Daily Archives: மே 18th, 2011

இந்த கோடைக்கு ஐரோப்பா போகலாமே!

இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அலுத்துப் போனவர்கள், ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான நீர்வழி சுற்றுலா மூலமாக, பல்வேறு நாடுகளின் சுற்றுலாத் தலங்களை பார்த்து ரசிக்கலாம்.
ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நீர் வழிச் சுற்றுலா செல்லும் போது வண்ண, வண்ணமாக பூத்து குலுங்கும் மரங்கள், வித்தியாசமான கனிகள், பிரமிக்க வைக்கும் விண்ட் மில்கள் கண்களை கவரும்.
ஆம்ஸ்டர்டாம் – புடாபெஸ்ட் இடையேயுள்ள இடங்களை, இரண்டு வாரங்களில் நீர்வழி மூலம் பயணம் செய்து ரசிக்கலாம். நீர் வழிச் சுற்றுலா குறித்த தகவல்கள், ஆன் லைனில் சுலபமாக கிடைக்கின்றன. அவற்றின் மூலம் செல்ல வேண்டிய இடங்களையும், அங்குள்ள வசதிகளையும் அறிந்து, சுற்றுலா மேற்கொள்ளலாம்.
ஹங்கேரியில் புடாபெஸ்ட், போலந்தில் கிராகவ், ஜெர்மனியில் மியூனிச், ஆஸ்திரியாவில் வியன்னா உள்ளிட்ட நகரங்கள் பார்க்க வேண்டியவை.
ஐரோப்பிய நகரங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், வரலாற்று சிறப்பு மிக்க பரபரப்பான நகரங்கள், நெரிசலான நகரங்கள், காண்பவர்களை வியக்க வைக்கும் கட்டடங்கள், நினைவு சின்னங்கள், சிறந்த <உணவு, மது வகைகள் ஆகியவைகளுடன் ஐரோப்பிய கலாசாரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
நீர் வழிச் சுற்றுலா நடத்தும் நிறுவனங்கள், பல்வேறு, “பேக்கேஜ்’ திட்டங்களை வைத்துள்ளன. வழிநெடுக உள்ள துறை முகங்களில் பொழுது போக்கு விளை யாட்டுக்கள், பாட்டு, நடனம் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. துறைமுகங்களில் இருந்து நகரங்களுக்குள் சென்று, சுற்றிப் பார்க்கவும் முடியும். பெரிய கப்பல்கள் துவங்கி, சிறிய படகுகள் வரை பயணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போல, சுற்றுலா கப்பல்களில் (குரூசஸ்) அலங்கார கூடம், உணவகம், ஓய்வு எடுத்தபடி இயற்கை காட்சிகளை முழுமையாக பார்த்து ரசிக்க, அகன்ற ஜன்னல்கள் போன்றவை உள்ளன. சுற்றுலா பயணிகள் கோல்ப் விளையாடவும், தோட்ட பராமரிப்பில் ஈடுபடவும் முடியும். இசை ரசிகர்களுக்கு இனிமையான இசை விருந்தும் உண்டு.
நீர் வழிச் சுற்றுலாவிற்கு பொருத்தமான கப்பல், உணவு, தங்கும் அறை தேர்வு மிக முக்கியம். போதுமான உடைகள், காலணிகள், கையுறைகள் உள்ளிட்டவைகளை உடன் கொண்டு செல்ல வேண்டும். நீர் வழிச் சுற்றுலா செல்பவர்கள், வழக்கமான <உடைகளை அணியலாம் என்றாலும், சீதோஷ்ண நிலைக்கேற்ற ஆடைகளையும் எடுத்துச் செல்வது நல்லது.
நீர்வழிச் சுற்றுலா செல்லும் நாடுகளுக்கான விசா, டபுள் செக் பாஸ்போர்ட் ஆகியவை அவசியம். எந்த ஆற்றில் பயணம் செய்வது சிறப்பானது; நான்கு நாள் குறுகிய பயணம் முதல், 16 நாள் நீண்ட பயணம் வரை உள்ளதில் எதை தேர்ந்தெடுப்பது; பயணம் செய்வதற்கு எது சிறந்த நிறுவனம்; கப்பல், படகு இவற்றில் எது சிறந்தது; அதில் அளிக்கப்படும் வசதிகள், சலுகைகள் என்ன; மருத்துவ வசதி உள்ளதா; கிரடிட் கார்டு ஏற்றுக் கொள்ளும் வசதி உள்ளதா ஆகியவற்றை ஐரோப்பாவில் முதல் முறையாக சுற்றுலா செல்பவர்கள் தெரிந்து கொண்டால், பயணம் சுகமாகவும், இனிமையாகவும் இருக்கும் .

ஆப்பரா பதிப்பு 11.10

புதிய பதிப்பின் ரிலீஸ் பதிப்பு வெளியாகிச் சில நாட்களிலேயே, முழுமையான பதிப்பை வெளியிடுவது ஆப்பராவின் வாடிக்கையாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதே போல் வெளியிட்டுள்ளது. நான்கு ரிலீஸ் பதிப்பு வெளியானவுடன், முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பராவின் இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்த கோப்பினைக் கம்ப்யூட்டரில் பதிப்பது மிக எளிதான ஒரு வேலையாக உள்ளது. கையில் எடுத்துச் சென்று, மற்ற கம்ப்யூட்டர்களில் பணியாற்ற, போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. கம்ப்யூட்டரில் பதிந்தவுடன், என்ன சிறப்பு வசதிகள் புதுமையாகக் கிடைக்கின்றன என்று பட்டியலிடப்படுகிறது. ஸ்பீட் டயல் திருத்தி அமைக்கப்பட்டு வேகமாக இயங்குகிறது. இதனை Speed Dial 2.0 என ஆப்பரா அழைக்கிறது. இதற்கு முன் இருந்த ஸ்பீட் டயல் வசதியில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீட் டயல் பக்கத்தில், எத்தனை இணைய தளங்களை வேண்டுமானாலும் இணைக்கலாம்.
பிரவுசருக்கான ப்ளக் இன் தொகுப்புகள் இல்லை எனில், அவற்றை எளிதாக இதில் பதிக்கலாம். இப்போதைக்கு அடோப் பிளாஷ் பிளேயர் சப்போர்ட் செய்யப்படுகிறது. மேலும் பல புரோகிராம்கள் இணைக்கப்படலாம். பிளாஷ் பிளேயர், கம்ப்யூட்டரில் இல்லை என்றால், அதனைப் பதிக்கக் கூறும் செய்தியும், தளத்திற்கான லிங்க்கும் தரப்படுகிறது.
ஆப்பராவின் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளருக்கு தகவல்களை அனுப்பும் முன், ஆப்பரா சர்வரில் அவை கம்ப்ரஸ் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தரவிறக்கம் செய்வது தொடர்ந்தும் வேகமாகவும் நடைபெறுகிறது.
ஆப்பரா பிரவுசரின் இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்திட விரும்புவோர் http://www.opera.com/ browser/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
இன்னொரு முக்கிய தகவலையும் இங்கு சொல்லியாக வேண்டும். ஆப்பரா இப்போது வெப் இமெயில் சேவையினைத் தருகிறது. இது அனைவருக்கும் இலவசமே. இது My Opera Mail என அழைக்கப்படுகிறது. பயன்படுத்திப் பாருங்கள்.

குரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு

குரோம் பிரவுசர் பதிப்பு 10 ஐ அண்மையில் வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது அடுத்த பதிப்பு 11ன் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஐகான் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. எச்.டி.எம்.எல். 5க்கான ஸ்பீச் இன்புட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் பேசுவது உள்வாங்கப் பட்டு, அதனை டெக்ஸ்ட்டாக மாற்றலாம். இதற்கான இணைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் தேவையானக் கட்டமைப்பை, இந்த பிரவுசரில் கூகுள் தந்துள்ளது. இதற்கான சிறிய டெமோ புரோகிராம் ஒன்றும் காட்டப்படுகிறது. இந்த டெமோ புரோகிராம், இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்கும். முப்பரிமாணக் காட்சிகள் காட்டு வதற்கான தொழில் நுட்பமும் இந்த பிரவுசரில் இணைக்கப் பட்டுள்ளது.
இந்த சோதனைத் தொகுப்பினை http://www.google.com/intl/en/landing/chrome/beta/ என்ற முகவரியில்