ரவை மீன் புலாவ்

ரவை மீன் புலாவ்

தேவையான பொருட்கள்

முள் நீக்கிய மீன் – 1/4 கிலோ
(வேக வைத்தது)
பான்சி ரவை – 1/4 கிலோ
புதினா – 1 கட்டு
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

செய்முறை

* வெங்காயம், தக்காளி, புதினா இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து ரவையைப் போல் இருமடங்கு நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதித்ததும், ரவையைக் கட்டியில்லாமல் சேர்த்துக் கிளறி தேவையான உப்பு போடவும்.

* இத்துடன் வேக வைத்த மீன் துண்டங்களைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

`செப்’ தாமு

%d bloggers like this: