Daily Archives: ஏப்ரல் 27th, 2011

எவ்வளவு அடித்தாலும் வலிக்காத தி.மு.க.,: ஆர்.ரங்கராஜ் பாண்டே

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக, வெளியே உலாவிக்கொண்டிருந்த, “2 ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு, தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. அவரது அருமை மகள் கனிமொழி, கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதுவரை, சாதிக் பாட்ஷா, ராஜா, அவரது சகோதரர் என தி.மு.க., சுற்றுவட்டாரங்களையே சுற்றிவந்த சி.பி.ஐ., இம்முறை, அக்கட்சித் தலைவரின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. நேரடியாக குற்ற வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் கனிமொழி. இப்போது என்ன செய்யப்போகிறது தி.மு.க.,? இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், இப்பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அப்படி என்ன முக்கிய முடிவு? என்னுடைய பார்வையில், “கழக எம்.பி., கனிமொழி மீது சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை, சட்டத்தின் துணையோடு சந்திப்போம்’ என்பதைத் தவிர, வேறெந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். “இதற்கு மேல் கருணாநிதி பொறுக்க மாட்டார். நிச்சயம் பொங்கியெழுந்துவிடுவார். அமைச்சரவையிலிருந்து விலகுவார். ஆதரவையாவது வாபஸ் பெறுவார்’ என்றெல்லாம், சில நப்பாசைக்காரர்கள் தப்பாசைப்படுவார்கள். ஆனால், அது நடக்கப்போவதில்லை. காரணம் என்னவென்று விளக்குகிறேன்.

கடந்த 2009ல் இவர்கள் கேட்ட எண்ணிக்கையில் அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை; கேட்ட துறைகளும் கிடைக்கவில்லை. “இவ்வளவு தான்; அதுவும், இன்னின்ன துறைகள் தான்’ என காங்கிரஸ் தரப்பில் ஒரு பார்முலா அறிமுகப்படுத்தப்பட்டது. அதிர்ந்த தலைவர், “ஆட்சியில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்’ என ரோசத்தோடு சென்னை திரும்பினார். தி.மு.க., இல்லாமலேயே மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கருணாநிதி அதையும் தாங்கினார்.

“முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில், மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ராஜாவின் அலுவலகத்துக்குள் சி.பி.ஐ., புகுந்தது தான் தாமதம், அடுத்த நாளே, கேரளா அரசைக் கண்டித்து என அந்தப் போராட்டம் மாற்றப்பட்டது. இறுதியில், போராட்டமே கைவிடப்பட்டது. கருணாநிதி அதையும் தாங்கினார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நூறு முறை தமிழகம் வந்துவிட்டார். ஒரு முறை கூட முதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அதுபற்றி கேள்வி எழுப்பின. கருணாநிதி அதையும் தாங்கினார்.

ராஜா கைது செய்யப்பட்டார். அப்போது கூடிய தி.மு.க., பொதுக்குழு, “சட்டப்படி எதிர்கொள்வோம்’ என சம்பிரதாயத்துக்கு ஒரு தீர்மானம் போட்டு முடித்துக்கொண்டது. தி.மு.க., சார்பில் அவருக்கு ஜாமீன் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. 85 நாட்களுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கிறார். “தலித் என்பதால் தான் ராஜா கட்டம் கட்டப்படுகிறார்’ என கவலைப்பட்ட கருணாநிதி, அதையும் தாங்கினார்.

சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், “63 சீட் வேண்டும்; அதுவும், நாங்கள் கேட்கிற தொகுதி தான் வேண்டும்’ என, இதுவரை எந்தக் கூட்டணியிலும், எந்தக் கட்சியும் விதித்திராத நிபந்தனையை காங்கிரஸ் விதித்தது. “இது நியாயமா?’ என பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட கருணாநிதி, “தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜினாமா’ என அறிவித்தார். யாரும் கெஞ்சாமலேயே, ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டார். அனைத்து ஊடகங்களும் கேலி செய்தன. அதையும் தாங்கினார் கருணாநிதி.

தமிழக சட்டசபைத் தேர்தலில், வரலாறு காணாத அளவு கெடுபிடியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நான் முந்தைய பதிவிலேயே சொன்ன மாதிரி, காங்கிரசின் கண்ணசைவு இல்லாமல், இவ்வளவு கெடுபிடி சாத்தியமில்லை. கருணாநிதியும் உணர்ந்திருந்ததால் தான் அதை, “எமர்ஜென்சி’யோடு ஒப்பிட்டார். அந்த அளவுக்கு தி.மு.க.,வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது தேர்தல் கமிஷன். அதையும் தாங்கினார் கருணாநிதி.
இரண்டு நாட்கள் முன்பு கூட தலைமைச் செயலத்தில் ஒரு பெண் நிருபர், “கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்தால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவீர்களா?’ எனக் கேட்க, “ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, இப்படி இதயத்தை தூக்கியெறிந்துவிட்டு கேள்வி கேட்கலாமா’ என, பதில் கேள்வி கேட்டார். இதற்கு என்ன அர்த்தம்? மேற்சொன்ன அத்தனையையும் தாங்கிய முதல்வர் கருணாநிதி, கனிமொழி மீதான குற்றப்பத்திரிகையையும், ஒருவேளை அவர் கைதானால், அதையும் கூட தாங்குவார் என்பது தான், அதன் அர்த்தம். ஏனெனில், அவருடையது, எதையும் தாங்கும் இதயம்.

நன்றி-தினமலர்

ஓ.எஸ் – ஓஹோ! எஸ்

சொற்களை நாம் அப்படியே தமிழில் எழுதி, கேட்டு பயன்படுத்துகிறோம். சிலவற்றின் பொருள் நம்முடைய அனுபவத்தில் நமக்குப் புரிகிறது. சில தொழில் நுட்பச் சொற்களை, அதன் பொருள் முழுமையாகப் புரியாமல், பயன்படுத்தி வருகிறோம். இங்கு அடிக்கடி நாம் படிக்கும் அல்லது கேட்கும் சொற்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
1. Abort (அபார்ட்): ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம். எடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது.
2. Batch File (பேட்ச் பைல்): வரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளை கள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர்.
3. BIOS (பயாஸ்): இதனை பை-ஓ.எஸ். என அழைக்க வேண்டும். ஆனால் பயாஸ் என அழைக்கப்படுவதே பழக்கமாகி விட்டது. டிஸ்க்கில் உள்ள எந்த புரோகிராமோடும் தொடர்பு கொள்ளாமல், ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப் பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும்.
இந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து தரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROM–லிருந்து RAM–க்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம்.
இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப் பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப் படுகிறது. BIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப் படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர்.
4. Blue Screen of Death (புளு ஸ்கிரீன் ஆப் டெத்) : விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில், சிஸ்டத்தின் அப்போதைய செயல் பாட்டினை நிறுத்தும் ஒரு பிழை. இந்த பிழை ஏற்படுவதை, ஒரு செய்தியாக விண்டோஸ் காட்டும். அப்போது திரையின் நிறம் ஊதாவாக மாறும். எனவே தான் இதனை புளு ஸ்கிரீன் ஆப் டெத் என வேடிக்கையாகக் கூறுகின் றனர். பெரும்பாலும், மீண்டும் விண்டோஸ் இயக்கத்தை ரீ பூட் செய்தால் தான், பிரச்னை தீர்க்கப்பட்டு, இயக்கம் செயல்பாட்டிற்கு வரும்.
5. Boot (பூட்): இந்த செயல், கம்ப்யூட்டர் இயங்குவதற்குத் தேவையான, முதல் சாப்ட்வேரை இயக்குவதனைக் குறிக்கிறது. அனைத்து புரோகிராம் களையும் இயக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓர் அவசிய, அடிப்படைத் தேவை என்பதால், பூட்டிங் செயல்பாட்டில், முதலில் இயக்கப்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே.
ஏன் பூட் எனப் பெயர் வந்தது? இது bootstrap என்ற சொல்லின் சுருக்கம். அந்தக் காலத்தில், பூட்ஸ் அணிய முதலில் அதில் மேலாக உள்ள ஸ்ட்ராப் ஒன்றை இழுக்க வேண்டும். பின்னரே, அதனை அணிய முடியும். அதே போல, பூட் ஸ்ட்ராப் புரோகிராம்களை இயக்கிக் கம்ப்யூட்டரைச் செயல்பட வைக்கிறோம். இதில் cold boot என்பது, இயங்கா (off) நிலையில் உள்ள கம்ப்யூட்டரை இயங்க வைப்பதாகும். ஏற்கனவே இயக்கத்தில் உள்ள கம்ப்யூட்டரை மீண்டும் இயங்க வைப்பது, warm boot ஆகும்.
6. Clean boot (கிளீன் பூட்): மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புரோகிராம்களுடன், ஒரு கம்ப்யூட்டரை இயக்குவதற்கு இடூஞுச்ண ஞணிணிt என்று பெயர். கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகையில், இயக்குபவருக்கான, கம்ப்யூட்டிங் சூழ்நிலையை உருவாக்க, பல பைல்களும், புரோகிராம்களும், ட்ரைவிலிருந்து எடுக்கப்பட்டு, இயக்கப்படும். செய்யப்படுகையில், இந்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தும் இல்லாமல், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானவை மட்டும் இயக்கப்படும்.
இவ்வாறு இயக்குவது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை அறிய உதவும். இவ்வாறு இயக்கியபின், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனையில், வழக்கமாக கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான ஓட்டத்தில் எங்கே பிரச்னை உள்ளது என அறியலாம்.
7. Driver (ட்ரைவர்): சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தும் புரோகி ராமினை ட்ரைவர் என அழைக்கிறோம். கார், லாரி, பஸ் ஓட்டுபவரை அப்படித் தானே கூப்பிடுகிறோம். பிரிண்டர், டிஸ்க் ட்ரைவ் அல்லது கீ போர்ட் என அந்தச் சாதனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக ட்ரைவர் புரோகிராம்கள் பெரும்பாலும், (கீ போர்டு போல) ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனே தரப்படும். இல்லாதவை, அந்த சாதனத்துடன் தரப்படும். அதனை சிஸ்டத்துடன் இணைக்க வேண்டும். டாஸ் இயக்கத்தில், ட்ரைவர் பைல்கள் .SYS என்ற துணைப் பெயருடன் இருந்தன. விண்டோஸ் இயக்கத்தில் .DRV என்ற துணைப் பெயரைக் கொண்டுள்ளன.
ஒரு சாதனத்திற்கும், அந்த சாதனத்தைப் பயன்படுத்தும் புரோகிராம் களுக்கும் இடையே, ஒரு மொழி பெயர்ப்பாளரைப் போல, ட்ரைவர்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு சாதனமும், தனக்கென, ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட கட்டளைச் சொற்களைக் கொண்டிருக்கும். இதன் ட்ரைவர் புரோகிராம்கள் தான் இவற்றைப் புரிந்து இயக்க முடியும்; அல்லது எடுத்துச் சொல்ல முடியும். பல புரோகிராம்கள், இந்த சாதனங்களை பொதுவான கட்டளைகள் மூலமே அணுகும். ஆனால், சாதனங்கள் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால், இந்த ட்ரைவர் புரோகிராம்கள் அவற்றை ஏற்று, சாதனத்திற்கேற்ற ஸ்பெஷல் கட்டளைகளாக மாற்றுகின்றன.

சென்னை மற்றும் புறநகரில் 24 மணி நேரமும் காஸ் சிலிண்டர் பதிவு செய்ய புதிய வசதி

“இண்டேன் எல்.பி.ஜி.,’ வாடிக்கையாளர்கள் புதிய சிலிண்டர் பெற, 24 மணி நேரமும் பதிவு செய்து கொள்வதற்கான புதிய வசதியை, இந்தியன் ஆயில் நிறுவனம் துவக்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 18 லட்சம், “இண்டேன் எல்.பி.ஜி.,’ வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள், தங்களுக்கு தேவையான சிலிண்டர்களை பெற, அந்தந்த முகவர்களின் அலுவலகங்களை, காலை முதல் மாலை வரை நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பதிவு செய்து வருகின்றனர். இதை மேம்படுத்தி, 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய சிலிண்டர் தேவையை இனி, “81240 24365′ என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். முதல் முறை தொடர்பு கொள்ளும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை அளிக்க வேண்டும். “எஸ்.எம்.எஸ்.,’ சேவையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். “ரீபிள்’ என்ற வார்த்தையை ஆங்கிலத்தில், “டைப்’ செய்து அனுப்பினால் சிலிண்டர் வீட்டிற்கு வரும். சென்னையில் உள்ள 110 இண்டேன் முகவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவன் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஸ்வரன் சிங், இந்த புதிய வசதியை துவக்கி வைத்தார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் டி.எஸ்.எல். பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கலைஞர் “டிவி’க்கு வந்த பணமும், கனிமொழி தொடர்பும்…

“2 ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், வேண்டிய நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதற்கு பலனாக, கலைஞர் “டிவி’க்கு லஞ்சமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், சி.பி.ஐ., விசாரணை தீவிரமடைந்ததையடுத்து, அந்த பணம், எந்த வழியாக வந்ததோ, அதே வழியில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் தெளிவுபடுத்தியுள்ளது. இதில், கனிமொழியின் தொடர்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் தான், அவர் தற்போது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருக்கிறார்.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திற்கும், கலைஞர் “டிவி’க்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றத்தில், முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி மற்றும் கலைஞர் “டிவி’யின் தொடர்பு குறித்து, இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லஞ்சமாகப் பெற்ற பணம் என்றும், இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.டைனமிக்ஸ் ரியாலிட்டி மற்றும் டி.பி.ரியாலிட்டி ஆகிய நிறுவனங்கள் பல்வாவுடைது. இங்கிருந்து, குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் பி., நிறுவனத்திற்கு பணம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து சினியுக் நிறுவனம் வழியாக கலைஞர் “டிவி’க்கு சென்றுள்ளது.மூன்றடுக்காக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த பணப் பரிமாற்றம், 2008, டிச., 23ம் தேதி துவங்கி, 2009, ஆக., 7ம் தேதி வரை நடந்துள்ளது.

டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து, 16 தவணைகளில் குசேகான் நிறுவனத்திற்கு பணம் சென்றடைந்திருக்கிறது. அதில், அதிகபட்சமாக ஒரே நாளில் (2009, ஜூலை 15ம் தேதி) குசேகான் பழ நிறுவனத்திற்கு, 100 கோடி ரூபாய் சென்றடைந்திருக்கிறது என்பதும் இதில் அடங்கும்.குசேகானிலிருந்து, சினியுக் நிறுவனத்திற்கு, 12 தவணைகளில் பணம் வந்துள்ளது. சினியுக் நிறுவனத்திடமிருந்து, ஆறு தவணைகளில் கலைஞர் “டிவி’க்கு, 200 கோடி ரூபாய் வந்துள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சி.பி.ஐ., தீவிரமாக விசாரிக்க துவங்கியதை தொடர்ந்து, கடந்தாண்டு டிச., 24ம் தேதி, கலைஞர் “டிவி’ 200 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளது. அந்த தேதியில் தான் முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.கடனாக வாங்கினோம், அதை வட்டியுடன் திரும்பி செலுத்திவிட்டோம் என, சி.பி.ஐ., விசாரணையின் போது கலைஞர் “டிவி’ இயக்குனர் சரத்குமார் தெரிவித்திருந்தார். இதன்படி, 200 கோடிக்கான வட்டி தொகையை, இந்தாண்டு, பிப்., 2ம் தேதி கலைஞர் “டிவி’ திருப்பி செலுத்தியது. அன்றைய தினம் தான், ராஜாவை சி.பி.ஐ., கைது செய்தது.இந்த விவரங்கள், கலைஞர் “டிவி’யின் ஆண்டு வரவு-செலவு கணக்கை சி.பி.ஐ., ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.

சினியுக் நிறுவனம், கலைஞர் “டிவி’க்கு ஆறு தவணைகளில், 200 கோடியை வழங்கியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:ரூ.10 கோடி(டிச., 28, 2008), ரூ.10 கோடி( ஜன., 2, 2009), ரூ.5 கோடி(மார்ச் 20, 2009) ரூ.25 கோடி(ஏப்., 6. 2009), ரூ.100 கோடி(ஜூலை 7, 2009), ரூ.50 கோடி (ஆக., 8, 2009).மூன்றடுக்கு பணிப் பரிமாற்றத்தில், பெரும்பாலான பரிமாற்றம் ஒரே தேதியில் நடந்துள்ளது. கலைஞர் “டிவி’ பணத்தை திருப்பி செலுத்தியதும், மேற்கண்ட சினியுக், குசேகான் நிறுவனங்கள் வழியாக டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தை அடைந்துள்ளது.இது முறையான பணம் அல்ல, சுவான் டெலிகாமுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தந்ததற்கு தவறான வழியில் கையூட்டாகக் கொடுக்கப்பட்ட பணம் என்பதும் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல் ஆகும். மேலும் இப்பணம் கலைஞர் “டிவி’க்கு குறைந்த வட்டியான, 7.5 சதவீதத்தில் தரப்பட்டிருக்கிறது. அதே சமயம், கலைஞர் “டிவி’ இந்தியன் வங்கியிடம் இருந்து, 13.25 சதவீத வட்டிக்கு நிதியைப் பெற்ற தகவலையும் சி.பி.ஐ., சேகரித்தது. சுற்றுவழியில், 200 கோடி, கடனாக கலைஞர் “டிவி’க்கு வந்த பணத்தைத் தந்த இந்த கம்பெனி எதுவும் வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் அல்ல என்றும், சி.பி.ஐ., தன் குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருக்கிறது. மேலும், கலைஞர் “டிவி’யை இயக்கியதில், “முக்கிய மூளையாக’ கனிமொழி இருந்திருக்கிறார் என்பது சி.பி.ஐ ., குற்றப்பத்திரிகையில் உள்ள வாசகம். அதனால் தான் முறைகேடாக லஞ்சப்பணம் பெறக் காரணமாக இருந்ததாகக் கூறி லஞ்சத்தடுப்புச்சட்டம் பிரிவு 7 ன் ( இந்திய தண்டனைச் சட்டம் 120 பி) கீழ் கனிமொழி மீது குற்றம் சாட்டி சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது.

நன்றி-தினமலர்

சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; பொதுமக்கள் அஞ்சலி தொடர்கிறது

கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 24ம் தேதி) பகவான் சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது உடல் இன்று காலையில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சாய்பாபாவின் இறுதிச் சடங்குகள் புட்டபர்த்தி குல்வந்த மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக அவரது உடலுக்கு, தேசியக் கொடி போர்த்தப்பட்டு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ஆந்திர அரசு மரியாதை அளிக்கப்பட்டது. புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஐந்து நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சாய்பாபாவின் உடல் மீது தெளிக்கப்பட்டது. கோ தானம் ( பசு தானம்) அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தானங்கள் அளிக்கப்பட்டது. முன்னதாக சர்வ சமய பிரார்த்தனையும் நடந்தது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சாய்பாபா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்‌த்தியில் குவிந்துள்ளனர்.

பொதுமக்கள் குல்வந்த் மண்டபத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். உலகெங்கும் உள்ள சாய்பாபாவின் பக்தர்கள் வசதிக்காக இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தினமலர் இணையதளத்தில் நேரிடையாக ஒளிபரப்பியது.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் புட்டபர்த்தியில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.சாய்பாபா, கடந்த 24ம் தேதி காலை புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை தரிசிக்க பொதுமக்கள் நேற்று நள்ளிரவு வரை அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள், பாபா உடலை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர், தனி விமானம் மூலம் புட்டபர்த்திக்கு நேற்று வந்தனர். ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர், பிரதமரையும், சோனியாவையும் வரவேற்று பிரசாந்தி நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரதமரும், சோனியாவும், பாபாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷே, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பலரும் பாபாவுக்கு நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மாண்டியாவில் மறுபிறப்பு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி, தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது அமைப்பின் சார்பில் சத்தியோஜதா சுவாமிகள், சாய்பாபாவுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். ரவிசங்கர்ஜி, ஜெர்மனியிலிருந்து விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடுகையில், “சாய்பாபா, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மறுபிறப்பு எடுப்பார். 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவாழ்வில் அவர் ஈடுபடுவார்’ என்றார்.

நன்றி-தினமலர்

ஆஸ்திரேலியாவில் உருவாகும் உலகின் மிக பெரிய தொலைநோக்கி மெகல்லன்


ஆஸ்திரேலிய நாட்டின் கேன்பெரா நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் உலகின் மிக பெரிய தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹப்பிள் தொலைநோக்கியை காட்டிலும் 10 மடங்கு துல்லியமாக படங்களை காட்டும் திறன் பெற்ற இதற்கு மெகல்லன் என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், விண்வெளியில் உள்ள எந்த ஒரு பொருளையும் பற்றி ஆராய்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்கும். ஏறத்தாழ 700 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாராகும் இத்தொலைநோக்கி பற்றி ரிசர்ச் ஸ்கூல் ஆப் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸின் இயக்குநரான ஹார்வே பட்சர் என்பவர் கூறும்போது, “புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகும் மெகல்லன், விண்வெளியின் பல அரிய விசயங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும். மேலும், 6 அல்லது 7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பால்வெளிவீதி எவ்வாறு இருந்தது என்பதை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்” என்று கூறினார். வரும் 2018 ஆம் ஆண்டில் இந்த தொலைநோக்கி முழு வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மை நோய்…

சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.

இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சித்த மருத்துவத்தில் இந்நோயை வைசூரி என்று குறிப்பிடுகின்றனர். முன்பு பெரியம்மையை வைசூரி என்றே அழைத்தனர். அது உயிர்க் கொல்லி நோயாக இருந்தது. தற்போது இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மற்ற பிற அம்மை நோய்கள் தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அவற்றில் சில

1. சின்னம்மை (Chikenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.
நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

தடுப்பு மருந்து

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

தட்டம்மை

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் – காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

புட்டாளம்மை

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

உமியம்மை

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி

MMகீ என்ற நோய் தடுப்பு மருந்து (ஙச்ஞிஞிடிணஞு) குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சித்த மருத்துவத்தின் பங்கு

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

கூகுளின் கால்குலேட்டர்

பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும். ஆனால் கூகுள் சர்ச் இஞ்சினில் அதன் சர்ச் பாக்ஸினை கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். அரித் மேடிக் பங்சன், டிரிக்னோமெட்ரிக், ஹைபர்போலிக் மற்றும் லாக்ரிதம் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். அளவுகளை மாற்றிக் காணும் வசதியும் இதில் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டு பார்க்கலாம். சர்ச் பாக்ஸில் 100+500-10 என்று கொடுத்து சர்ச் பட்டனை அழுத்தினால் அதற்கான விடை கிடைக்கும். 100ன் லாகிர்தம் வேல்யூ கண்டுபிடிக்க log (100) என டைப் செய்திடலாம். அதே போல cos வேல்யு கண்டுபிடிக்க cos (90) என டைப் செய்து மதிப்பினைப் பெறலாம். கரன்சி மாற்றங்கள், அளவு மாற்றங்கள் ஆகியவை யும் கணக்கிட்டு காட்டப்படுகின்றன. 100 USD in Indian Rupee எனக் கொடுத்தால் அன்றைய கணக்கின்படி இந்திய ரூபாய் மதிப்பு தரப்படும்.

அஞ்சாத நெஞ்சம்!-ஏப்., 28 – திருநாவுக்கரசர் குருபூஜை!

பயமில்லாதவன் யார் என்றால், ஆன்மிகவாதி தான் என்பதற்கு, உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்…’ என்ற தேவாரப் பாடல் ஒலிக்காத நெஞ்சங்களே இல்லை. இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் இவர். இறைவனை மனதில் நிறுத்தியவன், எமனுக்கு கூட அஞ்ச மாட்டான் என்று அறிவித்தவர். அவரது குருபூஜை, சித்திரை சதய நட்சத்திரத்தில் நடத்தப்படும்.
விழுப்புரம் அருகிலுள்ள திருவாமூரில் வசித்த தீவிர சிவபக்தரான புகழனார் – மாதினியார் தம்பதிக்கு, திலகவதி என்ற மகளும், மருள்நீக்கி என்ற மகனும் பிறந்தனர். இருவருக்கும் வயது இடைவெளி அதிகம்; இதனால், தம்பியை, பிள்ளை போல கருதினார் திலகவதி.
திலகவதிக்கும், அந்நாட்டு படைத் தலைவர் கலிப்பகை யாருக்கும் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நடந்த போரில், அவர் கொல்லப்பட்டார். திலகவதியின் தந்தையும், தாயும் இந்த கவலையிலேயே இறந்து விட்டனர். துக்கம் தாளாத திலகவதியும் இறக்க முடிவெடுத் தார். தனிமையில் விடப்பட்ட மருள்நீக்கி, தனக்காக வாழும்படி சகோதரியிடம் கெஞ்சினார். அதனால், மனம் மாறி, இனி, வேறு யாரையும் மணப்பதில்லை என்ற உறுதியுடன், தம்பியை வளர்த்து வந்தார் திலகவதி.
மருள்நீக்கி சிறப்பாக படித்தார். மதப்பூசல் அதிகமாக இருந்த அந்த நேரத்தில், நாடாண்ட மகேந்திர பல்லவன், மக்களை சமண மதத்தைக் கடைபிடிக்க உத்தரவிட்டான். சமணர்கள் மந்திர, தந்திரங்களில் வல்லவர்கள். மருள்நீக்கியின் கல்வியறிவைக் கேள்விப்பட்டனர். அவரது புத்திசாலித்தனம், சமணத்தை வளர்க்க உதவும் என நம்பினர். தங்கள் மதத்தின் சிறப்பை எடுத்துக் கூறினர். மருள்நீக்கியும் சமணத்தில் இணைந்து, “தேவசேனன்’ என்று பெயர் மாற்றிக் கொண்டார். சைவத்தில் இருந்து சமணத்துக்கு மாறியதை, திலகவதி ஒப்புக் கொள்ள மறுத்தார்.
தம்பியை மீண்டும் சைவத்துக்கு மாற்ற அவர் எடுத்த முயற்சி, பலன் அளிக்கவில்லை. இதனால், அவர் தம்பியை விட்டு, அருகிலுள்ள ஊருக்கு போய் விட்டார். சிவனை எண்ணி உள்ளமுருகி பாடி, தன் தம்பி மீண்டும் சைவம் திரும்ப வேண்டினார். ஒருநாள், சிவன், அவரது கனவில் தோன்றி, “<உன் தம்பிக்கு கடும் வயிற்றுவலியைக் கொடுத்து, சைவத்திற்கு திரும்பச் செய்வேன்…’ என உறுதியளித்தார்.
அதன்படி, தேவசேனனுக்கு வலி ஏற்பட, சமணர்கள் செய்த மந்திர சிகிச்சை பலன் தரவில்லை. வலி தாளாமல் சகோதரியை தேடி ஓடினார். அவரை, சிவாலயத்துக்கு அழைத்துச் சென்றார் திலகவதி. கோவிலுக்குள் நுழைந்ததுமே வலி நீங்கியது; உடனே, பல பாடல்களைப் பாடினார். சைவத்துக்கு மாறி, பழைய பெயரையே வைத்துக் கொண்டார்.
இதையறிந்து, மன்னரிடம் முறையிட்டனர் சமணர்கள். “தேவசேனன் வயிற்றுவலி வந்தது போலவும், எங்கள் மந்திரங்களால் குணமாகாதது போலவும், சிவன் கோவிலுக்கு சென்றதும் குணமாகி விட்டது போலவும் நாடகமாடுகிறான். சைவ மதமே சிறந்தது என்று காட்ட முயற்சிக்கிறான்…’ என்று புகார் கூறினர்.
அவரை அழைத்து வர உத்தரவிட்டான் மன்னர்.
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்…’ என்ற பாடலைப் பாடி, “நான் உங்கள் அரசனுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. சிவனுக்கு மட்டுமே அடிமை; அங்கு வர முடியாது. இதனால், எனக்கு மரணதண்டனை தந்தாலும் பரவாயில்லை…’ என்ற ரீதியில் பாடல் அமைந்தது. கோபமடைந்த அரசன், நேரில் வந்து, அவரை சுண்ணாம்பு காளவாசலில் வைத்து கொல்ல முயன்றான்; காளவாசல் குளிர்ந்து விட்டது. விஷம் கொடுத்தான்; அதுவும், அவரைக் கொல்லவில்லை. கல்லைக் கட்டி கடலில் வீசினான்; அவர் மூழ்கவில்லை. மன்னரே பயந்து போனார். அதன்பின், மன்னரும் சைவத்தை தழுவினான்.
இவரது இனிய பாடல்களால், “நாவுக்கரசர்’ என்ற பெயர் இவருக்கு அமைந்தது.
தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூர் அப்பூதி அடிகள், நாவுக்கரசரின் புகழைப் கேள்விப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு பெரிய திருநாவுக்கரசு, சின்ன திருநாவுக்கரசு என்று பெயரிட்டார். மூத்தவனை பாம்பு கடித்த போது, அவனை பிழைக்க வைத்தார் நாவுக்கரசர்.
திருநாவுக்கரசரின் தேவாரம் படித்து, அஞ்சாநெஞ்சம் பெறுவோம்..