Daily Archives: மே 8th, 2011

மூளை சுறுசுறுப்புக்கு சாக்லேட் சாப்பிடுங்கள்!

மூளை சுறுசுறுப்பாக இருப்பதை யார்தான் விரும்பமாட்டார்கள்? சோர்வடைந்தால்… சொல்லவே வேண்டியதில்லை.

அது சரி, சோர்வு எப்போது ஏற்படுகிறது? மூளைக்கு கிடைக்கும் ஆக்சிஜனும், சர்க்கரையும் அளவில் குறையும் போதுதான் இந்த பிரச்சினையை நாம் சந்திக்கிறோம்.

அப்படியானால், ஆக்சிஜனும், சர்க்கரையும் குறையாமல் பார்த்துக்கொண்டால் தீர்வு கிடைத்துவிடுமல்லவா… அதற்கு வழி? ஆக்சிஜனும், சர்க்கரையும் பாலிபெனால் மற்றும் தாவர வேதிப்பொருட்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

இந்த பாலிபெனால் மற்றும் தாவர வேதிப் பொருட்கள் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து மூளைக்கு அதிக அளவில் ரத்தத்தைப் பாயச்செய்கிறது. ஆனால், பாலிபெனால், தாவர வேதிப் பொருட்களுக்கு எங்கே போவது? எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அவற்றின் இருப்பிடம் ஒயின் மற்றும் சாக்லேட்டுகள் தான்.

மூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அதன் செயல் திறனும், மனதின் எண்ண ஓட்டமும் சிறப்பாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளை நன்றாகச் செயல்படும் போது மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எளிதில் கிடைக்கின்றன. இதனை லண்டனிலுள்ள நார்தம்ப்ரியா பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ளது. சாதாரணமாக வயது ஆகும் போது மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. எனவே, சுறுசுறுப்புக்கு இனிமேல்… வேறென்ன? ஒயின் தான் மருந்து. ஒயினை விரும்பாதவர்களுக்கு? இருக்கவே இருக்கிறது சாக்லேட்.

ரவை மீன் புலாவ்

ரவை மீன் புலாவ்

தேவையான பொருட்கள்

முள் நீக்கிய மீன் – 1/4 கிலோ
(வேக வைத்தது)
பான்சி ரவை – 1/4 கிலோ
புதினா – 1 கட்டு
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

செய்முறை

* வெங்காயம், தக்காளி, புதினா இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து ரவையைப் போல் இருமடங்கு நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதித்ததும், ரவையைக் கட்டியில்லாமல் சேர்த்துக் கிளறி தேவையான உப்பு போடவும்.

* இத்துடன் வேக வைத்த மீன் துண்டங்களைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

`செப்’ தாமு

விளையாடிப் பாருங்கள்

1. COM என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
2. விண்டோஸ் பயன்படுத்து கிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகி ராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா? இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள்.
3. மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது என்று பார்க்கவும்.