையை இழப்பது அல்லது கீழே விழும் நிலை

* பலவீனமாகும் தசைகள் (ஹிப்போட்டோனியா)

* குழறலான பேச்சு (அடாக்சிக் டிசரித்ரியா)

* ஒழுங்கற்ற விழிக்கோள அசைவு (நிஸ்டாக்மஸ்)

* வேகமாகச் செயல்களை மாற்றி மாற்றி செய்ய முடியாமை

அந்த நேரத்தில்…

பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய மனஅழுத்தத்துக்கும் சிறுமூளையில் அதிகரிக்கும் செயல்பாடுகளுக்கும் தொடர்பிருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எளிதாக எரிச்சலடையும் நிலைக்கும், ஹார்மோன்களை விட சிறுமூளையில் உள்ள `கபா ரிசப்டார் செல்கள்’ முக்கியக் காரணமாக இருக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.

`கிச்சு கிச்சு’

நம்மை நாமே தவறுதலாகக் கிச்சு கிச்சு மூட்டிக்கொள்ளாமல் தடுப்பது சிறுமூளை தான். அது சொந்தத் தொடு உணர்வுக் கும், வேறு யாரோ தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்கிறது. பின்னாலிருந்து யாரோ நம்மைத் தொடு வது அல்லது கிச்சுகிச்சு மூட்டுவது எதிர்பாராதது. எனவே நெளிகிறோம், சிரிக்கிறோம் அல்லது சிலிர்க்கிறோம். நம்மை நாமே தொடுவது, `எதிர்பார்த்தது’. எனவே எந்தப் பதில் வெளிப்பாடும் இருப்பதில்லை.

தலை கிறுகிறுப்பு

வயது வந்தோரில் 40 சதவீதம் பேருக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது தலைக் கிறுகிறுப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தம் பாய்வது குறையும்போதும், உட் செவிப் பகுதியின் `வெஸ்டிபுலார் சிஸ்டத் தில்’ பாதிப்பு ஏற்படும்போதும் உருவங்கள் அசைவது போன்ற தலைச்சுற்றல் ஏற்படுகிறது. தலை இலேசானது போன்ற உணர்வு, நிலையின்மை, மிதப்பது போன்ற உணர்வு, வாந்தி வரும் உணர்வு, வியர்ப்பது, கண்கள் செருகுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன. பாதிப்புக்கு ஏற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

* 1939-ல், 76 வயதில் இறந்த ஒருவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சிறுமூளையோ, மூளைத்தண்டோ இல்லாதது தெரியவந்தது.

* சைக்கிள் ஓட்டுவது போன்ற, பயிற்சியின் மூலம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் சிறுமூளையில் பதிகின்றன.

* சிறுமூளையில் சமிக்ஞைகள் ஏறக்குறைய ஒரே திசையில் செல்கின்றன.

* 20 வயது வரை சிறுமூளை வளர்கிறது.

* சிறுமூளையில் பாதிப்போ, காயமோ ஏற்படும்போது உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்..

தர்பூசணிப்பழச் சாறு:

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.

இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.

அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.

திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.

இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.

உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.

குயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட

டி.டி.பி. துறையில் பணி புரியும்  ஒருவர், அடிக்கடி விண்டோஸ் கேரக்டர் மேப்பினைப் பயன்படுத்து வார். தான் தயாரிக்கும் டெக்ஸ்ட் பைல்களில், ஸ்பெஷல் கேரக்டர்க்ளை அடிக்கடி அமைக்க வேண்டிய திருப்பதால், அவற்றை கேரக்டர் மேப்பிலிருந்து, ஸ்பெஷல் கேரக்டர்களை காப்பி செய்து, கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்று பயன்படுத்துவார். அவர் கேரக்டர் மேப்பினை எப்படி குயிக் லாஞ்ச் பாரில் பின் செய்வது என்று கேட்டு கடிதம் எழுதி உள்ளார். சற்று விரிவாக இதனை இங்கு தருகிறேன். இவர் பயன்படுத்து வது விண்டோஸ் எக்ஸ்பி, சர்வீஸ் பேக் 3 பதியப்பட்டது.
1. முதலில் Start, All Programs, Accessories, System Tools கிளிக் செய்து செல்லவும்.
2. இந்த மெனுவில் Character Mapஐப் பார்க்கலாம். இங்கு ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் அந்த ஐகான் மீது அழுத்தியபடியே, இழுத்து வந்து குயிக் லாஞ்ச் டூல் பாரில் விடவும்.
3. இன்னும் கிடைக்கும் மெனுவில் Copy here என்பதைத் தேர்ந்தெடுக் கவும்.
இதில் நீங்கள் இடது கிளிக் செய்து அப்படியே நகர்த்தி வந்து விட்டிருக்கலாம். ஆனால் அது சிஸ்டம் டூல்ஸ் மெனுவிலிருந்து அதனை நீக்கிவிடும். வலது புறம் கிளிக் செய்து செயல் பட்டதால், இரண்டு இடங்களிலும் உங்களுக்கு கேரக்டர் மேப்பிற்கான ஷார்ட் கட் கிடைக்கிறது. இதே வழியை விண்டோஸ் டூல் எதற்கும் பயன்படுத்தலாம். விண் டோஸ் 7 தொகுப்பில் இந்த வேலையை இன்னும் மிக எளிதாக மேற்கொள்ள லாம். ஸ்டார்ட் மீது கிளிக் செய்திடவும். பின்னர், character என டைப் செய்திடவும். மெனுவில் கேரக்டர் மேப் கிடைக்கும். மேலே கூறியபடி அதனை இழுத்து வந்து குயிக் லாஞ்ச் பாரில் விட்டுவிடலாம்.

சத்தியம் காக்கும் வரசித்தி விநாயகர்

சத்தியம் காக்கும் வரசித்தி விநாயகர்
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது காணிப்பாக்கம் என்ற ஊர். இங்குள்ள வரசித்தி விநாயகர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இங்கு விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.

இங்கு நடைபெறும் சத்தியப் பிரமாணம் நிகழ்ச்சி புகழ்பெற்றது. தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தவறு செய்தவர்களை விநாயகர் முன்பு சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். பொய் சத்தியம் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று பயந்து உண்மையை ஒப்புக்கொண்டு விடுகிறார்கள்.

மிகச் சிலரே பொய் சத்தியம் செய்கிறார்கள். அப்படி பொய் சத்தியம் செய்வோரை இந்த விநாயகர் கடுமையாக தண்டிப்பார் என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் வாய் பேச முடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். விவசாயம் செய்து வந்த அவர்களுக்கு, தங்களது உடல்குறைபாடுகளால் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியவில்லை. பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாக புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.

ஒருமுறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப் போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்தபோது, அங்கே சுயம்பு வடிவில் விநாயகப் பெருமான் காட்சித் தந்தார். அவரது திருமேனியில் இருந்து ரத்தம் கசிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கு திரண்டனர். சிலையை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது. வேறு வழி தெரியாத அவர்கள் கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே விநாயகரின் திருமேனிக்கு ஏராளமான இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. அதனால் அந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.

பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகர் இருந்த இடத்தைச் சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோவில் உருவானது. இந்தியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.