Daily Archives: மே 7th, 2011

மட்டன் ஷாய் குருமா

மட்டன் ஷாய் குருமா

தேவையான பொருட்கள்

எலும்பு நீக்கிய மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
கிரீம் – 4 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்
தயிர் – ஒரு குழிக்கரண்டி
முந்திரிப்பருப்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
பச்சைமிளகாய் – 4
வெள்ளை மிளகு – 2 டீஸ்பூன்
பட்டை லவங்கம் – தலா 2

செய்முறை

* மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

* நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* தயிரையும் சேர்த்து வதக்கி தனியாத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், பொடித்த வெள்ளை மிளகு சேர்க்கவும்.

* இப்போது மட்டனை சேர்த்து நன்கு வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* அரைத்த முந்திரி விழுதைச் சேர்த்துக் கொள்ளவும். கிரீம் சேர்த்துக் கிளறி சில நிமிடங்களில் இறக்கி பரிமாறவும்.

`செப்’ தாமு