Daily Archives: ஏப்ரல் 20th, 2011

கோடையில் வரும் கண்வலி!

கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்துவிடும் தொற்று நோய்கள். அதில் முக்கியமானது… அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி.

நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று கண்களில் தாய்ப்பாலை ஊற்றுவது, எண்ணை ஊற்றுவது என்று ஏடாகூடாமாக எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது.

இதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். இவைகளை மருத்துவர்கள் சரியாக கண்டுபிடித்து மருந்துகளை கொடுப்பார்கள். ஆனால் நாம் பொதுவாக ஏதாவது ஒரு மருந்தை ஊற்றி விடுவோம். இதனால் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படும்.

கண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுங்கள்.

இவர்களுக்கு கண் அழுத்தத்தினால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில் கண் சிவப்பாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது.

முதல் தொலைபேசிக் கருவி!

1860-ம் ஆண்டில் ஜெர்மனியில் பிராஸ்பெர்ட்-ஆப்-மெயின் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பிலிப் ரீஸ் என்ற இளைஞர் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

பிலிப் ரீஸ் மிகவும் ஏழை. ஆசிரியர் பணி மூலம் கிடைத்த ஊதியமோ அரை வயிற்றை நிரப்புவதற்குக் கூட போதுமானதாக இல்லை.

அந்த நிலையிலும் தாம் பணிபுரிந்த பள்ளியின் ஒரு மூலையில் ஆராய்ச்சி சாலை ஒன்றை அமைத்து, பலவிதமான அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் ரீஸ்.

ஒலியை மின்சாரத்தின் உதவியுடன் எவ்வாறு வேறு இடத்துக்கு அனுப்புவது என்பதே அப்போது அவருடைய ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது.

ஆசிரியர் ரீஸ், இரண்டு மரக் காதுகளைச் செய்தார். அந்தக் காதுகளில் பல நுட்பமான கருவிகளை அமைத்தார்.

இரண்டு காதுகளையும் தள்ளித் தள்ளி வைத்து, அவற்றை மின் கம்பியால் இணைத்தார். பேட்டரியுடன் மின் கம்பியை இணைத்தார். பின் காதுகளை இயக்கினார். ஒரு காதின் வழியாகப் பேசப்பட்டது, மறுகாதில் மிக இலேசாகக் கேட்டது.

அந்த செயற்கைக் காதுகள்தான் முதன்முதலாக அமைந்த தொலைபேசிக் கருவியாகும்.

மனிதருள் மாணிக்கங்கள்

வ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க மனிதருள் மாணிக்கங்கள் தோன்றினார்கள். மத தத்துவங்களால் மனித மனங்களை புனிதப்படுத்தினார்கள் மகான்கள். மனித சமுதாய தேவைகளை கண்டுபிடிப்புகளின் வழியே நிறைவேற்றி முன்னேற்றம் ஏற்பட செய்தனர் விஞ்ஞானிகள். அரசியல் தொண்டறம் புரிந்து மாற்றங்களை உருவாக்கினார்கள் சீர்திருத்தவாதிகள். இவர்களின் போதனைகள், கண்டுபிடிப்புகள், கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊடுருவி நிற்பதால் அவர்கள் என்றும் மறக்கக்கூடாதவர்களாகிறார்கள்.

***

கான்கள், விஞ்ஞானிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்களால்தான் மனித சமுதாயம் இன்றைய நவ நாகரீகத்துக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்துவிடுவதுண்டு. ஆன்மிகம்தான் சிறந்தது என்றும், அறிவியல் இல்லாவிட்டால் மாற்றங்களே வந்திருக்காது என்றும் முடிவில்லாத விவாதம் நடத்திக் கொண்டே போகலாம். ஆராயத் தொடங்கினால் ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் குறைத்து மதிப்பிட முடியாத வகையில் இருக்கிறது. எனவே யார் சிறந்தவர்கள் என்பதைவிட இவர்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள், வணங்கப்படத் தக்கவர்கள் என்பதே சரி.

***

புவிஈர்ப்பு விசையை கண்டறிந்து மக்களுக்கு அறிவியலின்பால் ஈர்ப்பு உண்டாகச் செய்தவர் ஐசக் நியூட்டன் (1642 – 1727). இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு அஞ்சி பல கண்டுபிடிப்புகளை வெளியிட தயங்கியவர். பலதுறை நுண்ணறிவு கொண்டவர். இவரது ஒளி இயல்பு ஆராய்ச்சி(1668)யில் உருவாக்கிய `பிரதிபலிப்பு தொலைநோக்கி’யின் நவீன வடிவங்களே இன்றைய வானியல் தொலைநோக்கிகள். ஒளி விதிகள், பொருள் இயக்க விதிகள் (ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு), கணிதவியலில் `இன்டகரல் கால்குலஸ்’ போன்றவை ஐசக் நியூட்டனை என்றும் அழியாப்புகழ் மிக்கவராக நிலைக்கச் செய்யும் கண்டுபிடிப்புகளாகும்.

***

வுத்த சமயத்தை நிறுவிய புத்தர் (கி.மு.563 – 483), மகான்களில் ஒருவர். நேபாளத்தில் அரச வம்சத்தில் சித்தார்த்தராக பிறந்தவர் திருமணத்திற்குப்பின் துறவுக்கு வந்தார். தியானத்தில் ஆழ்ந்தபோது வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஆசையே காரணம் என அறிந்தார். ஆசையை வெல்ல 4 போதனைகளை உருவாக்கினார். வாழ்க்கை துயருடையது, துயருக்கு தன்னலமும், ஆசையும் காரணம். ஆசை அடங்கிய நிலை நிர்வாணம், அதை அடைய 8 வழிகள் உண்டு என்பதே அவரது போதனை. நற்காட்சி, நல்லெண்ணம், நல்வார்த்தை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்லன கடைபிடித்தல், நல்லோர் உறவு ஆகியவை அந்த 8 வழிகள்.

***

ஜெர்மனியின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 – 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. சார்பியல் கொள்கையை அளித்தவர். அவரது ணி=னீநீ2 கோட்பாடு விஞ்ஞான உலகை புரட்டிப்போட்டது. அணுஆற்றல் உள்ளிட்ட பல முக்கிய பயன்பாடுகளுக்கு இக்கொள்கை உதவுகிறது. அவரது பொதுச்சார்புக் கொள்கை தனிப்புகழ் பெற்றது. ஒளிமின் விளைவை விளக்கி கூறியதற்காக நோபல் பரிசு வென்றவர். ஹிட்லரின் எதிர்ப்பால் யூதரான இவர் ஜெர்மனை துறந்து அமெரிக்க பிரஜையானார். மனிதர்களில் அதிகப்படியாக மூளையை உபயோகித்தவர் என்று பாராட்டப்படுபவர். இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

***

றிவியல் சார்ந்த சமதர்ம கொள்கை (மார்க்சியம்) வகுத்தவர் காரல்மார்க்ஸ். 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்த இவர் `வறுமையின் வரலாறு’ என்னும் முதல்நூலை வெளியிட்டு புகழ் பெற்றார். பொருளாதார மேதையான இவர் 1867-ல் டாஸ்காபிட்டல் (மூலதனம்) என்னும் நூலை வெளியிட்டார். இதன் அடுத்த 2 பாகங்களை தொகுத்து வந்தபோதே 1883-ல் உயிரிழந்தார். இந்நூல்கள் பொதுவுடைமை சித்தாந்த வேதமாக புகழப்படுகிறது. பணி முடியாத மார்க்சின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் அவரது நண்பரான அரசியல் அறிஞர் எங்கெல்ஸ். இவரது பங்களிப்பு மூலதனத்தில் முக்கியமானது என்றாலும் மார்க்சின் பங்கு பிரதானமானது.

***

மெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த வர்ஜீனியாவில் பிறந்தவர் வாஷிங்டன் (1732-1799). போர்வீரரான இவர் 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். பின் பதவி விலகி வணிகரானார். 1775-ல் இரண்டாவது அமெரிக்க புரட்சி ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். போரில் வெற்றி பெற்று சுதந்திர அமெரிக்காவை மலரச் செய்தார். அப்பெருமையால் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று 2 முறை அப்பதவியில் நீடித்தார். அவரது ராணுவ அனுபவம், நிர்வாகத்திறமை அவரை அப்பதவிக்கு தகுதியுடையவராக்கியது. அவரது பல திட்டங்கள் அமெரிக்காவில் மக்களாட்சி நிலைபெறவும், வல்லரசாக திகழவும் அடிகோலி நிற்கின்றன.

***

ன்றைய நவீன உலகில் எந்த தொழில்நுட்பமும் மின்சாரமின்றி இயங்காது. அந்த அற்புத மின்சாரத்தை காந்தசக்தி மூலம் உருவாக்கும் வழியை கண்டுபிடித்து தந்தவர்தான் மைக்கேல் பாரடே. இங்கிலாந்தில் 1791-ல் பிறந்தவர். 1821-ல் மின்மோட்டாரின் அடிப்படை இயக்கத்தை அறிந்து விளக்கியதால் மோட்டார்களின் தந்தையாக திகழ்ந்தார். சில வேதியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி உள்ளார். மின்பகுப்பாய்வு இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது. காந்தப்புல ஆய்வால் நவீனயுகத்தின் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ள பாரடேவின் புகழ் பாருள்ளவரை நிலைக்கும்.

ஐந்து அபாய வழிகள்

எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது. பலவீனமான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட்வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மேலும் மேலும் பல புதிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணையாகவும், சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்நேரமும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம் தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்.
இந்த ஆண்டில், இவ்வாறான தீய விளைவுகளுக்கு வழி தரக்கூடிய ஐந்து முக்கிய பிரிவுகளை, வைரஸ் எதிர்ப்பு ஆய்வு நிறுவனங்கள் பட்டிய லிட்டுள்ளன. குறிப்பாக, சோபோஸ் (Sophos) பாதுகாப்பு நிறுவன தொழில் நுட்ப ஆய்வாளர் கிரஹாம் க்ளூலி முக்கிய சில பிரிவுகள் குறித்து எச்சரிக்கை தந்துள்ளார். அவை எவை என்று இங்கு பார்க்கலாம். இவர் தலைமை மேற்கொண்டிருக்கும் குழு, பழைய புதிய மால்வேர் தொகுப்புகளாக, தினந்தோறும் 95,000 வகைகளை ஆய்வு செய்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
1. முதல் அபாயம் – மொபைல் சாதனங்கள்: இங்கு மொபைல் சாதனங்கள் என்றுகுறிப்பிடப்படுவது மொபைல் போன்கள் மட்டுமல்ல. அவற்றையும் சேர்த்து நாம் செல்லும் வழியெல்லாம் செயல்பட எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர் மற்றும் துணை சாதனங்களாகும். முதலாவதாக, மொபைல் போன்களில் ஸ்மார்ட் போன்கள் இவ்வகை அபாயத்திற்கு ஆளாகின்றன. உலக அளவில் 85% இளைஞர்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நாடுகளில் இவர்களில் பலர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் விலையும் குறைந்து வருவதால், இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த போன்களில் பயன்படுத்தக் கிடைக்கும் அப்ளிகேஷன்கள் வழியாகப் பல வைரஸ்களும் மால்வேர் தொகுப்புகளும் பரவத் தொடங்கிவிட்டன. அண்மையில் மார்ச் 1 அன்று கண்டறிந்தபடி, கூகுள் நிறுவனத்தின் அதிகார பூர்வமான ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தர்ட் பார்ட்டி தொகுப்புகளில் ட்ராய்ட் ட்ரீம் (DroidDream) என்னும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உள்ள தொகுப்பினை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெறுகிறது. இதன் மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை, போனுக்கு இந்த வைரஸ் டவுண்லோட் செய்து கொள்கிறது.
இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் உள்ள அனைத்து தொகுப்பு களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தை யும் நீக்கியது.
அதே போல மற்ற போன்களில் பரவி இருந்த இதே வைரஸையும் தானாகவே நீக்கியது.
சீனாவில், இவ்வகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறியப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எனவே மொபைல் போனுக்கான அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்கையில், இணைய தளம் சென்று, அந்த அப்ளிகேஷன்கள் பாதுகாப் பானவை தானா என்று உறுதி செய்து கொண்டு செயல்பட அனைத்து வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன.
2. சமுதாய இணைய தள வழி: பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் இணைய தளங்கள் , மக்களிடையே நல்லுறவினை வளர்க்கும் அதே வேளையில், வைரஸ்கள் வளர்ந்து பரவு வதற்கு ஏற்ற இடங்களாகவும் மாறி வருகின்றன. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கள் தயாரிக்கும் பிட் டிபண்டர், இது குறித்துக் கூறுகையில், பேஸ்புக் தளத்தில் உள்ள 20% பேர், மிக எளிதாக மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர் என்று அறிவித்துள்ளது. இந்த தளங்களில் ஸ்கேம்கள் வழியாக பல மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றினைத் தூண்டுதல்களாகக் கொண்டு இவை இந்த தள உறுப்பினர் களைச் சிக்க வைக்கின்றன. போலியான சில அப்ளிகேஷன்கள் வழியாகவும் இவை பரவுகின்றன. சிக்கிடும் நபர்களின் மொபைல் போன் எண், பிறந்த நாள், ஊர், பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறித்த தகவல்களைத் திருடி, அவர்களைப் போல போலியான ஒரு தோற்றத்தை உருவாக்கி ஏமாற்ற முயல்கின்றனர்.
எனவே உங்கள் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு போட்டோ மற்றும் வீடியோவினைப் பார்க்க அழைக்கும் ஸ்கேம் தகவல்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். அல்லது முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
3. போலி ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள்: அண்மைக் காலத்தில் பிரபலமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பெயரில், போலியான சில அறிவிப்புகள் வெளியாகின்றன. இவற்றை நம்பி செயலில் இறங்குபவர் களின் கம்ப்யூட்டர் தகவல்கள் முழுமையாகத் திருடப்படுகின்றன. சோபோஸ் நிறுவனம் இது வரை 8,50,000க்கும் மேற்பட்ட போலி ஆண்ட்டி வைரஸ் அறிவிப்புகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்திகளை வழங்கியுள்ளது. இவற்றை “scareware” என இந்நிறுவனம் அழைக்கிறது. முதலில் பிரபலமான ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்தின் பெயரில், இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தருவதாக, மக்களை இது ஏமாற்றுகிறது. சிக்குபவர்களுக்கு, ஏதேனும் ஒரு புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஆய்வு செய்வதாகக் கூறுகிறது. பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் மோசமான வைரஸ் வசம் சிக்கியுள்ள தாகவும், அதனை நீக்க ஒருமுறை கட்டணம் செலுத்தித் தங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை காட்டிச் சிக்க வைக்கிறது. இதற்கு இணங்குபவர்களிடம் உங்களின் கிரெடிட் கார்ட் மூலம் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லிக் கேட்டுப் பின்னர், அந்த கிரெடிட் கார்டில் உள்ள பணம் அனைத்தையும் சுரண்டி விடுகிறது.
இது போல அறிவிப்பு வருகையில், சம்பந்தப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தரும் நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு நீங்களாகச் சென்று, அவ்வாறு ஏதேனும் புதிய புரோகிராம் உள்ளதா என்று அறிந்து கொள்வதே நல்லது.
4. பி.டி.எப். டாகுமெண்ட் வழி: இந்த வழி மிக மிகப் பழைய வழி என்றாலும், இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இமெயில் வழியாக ஸ்பேம் மெயில்களை, இணைக்கப் பட்ட பைல்களுடன் அனுப்பி, அவற்றை டவுண்லோட் செய்து திறந்தவுடன் கம்ப்யூட்டரில் பரவி தகவல்களைத் திருடுவது இந்த பழக்கத்தின் வழியாகும்.
இப்போது இவ்வாறு இணைக்கப் படுவது பெரும்பாலும் பி.டி.எப். பைல்களாகத் தான் உள்ளன. ஏனென்றால், வைரஸ்களை பி.டி.எப். பைல்களில் இணைப்பது மிகவும் எளிதான ஒரு வழியாகும். 2010 ஆம் ஆண்டில், இவ்வாறு மோசமான நோக்கத்திற்காக அனுப்பப்பட்ட மெயில்களில் 65% மெயில்களில் பி.டி.எப். பைல்களே வைரஸ்களுடன் அனுப்பப்பட்டன என்று கண்டறிந்துள்ளனர். இது முந்தைய 2009 ஆம் ஆண்டில், 52.6% ஆக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 76% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனைத் தடுக்க, நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை எப்போதும் இயக்க நிலையிலும், அப்டேட்டட் நிலையிலும் வைத்திருக்கவும். இமெயில்களுடன் வரும் இணைப்பு களை, நீங்கள் எதிர்பார்த்த இணைப்பாக இல்லாமல் இருந்தால் திறக்க வேண்டாம். அப்படியே திறக்க வேண்டும் என எண்ணினால், ஆன்லைனில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்து முடிவுகளைக் கூறும் தளங்களுக்கு அவற்றை அனுப்பி, முடிவு பெற்ற பின்னரே திறக்கவும்.
5. இணைய வழி நிறுவன யுத்தம் : வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் நிறுவனங்கள், இப்போது ஒருவரை ஒருவர் காலை வாரும் வேலைக்கு இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். போட்டி நிறுவனத்தின் சர்வருக்கு மால்வேர்களை அனுப்பி, அந்நிறுவனத்தின் ரகசிய தகவல்களைத் திருடும் வேலை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடைபெறு கின்றன. விக்கிலீக்ஸ் தளத்தை முற்றுகையிட்ட முயற்சி மற்றும் எகிப்து, லிபியா மற்றும் துனிஷியா நாட்டில் தொடங்கிய போராட்டங்கள் ஆகிய வற்றின் பின்னணியில் இது போன்ற இணையக் கெடுதல் வேலைகள் இருந்ததாகத் தெரிகின்றன. இன்னும் இந்தியாவில் இந்த வேலை தொடங்கப் படவில்லை. ஆனால் அந்த நாளும் சீக்கிரம் வரலாம் என்றே நிறுவனங்கள் கருதுகின்றனர். இந்த முயற்சிகள் தனிப்பட்ட நபரைப் பாதிப்பதில்லை.

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான, பதினெட்டாவது பி.எஸ். எல்.வி., ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் சீறப்பாய்ந்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி செயற்கோள்கள் அதன் இலக்கை அடைந்தது. செயற்கோள்கள் சரியான சுற்றுப்பாதையில் செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ‌செயற்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, சரியாக 10:12க்கு, பி.எஸ்.எல்.வி -சி16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. முந்தைய ராக்கெட்டுகளை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக , “இஸ்ரோ’ தெரிவித்துள்ளது. இதற்கான, ஐம்பத்து நான்கரை மணி நேர கவுன்ட் டவுண், 18ம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு துவங்கியது.

இஸ்ரோ சேர்மன் பேட்டி : பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டப் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்த ஆண்டின் முதல் செயற்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் நல்கிய முழு ஒத்துழைப்புக்கு நிர்வாகத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பி.எஸ்.எல்.வி., சி16 சிறப்பு : இன்று செலுத்தப்பட்ட பி.எஸ். எல்.வி., ராக்கெட், முந்தைய இதே வரிசை ராக்கெட்களில் இருந்து, பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது . பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இதுவரை 25 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 19 உள்நாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதில், சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 செயற்கைக்கோள் குறிப்பிடத்தக்கது. இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், இந்திய தயாரிப்பில் உருவான 1,206 கிலோ எடை கொண்ட, “ரிசோர்ஸ்சாட்-2′ என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், இயற்கை வளம் குறித்து அதிகம் அறிய முடியும். மேலும் சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கை பேரழிவுகள் தொடர்பாகவும், ஆராய முடியும். இத்துடன் 92 கிலோ எடை கொண்ட, இந்திய – ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான, “யூத்சாட்’ என்ற, சிறிய ரக செயற்கைக்கோளும், சிங்கப்பூரில் உருவான 106 கிலோ எடை கொண்ட, “எக்ஸ்- சாட்’ என்ற சிறிய ரக செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதில், யூத்சாட் செயற்கைக்கோள் கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில், வான்வெளிக்கும், பூமி மண்டலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயும் வகையில், நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை : பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இதுவரை 25 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 19 உள்நாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. உள்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் விபரம் பின்வருமாறு :

1. பி.எஸ்.எல்வி., -டி1 செப்டம்பர் 20, 1993 ( தோல்வி)

2. பி.எஸ்.எல்வி., -டி2 ர்அக்டோபர் 15 , 1994 (வெற்றி)

3. பி.எஸ்.எல்வி., -ஈ3 மார்ச் 21, 1996 (வெற்றி)

4. பி.எஸ்.எல்வி., -இ1 செப்டம்பர் 29, 1997 (வெற்றி)

5. பி.எஸ்.எல்வி., -இ2 மே 26, 1999 (வெற்றி)

6. பி.எஸ்.எல்வி., -இ3 அக்டோபர் 22, 2001 (வெற்றி)

7.பி.எஸ்.எல்வி., -இ4 செப்டம்பர் 12 , 2002 (வெற்றி)

8. பி.எஸ்.எல்வி., -இ5 அக்டோபர் 17, 2003 (வெற்றி)

9.பி.எஸ்.எல்வி., -இ6 மே 5, 2005 (வெற்றி)

10. பி.எஸ்.எல்வி., -இ7 ஜனவரி 10, 2007 (வெற்றி)

11. பி.எஸ்.எல்வி., -இ8 ஏப்ரல் 23, 2007 (வெற்றி)

12. பி.எஸ்.எல்வி., -இ10 ஜனவரி 21, 2008 (வெற்றி)

13. பி.எஸ்.எல்வி., -இ9 ஏப்ரல் 28, 2008 (வெற்றி)

14. பி.எஸ்.எல்வி., -இ11 அக்டோபர் 22, 2008 (வெற்றி)

15. பி.எஸ்.எல்வி., -இ12 ஏப்ரல் 20, 2009 (வெற்றி)

16. பி.எஸ்.எல்வி., -இ14 செப்டம்பர் 23, 2009(வெற்றி)

17.பி.எஸ்.எல்வி., -இ15 ஜூலை 12, 2010 (வெற்றி)

மூளைத்தண்டு

மது கழுத்தின் பின்புறம், சிறிய, ஆனால் முக்கியமான உறுப்பு அமைந்துள்ளது. அதுதான் மூளைத் தண்டு. சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற முக்கியமான பணிகளைக் கட்டுப்படுத்துவது இதுதான். சிறிய உயிரினங்கள், மூளைத் தண்டை மட்டுமே கொண்டிருக்கின்றன. தண்டுவடத்துடன் ஒட்டியிருக்கும் மூளைத் தண்டில் காயம் ஏற்பட்டால் கோமா நிலை அல்லது மரணம் ஏற்படலாம்.

முகுளம்

நரம்புத் துடிப்புகள் இங்கு எழுகின்றன. மேற்புறமாக பொன்ஸில் இருந்தும், கீழ்ப்புறமாக தண்டுவடத்தில் இருந்தும் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. உடல் உள்ளுறுப்புகளைத் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும் மூன்று பகுதிகளைக் கொண்டி ருக்கின்றன. அவை, இதய மையம், ரத்தக் குழாய் களைக் கட்டுப்படுத்தும் மையம் மற்றும் சுவாச மையம். இம்மூன்றும்தான், விழுங்குதல், செரிமான வேகம், வாந்தி, இருமல், தும்மல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. சுவாசத்துக்காக தசைகள், உதரவிதானத்தைத் தூண்டுகின்றன.

இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்துகின்றன. ரத்த ஒட்டத்தைக் கூட்டும், குறைக்கும் வகையில் ரத்தக் குழாய்களை விரிவடையவோ, சுருக்கவோ செய்கின்றன. முகுளத்தில் சேதம் ஏற்பட்டால் உடனடி மரணம் நிகழும்.

மயக்க மருந்து

மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நபர்கள் சுயநினைவை இழக்கிறார்கள். அவர்க ளின் மூளைத் தண்டு துடிப்பு மெது வாகிறது. தூண்டுதலுக்குப் பிரதிபலிப் பைக் காட்டாமல் இருக்கிறது. மூளைத் தண்டின் மூலம் தகவல்கள் கடத்தப் படாமல் மயக்கவியல் நிபுணர்கள் தடுக் கின்றனர்.

மீஸன்செபலான்

விழிப் பாவை விரிவாக்கம், கேட்டல், உடம்பு இயக்கம் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

ரெட்டிக்குலார் அமைப்பு

மேல் மூளையில் இருந்து உணர்வுத் தகவல்களைப் பெற்று, `தலாமஸ்’ பகு திக்குக் கடத்துகிறது. தூக்கம்- விழிப்பு சுழற்சி, வாந்தியெடுப்பது ஆகியவற்றுடன்
தொடர்புடையதாக இருக்கிறது.

கண்ணசைவு

மூளைத் தண்டு சேதம் அடையும்போது, `கோமா விஜிலன்டே’ என்ற நிலை ஏற்படுகிறது. அப்போது, பாதிப்புக்குள்ளானவருக்கு சுயநினைவு இருந்தாலும் அவரால் கண்ணசைவு தவிர வேறு எதனாலும் தொடர்புகொள்ள முடியாது. பிரெஞ்சு பத்திரிகையாளரான ஜீன் டொமினிக் பாபிக்கு 1995-ல் பக்கவாதம் ஏற்பட்டு அவரால் இடது இமையைத் தவிர வேறு எதையும் செயல்படுத்த முடியவில்லை.

பொன்ஸ்

`செரிப்ரல் கார்ட்டெக்ஸ்’ பகுதியில் இருந்து சிறுமூளைக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது. சுவாசம், கேட்டல், சமநிலை, சுவை, விழி அசைவு, முகபாவங்கள், தோற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. கனவுகளைத் தோற்றுவிப்பது இதுதான்.

புற்றுநோய் அபாயம்

`டிப்யூஸ் பான்டைன் கிளியோமா’ என்பது குழந்தைப்பருவ மூளைத் தண்டு புற்றுநோயாகும். இது மத்திய நரம்பு மண்டலத்தை முடக்குகிறது. இதற்கான அறுவைச் சிகிச்சை மிகவும் `ரிஸ்க்’ ஆனதாகும்.

மூளையால் பாதிப்பு

ஜே.ஜே. குரூக்ஸ் என்ற 9 வயதுச் சிறுவனுக்கு தலை அமைப்பு சரியில்லாததால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவனால் குளிர், வெப்பத்தை உணர முடியவில்லை. இடது கண்ணால் பார்க்க முடியவில்லை. `சியாரி மால்பார்மேஷன்’ என்ற இந்நிலை, மூளையானது மூளைத் தண்டை நோக்கி வளர்வது. தற்போது, பாதிப்பைச் சரிசெய்ய, குரூக்ஸுக்கு அறுவைச்சிகிச்சை செய்ய இருக்கின்றனர்.

கோமா

`கோமா’ என்பது நீடித்த சுயநினைவற்ற நிலை. தூங்குபவரைப் போல கோமாவில் உள்ளவரை விழிப்புப் பெறச் செய்ய முடியாது. மூளை பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முகுளம் செயல்படும் வரை அவரது உடல் உள்பகுதிகள் இயங்கும். அவருக்கு மருத்துவ ஆதரவு நிறுத்தப்படும்போது இயக்கம் நின்றுவிடும்.

விண்மீன்களின் நிறமும் வயதும்.

இரவு வானத்தைக் கண்ணால் நோக்கினால் விண்மீன்கள் வெவ்வேறு நிறங்களில் ஒளிர்வதைக் காண முடிகிறது. விண்மீன்களின் ஒளிச் செறிவின் அளவும் மாறுபடுகின்றது. அவற்றின் நிறத்தில் காணப்படும் மாறுபாட்டை அறிய நிறக் குறிப்பு எண் (Colour Index) பயன்படுத்தப்படுகிறது. இந்நிறக் குறிப்பு எண் சுழி எனில் அவ்வகை விண்மீன்கள் வெள்ளை நிற விண்மீன்கள் என்றும், நிறக் குறிப்பு எண் சுழியை விட அதிகமாக இருந்தால், அதாவது நேர்மதிப்பைப் பெற்றிருந்தால் அவ்வகை விண்மீனின் நிறம் சிவப்பு நிறப் பகுதயை நோக்கியதாக இருக்கும். உதாரணமாக சைரஸ் (Sirius) என்ற விண்மீன், சுழி நிறக் குறிப்பு எண்ணுடைய வெள்ளை விண்மீனாகும். நமது சூரியனின் நிறக் குறிப்பு எண் 0.81 ஆகும். இது ஒரு மஞ்சள் நிற விண்மீனாகும்.

மாறாக அன்ட்ராரஸ், (Antares) 1.5 நிறக் குறிப்பு எண் கொண்ட சிவப்பு விண்மீனாகும். இவ்வாறாக ஒரு விண்மீனின் நிறக் குறிப்பு எண் அறியப்பட்டால், அதிலிருந்து அந்த விண்மீனின் மேற்பரப்பு வெப்பநிலையைக் கணிக்க முடியும். தற்போது நிறமாலை காட்டியின் வழியாக விண்மீன்களை ஆராயும் பொழுது அவற்றின் நிறம், வயது, அளவு, அவை செல்லும் திசை, வேகம், அவற்றில் அடங்கியுள்ள தனிமங்கள் ஆகியவற்றை எளிதில் அறிய முடிகின்றது.

இவ்வாறு நிறமாலை காட்டியைப் பயன்படுத்தி ஏறக்குறைய 5,00,000 விண்மீன்களை ஆய்வு செய்து அவற்றின் நிறமாலை வரிகளைக் கொண்டு ஏழு தொகுப்புகளாகப் பிரித்துள்ளனர். இத்தொகுப்புகளுக்கு நிறமாலைப் பிரிவுகள் என்று பெயர் அவற்றுக்கு ளி,ஙி,கி,தி,நி,ரி மற்றும் ஆ என்று அடையாளக் குறிப்பு இட்டுள்ளனர். இந்நிறமாலைப் பிரிவுகள், விண்மீன்களின் வெப்ப நிலையைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டவை. ளி பிரிவு விண்மீன்கள் மிகுந்த வெப்பமுடையவை.

அவற்றின் மேற்புற வெப்பநிலை 30,000 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் இருக்கும். வி பிரிவு விண்மீன்களின் மேற்புற வெப்பநிலை 3000 டிகிரி சென்டிகிரேட் அளவு காணப்படும். நமது சூரியனின் மேற்புற வெப்பநிலை சுமார் 6000 டிகிரி சென்டிகிரேட் அளவு காணப்படும். நமது சூரியன் நி பிரிவு விண்மீனாகும். இவ்வாறாக ஙி பிரிவு விண்மீன்களின் மேற்புற வெப்பநிலை சுமார் 20,000 டிகிரி சென்டிகிரேடுக்கு மேலும், கி பிரிவு விண்மீன்களில் சுமார் 16000 டிகிரி சென்டிகிரேடுக்கு மேலும், தி பிரிவு விண்மீன்களில் சுமார் 4000 டிகிரி சென்டிகிரேட் அளவு வெப்பநிலை காணப்படும்.

ஸ்டெம்செல் பேஷியல்

ருமத்தில் இருக்கும் கெட்டுப்போன திசுக்களுக்கு சிகிச்சை கொடுத்து அவைகளுக்கு புது ஜீவன் கொடுப்பது, ஸ்டெம் செல் பேஷியல். சருமத்தில் புதிய செல்களை உருவாக்க வும் இந்த பேஷியல் துணைபுரியும்.

பெரும்பாலான பெண்கள் இப்போது சருமத்தில் கெட்டுப்போன செல்களுக்கு புது ஜீவன் கொடுக்க இந்த பேஷியலை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் சருமம் பொலிவுபெற்று முகம் அழகாக பளிச்சென மாறுகிறது. விரைவாக வேலை செய்து, உடனடியாக பலன் தரும் இந்த பேஷியலை செய்தால், முகத்தில் இருக்கும் புள்ளிகளும், கறுப்பு திட்டுகளும் மாறிவிடும். அதனால் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும். சருமம் பட்டுபோன்று மிருது தன்மை பெறும். இந்த பேஷியலில் ரசாயனம் கலந்த அழகுப் பொருட்கள் எதுவும் நேரடி யாக சருமத்தில்படாது. அதனால் எல்லாவித சருமத்திற்கும் இது பொருந்தும்.

பொதுவாக சருமத்திற்கு மூன்று விதங்களில் பாதிப்பு ஏற்படும். அவை: சூடு, வறட்சி, தூசு. இவைகள் மூலம் சரும திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. அவைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பணியை ஸ்டெம் செல் பேஷியல் செய்கிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை மூன்று தடவை இந்த பேஷியலை செய்யும்போது முழு பலன் கிடைக்கும்.

எப்படி செய்யப்படுகிறது?

முக சருமத்தை சுத்தம் செய்துவிட்டு, `ஸ்பெஷல் வெஜிட்டபிள் பீல்’லை பூசவேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு விரல்களால் தேய்த்து அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் செயல்படாத திசுக்கள் சருமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. பின்பு ஸ்டெம்செல் நரிசிங் கிரீம் மூலம் மசாஜ் செய்யவேண்டும். இந்த கிரீமை யூத் ஆயிலில் சேர்த்து மசாஜ் செய்தால் சருமம் வேகமாக உட்கொள்ளும். கழுத்து, பின் முதுகு, கைகளிலும் இந்த மசாஜை செய்யலாம். 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவேண்டும்.

அடுத்து ஆரஞ்சு பழத்தின் தன்மையை சருமத்திற்கு தரும் கால்வானிக் சிகிச்சையை செய்யவேண்டும். இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். ரோஸ் வாட்டரில் முக்கிய பஞ்சு பேடை முகத்தில் வைத்து கூல் கம்ப்ரஷன் கொடுத்த பின்பு மாஸ்க் போடவேண்டும். ஸ்டெம் செல் மாஸ்க்கை முக சருமத்தில் நேரடியாக போட வேண்டும். 20 நிமிடத்தில் கழுவி அப்புறப்படுத்திவிட வேண்டும்.