Daily Archives: மே 3rd, 2011

நாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச ஆய்வில் தகவல்

“இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், “உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.இந்தியாவிற்கு 700 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை 2030ம் ஆண்டில், மக்கள் தொகை அதிகரிப்பால், இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும். அதேபோல், தண்ணீர் தேவையும், இருமடங்கு, அதாவது 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டர்களாக இருக்கும். தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்’ என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் கோலின் சார்டிரஸ் கூறுகையில், “தற்போதைய நிலை நீடித்தால், மத்திய கிழக்கு நாடுகளை போல, தண்ணீர் நெருக்கடி நாடாக இந்தியா உருவெடுக்கும். பெரும்பாலான தண்ணீர் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும். தண்ணீர் இறக்குமதிக்கு பதில், இந்தியா உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியது ஏற்படும். உலகளவில் மக்கள் தொகை 250 கோடி அதிகரிக்கும் போது, உணவு இறக்குமதியும் எளிதானது அல்ல. தற்போது இருப்பதை விட, அதிக வெப்பம், குறைந்த தண்ணீர் என்ற நிலைமை உலகளவில் நிலவும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலத்தடி நீர் ஏற்கனவே கீழே போய்விட்டது. இந்தியா அதிகளவில் விவசாயத்தை நம்பி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, பெரிய அளவில், விவசாய உற்பத்தியை பாதிக்கும். நாட்டின், வடக்கில் ஏற்கனவே விவசாயிகள் அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்திவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.”இந்தியாவின் தண்ணீர் தேவை தற்போது 634 மில்லியன் கியூபிக் லிட்டராக உள்ளது. இது, 1,123 மில்லியன் கியூபிக் லிட்டராக அதிகரிக்கும்’ என்று மத்திய நீர்வள கமிஷன் கணித்துள்ளது.

“இந்தியாவின் தண்ணீர் தேவை 2025ல், 1,093 மில்லியன் கியூபிக் லிட்டராக இருக்கும்’ என்று நிர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி, மதிப்பீடுகள் வித்தியாசப்பட்டாலும், தண்ணீர் பற்றாக்குறை நாட்டை அச்சுறுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.எனவே, நாட்டில் கிடைக்கும் தண்ணீர் வரத்து குறித்து ஆய்வு நடத்த, முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினர் ஏ. வைத்தியநாதன் தலைமையில் ஒரு குழுவை மத்திய திட்ட கமிஷன் அமைக்க உள்ளது. இவர்கள் நாட்டின் தண்ணீர் ஆதாரத்திற்கான மூலம் மற்றும் குளம், குட்டை, ஏரி, அணை, ஆறு ஆகியவை குறித்து, மதிப்பீடு செய்து, அறிக்கை தயாரிப்பார்கள். “நாட்டின் விவசாயத்திற்கு 80 சதவீத தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, கிராமங்களில் தண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரேஷனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது, இதற்கு கட்டணம் விதிப்பது என்று திட்ட குழு ஆலோசனை வழங்கி உள்ளது.

கடந்த மாதம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், திட்ட கமிஷன் உறுப்பினர் மிகிர் ஷா தண்ணீர் மேலாண்மை தொடர்பான அறிக்கை சமர்பித்தார். அதில், ஆந்திரபிரதேசம் உள்பட மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில், தண்ணீர் மேலாண்மை ஆலோசனை எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஆந்திராவில், விவசாயிகள் குழு அமைத்து, கிடைக்கும் தண்ணீரை இவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. இத்திட்டம், அம்மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் தண்ணீர் பயன்படுத்துவது குறைந்து, பற்றாக்குறையும் குறைந்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில், இதேபோன்ற திட்டத்தை கொண்டு வர, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு திட்ட கமிஷன் ஆலோசனை வழங்கலாம்.

“இந்தியாவின் தட்பவெப்பம் ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும்’ என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிகளவில் தண்ணீர் சேமிப்பு செய்ய வேண்டும். மழை நீர் சேமிப்பிற்கு, இந்தியா, அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். குளம், ஏரி, அணை போன்வற்றை அதிகளவில் ஏற்படுத்தி நீர்வள ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாய நிலங்களை ஒட்டி குளம், ஏரி ஏற்படுத்துவது பயனளிப்பதாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

அழகு தரும் ஆபரேஷன்கள்

லகம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஆபரேஷன் என்றாலே அலர்ஜி போல எண்ணி பதறித் துடிப்பார்கள். இன்றோ வியாதிக்காக அல்லாமல் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கே ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள்.

உலகில் அதி நவீனமானதும், அதிகம் பேர் செய்து கொள்வதுமான 10 ஆபரேஷன்களை அறிந்து கொள்ளலாம்.

1. லிப்போசக்சன்:- அதிகப்படியான கொழுப்புகளை நீக்கும் ஆபரேஷன் `லிப்போசக்சன்’ எனப்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் மருந்து மாத்திரைகளால் சரிப்படுத்த முடியாத அளவுக்கு கொழுப்பு படிந்தவர்களுக்கான ஆபரேஷன் இது. உடல் பருத்து, கழுத்து மற்றும் கன்னம் உப்பிப்போய் உருண்டை வடிவமாய் காணப்படுபவர்கள் `லிப்போசக்சன் ஆபரேஷன்’ செய்து கொள்கிறார்கள்.

2. பிரெஸ்ட் இம்பிளான்ட்ஸ்:- பெண்களுக்கான பிரத்யேக ஆபரேஷன் இது. மார்பகத்தின் அளவை பெரிதாக்கிக் கொள்வதற்கு செய்யப்படுகிறது. நிறைய பெண்கள் பெரிய அளவிலான மார்பகங்களை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு இந்த ஆபரேஷன் உதவுகிறது. ஆபரேஷனின்போது, சாலின் எனப்படும் உப்புக்கலவை ஜெல் அல்லது சிலிகான் ஜெல் கலவையை மார்பகத்தில் வைத்து தைத்துவிடுகிறார்கள். இது பெண்களுக்கு தூக்கலான மார்பக தோற்றத்தை தருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆபரேஷன் செய்து கொள்ளும் பெண்கள் வேகமாக அதிகரித்து வருகிறார்கள்.

3. காஸ்மெடிக் ஐ சர்ஜரி:-கண்கள்தான் முகத்தில் ஈர்ப்பான பகுதி. கண்களைச் சுற்றி தோல் சுருக்கங்கள் இருந்தால் அழகு குறைந்து வயதான தோற்றம் வந்து விடும். வயதானவர் போன்ற தோற்றத்தை தரும் இந்த பாதிப்பை சரி செய்வதற்கு ஆபரேஷனை செய்து விடுகிறார்கள். இதுபோன்ற பாதிப்புகள் ஒருசிலருக்குத்தான் இருக்கும் என்றாலும், அவர்களின் கவலையைப் போக்கி அழகாக்கிவிடுகிறது இந்த ஆபரேஷன்.

4. டம்மி டக்ஸ்:- பிரசவ காலத்திற்கு பிறகு பல பெண்கள் உருமாறிப் போவார்கள். திடீர் உடல் எடை இழப்பை மாற்றி அழகுபடுத்துவதற்கான ஆபரேஷன்தான் டம்மி டக்ஸ். வசதியான பெண்கள் இந்த ஆபரேஷனை செய்து கொள்கிறார்கள்.

5. பிரெஸ்ட் ரெடிக்சன்:- பெண்கள் மார்பக அழகை பெரிதும் விரும்புகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தேவைக்கு அதிகமாக ஆகாரம் சாப்பிடும் பழக்கம் இக்காலத்தில் மிகுந்துள்ளது. இதனால் சில பெண்கள் பெரிய மார்பகங்களைப் பெற்று விடுவதுண்டு. சிலருக்கு மார்பகம் வயதுக்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டிருக்கும். இப்படி அளவில் பெரிய மார்பை, சிறிதாக்கி அழகானதாக மாற்றிக் கொள்வதற்கு செய்யப்படும் ஆபரேஷன் `பிரெஸ்ட் ரெடிக்சன்’ எனப்படுகிறது.

6. ரினோபிளாஸ்டி:- மூக்கை அழகுபடுத்திக் கொள்ளும் ஆபரேஷன் ரினோபிளாஸ்டி. முகத்திற்கு பொருத்தமான மூக்கு அமைவது தான்அழகு. சிலருக்கு மூக்கு தட்டையாகவும், புடைப்பாகவும் காணப்படும். அவர்கள் ரினோபிளாஸ்டி ஆபரேஷன் செய்தால் அழகான மூக்கைப் பெறலாம். ஆண்- பெண் இருபாலரும் பரவலாக இந்த ஆபரேஷன்களை செய்து கொள்கிறார்கள்.

7. பேஸ் லிப்ட்:- முக அழகை அதிகரித்துக் கொள்ளச் செய்யும் ஆபரேஷன் பேஸ் லிப்ட். முகத்தில் தோல் சுருக்கம், பரு, மேடு பள்ளங்கள் போன்றிருக்கும் குறைகளை இந்த ஆபரேஷன் மூலம் சரி செய்கிறார்கள்.

8. பிரெஸ்ட் லிப்ட்:- மார்பழகிற்காக அதிகமாக செய்யப்படும் சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்று. சிறந்த 10 அறுவை சிகிச்சைகளில் 3 ஆபரேஷன்கள் மார்பகத்திற்கு மட்டுமே இருப்பதைக் கொண்டே பெண்களின் மார்பழகு ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம். இது பெண்கள் மார்பகத்தின் தொய்விற்கேற்ப அவற்றை எடுப்பாக நிமிரச்செய்ய செய்து கொள்ளும் ஆபரேஷனாகும். சாதாரணமாக தினமும் `பேடு’ உபயோகித்து தாங்களே மார்பகத்தை தூக்கி நிறுத்தி அலங்கரித்துக் கொள்ள விரும்பாத பெண்கள், அறுவைச் சிகிச்சை முறையில் `ஜெல்’ செலுத்தி மார்பை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.

9. போர்ஹெட் லிப்ட்:- சிலருக்கு பிறப்பிலேயோ அல்லது விபத்தில் சிக்கியோ நெற்றி இயல்பு நிலை மாறி விகாரமாக தோற்றமளிக்கலாம். வெட்டுக் காயத்தால்கூட நெற்றி அழகு குறையலாம். இதை சரிசெய்ய இந்த ஆபரேஷன் உதவுகிறது.

10. ஆண்களுக்கான பிரெஸ்ட் ரெடிக்சன்:- ஆண்களுக்கான மார்பக ஆபரேஷன் இது. சில ஆண்களுக்கு கொழுப்பு படிவதன் காரணமாக அல்லது ஹார்மோன்களின் தாறுமாறான வளர்ச்சி காரணமாக மார்பகம் ஒரு புறமோ அல்லது இருபுறமுமோ பெண் மார்பகம்போல வளர்ந்துவிடுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் இந்த ஆபரேஷன் செய்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.

விண்டோஸ் 7 – சில குறிப்புகள்

புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வருகின்றனர். விஸ்டா விற்குப் பின் அதிக வாடிக்கையாளர் களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. வாசகர்களின் கடிதங்களில் கேட்டுள்ள பல கேள்விகளின் அடிப்படையில், கீழ்க்காணும் குறிப்புகள் தரப்படுகின்றன.
1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகை யில் மேற்கொள்ளப்படும் செயல்பாடு களைக் காணலாம்.
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
I: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D:அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.
U: ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.
TAB : முப்பரிமாணக் காட்சி
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.
2.ஹெல்ப் அண்ட் சப்போர்ட்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன். விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப் புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். இதில் தான் மைக்ரோசாப்ட் Ask a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.
3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்: நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon /report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.
4. அப்ளிகேஷன்ஸ் அன் இன்ஸ்டால்: விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்ததனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும். இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக் கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப் பட்டுள்ள புரோகிராம் களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. கிரெடென்ஷியல் மேனேஜர் (Credential Manager): இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் இணூஞுஞீஞுணtடிச்டூ என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். நாம் அடிக்கடி செல்லும் இணையதளங் களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம்.
6. புதிய வேர்ட் பேட்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் வரும் வேர்ட் புரோகிராமினையே அனைவரும் பயன்படுத்துகிறோம். அதனால் சிஸ்டத்துடன் வரும் நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் புரோகிராம்களை அவ்வளவாகப் பயன் படுத்துவது இல்லை. நோட்பேட் புரோகிராமினையாவது, சில புரோகிராம் களை எழுதுகையில் இயக்குகிறோம். ஆனால் வேர்ட் பேட் புரோகிராமினை முழுமையாக ஒதுக்கி வைக்கிறோம். இதனாலேயே மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத் தாமலேயே, தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் தந்து வந்தது. இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது பெரிய மாற்றங்களுடனும் வசதிகளுடனும் தரப்பட்டுள்ளது. இப்போது டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf)பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.
7. டெஸ்க்டாப் சீரமைத்தல்: ஐகான்கள் திரையெங்கும் சிதறிக் கிடக்கின்றனவா! சிரமம் எடுத்து அவற்றைச் சீரமைக்க வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, விஸ்டாவில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.
8. சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்: கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வாசகர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு அவசர அழைப்புகளைக் கொடுப்பதுண்டு. அவர்களிடம், ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி உள்ளதா என்று கேட்டால், பதில் கிடைக்காது. ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ள தென்று தெரிந்தவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. அப்படியானால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும்.
இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத்தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.
9. பிரச்னைகளைக் கண்டறிய: சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு System and Security என்பதன் கீழ் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக் குத் தீர்வு கிடைக்கலாம். இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.