நெருங்கும் ஆபத்து-அணு உலை

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் அமெரிக்க அலறுகிறது. சீனா, சிங்கப்பூரில் சுற்றுலாவுக்கு தடை. ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள். காரணம்.. புருஷிமா அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு தான். உலகமே நடுங்கும் நொடியில் உடலுக்குள் நுழைந்துஉறுப்புகளை உருத் தெரியாமல் அழித்து விடும் இந்த கதிர்வீச்சினால் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ஆபத்து உண்டா?
நிச்சயமாக எடுப்பிலேயே எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் டாக்டர் புகழேந்தி. கதிர்வீச்சின் பாதிப்பு மற்றும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அவர் அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.
1986ல் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்ப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்கள் சென்னைஉள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்றிலும், ஆடுகளிலும் அயோடின் 131 என்கிற செறிவு பொருள் கொண்டுசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு என்ன தெரியுமா? கதிர்வீச்சின் அளவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது தான். அதே போல் மும்பையில் உள்ள பாபா அணு ஆய்வு நிலையத்தில் நடந்த சோதனையில் கிடைத்த முடிவும “ரத்தத்தை உறைய வைக்கும் ஜிலீர் ரகம் தான். அதாவது கதிர்வீச்சு நான்கு மில்லியன்மீட்டர் க்யூப் அளவுக்கு எகிறியிருந்தது.
ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடைஙய இருக்கும் தூர்ம அதிகம். அதனால் கதிர்வீச்சு பரவ வாய்ப்பில்லை என்கிறார்கள். இது தவறு. நமக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள தூரம் 6300 கி.மீட்டர். ஆனால் செர்னோபில்லுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே யான தூரம் 6700 கி.மீட்டர். அதனால் கதிர்வீச்சு பரவுவதற்கும் தூரத்துக்கும் சம்பந்தமில்லை. என்று லாஜிக்காக சொல்லும் புகறேந்தி மறற முறைகளை விட காற்றின் மூலம் பரவும் அணுக்கதிர் வீச்சின் அளவு அதிகம் என்கிற பகீர் தகவலையம் பதிவு செய்கிறார்.
சரி ஜப்பானில் லிட்டர் கணக்கில் பால் தரையில் வீணாக கொட்டப்பட்டதே என்ன காரணம். பொதுவாக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு புற்கள் மீது படியும் அவற்றை கால்நடைகள் உண்ணும் அதனால் தான் கதீர்வீச்சின்போது பால் அருந்த வேண்டாம் என சொல்கிறார்கள்.
ஒரு விஷயம் தெரியுமா? னாப்பான் கதிர்வீச்சுக்கு பின்னர் அமெரிக்கா உடனே தனது நாட்டில் சோதனை நடத்தியது. ஆனால் அப்படிஎந்த சோதனையும் இதுவரை இந்தியாவில் நடக்கவில்லையே ஏன் என்கிற கேள்வியையும் முன் வைக்கிறார் புகழேந்தி.
இது குறித்து சென்னை அண்ணா பல்கலை பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர் ராஜரத்தினத்திடம் கேட்டோம்.
அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டால் அதன் பாதிப்பு பத்து கி.மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே இருக்கும். அதை தாண்டி வரும் வாய்ப்பு குறை. ஆனால் அணு வெடிப்பு உண்டான நாட்டிலிருந்து வருபவர்களின் உடலில் கதிர்வீச்சு தாக்கியிருந்து தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். அவர்கள் வேறு நாட்டுக்கு சென்றால் அங்கும் கதிர்வீச்சு பரவும் மனித உடலுக்கு இத்தகைய அபாய குணம் உண்டு.
இப்போது ஜப்பானில் மழை சீசன். விண்வெளியில் தேங்கி இருக்கும் கதீர்வீச்சு மழைத்துளிகள் மூலம் மண், தண்ணீர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வழியாக எளிதில் மனித உடலுக்குள் புகும். அதனால் தான் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஜப்பான் அரசு தனது மக்களை எச்சரித்திருக்கிறது.
சரி இந்தியாவில் கதிர்வீச்சு சோதனை நடத்தப்படவில்லை. அதனால் ஆபத்து வருமா?

பொதுவாக அணுசக்தி நிலையங்களை ஒட்டியிருக்கும் மக்களிடம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சோதனை நடத்தப்படுவது உண்டு. கதிர்வீச்சின்அளவு அதிகமிருந்தால் மட்டுமே சிகிச்சை தேவை. ஆனால் அணு உலை இப்போது வெடித்திருப்பது ஜப்பானில் அதனால் தமிழ்நாட்டுக்கு கதீர்வீச்சு ஆபத்து இல்லை என்கிறார் ராஜரத்தினம்.

One response

  1. நல்லது நீங்கள் pu239என்னும் ரஷ்யப்படம் உடனே பார்த்துவிடுங்கள்,அது சொல்லும் விஷய்ங்கள் அதிகம்,அதில் ரேடியம் கேர்ல்ஸ் பற்றியும் ஒரு பகுதி வருகிறது,நெஞ்சை உறையவைக்கும்

%d bloggers like this: