Daily Archives: மே 6th, 2011

மனித சமுதாயத்தின் `பிறப்பிடம்-கர்ப்பப்பை

மனித சமுதாயத்தின் `பிறப்பிடம்’

னிதர்கள் வளர்ந்தபின் வசதி வாய்ப்புகளைப் பொறுத்து மாடமாளிகையிலும் வசிக்கலாம், குடிசையிலும் முடங்கலாம். ஆனால் நம் அனைவரின் முதல் இருப்பிடம், பாதுகாப்பிடம், கர்ப்பப்பைதான். கர்ப்பப்பையில் கரு வளர்வதே ஒரு பேரதிசயம். ஓர் ஒற்றைச் செல், கைகள், கால்கள், தலை என்று மனித உருப்பெறுகிறது.

எல்லா உயிரினங்களிலும் இந்த அதிசயம் நடைபெறும் இடம், ஒரு `சிறப்புக் கூடு’. அது, கர்ப்பப்பை. இந்தப் பேரிக்காய் வடிவ உறுப்பு, பெண்ணுக்குள் சிறுநீர்ப் பை- மலக்குடலுக்கு இடையே அமைந்துள்ளது. நமது முதலாவது வசிப்பிடம் பற்றித் தெரிந்து கொள்ளலாமா…

தயார்… தயார்…

பெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர் களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. அதன் அடுக்கு, புதிய திசுக்கள், புதிய ரத்தக் குழாய்கள், அதிக ரத்த விநியோகத்தால் தடிமனாகிறது.

ஒரு பெண்ணின் வாழ்நாளில், 28 நாட்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் 400 தடவைகள் இது நடைபெறுகிறது. கருவுறாவிட்டால், கர்ப்பப்பை உள்ளடுக்கும், கருவுறா முட்டைகளும் வெளித்தள்ளப்படுகின்றன. அதுவே, மாதவிலக்கு.

கருவுறுதல்

முட்டை கருவுறுவதுதான் கர்ப்பப்பையின் முக்கியமான தருணம். கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையை அடையும்போது முட்டையின் மஞ்சள்பகுதி தீர்ந்துவிடுகிறது. உணர்விகளைப் பயன்படுத்தி முட்டை, கர்ப்பப்பை உள்ளடுக்கில் (எண்டோமெட்ரியம்) ஒட்டிக்கொள்கிறது.

கர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.

ஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.

கர்ப்பப்பை தானம்

1931-ம் ஆண்டில் லில்லி எல்பே என்ற பெண், கர்ப்பப்பையைத் தானமாகப் பெற்றார். ஆனால் அவரது உடம்பு அதை ஏற்றுக்கொள்ளாமல் மூன்று மாதங்களில் இறந்தார். 2000-ல் சவூதி அரேபியாவில் நடைபெற்ற கர்ப்பப்பை தானமும் சரிவரவில்லை. இன்னும் 2 ஆண்டு களில் இது சாத்தியமாகும்.

பிரசவம்

கர்ப்பப்பை சுருக்கங்கள், சிசு வெளியேறும் அளவுக்கு கர்ப்பப்பை கழுத்துத் திறப்பைப் பெரிதாக்குகின்றன (1 செ.மீ.யில் இருந்து 12 செ.மீ. அளவுக்கு). அதில், சிசுவின் தலை ஓர் இடுக்கி போலச் செயல்படுகிறது. 12 அழுத்தங்கள் தேவைப்படுகின்றன. கர்ப்பப்பை தசைகள் 7 கிலோ சக்தியையும், எஞ்சியதை கீழ்வயிற்றுத் தசைகளும், உதரவிதானமும் அளிக்கின்றன.

குழந்தை பிறந்த 30 நிமிடங்களுக்குள் தொப்புள்கொடி வெளித்தள்ளப்படுகிறது. முதல் குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையின் வடிவமும், அமைப்பும் பெரிதும் மாறுபடுகின்றன. எனவே, கருவுறாத கர்ப்பப்பை `கன்னி நிலை’யில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒன்றும், இரண்டும்…

உயர் விலங்குகளில் இரண்டு கர்ப்பப்பைகள் இணைந்து ஒன்றாகின்றன. சில உயிரினங்களில் இரண்டு கர்ப்பப்பைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பயன்படுவது ஒன்றுதான். குட்டிகளைச் சுமந்து செல்ல வயிற்றில் பை கொண்ட விலங்குகளில் (மார்சுபியல்ஸ்) இரண்டு கர்ப்பப்பைகளும், இரண்டு பெண்ணுறுப்புகளும் இருக்கின்றன. அவை மூன்றாவது பிறப்புக் குழலில் இணைகின்றன.

ர்ப்பத்தின்போது கர்ப்பப்பை அதன் தொடக்க அளவை விட 500 மடங்கும், தொடக்க எடையை விட 16 மடங்கும் அதிகரிக்கிறது.

தொப்புள்கொடி கொண்ட பாலூட்டிகளில்தான் கர்ப்பப்பை முழுமையாக வளர்ச்சியடைகிறது. கங்காரு போன்ற `மார்சுபியல்’ விலங்குகளில் கர்ப்பப்பை முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை.

முட்டையிடும் பிராணிகளும், பறவைகளும் கர்ப்பப்பைக்குப் பதிலாக சினைப்பை குழாயைக் கொண்டிருக்கின்றன.

ராசரியாக ஒரு கர்ப்பப்பை 40 முதல் 80 கிராம் எடையும், 8 செ.மீ. அளவும் இருக்கும்.

கர்ப்பப்பை கவலைகள்

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…

டிஸ்மெனோரியா – மாதவிலக்குப் பிடிப்பு

பைப்ராய்ட்ஸ் – கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் – பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் – கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

புரோலாப்ஸ்?- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.

எக்டோபிக் கருவுறுதல் – கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.

ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) – கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பப்பை புற்றுநோய் – மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே

கண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற

ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.

பிற அபாய காரணிகள்:

* கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி

* குண்டாகுதல்

* `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது

* மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது

* இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை

* குடும்ப பாரம்பரியம்

* குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.

பயம் தரும் இடதுகைப் பழக்கம்!

இடது கை பழக்கம் குறித்த ஆய்வு ஒன்று இப்படி கூறுகிறது.

அதாவது, திகில் காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை பார்த்து அதிகம் பயந்தவர்கள் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

தாங்கள் பார்த்த அந்த திரைப்படம் பற்றி கருத்து கேட்கப்பட்ட போது இடது கை பழக்கமுள்ளவர்கள் மிகவும் பயந்து போனவர்
களாக காணப்பட்டார்கள். மேலும், இவர்களது கருத்துக்களும் கோர்வையாக இல்லை.

தங்களது இந்தக் கண்டுபிடிப்பு, அச்சம் தரும் சூழ்நிலைகளுக்கும் அப்போது ஏற்படும் மூளையின் செயல்பாடுகளுக்குமுள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது எடின்பர்க்கிலுள்ள குயின் மார்கரெட் பல்கலைக்கழகம். இது வரையில் இப்படிப்பட்ட திகில் படம் வந்ததில்லை என்ற அளவிற்கு பயங்கரங்கள் நிறைந்த `சைலன்ஸ் ஆப் தி லேம்ப்ஸ்’ என்ற திரைப்படம்தான் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது.