தாம்பத்ய வாழ்க்கையில் மனிதனை விட சிறந்த சிம்பன்சிகள்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத் திலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவின் தலைமை ஆராய்ச்சியாளர் டேவிட் கிங்ஸ்லி. இவரது தலைமையிலான குழு ஒன்று மரபணுவில் காணப்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நமது மூதாதையர்கள் மற்றும் நியாண்டர்தால் இனத்தை சேர்ந்தவர்களின் 37,251 மரபணு தொடர்கள் காலப்போக்கில் அழிந்து போயுள்ளன என கண்டறிந்துள்ளனர். அதனால் தற்போதுள்ள மனிதர்களின் உடற்கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏறக்குறைய 510 மரபணு தொடர்கள் முற்றிலும் அழிந்து விட்டதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் பல நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த மரபணுக்கள் மறைவினால் மனிதர்களின் மூளை பகுதிகள் விரிவடைந்து நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.

இந்த மரபணுக்கள் மறைவின் மற்றொரு விளைவாக மனிதர்களின் இனப்பெருக்க உறுப்பில் உள்ள முள்ளெலும்பு போன்ற உறுப்பு ஒன்று மறைந்து போயுள்ளது. ஆனால் இந்த முள்ளெலும்பு உறுப்பு சிம்பன்சியின் ஆண் இனப்பெருக்க உறுப்பில் தற்போதும் காணப்படுகிறது. இந்த உறுப்பு இனப்பெருக்க நேரத்தில் சில சமயங்களில் பெண் சிம்பன்சிக்கு காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பெண் சிம்பன்சிகளிடம் இனப்பெருக்கம் பற்றிய தூண்டுதல் அதிகம் காணப்படுவதில்லை. மேலும் குறிப்பிட்ட ஆண் சிம்பன்சி தவிர்த்து வேறு சிம்பன்சிகளிடம் இனப்பெருக்கம் என்பது அறவே தவிர்க்கப்படுகிறது. இதனால் சிம்பன்சிகளில் கள்ளக்காதல் என்பது அரிதாக காணப்படுகிறது.

%d bloggers like this: