மூளை சுறுசுறுப்புக்கு சாக்லேட் சாப்பிடுங்கள்!

மூளை சுறுசுறுப்பாக இருப்பதை யார்தான் விரும்பமாட்டார்கள்? சோர்வடைந்தால்… சொல்லவே வேண்டியதில்லை.

அது சரி, சோர்வு எப்போது ஏற்படுகிறது? மூளைக்கு கிடைக்கும் ஆக்சிஜனும், சர்க்கரையும் அளவில் குறையும் போதுதான் இந்த பிரச்சினையை நாம் சந்திக்கிறோம்.

அப்படியானால், ஆக்சிஜனும், சர்க்கரையும் குறையாமல் பார்த்துக்கொண்டால் தீர்வு கிடைத்துவிடுமல்லவா… அதற்கு வழி? ஆக்சிஜனும், சர்க்கரையும் பாலிபெனால் மற்றும் தாவர வேதிப்பொருட்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

இந்த பாலிபெனால் மற்றும் தாவர வேதிப் பொருட்கள் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து மூளைக்கு அதிக அளவில் ரத்தத்தைப் பாயச்செய்கிறது. ஆனால், பாலிபெனால், தாவர வேதிப் பொருட்களுக்கு எங்கே போவது? எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அவற்றின் இருப்பிடம் ஒயின் மற்றும் சாக்லேட்டுகள் தான்.

மூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அதன் செயல் திறனும், மனதின் எண்ண ஓட்டமும் சிறப்பாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளை நன்றாகச் செயல்படும் போது மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எளிதில் கிடைக்கின்றன. இதனை லண்டனிலுள்ள நார்தம்ப்ரியா பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ளது. சாதாரணமாக வயது ஆகும் போது மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. எனவே, சுறுசுறுப்புக்கு இனிமேல்… வேறென்ன? ஒயின் தான் மருந்து. ஒயினை விரும்பாதவர்களுக்கு? இருக்கவே இருக்கிறது சாக்லேட்.

%d bloggers like this: