Advertisements

Daily Archives: ஏப்ரல் 18th, 2011

315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி!

மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. வழக்கமாக மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதில் முக்கியமானது, “ஓல்ட் ஸ்பார்க்கி’ எனப்படும் மின்சார நாற்காலி. மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளை, இந்த நாற்காலியில் உட்கார வைத்து, மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விடுவர். இவ்வாறு, இந்த நாற்காலியில், 315 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில், மூன்று பேர் பெண்கள். 1897 முதல், 1963ம் ஆண்டு வரை, இந்த நாற்காலி பயன்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த, 1930ல், ஒரு முறை இந்த நாற்காலி, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் பின், 80 ஆண்டுக்குப் பின், இப்போதுதான் பொது மக்கள், இந்த மரண நாற்காலியை பார்வை யிட்டுள்ளனர்.
ஓகியோ மாநிலத் தில், 1897ம் ஆண்டு வரை, மரண தண்டனை கைதிகளை தூக்கில் போட்டு சாகடித்தனர். அதன் பின், இந்த நாற்காலி நடைமுறைக்கு வந்தது. 1963ம் ஆண்டுக்குப் பின், விஷ ஊசி போட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2002ல், இந்த நாற்காலி, ஓகியோ வரலாற்று மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இன்னொரு பயங்கரமான பொருள், மரக் கூண்டு. மன நிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த சிறிய கூண்டில் போட்டு, அடைத்து வைத்தனராம்.
ஆட்டுத் தோலால் ஆன, 150 ஆண்டுகள் பழமையான காண்டம், குழந்தைகள் தங்கள் பெரு விரல்களை கடிப்பதை தடுக்க பயன்படுத்தப்படும் அலுமினியம் குப்பி போன்ற வையும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பார்வையிட, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

Advertisements

விஷத்தை உமிழும் மீன்!

மீன்களில் `லயன் பிஷ்’ என்று ஓர் இனம் இருக் கிறது. இது, கடக, மகர ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கடல்களில் அதிகம் காணப்படுகிறது. இதன் உடம்பின் மூன்று பக்கங்களிலும் வெவ்வேறு வடிவிலான துடுப்புகள் இருக்கும். முதுகுப்புறத்தில் உள்ள துடுப்பில் விஷத்தைச் சுரக்கும் சுரப்பி இருக்கும். அந்த விஷத்தை எதிரியின் மீது உமிழ்ந்து கொல்லும்.

இந்த விஷம் எதிரியின் உடம்பில் உள்ள புண்கள் மூலம் உடனே உள்ளே சென்று வாந்தியை ஏற்படுத்தும். சிலநேரங்களில் அந்த உயிரையே கொன்றுவிடும்.

இந்த விஷத்தைக் கொண்டு மருந்துகள் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருவதால் இந்த மீனுக்கு ஏக கிராக்கி!

பாத்திரங்கள் கழுவுதல்: ஏன், எப்படி?

மையல் பாத்திரங்களும், சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களும் எப்போதும் மிகமிக சுத்தமாக இருக்க வேண்டும். உணவு சுத்தமாக செய்யப்பட வேண்டுமென்றால் அந்த உணவை சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களும் அதைவிட ரொம்ப சுத்தமாக இருக்க வேண்டும்.

சமையல் பாத்திரங்களையும், சாப்பாட்டு பாத்திரங்களையும் தினமும் மொத்தமாக கழுவி எடுப்பது என்பது ஒரு சிரமமான காரியம் தான். சிலருக்கு இதில் அலுப்பே வந்து விடும். சவுகரியமானவர்கள் பாத்திரங்களை கழுவுவதற்கென்று `டிஸ் வாஷிங் மெஷின்’ வைத்துக்கொண்டு அதன் மூலம் பாத்திரங்களைக் கழுவி எடுப்பதுண்டு. ஆனால் கைகளால் கழுவி எடுக்கிற அந்த சுத்தம் இந்த மெஷினில் கிடைக்க வாய்ப்பே இல்லை.

கிராமப்புறங்களில் சிலரது வீடு கிணறு வாய்க்கால் ஓரங்களில் இருக்கும். இவ்வாறு வீடு உள்ளவர்கள் ஓடும் தண்ணீரில் பாத்திரங்களை நன்றாக அலசி, கழுவி எடுக்க முடியும். பாத்திரங்களும் மிக மிக சுத்தமாக இருக்கும். ஆனால் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் தண்ணீர் பற்றாக்குறையினாலும், வேலைப்பளுவினாலும் அதிக தண்ணீரை உபயோகித்து பாத்திரங்களை நன்றாக அலசி கழுவி எடுக்க முடியாது.

மேலும் எண்ணைப் பிசுக்கு, அழுக்கு, கறை உள்ள பாத்திரங்களைக் கழுவ `கிளினீங் சோப்’, `கிளீனிங் பவுடர்’ முதலியவைகளை உபயோகப்படுத்த வேண்டி வரும். `கிளீனிங் பவுடர்’ முதலியவைகளை உபயோகித்து பாத்திரங்களைக் கழுவும்போது எண்ணைப் பிசுக்கோடு, உபயோகிக்கும் கிளீனிங் பவுடரிலுள்ள ரசாயனப் பொருட்களும் சேர்ந்து அகற்றப்பட வேண்டும். கண்டிப்பாக பலமுறை நன்றாக அலசி எடுக்க வேண்டும். இதற்கு நிறைய தண்ணீர் தேவை.

எனவே தண்ணீர் கிடைப்பதைப் பொறுத்துத்தான் பாத்திரங்களின் சுத்தமும், சுகாதாரமும் அமையும். குறைவான தண்ணீர் கிடைக்கும் இடங்களிலுள்ளவர்கள் பாத்திரங்களை சுத்தமாக தேய்த்து கழுவி எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாத்திரங்களைக் கழுவிய பிறகு பாத்திரங்களைத் தொட்டால் வழவழவென்று இருக்கக்கூடாது. அப்படி வழவழவென்று இருக்கிறதென்றால் எண்ணைப் பிசுக்கு சரியாக போகவில்லை என்று அர்த்தம். `கிளீனிங் பவுடரை’ உபயோகித்து பாத்திரங்களை நன்றாக கழுவி எடுங்கள். எண்ணைப் பிசுக்கு போக வேண்டுமென்பதற்காக கிளீனிங் பவுடரை உபயோகித்து கடைசியில் கிளினீங் பவுடர் பாத்திரத்திலிருந்து போகாத நிலை ஏற்பட்டுவிட வேண்டாம். அதிக கவனம் தேவை.

வெந்நீர் அல்லது கொதிக்கும் நீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங் களிலுள்ள அழுக்கு, கறை, எண்ணைப் பிசுக்கு, கிளினீங் பவுடர் இவை எல்லாமே அறவே ஓடிப்போய்விடும். முக்கியமாக பாத்திரங்களிலிருக்கும் கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமிகளும் அழிந்து விடும். பாத்திரமும் பார்ப்பதற்கு புதுசு போல தினமும் மின்னும்.

குடிப்பதற்கே வெந்நீருக்கு வழியில்லாதபோது பாத்திரங்களைக் கழுவ வெந்நீருக்கு எங்கே போவது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆக மொத்தத்தில் சுத்தம் வேண்டும், அதற்காக சில காரியங்களை நாம் செய்துதான் ஆக வேண்டும். எது எதுக்கோ நாம் வீண் செலவு பண்ணும்போது உடல் ஆரோக்கியத்துக்காக செலவு பண்ணுவதில் தப்பில்லை.

வெந்நீரில் பாத்திரங்களைக் கழுவிய பின்பு `ஸ்டீம்’ அதாவது நீராவியில் பாத்திரத்தை காயவைத்து எடுப்பது இன்னும் சிறந்தது. ஒரு கிருமி கூட பாத்திரத்தில் தங்க வாய்ப்பில்லை.

ஸ்டார் ஓட்டல்களிலும், சில வீடுகளிலும் நான் பார்த்திருக்கிறேன். சாப்பாட்டுத் தட்டை வெந்நீரில் நன்றாக கழுவியபிறகு சுத்தமான வெள்ளைத் துணியை வைத்து ஒரு துளி தண்ணீர்கூட தட்டில் இல்லாத அளவுக்கு நன்றாக துடைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் உணவை வைக்க ஆரம்பிப்பார்கள். இது மிக மிக ஆரோக்கியமான காரியம். ஆனால் துடைக்கும் வெள்ளைத்துணி எப்போதும் சுத்தமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரங்களைக் கழுவ பயன்படும் தண்ணீர் பெரும்பாலும் நல்ல தண்ணீர் அல்ல. அதாவது குடிப்பதற்காக நாம் பயன்படுத்தும் தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவ முடியாது. குடிக்கிற தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவி நல்ல தண்ணீரை `வேஸ்ட்’ பண்ணவும் முடியாது. வீட்டிற்குள் வரும் தண்ணீர் அனைத்தும் குடிநீராக இருக்க முடியாது. அப்படி வீட்டிற்குள் இருக்கும் எல்லாக் குழாய்களிலுமே வரும் தண்ணீர் குடிநீராக இருக்க வேண்டுமென்றால் அது சுத்திகரிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் நீக்கப்பட்ட சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். அது தேவையுமில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வீட்டில் கூட பாத்திரம் கழுவுவதற்கு மினரல் வாட்டர் உபயோகிக்கிறார்களா என்பது சந்தேகமே.

நாம் பாத்திரங்களைக் கழுவ உபயோகப்படுத்தும் தண்ணீரில் பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு. தண்ணீரிலிருக்கும் ஒரு கிருமியைக் கொல்ல வேண்டுமென்றால் தண்ணீர் நன்றாக சூடாக்கப்பட வேண்டும். உங்களது உடம்பு தாங்கக்கூடிய அளவுக்கு வெந்நீர் சூடு இருந்தால் போதாது. சுமார் 100 டிகிரிக்கு மேல் தண்ணீர் சூடுபடுத்தப்பட்டால் தான் அந்த தண்ணீரிலுள்ள கிருமிகள் சாகும்.

சுடுதண்ணீரையும், கிருமி நாசினியையும் சேர்த்து உபயோகித்தால் சமையல் மற்றும் சாப்பிடும் பாத்திரங்களிலுள்ள எண்ணைப் பிசுக்கு, அழுக்கு கறை சுத்தமாக அறவே போய்விடும். சுடுதண்ணீரும் கிருமி நாசினியும் சேர்ந்த தண்ணீர் பாத்திரங்களை கழுவ மிகமிகச் சிறந்தது.

வெந்நீர் உபயோகித்து பாத்திரங்களைக் கழுவும்போது பாத்திரங்களும் மிகமிக சீக்கிரமாக உலர்ந்துவிடும். உதாரணத்திற்கு இரண்டு சாப்பாட்டு தட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை சாதாரண தண்ணீரில் கழுவுங்கள். மற்றொரு தட்டை வெந்நீரில் கழுவுங்கள். இரண்டையும் ஒன்றாக வைத்துவிட்டு கவனியுங்கள்.

உங்கள் கண்ணெதிரில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெந்நீரில் கழுவிய தட்டு ஒரு துளி தண்ணீர் கூட இல்லாமல் சுத்தமாக காய்ந்து விடும். ஆனால் அதே நேரத்தில் சாதாரண தண்ணீரில் கழுவிய தட்டு காய்வதற்கு சற்று நேரம் அதிகமாகும். எனவே முடிந்தவரை சாப்பாட்டுப் பாத்திரங்களை வெந்நீரில் கழுவ முயற்சி செய்யுங்கள். சாதாரண தண்ணீரில் கழுவப்படும் பாத்திரங்களில் கிருமிகள் இருக்க, கிருமிகள் வளர வாய்ப்புண்டு.

சிலர் சாப்பிடுவதற்கு முன்பு பாத்திரத்தை தண்ணீரில் கழுவி அதை ஒழுங்காக வடிய வைக்கக்கூட மாட்டார்கள். கழுவிய தண்ணீர் கொஞ்சம் பாத்திரத்தில் மிச்சமாக இருக்கும். அப்படியே அந்த தண்ணீருடனே சாதத்தை போட்டு அந்த தண்ணீரோடு சேர்த்து பிசைந்து சாப்பிடுவார்கள். தட்டை தண்ணீரில் கழுவிவிட்டு சாப்பிடுவதால் ரொம்ப சுத்தமாக சாப்பிடுவதாக மனதில் நினைப்பு. இது மிகமிகக் கெடுதியான ஒரு காரியம்.

பாத்திரம் கழுவிய பிறகு பாத்திரத்தில் எஞ்சி நிற்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் அல்ல. அந்த தண்ணீரை நன்றாக வடியவைத்துவிட்டு ஒரு துளி தண்ணீர் கூட பாத்திரத்தில் இல்லை என்ற பிறகுதான் சாதத்தைப் போட வேண்டும். அப்படியில்லாமல் ரொம்ப சுத்தமாக சாப்பிடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு அந்த தண்ணீரோடு சாதத்தைப் போட்டு பிசைந்து சாப்பிடுவது நல்லது கிடையாது.

வாழையிலையை கழுவிவிட்டு சாப்பிடும் போதும் இதையேதான் கடைபிடிக்க வேண்டும். சிலர் கல்யாண வீடுகளில் மினரல் வாட்டரிலேயே இலையைக் கழுவி விட்டேன் என்பார்கள். தயவு செய்து அங்கேயும் இலையிலுள்ள தண்ணீரை வடிய வைத்துவிட்டு சாப்பிடுங்களேன். சுத்தம் சோறு போடும் என்பார்கள். அதுபோல `சுத்தம் சுகம் தரும்’. இதுவும் உண்மைதான். சுத்தமான பாத்திரத்தில் சோற்றைப் போட்டு சாப்பிடுங்கள்!

பிழைச் செய்திகள் கூறும் தகவல்கள்

இன்டர்நெட்டில் வேக வேகமாக நாம் தேடும் தளங்களைப் பார்த்துக் கொண்டி ருக்கையில், திடீரென வெப்சைட் லோடு ஆகும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், ஏதோ ஒரு எண்ணுடன் பிழைச் செய்தி காட்டப்படும். இது இன்டர்நெட் சமாச்சாரம் என்பதால் நாம் அதனைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் மீண்டும் அந்த தளத்தினைப் பெறும் முயற்சியிலேயே இருப்போம். முதலில் வந்த அந்த பிழைச் செய்தி, நீங்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்படும். ஆனால் நாம் முதலில் காட்டப்பட்டது மாற்றப்படாமல் இருப்பதாக எண்ணிக் கொண்டு என்டர் தட்டி வெப்சைட் லோட் ஆகிறதா என்று பார்ப்போம். இத்தகைய பிழைச் செய்திகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொண்டு அதன்பின் தொடர்ந்து முயற்சி செய்வது குறித்து யோசித்து தொடர்வதே நல்லது.
400 Bad Request: நீங்கள் தேட விரும்பிய தளத்தின் முகவரியைத் தவறாக டைப் செய்திருக்கலாம். நீங்கள் டைப் செய்த முகவரியிலிருந்து உங்கள் தேடல் குறித்து எந்தவிதமான செய்தியும் உங்கள் இணைய சர்வரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பெரும்பாலும் வெப்சைட்டின் முகவரியைத் தவறாக டைப் செய்திடும்போதுதான் இத்தகைய செய்தி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் டைப் செய்த முகவரியில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கலந்திருக்கலாம். அல்லது உங்களை அறியாமலேயே புள்ளிக்குப் பதிலாக கமா அடித்திருக்கலாம். எனவே இந்த செய்தி கிடைக்கையில் ஏற்கனவே டைப் செய்த முகவரியில் ஏதேனும் பிழை இருக்கிறதா என ஒருமுறைக்கு இரு முறை சோதனை செய்தபின் மீண்டும் முயற்சிக்கவும்.
401 Unauthorized Request: நீங்கள், உங்களுக்கு அனுமதியில்லாத வகையில் உங்கள் சர்வர் வழியாக ஒன்றைப் பெற முயற்சி செய்திருக் கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் இன்டர்நெட் தளம் ஒன்றில் அல்லது தளத்தில் அத்து மீறி நுழைய முயற்சித்திருக்கிறீர்கள். அதனால் முயற்சியைக் கைவிடுவதே நல்லது.
403 Forbidden: இது போன்ற பிழைச் செய்தி கிடைத்தால் அந்த தளத்தினுள் நீங்கள் சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். ஏதேனும் பாஸ்வேர்ட் தர வேண்டிய கட்டாயம் இருக்கலாம். எனவே உங்களுக்கு ஏற்கனவே இந்த தளம் குறித்து தெரிந்து நீங்கள் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே இதனுள் செல்ல முயற்சிக்கவும்.
404 Not Found: நீங்கள் தேடும் வெப்சைட் அந்த தளத்தில் இல்லை. இது போல அடிக்கடி பல தளங்களுக்கான தேடல்களில் இந்த செய்தி கிடைக்கும். நீங்கள் தேடும் இணைய தளம் குறிப்பிட்ட சர்வரிலிருந்து நீக்கப்பட்டி ருக்கலாம். அல்லது அந்த வெப்சைட்டிற்கு வேறு பெயர் அளிக்கப் பட்டிருக்கலாம்.
500 Internal error: இது நீங்கள் மேற்கொண்ட செயலினால் ஏற்படும் பிழைச் செய்தி. இணைய தளத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு படிவத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை அளித்திருக்கலாம். ஆனால் வெப் சைட்டால் அந்த தகவல்கள் சரியான முறையில் கையாள இயலவில்லை. இதனை தொழில் நுட்ப ரீதியில் CGI error என அழைப்பார்கள்.
503 Service Unavailable: நீங்கள் தேடும் வெப்சைட்டைத் தாங்கி இயங்கும் சர்வரை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்க்க முயற்சிக்கையில் அல்லது அந்த வெப்சைட் வேறு பிரச்னையால் முடங்கிப் போயிருந்தால் அல்லது அந்த சர்வரின் கட்டமைப்பு அப்போதைய ஹிட்களைத் தாங்க முடியாமல் இருந்தால் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். எடுத்துக்காட்டாக 10 ஆம் வகுப்பு அல்லது +2 வகுப்பு தேர்வு முடிவுகளை நாடெங்கும் பலர் காண முயற்சிக்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு மேற்படி பிழைச் செய்தி கிடைக்கும்.

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி

“குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’ என்றார் குரு.
“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். இளைஞர்கள். மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.
இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை.
அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.
“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
அப்போது குரு அவனுக்குச் சொன்ன winமொழி:
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி

செல்வத்தினுள் சிறந்தது

செல்வத்தினுள் சிறந்தது, மக்கள் செல்வம் என்றார் வள்ளுவர். மற்ற செல்வங்களை விட, மக்கள் செல்வம் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தன் மகன் குழந்தையாக இருந்த போது, அதன் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வான்; குழந்தை, பால பருவம் வரும் போது, அது தத்தித் தத்தி நடப்பதைக் கண்டு மகிழ்வான்; பிறகு, அவன் பள்ளி சென்று, படித்து, பரீட்சை எழுதி, பாஸ் செய்ததும் மகிழ்வான். அதே பையன், நல்ல உத்யோகம் கிடைத்து, வேலைக்குப் போய், சம்பளம் வாங்கி வருவதைப் பார்த்து மகிழ்வான். அவனுக்கு ஒரு கல்யாணத்தையும் செய்து வைக்கிறான். “இனி, நமக்கு கவலை இல்லை. வீட்டு விவகாரங்களை மகனும், மருமகளும் பார்த்துக் கொள்வர்…’ என்று, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
ஆனால், அங்கே தான் இவர்களுக்கு சங்கடம் ஆரம்பமாகிறது. மருமகளுக்கும், மாமியாருக்கும் ஒத்து வருவதில்லை; பையனும், இதை கண்டு கொள்வதில்லை. மனைவியிடம், பெற்றோருக்காக சண்டையிட துணிச்சல் இருக்காது. அதனால், மனைவி சொல்லே மந்திரமாகி விடுகிறது. நாளடைவில், மருமகள் வைத்ததே சட்டம். கணவனிடம் கண்டிப்பாகச் சொல்லி விடுகிறாள்… “நாம் தனிக்குடித்தனம் போய் விடலாம் அல்லது உங்க அப்பா, அம்மாவை ¬முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வாருங்கள். அப்படி செய்யாவிட்டால், நான், என் பிறந்த வீட்டுக்குப் போய் விடுவேன்…’ என்று பயம் காட்டுகிறாள்.
இவனும், வேறு வழி இல்லாமல் தாய், தகப்பனாரை தாஜா செய்து,¬முதியோர் இல்லத்தில் சேர்த்து, “அப்பாடா!’ என்று வீட்டுக்கு வந்து பார்த்தால், அங்கே அவனது மாமனாரும், மாமியாரும் வந்து உட்கார்ந்து கொண்டு, “வாங்கோ மாப்ளே… ஏதோ உங்க கூட இரண்டு மாசம் இருந்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம். உங்களுக்கும் ஒத்தாசையா இருக்குமே…’ என்பர். இவன், யாரும் பார்க்காத போது, “மடேர்… மடேர்’ என்று தலையில் அடித்து, மாமனார், மாமியாருக்கு உபசாரம் செய்வான். பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்த பாவம், மாமனார், மாமியாருக்கு பணிவிடையும், செலவும் செய்ய வேண்டியுள்ளது. இதுதான் குடும்பம்; பழகிக் கொண்டு, சகித்துக் கொள்ள வேண்டும்.