Daily Archives: ஏப்ரல் 22nd, 2011

ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு சென்று முறையுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் எளிதாக செய்ய முடியும். மேலும் கற்பழிப்பு, கடத்தல் போன்ற எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்தும் உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள முடியும்.

எதிர்பாராமல் நடக்கும் ஆபத்துக்களுக்கு காரணம் நமது தனிமையும், அழகும், நம்மிடம் இருக்கும் உடைமைகளும்தான். இவற்றை இன்னொருவர் கைப்பற்ற நினைக்கும்போது ஆபத்து நமக்கு மிக அருகில் வருகிறது.

நவீன ஜிம்களில் இதயத் தசைகளுக்குத் தேவை யான உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்பு யுக்திகள் கற்றுத் தரப்படுகின்றன. அவைகளை முழுமை யாக கற்றுக் கொள்ள அகன்ற பரப்புடன் கூடிய வசதியான உடற்பயிற்சிக் கூடத்தை தேர்ந் தெடுங்கள். அங்கு குத்துச்சண்டைக்குப் பயன் படுத்தும் பேடுகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை வசதியாக உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், உடற்பயிற்சி களைத் தொடர்ந்து முனைப்புடன் செய்யும் வழிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் போன்றவை பற்றியும் அவர்கள் கற்றுத்தர வேண்டும்.

உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், எலும்பு, மூட்டு இணைப்புகள் ஆகியவற்றைப் பராமரிக்கும் விதம் மற்றும் முதுகு வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள் போன்றவை முறையாக கற்றுத்தரப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் பயிற்சி பெறுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 700 கலோரிக்கான சக்தியை செலவிடுகின்றனர். முதலில் குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கும் பயிற்சியாளர்கள், நாளடைவில் பயிற்சியின் மேல் உள்ள ஆர்வத்தில், படிப்படியாக அதிகளவு நேரத்தை ஒதுக்குகிறார்கள்.

முறையாக செய்யப்படும் உடற்பயிற்சியே பெண்களுக்கு தேவையான முழு ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும்.

குவாசர்கள்..

இதுவரை நமது அறிவியல் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டுள்ள கருவிகளாலும் ஆராய்ச்சிகளாலும் நமது கண்ணுக்கும், நமது கருவிகளின் புலனுக்கும் தெரியக்கூடிய எல்லை வரையில் பல விந்தைப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 1963 இல் கண்டுபிடிக்கப்பட்ட குவாசர்கள் (Quasars) புதிரானவை. குவாசர் என்பது ஒரு கூட்டுச் சொல் ஆகும். குவாசர்கள் தோற்றத்தில் ஒரு விண்மீனைப் போன்றே காட்சியளிக்கின்றன. இந்த குவாசர்கள் பல கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளன. இக்குவாசர்கள் பல்வேறு அளவுகளில் மிகுதியாக ஒளியை உமிழ்கின்றன.

ஓர் ஒளித் தொலை நோக்கியைக் கொண்டு பார்த்தோமானால் குவாசர்கள் சாதாரண மங்கிய ஒரு விண்மீனைப் போன்றே காணப்படுகின்றன. ஆனால் வானொலித் தொலை நோக்கியைக் கொண்டு ஆய்ந்தோமானால் குவாசர்கள் வானொலி அலை மூலங்களாகவும் உள்ளது தெரிய வருகின்றது. அதாவது குவாசர்கள் வானொலி அலைகள் மற்றும் எக்ஸ் கதிர்களை ஒளியுடன் உமிழ்கின்றது. ஒரு குவாசரானது நமது அண்டத்தில் 1,00,000 இல் ஒரு பகுதி அளவுடையது. ஆனால் அது உமிழும் ஒளியானது நமது அண்டத்தின் ஒளியைக் காட்டிலும், 100 முதல் 200 மடங்கு அதிகமாகும். இதுவரை இது போன்று சுமார் 1500 குவாசர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குவாசர்களின் கண்டுபிடிப்பு மேலும் பல ஆவலைத் தூண்டும் கேள்விகளை அறிவியலார்களிடையே எழுப்பியுள்ளது. இதனால் ஆராய்ச்சி வேட்கையும் அதிகரித்துள்ளது. பிரபஞ்சம் உருவாகத் தொடங்கிய முதல் மூன்று வினாடிகளில் அணுத்துகள்கள் உருவாயின எனில் அத்துடன் சேர்ந்து எதிர் அணுத்துகள்களும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அவை இதுவரை கண்டறியப்படவில்லை.

இதே போல் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் எதிர்ப்பொருட்கள் இருக்க வேண்டும். இதுவரை அவையும் கண்டறியப்படவில்லை. கண்டறியப்படாத இவ்வெதிர் அணுக்கள், எதிர்ப்பொருட்கள் அவற்றின் நிறை, இயக்கம், ஆற்றல் எல்லாம் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் வரலாற்றையும் தெரிவிக்கக் கூடியனவாக இருக்கலாம். எனவே இப்புதிகர்களைக் கண்டறியத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்

எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். அனைத்து ஆபீஸ் 2007 அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், இந்த கால இடைவெளி, மாறா நிலையில் 10 நிமிடங்களாக அமைக்கப்படுகிறது. இதனை நாம் எந்த அளவிலும் வைத்துக் கொள்லலாம். எடுத்துக்காட்டாக 5 நிமிடங்களாக இதனை செட் செய்தால், நீங்கள் எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை, நீங்கள் அமைத்த டேட்டா அனைத்தும் உள்ள பைலாக அது சேவ் செய்யப் பட்டுக் கொண்டே இருக்கும். இதனை எப்படி எக்ஸெல் புரோகிராமில் அமைப்பது என பார்க்கலாம்.
1. ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் மெனுவின் கீழாக “Excel Options” என்று உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது “Excel Options” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள மெனுவின் இடது பக்கமாக உள்ள Save என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு “Save AutoRecover information” என்று உள்ள இடத்தில் காட்டப்பட்டுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை இடவும்.
5. எத்தனை நிமிட இடைவெளியில், எக்ஸெல் டேட்டாவினை சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்திடவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனை ஆபீஸ் 2003 தொகுப்பிலும் மேற்கொள்ளலாம். எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து Tools> Options எனச் செல்லவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Save டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Settings என்ற தலைப்பின் கீழ், முதல் பிரிவாக Save Autorecover info every எனக் காட்டப்பட்டு, தொடர்ச்சியாக நிமிடத்தை செட் செய்திட சிறிய கட்டம் ஒன்று மேல், கீழ் அம்புக் குறிகளுடன் காட்டப்படும். இதனை இயக்கி, நீங்கள் விரும்பும் நிமிட இடைவெளியைசெட் செய்திடலாம். இங்கு கால இடைவெளியை ஒரு நிமிடமாகக் கூட செட் செய்திடலாம். ஆனால், அது சரியல்ல. இதனால், பெரிய ஒர்க்ஷீட்களில் செயல்படுகையில், ஆட்டோ ரெகவர் செயல் பாட்டி னால், செயல்படுவது தாமதமாகும்.

கோடையில் குளு குளு…..

கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது.

வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம். உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம்.

உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது. வெயில் பட்டு முகம் கறுத்துப் போய் விட்டதாக உணர்பவர்கள் இந்த உருளைக்கிழங்கு பேக்கை முகத்தில் போட நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் இந்த சீசனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும். கோடையின் கடுமையைப் போக்குவதில் முதலிடம் வகிப்பவை வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள். இவற்றைக் கொண்டு பேஸ்பேக்குகள் தயாரிக்கலாம். வாழைப்பழத்தை மசித்து அரை ஸ்பூன் பால் சேர்த்து சில துளிகள் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டப்பிறகு முகத்தைக் கழுவ வேண்டும்.

தர்பூசணி பழத்தைக் கொண்டும் பேஸ் பேக் தயாரிக்கலாம். தர்பூசணி பழத்துடன் பால் சிறிதுதேன் சேர்த்து முகத்தில் தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தைக் கழுவலாம். இந்த தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே தயாரிப்பது எளிது. அவ்வப்போது பிரஷ்ஷாகத் தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். இந்த வகை பேஸ்பேக்குகள் ஓரளவு கோடையின் கடுமையைப் போக்கக் கூடியவை.

நாள் முழுவதும் வெயிலில் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கன்றிக் கறுத்து விடுவது இயற்கை. இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.

கோடை வெயிலில் போய் விட்டு வந்த பின் கண்கள் உஷ்ணத்தால் எரிகிறதல்லவா? வெள்ளரிக்காயை சிலைஸாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடுக்க கண் எரிச்சல் நீங்கும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்து கொள்வதன் மூலமாகவும் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.