Daily Archives: ஏப்ரல் 15th, 2011

புத்தாண்டு கை நீட்டம்

கேரள மக்கள் புத்தாண்டை விஷூ என்கிற பெயரில் வரவேற்கிறார்கள். நாம் புத்தாண்டு அன்று கோவிலுக்கு செல்வது போன்று அவர்களும் விஷூ நாளில் அருகே உள்ள கோவில்களுக்கு செல்கிறார்கள்.

அப்போது அங்கே நடைபெறும் கை நீட்டம் என்கிற வைபவம் புகழ்பெற்றது. அதாவது, அன்றைய தினம் கோவிலுக்கு வரும் சிறுவர்கள் கையில் காசு கொடுத்து, அதை கோவில் அர்ச்சகரிடம் கொடுக்கச் சொல்கிறார்கள்.

சிறுவர்களிடம் காசு வாங்கிக்கொள்ளும் அர்ச்சகர்கள், அந்த காசுகளை பூஜையறையில் வைத்து பூஜித்து, பிறகு அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.

இவ்வாறு பூஜித்து தரப்படும் காசை அந்த ஆண்டு முழுவதும் செலவு செய்யாமல் பாதுகாப்பாக வீட்டில் வைத்திருந்தால் பணத் தட்டுப்பாடே வராது என்பது கேரள மக்களின் நம்பிக்கை.

விஷூ புத்தாண்டு அன்று கேரளாவில் உள்ள எல்லாக் கோவில்களிலுமே கை நீட்டம் நடைபெறுவதை பார்க்க முடியும். ஆனாலும், பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்களில் நடைபெறும் கை நீட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள் கேரள மக்கள்.

`ரிமோட் கண்ட்ரோல்’!

`

ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் ஓடும் பொம்மை கார்கள், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற மின்னணுச் சாதனங்கள் தற்போது மிகவும் சகஜமான ஒன்றாகிவிட்டன.

அதாவது கையில் உள்ள ஒரு சாதனத்தை வைத்து அசைக்கும்போது, ஓட வேண்டிய கார் ஓடும். அதேபோல் எட்ட நின்றுகொண்டே கையில் உள்ள `ரிமோட் கண்ட்ரோல்’ கருவி மூலம் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கவோ, நிறுத்தவோ செய்யலாம். இயங்க வேண்டிய கருவியைக் கையால் இயக்காமல் ரிமோட் கண்ட்ரோல் கருவி மூலம் இயங்கச் செய்யலாம்.

ரிமோட் கண்ட்ரோல் கருவிக்கும், தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இடையே எந்தவித கம்பித் தொடர்பும் இருப்பதில்லை. பின் எவ்வாறு தொலைக்காட்சிப் பெட்டி இயங்குகிறது? ரேடியோ ஆக்டிவ் கதிர்வீச்சின் மூலம் அந்த இயக்கம் நடைபெறுகிறது. ரிமோட் கண்ட்ரோலில் உள்ள ஒவ்வொரு பட்டனும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மட்டுமே கவனிக்கும்.

எட்ட நின்று இயக்குவது சவுகரியத்தின் பொருட்டு மட்டுமல்ல, பாதுகாப்புக்கும் தேவையான ஒன்று. இதன்மூலம் பல கடினமான, ஆபத்தான விஞ்ஞான பரி
சோதனைகள் நடைபெறுகின்றன.

கடலடியிலும், விண்வெளியிலும் தானியங்கி எந்திரங்களை இயக்குவதற்கு ரோபோ சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின் காந்தம், நியூமேட்டிக் ஊக்கி மின்சக்தி, கதிர்வீச்சு, ஹைட்ராலிக் போன்ற பல சக்திகளை ஆதாரமாக வைத்து இயக்கப்படும் ரிமோட் கண்ட்ரோல்களும் உண்டு.

ரிமோட் கண்ட்ரோல் கருவியின் மூலம் மிக நுணுக்கமான தொழில்நுட்பப் பணிகளைக் கூட பிரச்சினை ஏதுமின்றி, பாதிப்பு ஏதுமின்றி செய்ய முடிகிறது. அணுசக்தி போன்ற ஆராய்ச்சித் துறைகளுக்கும் இது ஒரு முக்கியமான சாதனமாகும்.

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

மாடர்ன் உடைகளின் மீது பெண்களுக்கு அளவுக்கு அதிகமான மோகம் இருந்தாலும், அதற்கு சற்றும் குறைவில்லாத மவுசுடன் திகழ்கிறது புடவை- ஜாக்கெட் ஜோடி. புடவைகளில் வித்தியாசமான டிசைன்களை உருவாக்கினாலும், அது அளவில் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஜாக்கெட் டிசைன்கள் அப்படி அல்ல..! அளவில்- அமைப்பில்- இணைப்பில்- கைவேலைப்பாடுகளில் அது நாளுக்குநாள் புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு பெண் களை ரொம்பவும் கவர்ந்து வருகிறது.

அவற்றில் சில டிசைன்களை இங்கு காணலாம்.

பேஷன்- ஒன்று:

ஸ்லீவ் கட்டிங்கில் புதுமையாக தைக்கப்பட்டுள்ள `பேக் ஓப்பன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்’ இது! பின் கழுத்துப் பகுதியில் அழகான இணைப்பு நூலால் கட்டிக்கொள்ள லாம். புடவையில் எந்த மாதிரியானஜரிகை பார்டர் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் கைப்பகுதியில் `கோல்டன் லைன்’ கொடுக்கலாம்.

பேஷன்- இரண்டு:

புடவையில் இருந்தே வெட்டி எடுத்த அதே நிற ஜாக்கெட் இது. நெக் லைனிலும், ஸ்லீவிலும் அழகாக எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.

புடவைக்கு பொருத்தமான சிவப்பு நிற ஜாக்கெட். கைப்பகுதியில் ஜரிகை இருக்கிறது. நெக் லைனில் கயிறு இணைப்பைக் கொண்டிருக்கிறது. இது `க்ஷி’ நெக் மாடல். பின்பகுதி கயிறு இணைப்பால்கட்டிக் கொள்ளலாம். அழகான எம்ப்ராய்டரிங் வேலைகள் ஜாக்கெட்டின் பின் பகுதிக்கு பேரழகு சேர்க்கிறது.

பேஷன்- மூன்று:

புடவையில் இருக்கும் கலம்காரி அப்ளிக் பார்டர் ஜாக்கெட்டின் ஸ்லீவ் பகுதியிலும் இடம் பிடித்திருக்கிறது. நெக்லைனில் நீல பார்டர் இணைப்பு உள்ளது.

கழுத்து, ஸ்லீவ் மற்றும் ஜாக்கெட்டின் அடிப் பகுதியிலும் டார்க் ப்ளூ கயிறும்- இணைப்பும் கொண்ட ஓப்பன் ஜாக் கெட் இது! நெக்லை னிலும், பின்பகுதியிலும் நவீன எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.

பேஷன்- நான்கு:

பட்டுப்புடவைக்கு பொருத்தமான ப்ராக்கெட் ஜாக்கெட் இது! பிரிண்டட் ப்ராக்கெட்டுடன் கிரஷ்டு டிஸ்சு சேர்த்து `பேக் ஓப்பன்’ ஆக காட்சியளிக்
கிறது.

விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7, தன்னுள் நிறைய கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு, இந்த சிஸ்டம் தரும் ஸ்டிக்கி நோட்ஸ் வசதியைப் பார்க்கலாம். இது ஒரு பெரிய மதிப்பு கொண்ட வசதி இல்லை என்றா லும், இதனைப் பயன்படுத்தியவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தயங்கியதே இல்லை. பல சூழ்நிலைகளில் இதன் உதவி மிகவும் தேவைப்படுவதாகவும் அமைந்துள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
இதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும். இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் நோட்ஸை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.
ஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கியவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து ஸ்டிக்கி நோட்களை யும், மினிமைஸ் செய்து வைக்கலாம். அதே போல, இதன் மீது கிளிக் செய்தால், அவை இயக்கப்பட்டு, திரையில் தோன்றும். நோட் ஒன்றை உருவாக்கிய வுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது, எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம். நோட்டினை மூடி வைக்க, ரைட் கிளிக் செய்து, Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக்குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும்.
ஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை. எனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொல்லினை இதில் காப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம்.
நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் பார்மட் செய்வது போல, அழுத்தம், சாய்வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன் படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)
நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா, மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்ப பாட்டை நாம் தேர்ந்தெடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு, ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப் படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.
இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால், சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:\Users\{username} \AppData\Roaming\Microsoft\Sticky Notes என்ற போல்டரில் காணலாம்.