Daily Archives: மே 21st, 2011

தமிழில் டைப் செய்ய எளிய வழி

தமிழில் டைப் செய்ய பல புரோகிராம்களை பயன்படுத்தி வருகிறோம். இதில் எளிதானது Google Transliteration IME என்ற புரோகிராம் ஆகும். நான் இதை தான் பயன்படுத்தி வருகிறேன். இது பயன்படுத்த எளிதானது.மேலும் சில எழுத்துகளை டைப் செய்தாலே அதனுடன் தொடர்புடைய பல வார்த்தைகள் காட்டப்படுகின்றன. அதன் முலம் எளிதாக டைப் செய்யலாம். MsWord, xecel, powerpoint,txt editor, webpage என அனைத்து தளங்களிலும் பயன்படுத்தலாம்.Windows xp, windows 7லும் பயன்படுத்தலாம்.மேற்கண்ட புரோகிராமை INSTALL செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தவும்.

முதலில்http://www.google.com/transliterate/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்

————-

—————-                  ————————————–

பின்பு Download Google Transliteration IME கிளிக் செய்யவும்

Choose your IME language என்பதில் தமிழை கிளிக் செய்து download செய்யவும்.

பின்பு டவுன்லோட் செய்த புரோகிராமை இன்ஸ்டால் செய்யவும். இதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியம்.

INSTALL ஆன பின்பு இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.

பின்பு டாஸ்க்பாரின் ஓரத்தில் லாங்குவேஜ் பார் காணப்படும் அதில் EN Default ஆக காணப்படும் அதில் TA கிளிக் செய்தால் தமிழில் டைப் செய்யலாம்.

—————————————————————————

———————————————————————————————-

லாங்குவேஜ் பார் டாஸ்க் பாரில் காணப்படவில்லை என்றால் கீழ்கண்ட முறையில் லாங்குவேஜ் பாரை டாஸ்க்பாரில் கொண்டு வரலாம்

————————————————————————————————–

மேற்கண்ட முறையில் லாங்குவேஜ் பார் தெரியவில்லை என்றால் கீழ்கண்ட முறையை பயன்படுத்தி பார்க்கலாம்.

—————————————————————————————-


——————————————————————————————


—————————————————————————————–

MS wordஇல் டைப் செய்ய

விண்டோஸ்7ல் Restart செய்தாலே லாங்குவேஜ் பார் காட்டப்படும்.

வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்

ஆட்டிட்யூட்! இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனா ஆட்டிட்யூட் சரியில்லையே! என்கிறார்கள்.
அதென்ன ஆட்டிட்யூட்?
தமிழில் இதனை மனப்பாங்கு என்கிறார்கள். அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழ்கிற விஷயங்களை நமது மனம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது… இவற்றின் தொகுப்பைத்தான் ஆட்டிட்யூட் (Attitude) என்கிறோம்.
சுமாரான திறமை கொண்டவர்கள்கூட, தங்களது மனப்போக்கைப் பொருத்தமானவகையில் அமைத்துக்கொண்டால் மிகப் பெரிய அளவு முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அதேசமயம், இதற்கு நேர் எதிராக, பிரமாதமான திறமைசாலிகள் நல்ல ஆட்டிட்யூட் இல்லாமல் தடுமாறுவதும் உண்டு. இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து தி டிஃப்ரன்ஸ் மேக்கர் (The Difference Maker) என்ற புத்தகம் வந்திருக்கிறது அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜான் சி மேக்ஸ்வல்.
நல்ல ஆர்ட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால், நீங்கள் அப்படி முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள் என்று மாக்ஸ்வெல் எச்சரிக்கிறார். நாம் இந்த ஐந்து பேரையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன செய்தாலும் பப்பு வேகாது, நாம்தான் ஜெயிப்போம்!
மார்ஸ்வெல் சொல்லும் அந்த 5 வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி.
இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை ஜெயிக்கக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. ஊக்கமின்மை:
*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள், ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
*சரியான நபர்களோடு பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு எந்நேரமும் வளையவந்தால், உங்களைப் பற்றி உங்களுக்கே அவநம்பிக்கைதான் தோன்றும்.
*நெகட்டிவ் வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சோர்வாக்கும், முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

2. மாற்றம்:
* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்துகொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.
* மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள்.
* அதேசமயம், சில விஷயங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கைகளில் உறுதியாக இருங்கள்.

3. பிரச்னைகள்:
*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும், தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள்.
*பல சமயங்களில், நாம் பிரச்னை என்று நினைப்பது மேலோட்டமான ஒரு விஷயம், நிஜப் பிரச்னை ஆழத்தில் ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.
*அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறத, தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.

4. பயம்:
* பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறவன் கோழை அல்ல, வீரன். அவனால்தான் அந்தப் பயத்தை வெல்லமுடியும்.
*உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.
* நேற்று, நாளை ஆகியவற்றைவிட இன்றுதான் மிக முக்கியம், அதை மறக்காமல் இருந்தால் எந்தப் பயமும் உங்களை எதுவும் செய்யாது.

5. தோல்வி:
* சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.
*உங்கள் மொழியையே மாற்றுங்கள். ச்சே இப்படி நடந்திருக்கலாம். என்பதைவிட அடுத்தமுறை இப்படிச் செய்வேன் என்பது பெட்டர்.
* சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியும், மற்ற பல நம் கையில் இல்லை. அவற்றை மாற்ற நினைத்துப் பிரயோஜனம் இல்லை, நம்மால் முடிந்ததைமட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

நல்லதை ஏன் செய்ய வேண்டும்?

ரு இளம்பெண்ணிடம் தன் மனதைப் பறி கொடுக்கிறான் இளைஞன். அவளுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அவளும் அவனிடம் இருந்த ஏதோ ஒரு நல்ல விஷயத்தில் ஈர்க்கப்பட்டு அவனது நட்பை ஏற்றுக் கொள்கிறாள். இது ஒரு புறம்!

இன்னொரு புறம், வேலையில் சேர விண்ணப்பித்தவரிடம் உள்ள நல்ல பழக்கத்தைப் பார்க்கும் நிறுவனத்தார் அவரை வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர். அதேபோல் அந்த நிறுவனத்தாரிடம் உள்ள நல்ல விஷயங்களைக் காணும் அவரும், அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்ததை கிடைத்தற்கரிய பெரும்பேறாக எண்ணி மகிழ்கிறார்.

எல்லா உறவுகளுமே இப்படி நல்ல நட்புறவு அணுகுமுறையின் அடிப்படையிலேயே அமைகின்றன..

நம்மிடம் நல்ல குணம் இருப்பதால் தான் நாம் சேவை செய்கிறோம். அதேபோல் மற்றவர்களிடமும் நலம் காணநேரும் நற்குணங்கள் நம்மை சேவையின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சேவை சிந்தனை, நற்குணம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

“வார்த்தைகளில் உள்ள நன்மை, நம்பிக்கையை உருவாக்குகிறது. சிந்தனைகளில் உள்ள நன்மை, ஆழத்தை உருவாக்குகிறது. சேவையில் உள்ள நன்மை அன்பை உருவாக்குகிறது” என்கிறார், அறிஞர் லாவோட்சே.

நாம் அனுமதித்தால் போதும். மனித ஆத்மா உன்னதத்தை அடைந்து விடும். நமக்குப் பின்விளைவுகள் இல்லாதபோது மற்றவர்களுடைய துன்பங்களை நீக்குவதில் கஷ்டமே இல்லை. அந்தத் துன்பங்களைக் கண்டு வருந்தி பணத்தாலோ, உடல் உழைப்பாலோ உதவவும் செய்கிறோம். ஆனால், நமக்குப் பின்விளைவுகள் வந்தால், நமது மனோபாவம் மாறிவிடும். நமது உதவிக்கு நன்றி கிடைக்காவிட்டால் கூட, நாம் வருத்தப்படுவோம்.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான் ஒரு சிறுவன். இதைப்பார்த்த இளைஞன் ஒருவன் ஆற்றில் பாய்ந்தான். உயிரைப் பணயம் வைத்து அந்த சிறுவனை காப்பாற்றினான். அன்று மாலையே அவன் இருப்பிடம் தேடி வந்தனர் பையனின் பெற்றோர். வந்தவர்கள் யாரென தெரிந்து கொண்ட இளைஞன், அவர்களிடம் இருந்து தனக்கு பெரியஅளவில் பாராட்டு நிச்சயம் என்று எண்ணினான்.

ஆனால் நடந்தது வேறு. வந்தவர்களோ இளைஞனிடம் `எங்கள் மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்படும்போது அவன் விரலில் மோதிரம் இருந்தது. நீங்கள் காப்பாற்றி கரை சேர்த்த நேரத்திற்குள் அது காணாமல் போயிருக்கிறது’ என்றார்களே பார்க்கலாம்.

உண்மையான உதவிக்கு இப்படியான எதிர்மறை அனுபவங்கள் கிடைக்கும்போது தான் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் கூட ஓதுங்கிப் போகிறார்கள்.

எந்த மாதிரி மனநிலைக்கு நாம் பக்குவப்பட்டிருந்தால் நம் உதவும் குணம் இன்னும் மேம்படும்?உங்களுக்கான தீர்மானமாக பின்வருவனவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

* என்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல வலுவான நட்பு கொண்டுள்ளேன். நல்ல விஷயங்களையே இனம் பிரித்துக் காணும் பழக்கத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

* என்னிடமுள்ள தீய, பலவீனமான விஷயங்களை மற்றவர்கள் காண்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

* நல்ல அறிவுரையை கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

* என்னை மற்றவர்கள் மன்னிக்காவிட்டாலும், மற்றவர்களிடமுள்ள தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

இந்த மனநிலைக்குள் வந்துவிட்டால் எந்த சூழலிலும் நல்ல மனநிலை மட்டுமே உங்களில் இயங்கிக் கொண்டிருக்கும். நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக எழும் எதிர்மறை எண்ணங்களையும் நம் மனங்களை விட்டு நாம் விலக்கி விட வேண்டும். பிறகு அதுவே, மிக உயர்ந்த குணமாகி விடும்.

சுறா பூண்டு குழம்பு

தேவையான பொருட்கள்

சுறாமீன் – 1/2 கிலோ
பூண்டு – 3 (முழுப்பூண்டு)
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணை – 1 குழிக்கரண்டி
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

செய் முறை

* சுறா மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பூண்டை பல் பல்லாக உரித்துக் கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பூண்டு, தக்காளி, மிளகாய் இவை சேர்த்து நன்கு வதக்கவும்.

* இப்போது சுறாமீன் துண்டுகளை சேர்க்கவும். மீன் துண்டுகள் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு நீர் ஊற்றி வேக விடவும்.

* மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் புளிக்கரைசல் ஊற்றி மிளகுத்தூள், சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* மசாலாவின் பச்சை வாசனை போய், குழம்பு திக்காக வந்தவுடன் கொத்தமல்லி இலையைத் தூவி குழம்பை இறக்கிவிடவும்.

* சுவை மிக்க சுறா பூண்டு குழம்பு தயார்.

மொஸில்லா சுறுசுறுப்பு

பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 4 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால், மொஸில்லா தன் அடுத்த பதிப்புகள் வெளியிடப்பட இருக்கும் நாட்களை அறிவித்துள்ளது. பயர்பாக்ஸ் 5, வரும் ஜூன் 21லும், பயர்பாக்ஸ் 6 ஆகஸ்ட் 18லும் வெளியிடப் படுகின்றன. 2011 ஆம் ஆண்டிலேயே அடுத்த பயர்பாக்ஸ் பதிப்பு 7ம் வெளியிடப்பட இருக்கிறது. தொடர்ந்து தன் ஒவ்வொரு பதிப்பிலும் புதிய வசதிகளை இணைத்து ஆறு வாரங்கள் ஆய்வு செய்து இவற்றை மொஸில்லா வெளியிடுகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசரின் ஒரு சிறப்பான வசதி அதற்கெனப் பிறர் தயாரித்து வழங்கும் ஆட் ஆன் தொகுப்புகளாகும். ஆனால் பல ஆட் ஆன் தொகுப்புகள் ஒரே நேரத்தில் பின்னணியில் இயங்குகையில், பிரவுசரின் வேகம் குறைவதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த புரோகிராம் தயாரிப்பாளர்களிடம், அவற்றை முழுமையான திறனுடன் இயக்கும்படியும், மற்றவற்றைப் பாதிக்காத வகையில் அவை வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்துகிறது.
மொஸில்லா நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட் ஆன் புரோகிராம்கள் பயன்பாடு, பிரவுசரின் செயல்பாட்டினை மந்தப்படுத் துவதாக இருந்தாலும், பயனாளர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், இன்டர்நெட் இணைப்பும் இதில் பங்கெடுக்கிறது என அறிவித்துள்ளது. வாரம் தோறும் சராசரியாக 100 ஆட் ஆன் தொகுப்புகளின் இயக்கத்தினை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்துகையில் எவ்வளவு வேகம் குறைகிறது என்பதனை மொஸில்லா அறிவித்து வருகிறது.
பிரவுசரின் செயல்பாட்டினை 10 சதவிகித நேரத்திற்கு மேல் பாதிக்கும் புரோகிராம்களின் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவற்றைச் சரி செய்திடத் தேவையான ஆலோசனையை வழங்குகிறது.

இறைவன் ஒருவனே!

பரமேஸ்வரனை, “முக்கண்ணப்பா’ என்று ஒருவர் அழைத்தாராம். இதில், “அப்பா’ என்ற சொல் குறிப்பிடத்தக்கது. அப்பாவுக்கு குழந்தைகளிடம் பரிவும், பாசமும் இருக்கும்.
நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்த பிள்ளையை, “கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளடா; ஓடி, ஆடியது போதும்…’ என்கிறார் அப்பா. இதே பரமேஸ்வரன் தான், பிரளயத்தை உண்டாக்குகிறார். அப்போது, சகல ஜீவராசிகளும் ஒடுங்கிப் போய் விடுகிறது.
பல ஜென்மாக்கள் எடுத்து, இந்த ஜீவன்கள் அலைந்து, திரிந்து அல்லல் பட்டது போதும்; கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் என்ற கருணையால், பிரளயத்தை ஏற்படுத்துகிறார். ஜீவன்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பின், மீண்டும் சிருஷ்டி செய்கிறார் பிரம்மா. மறுபடியும் ஜீவன்களின் பிறப்பு, இறப்பு என்பது பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி ஏற்படுகிறது.
எந்த ஜீவனானாலும், ரட்சிப்பது விஷ்ணுவின் வேலை; அவர், அதை செய்கிறார்.
பகலெல்லாம் வேலை செய்தவன், இரவு வந்ததும் ஆனந்தமாகத் தூங்குகிறான். பொழுது விடிந்தால், மறுபடியும் ஓடி, ஆடி வேலை செய்கிறான்; இதை, நித்ய பிரளயம் என்றனர். ஜகம் முழுவதும் அழிந்து போகும்படி ஏற்படுவது மகா பிரளயம்; இதில் தான் எல்லாமே அழிந்து போகிறது.
பிரளயம் முடிந்த பிறகு, மீண்டும் சிருஷ்டி தொழிலை ஆரம்பிக்கிறார் பிரம்மா. அடுத்த பிரளயம் வரையில் அவரது தொழில் தொடர்கிறது. ஒருவரது வேலை ஆக்கல்; ஒருவரது வேலை காத்தல்; ஒருவரது வேலை அழித்தல்! இதில், மூன்றாவதாக ஒரு பிரளயத்தைச் சொல்லி இருக்கின்றனர்; அதற்கு, ஆத்யந்திக பிரளயம் என்று பெயர்.
இரண்டு, மூன்று என்று வேறுபாடாகத் தோன்றும் பேத ஞானத்தை ஒழித்து, எல்லாம் ஒன்றே என்ற அத்வைத ஆனந்த அனுபவத்தை அளித்து, மோட்சத்தைக் கொடுக்கிற பிரளயம் இது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று பெயர்களுடன் முத்தொழில் நடந்து வருகிறது. பார்ப்பதற்கும், படிப்பதற்கும் இந்த மூன்று பேரும் தனித் தனியானவர்கள் என்று எண்ணத் தோன்றும்; ஆனால், அப்படியல்ல. ஒரே பொருளிலிருந்து மூன்றாகப் பிரிந்து, ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழிலை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.
அந்த ஒன்றிலிருந்து தான் பலவும் தோன்றியது. ஆக, எல்லாமே ஒன்று தான்; பேதமில்லை. பரமாத்மா ஒருவன் தான் காரிய காரணங்களுக்காக பலவாறாக தோற்றமளிக்கிறான் என்பதை, உணர்ந்து கொண்டாலே போதும்!
சிவன் உயர்வா, விஷ்ணு உயர்வா; சைவம் உயர்ந்ததா, வைணவம் உயர்ந்ததா என்ற சர்ச்சையே இராது; சமத்துவமும், சமாதானமும் நிலவும்.