Daily Archives: ஏப்ரல் 24th, 2011

இந்தியாவைவிட அதிகம் சுற்றுச்சூழலை கெடுப்பதில் இன்டர்நெட் அதிக பங்கு

சுற்றுச்சூழலை கெடுப்பதில் இன்டர்நெட் போன்ற தகவல் தொகுப்பு மையங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. அவை உபயோகிக்கும் எரிசக்தி அளவு, இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையை விட அதிகம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைப்பு கிரீன்பீஸ். அதன் சார்பில் தகவல் தொகுப்பு மையங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து Ôஹவ் டர்ட்டி ஈஸ் யுவர் டேட்டா’ என்ற பெயரில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூகுள், அகாமாய், யாகூ, ஆப்பிள் இங்க் போன்ற இன்டர்நெட் வசதிக்கான தகவல் தொகுப்பு மையங்கள் ஆண்டுக்கு 66,200 கோடி கிலோ வாட் மின்சக்தியை பயன்படுத்துகின்றன. அதன் மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக எரிசக்தி பயன்பாடு மூலம் பூமி வெப்பமயமாவது ஆபத்தான அறிகுறி. இந்த தகவல் தொகுப்பு மையங்கள் செலவிடும் எரிசக்தியை விட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு எரிசக்தி தேவை குறைவு. அதாவது, இந்தியாவில் 56,800 கோடி கிலோ வாட் எரிசக்தி செலவிடப்படுகிறது. அதைவிட சுமார் 10,000 கோடி கிலோ வாட் மின்சக்தியை தகவல் மையங்கள் பயன்படுத்துகின்றன.
சுற்றுச்சூழலை காப்பதுடன் செலவைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மின் சிக்கனத்தின் அவசியத்தை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. எனினும், தூய்மையான எரிசக்திக்கான மாற்று வழிகள் மீது அவை அக்கறை காட்டவில்லை. அதனால், பெரும்பாலான தகவல் மையங்களில் நிலக்கரியில் இருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கிரீன்பீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு


அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, “”என்ன இது மாய மந்திரம்” என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, “”நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே” என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் “அவதாரம், கடவுள்’ என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

“அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே’ இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதை – தூய்மையாக – முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.
பாபாவின் சேவைகள்…

* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

தலைவர்கள் இரங்கல்: சத்ய சாய்பாபா மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய , மாநில அமைச்சர்கள் , அ.தி.மு.க.., பொதுசெயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில்; சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் சாய்பாபா. இதன் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் சாய்பாபா இடம் பிடித்து விட்டார் என்று கூறியுள்ளார். ‌ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாய்பாபாவின் இழப்பு மனித குலத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் பாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு சென்றார்.

ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றனர்.

“ வழிகாட்டுதலாக இருந்த சாய்பாபா ” அத்வானி ; தெய்வீகத்தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின்மனதில் வாழ்ந்தவர் என பிரதமர் மன்மோகன்சிங் புகழாராம் சூட்டியுள்ளார். பாபா மறைவு நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பாபாவின் இழப்பு குறித்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது. இந்தியா முன்னேற்றம் கண்டிட உழைத்த தலைவர்களில் இவரும் ஒருவர். இவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

நன்றி-தினமலர்

“சரக்கு’ விற்பனை: தமிழகம் சாதனை

“எந்தத் துறையிலயாவது நம்ம ஊரு உருப்பட்டிருக்கா’ என, யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, “சரக்கு’ விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது.

அந்த, “சாதனை’ வரலாறு இது: தமிழகத்தில் தற்போது மொத்தம், 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு, 29 கடைகள். இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (பொதுவாக “குடிமகன்’களால், “ஹாட்’ என அழைக்கப்படுவது), பீர்களும் விற்கப்படுகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மது விற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து, தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு பெருந்துணையாக இருப்பது, “டாஸ்மாக்’ மூலம் கிடைக்கும் வருவாய் தான். நலத்திட்டங்கள் குறைவற நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனாலோ என்னவோ, ஆண்டுதோறும் விற்பனையும் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கடந்த, 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 13 ஆயிரத்து, 853 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010 – 11ம் ஆண்டில் இந்த விற்பனை, 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதன் மூலம், ஓராண்டில் சரக்கு விற்பனை, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், ஐ.எம்.எப்.எல்., விற்பனை, 4 கோடியே 8 லட்சம் பெட்டிகளில் இருந்து, 4 கோடியே 78 லட்சம் பெட்டிகளை எட்டியுள்ளது. இது 17 சதவீதம் அதிகம். பீர் விற்பனை 2 கோடியே 42 லட்சம் பெட்டிகளில் இருந்து, 2 கோடியே 70 லட்சம் பெட்டி அளவுக்கு அதிகரித்துள்ளது. இது, 11 சதவீதம் உயர்வு. அதற்குள் அயர்ந்துவிட வேண்டாம். இன்னும் சில, “கிக்’கான புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. “கேஸ்’ எனப்படும் ஒரு பெட்டி சரக்கை, 40 பேர் குடிக்கலாம். அந்த வகையில், 2009-10ல், சராசரியாக ஒரு நாளைக்கு, 63 லட்சம் பேர் குடித்தனர்; ஆம்! ஒரு நாளைக்கு, 2010-11ல், அதே ஒரு நாளைக்கு குடித்தவர்களின் எண்ணிக்கை, 75 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதாவது, இன்றைய தேதியில், ஒரு மணி நேரத்துக்கு, 3 லட்சத்து 12 ஆயிரத்து, 500 பேர் குடிக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும், 5,208 பேர் குடிக்கின்றனர். இது, 24 மணி நேரத்துக்கான சராசரி தான். “மப்’பில் மல்லாந்து விட்ட நேரம், கடை மூடியிருக்கும் நேரத்தைக் கழித்தால், “குடிமகன்’களின் அடர்த்தி இன்னமும் அதிகரிக்கும். அப்புறமென்ன? சியர்ஸ்!

பீர் தட்டுப்பாடு ஏன்? “ஹாட்’ என, “குடிமகன்’களால், தவறாக உச்சரிக்கப்படும், “ஹார்ட்’ பற்றி பேசிவிட்டு, “கூல்’ சமாசாரமான பீர் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? பெரும்பாலும், சைவப் பட்சினிகளாலும், இளம்பெண்களாலும், விரும்பிக் குடிக்கப்படுவது பீர். “கோடை வெப்பத்தைத் தவிர்க்க, இளநீர் குடிப்பவன் கோமாளி’ என்றழைக்கப்படும் இந்தக் காலத்தில், “தினம் ஒரு பீர் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது’ என, டாக்டர்களே பரிந்துரைக்காத குறை. அந்த அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கிறது பீர் விற்பனை. சராசரியாக இன்று, ஒரு நாளைக்கு 2 லட்சத்து, 52 ஆயிரத்து, 800 பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன. இந்த விற்பனை இன்னும் எகிறியிருக்கக் கூடும். சில காரணங்களால் அது நிறைவேறாமல் போய் விட்டது. தமிழக மக்களின் பீர் தாகத்தைத் தீர்க்க, மோகன், பாலாஜி, எம்பீ என, மூன்று பீர் உற்பத்தி நிறுவனங்கள் தான் களத்தில் உள்ளன.

இந்த அவலத்தைப் போக்க, எஸ்.என்.ஜே., ப்ரூவரீஸ் என்ற புதிய நிறுவனம், உரிமம் பெற்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை மேற்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. இயங்கி வரும் மூன்றில், மோகன் ப்ரூவரீஸ் நிறுவனம், தன் உற்பத்தித் தொழிற்சாலையை, சென்னை வளசரவாக்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால், அந்நிறுவனத்தின் பீர் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாட்டுக்கு, இது ஒரு காரணம். பொதுவாகவே, கோடை காலத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டைப் போக்க, வெளிமாநிலங்களில் இருந்து பீர் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இது, உள்ளூர் விற்பனையில், 20 சதவீதம் இருக்கும். தற்போது, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வெளிமாநில பீர் வாங்க முடியாமல், “டாஸ்மாக்’ நிறுவனம் தவித்துக் கொண்டிருக்கிறது; இதுவும் ஒரு காரணம். “குடிமகன்களின் அடிப்படை உரிமையில் தேர்தல் கமிஷன் தலையிடுகிறது’ என, நம்மூர் அரசியல்வாதிகள் இதைத் தான் சொன்னார்களோ!

நன்றி-தினமலர்

சோதனை குழாய் வழியே விந்தணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

ஜப்பான் நாட்டின் யோகோஹமா சிட்டி யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர் டகேஹிகோ ஒகாவா. இவர் செயற்கை முறையில் சோதனை குழாய் உதவியுடன் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்துள்ளார். இவரது ஆய்வின்படி, எலிகளின் இனப்பெருக்க பகுதியிலிருந்து டெஸ்டிகுலார் திசுக்கள் சேகரிக்கப்பட்டு அதனுடன் சரியான அளவில் புரதங்களும் சேர்க்கப்பட்டன. பின்பு அதன் வளர்ச்சி கவனிக்கப்பட்டன. அதில் சோதனை குழாய் முறையில் விந்தணுக்கள் உருவாகின. இதனை பின்னர் அவை ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருத்தரிப்பு முறையில் கரு முட்டைகளுடன் சேர்த்து வளப்படுத்தப்பட்டன. இதில் ஆண் மற்றும் பெண் என 12 எலிக்குஞ்சுகள் பிறந்தன. அவை தற்போது நன்றாக உள்ளன. மேலும் எலிகளிலிருந்து பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட திசுக்களும் நல்ல பலனை தந்தன.
எனவே, இந்த ஆராய்ச்சியின்படி வருங்காலத்தில், தந்தையாகும் வாய்ப்பில்லாத மனிதர்களும் எளிதாக குழந்தை பெற முடியும் என அவர் கூறுகிறார். இம்முறையில் குழந்தை பெறுவது என்பது இங்கிலாந்து நாட்டில் சட்டப்படி தவறு என்றாலும், அமெரிக்காவின் புற்றுநோய் அமைப்பொன்று இதற்கு வரவேற்பு அளித்துள்ளது. ஏனெனில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் இனப்பெருக்க அணுக்கள் அச்சிகிச்சையினால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு முன்பு இனப்பெருக்க அணுக்கள் பிரித்து எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பின்பு தேவையான போது பயன்படுத்தி கொள்ளலாம் என்பது இவ்வாய்வின் சிறப்பம்சமாகும்.

அதிசயம்… ஆனால் உண்மை!

மும்பை நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் என்னும் அதிசய கிராமம் உள்ளது.

இங்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 60 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் உடைந்து சிதறி விழுந்ததில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

விண்கல் தாக்கியதால் ஏற்பட்ட இந்த பள்ளத்தின் விட்டம் 1800மீட்டர். பள்ளத்தின் ஆழம் 170 மீட்டர். இந்த பள்ளத்தை சுற்றி அடர்ந்த காடுகளும், ஒரு ஏரியும் உள்ளது. இப்படியொரு அதிசய பூமி இருப்பதை 1823-ம் ஆண்டு அலெக்சாண்டர் என்ற வெள்ளைக்காரர் கண்டுபிடித்தார்.

விண்கல் உருவாக்கிய இந்த இடத்தின் மேற்கு திசையில் சுவர் போன்ற நீண்ட பகுதிகளும் காணப்படுகின்றன. கிழக்கு திசை ஏரியை நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பண்ணைகளும், தோட்டங்களும் உள்ளன.

மேலும் சிதைந்த கோவில் சிற்பங்கள் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் விண்கல் விழுந்த இடத்தில் மக்கள் கடவுள்களின் சிற்பங்களை உருவாக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள ஏரி பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.

பொதுவாக இது போன்று பெரிய விண்கற்கள் விழுகின்ற இடங்களில் காலம் செல்லச் செல்ல அதன் இயல்புத் தன்மை மாறிவிடும். ஆனால் லோனர் கிராமத்தில் உள்ள விண்கல் ஏற்படுத்திய பகுதி பல ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதும் தெரியவந்துள்ளது.

இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீரில் உப்பு மற்றும் சுண்ணாம்பு கலந்துள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட அதிசயபூமியை புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் புவியியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் பஜ்ஜி

மீன் பஜ்ஜி

தேவையான பொருட்கள்

முள் நீக்கிய மீன் – 1/2 கிலோ
மைதா மாவு – 2 கை அளவு
சோள மாவு – 1 கை அளவு
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை – பொரித்தெடுக்க
எலுமிச்சை சாறு – மீனை ஊற வைக்க

செய்முறை

* மீன் மற்றும் எண்ணை தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் திக்காகக் கரைத்துக் கொள்ளவும்.

* மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து, எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* சூப்பர் சுவையுடைய மீன் பஜ்ஜி சுவைக்கத் தயார்.

குறிப்பு

மீன் பஜ்ஜிக்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சுவையாக இருக்கும்.

மசாலா மோர்

டும் வெயில் உடலுக்கு களைப்பு தரும் உஷ்ண காலமிது. வெயிலில் அலைந்து களைத்து வருகையில் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு டம்ளர் `ஜில்’ மோர் குடித்தால் எப்படி இருக்கும். உடம்பு சூடு `டக்’கென்று குறைந்து உடல் முழுவதிலும் புத்துணர்ச்சி பரவி மனமும் குளுகுளுவென இதமாகும் தானே.

மசாலா மோர்

குறைந்த செலவில் நிறைந்த சுவையுடன் குளிர்ச்சியைத் தரவல்ல மோர் தயாரிப்பது மிகவும் சுலபம்! அதனுடன் ஸ்பைஸ் மசாலா சேர்த்தால் குளிர்ச்சியுடன், லேசான காரம் சுவையை தூக்கலாக்கி வழங்கும். இது சத்துமிக்கது என்பது இன்னும் சிறப்புக்குரியது.

தனியா, சீரகம், காய்ந்த மாங்காய், மாதுளை விதைகள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த இஞ்சி, கறுப்பு மிளகு, கறுப்பு உப்பு போன்ற பல பொருட்களால் தயாராகும் சாட் மசாலா, மோருக்கு ஒரு ஸ்பைஸ் சுவையைத் தருவதுடன் விரும்பத்தக்க மணத்தையும் அளிக்கும்.

பச்சை நிற இலைகளுக்கே உரித்தான வைட்டமின் `சி’ நிறைந்த கொத்த மல்லித் தழை, புதினா இலைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சம் பழம், வயிறு காக்கும் ஸ்பெஷலிஸ்டான இஞ்சி மற்றும் பெருங்காயம், வைட்டமின் `ஏ’ சத்து மிக்க கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து நாம் செய்யப்போகும் `ஸ்பைசி மசாலா மோர்’ உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது.

மோரில் நாம் சேர்க்கும் உப்பானது வெயிலில் சென்று வியர்வை மூலமாக நாம் இழக்கும் உப்புச் சத்தை சட்டென ஈடுகட்டி உடல் அயர்ச்சியை போக்க வல்லது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அல்லவா!

கூலான ஸ்பைசி மசாலா மோரை தயாரிக்கலாமா?

தேவையானவை

தயிர் – 2 கப்
தண்ணீர் – 6 கப்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை- 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
இஞ்சி விழுது – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
பொடியாக அரிந்த கறிவேப்பிலை – சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சைமிளகாய் – 2

அலங்கரிக்க:

கொத்தமல்லித் தழை – சிறிதளவு
புதினா இலைகள் – சிறிதளவு
சாட் மசாலா – 1/4 டீஸ்பூன்
கறுப்பு உப்பு (காலாநமக்) – 1/4 டீஸ்பூன்

செய்முறை

* தயிருடன் தண்ணீர் ஊற்றி, மத்தால் நன்கு சிலுப்பி எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

* `தாளிக்க’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைத் தாளித்து, மோரில் போடவும்.

* பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை, ஆய்ந்த புதினா இலைகள், சாட் மசாலா, கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்து, தேவையானால் பிரிஜ் அல்லது பானையில் வைத்து ஜில்லென்று கொடுக்கவும்.

* கூல் கூல் ஸ்பைசி மசாலா மோர் ரெடி.

சுவைக்கான குறிப்பு

தேவையானால் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் அரைத்து விழுதாகவும் சேர்க்கலாம்.

கீதா பாலகிருஷ்ணன்

எக்ஸெல்: பில் ஹேண்டில்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்து விட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு கர்சரை வலது புறம் உள்ள பார்டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடையாளம் கிடைக்கும். இதனை இழுத்தால் செல்லில் உள்ள டேட்டா கீழாக உள்ள செல்லில் அமைக்கப்படும். இது எப்படி அமைக்கப்படுகிறது? எடுத்துக் காட்டாக ஒரு எண்ணை அமைத்துப் பின் பில் ஹேண்டிலை வைத்து இழுத்தால் அந்த எண் மற்ற செல்களில் ஜஸ்ட் காப்பி செய்யப்படுகிறது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 2345 என எண்டர் செய்து பில் ஹேண்டில் இழுத்தால் கீழே உள்ள செல்களில் 2345 என்ற எண் காப்பி செய்யப்படும்.
அடுத்ததாக அவ்வாறு இழுக்கும் போது கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு இழுத்தால் அடுத்தடுத்த செல்களில் எண்ணுடன் 1 சேர்த்து அடுத்த எண் அமைக்கப்படும். அதாவது 2346, 2347, 2348 என அமைக்கப்படும்.
சரியா! இப்போது செல்லில் ஒரு தேதியை அமைத்து இதே போல பில் ஹேண்டிலைப் பயன்படுத்துங்கள். சாதாரணமாக இழுத்தால் எண்களுக்கு நடந்தது போல அதே தேதி காப்பி ஆகாது. அதற்குப் பதிலாக அடுத்த அடுத்த தேதி காப்பி ஆகும். அதாவது 18-04-11 என டைப் செய்து பின் ஹேண்டிலை இழுத்தால் 19-04-11, 20-04-11 என்று வரிசையாக அமைக்கப்படும். (ஒர்க் ஷீட்டில் தேதி பார்மட் அமைப்புப்படி இது நடக்கும்) அப்படியானால் கண்ட்ரோல் கீ அழுத்தி அமைத்தால் என்னவாகும் என்று எண்ணுகிறீர்களா? ஜஸ்ட் அதே தேதி காப்பி ஆகும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. எக்ஸெல் ஒவ்வொரு வகை டேட்டா விற்கும் பில் ஹேண்டில் பயன் பாட்டினை ஒவ்வொரு வகையில் அமைத்துள்ளது என்பது தெரிகிறது. எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றினைத் திறக்க முயற்சிக்கையில் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இதே போன்று தான் மற்ற விண்டோஸ் புரோகிராம்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் எக்ஸெல் பைல்கள் எந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்டு திறக்கப் படுவதற்குக் காட்டப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திடலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும்.
1. File மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும்; அல்லது Standard டூல் பாரில் Open டூல் மீது கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 ஆக இருந்தால் ஆபீஸ் பட்டனை அழுத்து கையில் கிடைக்கும் ஓப்பன் டூலினைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் ஓப்பன் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் Toolbar ல் உள்ள View டூல் அருகே வலது பக்கம் உள்ள கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் கீழ் விரியும் மெனு ஒன்றைத் தரும்.
3. இதில் Arrange Icons என்று ஒரு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் பைல்களை எந்த வகையில் வரிசைப் படுத்தி வைக்க என பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப் பட்டிருக்கும். அகரவரிசை, இறுதியாக எடிட் செய்த நாளின் அடிப்படையில், அளவின் அடிப்படை யில் எனப் பல ஆப்ஷன்ஸ் தரப்படும். இதில் எந்த வகையில் இருந்தால் உங்களுக்குச் சரியாக இருக்குமோ அந்த வகையினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் படி பைல்கள் வகைப்படுத்தப் பட்டு வரிசைப்படுத்தப்படும். பின்னர் நீங்கள் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் திறக்கும் போது அதே வகையிலேயே இருக்கும். மீண்டும் இதனை மாற்றினால் தான் மாறும்.
விண்டோஸ் + எக்ஸெல் இணைந்து செயலாற்றும் சில பதிப்புகளில் Arrange Icons மெனு கிடைக்காமல் இருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் பைல் ஏரியாவில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் Context மெனுவில் இந்த Arrange Icons மெனு கிடைக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.

குடும்பம் என்னும் தர்மம்-கவியரசு கண்ணதாசன்

வாழ்வின் நெறிமுறைகளை விளக்கும் தொடர் குடும்பம் என்னும் தர்மம்


ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.

தமிழர் ஒருவர் வெளி நாட்டிற்குச் சென்றிருந்தாராம். அங்கு ஓர் அமெரிக்கத் தம்பதிகளைச் சந்தித்தாராம். அவர்கள் ஹோட்டலுக்கு வெளியிலேயே கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றார்களாம்.

தமிழரைப் பார்த்து அந்த அமெரிக்கர், “இவள் எனது மூன்றாவது மனைவி” என்று அறிமுகப்படுத்தி வைத்தாராம்.

“முதல் இருவரையும் வெட்டி விட்டதாக” வேறு சொன்னாராம்.

“ஒத்து வரவில்லை என்றால் ஒதுக்கிவிடுவதுதான் நல்லது” என்று போதித்தாராம்.

“வாழ்க்கையை வாழ்க்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்; அதற்கென்று பண்பாடு எதற்காக?” என்று வேறு வினவினாராம்.

“கட்டிக்கொண்டு விட்டோம் ஒருத்தியை என்பதற்காகச் சண்டை போட்டுக்கொண்டே அவளோடு வாழ்வதில் என்ன அர்த்தம்? புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் நியாயம்” என்று வேறு போதித்தாராம்.

ஆடு மாடுகள் இப்படித்தான் செய்கின்றன. ஆனால், அவை ஒப்பந்தத்திற்காகப் பதிவாளர் அலுவலகத்திற்கும் போவதில்லை; வெட்டுவதற்காக நீதிமன்றத்திற்கும் போவதில்லை.

`எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்று முடிவு கட்டிவிட்டால் ஆண் பெண் என்ற இரண்டு வகை மிருகங்கள் தான் மிஞ்சும்.

மாமன், மைத்துனன் என்ற பண்பாட்டு உறவுக்கு அங்கே வேலை இல்லை.

ஆனால், அந்த வகை உறவில்தான், இந்து தர்மம் உலகெங்கும் தலை தூக்கி நிற்கிறது.

குடும்ப வாழ்க்கையை ஒரு அறம் என்று போதித்தது இந்து தர்மம். அதனால்தான் தமிழ், அதனை `இல்லறம்’ என்றது.

இந்து தர்மத்தில் ஒருவன் எத்தனை மனைவியரை வேண்டுமானாலும் கொள்ளலாம். ஆனால், அத்தனை பேருக்கும் அவன் ஒருத்தன்தான் கணவன்.

ஒருத்தியை அவன் ஒதுக்கி வைத்திருந்தாலும், சாகும் வரையிலும் அவள், அவனது மனைவியே.

அவளை எல்லா வகையிலும் திருப்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை.

அந்தக் கடமையில் தவறுவோர் பலருண்டு.

அவர்கள் அந்தத் தர்மத்தை மறந்தவர்களே தவிர, அந்தத் தவற்றைச் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களல்ல.

இந்து மதத்திலும் சில பிரிவினரிடத்தில், அறுத்துக் கட்டும் பழக்கம் இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னும் இருக்கிறது.

இதனை இந்து தர்மம் அங்கீகரிக்கவில்லை.

இது எப்படி ஏற்பட்டது?

கோஷ்டிச் சண்டைகளால் ஏற்பட்ட வஞ்சம் தீர்க்கும் மனப்பான்மையில் ஏற்பட்டது.

`பெண் கொடுத்துப் பெண் எடுப்பது’ என்றொரு பழக்கம் உண்டு.

ஒரு வீட்டினுள் ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் இருந்தால் அதேபோல ஓர் இளைஞனையும், இளம் பெண்ணையும் பெற்ற குடும்பத்தினர், தங்கள் பெண்ணைக் கொடுத்து அந்தப் பெண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இதில் ஒரு ஜோடி சந்தோஷமாக வாழும்போது, இன்னொரு ஜோடி சண்டை போட்டுக்கொள்ள நேரலாம்.

சண்டைபோடும் கணவன், தன் மனைவியைப் பிறந்த வீட்டிற்கே திருப்பியனுப்பினால், அங்கே சந்தோஷமாக வாழ்கிற கணவன்கூடத் தன் மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவான்.

வஞ்சம் தீர்ப்பதற்காக தங்கள் பெண் கழுத்திலிருந்த தாலியை அறுத்துவிட்டு, வேறொருவனுக்கு அவளைக் கட்டி வைத்தால், அவர்களும் அதே போலச் செய்துவிடுவார்கள்.

ஆத்திரத்தில் உருவான இந்தப் பழக்கம், கடைசியில் ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

இந்தச் சம்பிரதாயத்தை வெறும் கதைகளிலேகூட இந்து தர்மம் ஏற்றுக்கொண்டதில்லை.

தர்மங்களின் வரிசையில் குடும்ப தர்மத்தையும் அது சேர்த்தது.

உடலைவிட மனைவியின் ஆன்மாவையே முதலில் கணவன் திருப்தி செய்ய வேண்டும்.

ஆனால், மனைவியோ கணவனின் உடலைத் திருப்தி செய்து, ஆன்மாவைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

கணவன், மனைவியின் உடலைத் திருப்தி செய்வதும் இன்றியமையாததாகவே கருதப்பட்டது. ஆனால், அது இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டது.

உண்மையை ஒப்புக் கொள்வதானால் நூற்றுக்கு எண்பது ஆடவர்கள் உடல் உறவில் தம் மனைவிக்கு முழுத்திருப்தியையும் அளித்ததில்லை. இதுவே மேல் நாடாக இருந்தால் விவாகரத்துக்கு இந்த ஒரு காரணம் போதும்.

தான் திருப்தியுறும் அளவையே தேவையான அளவாகக் கருதுகிறவள் இந்து மத மனைவி.

அந்தப் பொறுமையின் மூலம் ஒரு கட்டத்தில் முழுத் திருப்தியடைந்து விடுகிறாள்.

விரிவாகப் பார்ப்போம்.

திருமணம் ஆன புதிதில், கொஞ்ச காலத்துக்குக் கணவன் மட்டுமே சந்தோஷமடைகிறான்.

உடம்பில் இருந்த வெறியும் சூடும் காமக் கலப்பில் இவனைப் பலவீனமாக்கி விடுகின்றன.

ஒரே உடலில் அவன் தொடர்ந்து உறவு கொள்வதால் நாளாக நாளாக அவனது பலவீனம் மறைந்து பலசாலியாகி விடுகிறான்.

மனைவியின் உடம்பில் சேமிக்கப்பட்டிருந்த வெறி வெள்ளம், அவனைப் பலவீனமாக்கிச் சீக்கிரம் திருப்தியுறச் செய்துவிடுகிறது.

ஒரே தம்பதிகள் நீடித்து வாழ்வதன் மூலம், உணர்ச்சிக் கலப்பில் சம கால போகத்திற்கு வந்து விடுகிறார்கள்.

கணவனின் உடம்பிலிருந்து சுக்கிலமும், மனைவியின் உடம்பிலிருந்து சுரதமும் வெளியாகும் நேரம் ஒரே நேரமாகயிருந்தால் அது சமகால போகம் என்றழைக்கப்படும்.

அந்த சமகால போகத்தில் இருவர் உடம்பும் பலமடைகின்றன.

மழைத் தண்ணீர் சாலை வழியாக ஏரியில் விழும் போது, ஏரியிலுள்ள மீன் அந்தத் தண்ணீர் வழியாகச் சாலைக்கு வருவது போல், சுக்கிலத்தின் ஜீவ அணுக்கள் மனைவியின் உடம்பிலும், சுரதத்தின் ஜீவ அணுக்கள் கணவனின் உடம்பிலும் மாறி மாறிப் புகுந்து கொள்கின்றன.

ஒரே தம்பதிகள் நீண்ட நாள் வாழ்வதன் மூலமே இந்தச் சமகால போகம் சாத்தியமாகிறது.

ஒருவர் மீது ஒருவருக்குள்ள பிடிப்பு அதிகமாகிறது.

நோய் நொடியில்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன.

தாய் தந்தை மீது பாசத்தோடு அவை வளர்கின்றன.

அங்கு ஒரு மகிழ்ச்சிகரமான இல்லம் உதயமாகிறது.

அத்தகைய, இல்லங்களின் மீது ஒரு ஆரோக்கியமான நாடு உருவாகிறது.

ஆகவேதான் இந்து தர்மம் இல்லறத்தை வலியுறுத்திற்று.

இல்லறத்தில் உடல் உறவு ஒரு பகுதியே.

அதில் மற்றொரு பகுதி, வெளி உலகத்தோடு தொடர்புடையது.

அதன் பெயரே விருந்தோம்பல்.

செல்கின்ற விருந்தினரை வழியனுப்பி, வருகின்ற விருந்தினருக்காகக் காத்திருப்பவன் இல்லறவாசி.

அதனை ஒருவகை நாகரிகம் என்கின்றது இந்து தர்மம்.

குறைந்தபட்சம், ஓர் அதிதிக்காவது சோறு போடாமல் கணவனும் மனைவியும் சாப்பிடக்கூடாது.

யாராவது ஒரு அன்னக்காவடி, பரதேசி, பிச்சைக்காரன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

வருகின்ற விருந்தாளிக்கும் ஒரு நாகரிகத்தைப் போதித்தது இந்து மதம்.

சாப்பாடு நன்றாக இல்லாவிட்டாலும் `பிரமாதம்’ என்று சொல்லிவிட்டுப் போவதே அந்த நாகரிகம்.

இன்னும் அற்புதமான நாகரிகம் என்னவென்றால் கணவன் சாப்பிட்ட இலையிலேயே மனைவி சாப்பிடுவது.

`அது ஆரோக்கியக் குறை’ என்போர் உண்டு.

`கணவனுக்கு எவ்வளவு ஆரோக்கியம் இருக்கிறதோ அவ்வளவு தனக்கும் இருக்க வேண்டும்’ என்று நினைப்பவளே இந்து மனைவி.

கணவன் காசநோய்க்காரன் என்றால், அந்த நோயைத் தானும் ஏற்றுக்கொள்ளவே, அவள் அவனது இலையில் சாப்பிடுகிறாள்.

கடல்கொண்ட `லெமூரியா’ கண்டத்தில் வாழ்ந்தவரிடையே ஒரு பழக்கம் இருந்ததாம்.

மணமகனின் வலதுகைப் பெருவிரலைக் கத்தியால் லேசாகக் கிழித்து, அதுபோல் மணமகளின் பெருவிரலையும் கிழித்து, இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டுப்போட்டு விடுவார்களாம்.

ரத்தம் கலந்து விடவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

அதைத் தார்மிகமாகவே செய்து விடுகிறாள் இந்து மனைவி.

கணவன் சாப்பிடுவதற்கு முன்பு அவள் சாப்பிடுவதில்லை; அது எத்தனை நாளாயினும் சரி.

தீனிக்குப் பேர் போன மேல்நாட்டில், மனைவி சாப்பிட்ட மிச்சம் கணவனுக்குக் கிடைத்தால் பெரிய விஷயம்.

இப்போது குலமகளிர் அனைவரும் எல்லா நாள்களிலும் மல்லிகைப் பூவைத் தலையில் சூடுகிறார்கள்.

ஆனால், அந்நாளில் ஒரு அற்புதமான பழக்கம் இருந்தது.

பலர் அறியக் கணவனும் மனைவியும் படுக்கைக்குச் செல்லாத காலம் அது.

நடு இரவில் சந்தித்துப் பிரிந்து, தனியே படுக்கும் காலம் அது.

மாலை நேரத்தில் கணவனுக்கு மனைவியின் உடல் நிலை தெரிந்துவிடும்.

அவள் தலையில் மல்லிகைப்பூ இல்லை என்றால் அவள் வீட்டுக்கு விலக்காகி இருக்கிறாள் என்று பொருள்.

பெரும்பாலும் வீட்டுக்கு விலக்கானவர்கள், தனி அறையில் இருப்பது பழக்கம்.

கணவனும் மனைவியும் தனியாக இருக்காத வீட்டில் மனைவி தன் நிலையைக் கணவனுக்குத் தெரிவிக்கும் ஜாடையே மலர் இல்லாத கூந்தல்.

மனைவி கருவுற்றால், அவள் கருவுற்றிருப்பதை மாமியார் அறிந்துதான் மகனுக்குச் சொல்வாளே தவிர மனைவியே சொல்வதில்லை.

அது திருமணத்திற்குப் பின்வரும் `தோன்றா நாணம்’ எனப்படும்.

அஃதன்றியும், தன் கணவனைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிடும் சமயம் வரும்போது, `என் கணவர் என்றோ, என் அத்தான் என்றோ கூறுவதில்லை. தன் குழந்தையின் பெயரைச் சொல்லி `அவனுடைய தகப்பனார்’ என்று சொல்வது வழக்கம்.

அது கணவனுக்கும், உலகத்திற்கும் செய்யும் சத்தியமாகும்.

“தாய் அறியாத சூல் உண்டோ?” என்பார்கள்.

`தான் கருவுற்றது தன் கணவனுக்கே’ என்று அவள் சத்தியம் செய்கிறாள்.

எங்கள் ஜாதியில் கணவன் இறந்ததும் மனைவி பாடும் ஒப்பாரிப் பாட்டில், கணவனை `பிஞ்சு மக்கள் ஐயா’ என்றுதான் அழைப்பாள்.

இல்லறத்தில் அற்புதமான சட்டதிட்டங்களை வகுத்துக் கொடுத்தது இந்து தர்மம்.

அவ்வப்போது வரும் கோபதாபங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு இந்துக் குடும்பம் இரண்டாயிரம் கோயில்களுக்குச் சமமாகக் காட்சியளிக்கும்.