Daily Archives: மே 22nd, 2011

சிக்க வைத்த “செக்!’: கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம்

“ஸ்பெக்ட்ரம்’ ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் “டிவி’ துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது.

ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றம், காசோலை மூலம் நடந்ததே, தற்போது, கனிமொழியைச் சிறைக்கு அனுப்பியுள்ளது.

நேற்று முன்தினம், டில்லி, திகார் சிறையில் கனிமொழியை அடைத்த பின், சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:இந்த விவகாரத்தில், காசோலை மூலம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது, எங்கள் அதிர்ஷ்டம். மூளையைக் குழப்பும் புதிர் போல, ஆங்காங்கே சிதறிக் கிடந்த தகவல்களை ஒன்று திரட்ட, இந்தப் பணப் பரிமாற்றம் தான், முக்கிய ஆதாரமாக விளங்கியது.”ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டுக்காக வாங்கப்பட்ட லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, கலைஞர் “டிவி’க்குச் சென்ற பாதையை மட்டும் தான் தற்போது எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அதன் வழியாகத் தான், அந்த, “டிவி’யில், 20 சதவீத பங்கு வைத்துள்ள கனிமொழி சிக்கினார்.மீத லஞ்சப் பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டறிய, மொரீஷியஸ் நாட்டுக்குச் செல்ல உள்ளோம். அங்கு, கணிசமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.சுப்பிரமணியசாமி கூறியுள்ளது போல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான பணப் பரிவர்த்தனைகளும், இந்த விவகாரத்தில் நடந்துள்ளதா என்பதை, நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நிரா ராடியா ஈடுபட்டதாக நாங்கள் கருதவில்லை. எனினும், வோல்டாஸ் நிலம் தொடர்பான விவகாரங்களில், அவர் தலையீடு இருப்பது குறித்து, நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.மேலும், 2001-07ம் ஆண்டுகளில் நடைபெற்ற, “ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான புலனாய்வை, நாங்கள் விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினர்.

நன்றி-தினமலர்

சமச்சீர் கல்விநடப்பாண்டு இல்லை ; பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது; தமிழக அமைச்சரவையில் அதிரடி முடிவு

இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் , இது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முதல்வராக பதவியேற்ற ஜெ., இன்று அமைச்சர்களுடன் முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலர், மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், மற்றும் வரும் நிதியாண்டில் செயல்பட வேண்டிய கல்வி நிலை குறித்தும் , மின்வெட்டு சமாளிப்பது , மக்கள் பணிகள் விரைந்து நடக்க அதிகாரிகளை முடுக்கி விடுவது , பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

சம்சீர்கல்வி கல்வித்தரம் உயர்த்தும்படியாக இல்லை: அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் படியாக அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழி செய்யாது . எனவே சமச்சீர் கல்வி வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும் , இந்த கல்வி ஆண்டில் பழைய பாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும், புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை வரும் 15 ம் தேதி திறக்கலாம் என்றும் உத்தரவிடப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் மாதம் 6 ம்தேதி மேட்டூர் அணையை திறக்கவும் உத்தரவிடப்பட்டது. வழக்கமாக 12 ம் தேதிக்கு பின்னர் தான் அணை திறக்கப்படும் ஆனால் இந்த முறை விரைந்து திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினமலர்

சம்மரிலும் பளிச்சென்று இருக்க..

அக்னி வெயில் சுட்டெரிக்கையில் உடலை பேணி பாதுகாப்பது என்பது சற்று சவாலான காரியம்தான். சரியான வழிமுறைகளைக் கைக்கொண்டால் கோடையிலும் குளுமையை உணரலாம். கோடையில் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்…….

* கோடை நாட்களில் கூட குளிக்கும் தண்­ணீரில் பாடி டெம்பரேச்சரில் இருப்பது நன்று. தண்ணீ­ரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லைகள், எலுமிச்சை ரசம்…. என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.

* உங்கள் ஹேண்ட்பாகில் டிஷ்யூ பேப்பர் எப்போதுமே வைத்திருங்கள். வியர்வை வழிந்தால் அழகாக பேப்பரால் ஒற்றி எடுக்கவும். தூசி, அழுக்கு, வியர்வை… என சகலமும் வைப் அவுட் ஆகிவிடும்.

* வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும்.

* வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும்.

* காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும்.

* வாட்டர் சும்மா பாட்டில் பாட்டிலா குடிக்கவும்.

* காபி, டீ, மசாலா, எண்ணெய் உணவு வகைகளுக்கு டூ விடவும். பழங்கள், சாலட் வகைகள், சர்பத், நீர்மோர், லஸ்ஸிக்கு சேத்தி சொல்லவும். காலையில் முதலில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும்.

* உங்கள் வார்ட் ரோபில் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டியல் பட்டியல் இதோ: ஏலைன் ஸ்கர்ட், கேப்ரீ பான்ட், காதி காட்டன் குர்தீஸ், வொயிட் டாப்ஸ்.

* வியர்வை வழிந்துகொட்டும் என்பதால் மேக்கப்பில் கவனம் தேவை. லிக்விட் ஐலைனருக்குப் பதில் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா அல்லது ஐபென்சில் உபயோகிக்கவும்.

* வெயிலினால் கருமை படிந்தால் தயிரில் வெள்ளரி ஜூஸ், மஞ்சள் பொடி கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகம் பளிச்சென்று ஷைனாகும்.

* கைகள் கறுப்பாகிவிட்டதே என ஓலமிடாமல் சன்ஃபிளவர் ஆயில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ணினால் கைகள் பளபளக்கும்.

மட்டன் கோலாபுரி

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
தயிர் – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
பட்டை, லவங்கம் – 2
உப்பு – போதுமான அளவு
எண்ணை – 1 குழிக்கரண்டி

செய் முறை

* மட்டனைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளவும். மிளகாய் கீறிக் கொள்ளவும்.

* தனியா, இஞ்சி பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய் இவற்றை வறுத்து மிக்சியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* வேக வைத்த மட்டனையும், அரைத்த மசாலா விழுதையும் சேர்க்கவும். போதுமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

* மசாலா மட்டனுடன் சேர்ந்து நன்கு வெந்து வற்றியதும் இறக்கி விடவும்.

* டிரை ஆன பதத்தில் இறக்குவதால், இது கறுப்பு கலரில் இருக்கும். சாப்பிட சுவையானது இந்த மட்டன் கோலாபுரி.

உங்களுக்குத் தெரியுமா? விஸ்டாவிற்கும் டாட்டா

தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ, விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிற் கேற்றபடி மைக்ரோசாப்ட் வடிவமைக் கவில்லை. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் மட்டுமே இயங்கும்படி அமைத்துள்ளது. பலர் இது பற்றி குறை கூறிய பின்னரும், அது அப்படித்தான் என்று அறிவித்துள்ளது.
இப்போது இன்னொரு செய்தியும் வந்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விஸ்டாவில் கூட இயங்காது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் நவீன வசதிகளை மக்களுக்குப் பயன்படுத்தத் தர வேண்டும் என்ற நோக்கத்தில், புதிய கட்டமைப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 மற்றும் 10 உருவாக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதால், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தராமல் இருக்கக் கூடாது. அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மிகச் சிறந்த பிரவுசரைத் தந்து, இணைய உலாவினை நல்ல அனுபவமாக மாற்ற எண்ணுகிறோம். அந்த இலக்கு நோக்கி பயணிக்கையில், பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை விட்டுச் செல்லும் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இந்த முடிவு பல விஸ்டா பயனாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தி யுள்ளது.

மகாலட்சுமி மகிமை – புராணங்களில் மகாலட்சுமி

விஷ்ணுவின் நெற்றியிலிருந்து தோன்றிய தாமரை மலரில் மகாலட்சுமி தோன்றினாள். பாரதம், மகாலட்சுமி கடலிலிருந்து தோன்றினாள் என்கிறது.
விஷ்ணு புராணம், விஷ்ணு தாமோத்தரம் ஆகியவற்றில் மகாலட்சுமி பிருகு மகரிஷிக்கு மகளாகப் பிறந்தாள் என்றும், அவர்தான் நாராயணனுக்கு அவளை திருமணம் செய்து வைத்தார் என்றும் குறிப்பிடுகிறது. மகாலட்சுமி பூமியின் செழிப்புக்குக் காரணமானவள் என்றும், அவளே தான்ய விருத்திக்கு அருள்பாலிப்பவள் என்றும் ஸ்ரீஸுக்தம் கூறுகிறது. இவளுக்கு தான்யலட்சுமி என்றும் பெயர்.
தூற்றப்படாத நெற்பொலிக்கு “ஸ்ரீதேவி’ எனப் பெயருண்டு. நெற்பயிருக்கு “கிரிநாதன்’ எனவும், நெல் பயிரிடுவதற்கு “கங்காதேவி’ எனவும் பெயர் காணப்படுகிறது. செல்வத் தொடர்புடைய வைசியர்களுக்கு ஸ்ரீ என்ற அடைமொழியோடு (ஸ்ரீகுப்தன், ஸ்ரீபாலன் என்பன போல) உள்ள பெயர்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.
புத்த ஜாதகக் கதைகளிலும் செல்வர்களான வணிகர்கள் மகாலட்சுமியை வழிபட்ட செய்தியும் ஸ்ரீ என்ற அடைமொழியோடு ஸ்ரீவர்த்தகன், ஸ்ரீதாசன் என்றாற் போல வழங்கப்பட்ட செய்தியையும் அறிகிறோம். விஷ்ணு புராணம், மகாலட்சுமியே விஷ்ணுவை விரும்பிச் சென்றடைந்ததாகக் கூறுகிறது. சில புராணங்களில் அவள் பிரம்மாவின் மகளாகவும் “தாதா’ “விதாதா’ ஆகியோரின் தாயாகவும் கூறப்படுகிறாள்.
சதபதத்தில் லட்சுமி பிரஜாபதியின் பெண்ணாகச் சொல்லப்படுகிறாள். விஷ்ணுவையும் லட்சுமியையும் இணைத்து விஷ்ணுவுக்கு ஸ்ரீபதி, ஸ்ரீநிவாஸ, ஸ்ரீதர முதலிய பல பெயர்கள் சொல்லப்படுகின்றன. “லக்ஷ்மீ’ என்ற பெயரும் விஷ்ணுவுக்கு உண்டு.
லட்சுமி குபேரனுடைய அரச சபையில் எப்போதும் இருக்கிறாள் என்கிறது மகாபாரதம்.
மகிஷாசுரமர்த்தினி, மகாகாளி, ரோகிணி, விந்த்யா, வாஸினி, ரக்தந்தி, சாகம்பரி, துர்க்கா, பீமா என்ற பலவும் லட்சுமியின் தனி அவதாரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
விஷ்ணு புராணத்தில் ஓரிடத்தில் லட்சுமி, விஷ்ணுவை விட்டுப் பிரியாதவள் என்ற கருத்தும், மற்றோரிடத்தில் மாயையினால் தனியே பொன் உலோகமாக வடிவெடுத்து பகவானும் தானுமாக லட்சுமி இருக்கிறாள் என்ற கருத்தும் காணப்படுகின்றன. கிருத ஸுக்தத்தில் ஸ்ரீலட்சுமி ஒளபலா, அம்பிகா, சஷ்டி, ஜெயா, இந்திரசேனா என்பவர்களும், மூன்று சந்தியா காலங்களிலும் மூன்று விதமாக உபாசிக்கப்படும் காயத்ரியும் லட்சுமியின் அம்சம்தான் என்று வேதாந்த தேசிகர் குறிப்பிடுகிறார்.
சாத்வத சம்ஹிதையில் பகவான் “நான் அவளுக்கு ஆதாரமாக இருந்து வருகிறேன். எனினும் என்னுடைய சரீரம் அவளால் ஆகி அவள் உருவாக நிற்கிறது. அவளாலேயே எனக்குப் பெருமை வருகிறது’ என்று குறிப்பிடுகிறார். சனத்குமார சம்ஹிதை பகவானுடைய கருணையை ஆக்கிரமித்த சக்திதான் மகாலட்சுமி என்றும், மகாலட்சுமியே எல்லா சக்திகளுக்கும் தலைவி என்றும் குறிப்பிடுகிறது.
பாற்கடலில் தோன்றிய லட்சுமிக்கு திக்கஜங்கள் அபிஷேகம் செய்ததை அடிப்படையாகக் கொண்டு மகாலட்சுமி தாமரைப்பூவில் இருக்க, இருபுறமும் இரண்டு யானைகள் அமைந்த கஜலட்சுமி உருவம் மிகப் பழமையான இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், நாணயங்களிலும் காணப்படுகிறது.
ஸ்ரீமத் பாகவதத்தில் மும்மூர்த்திகளில் மேம்பட்டவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஏனைய முனிவர்களால் அனுப்பப்பட்ட பிருகு முனிவர் மகாவிஷ்ணுவின் மார்பில் காலால் உதைக்கவே, அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மகாவிஷ்ணுவை விடுத்த, அவர் மார்பில் இருந்த லட்சுமி பிரிந்து சென்று விட்டதாகக் கதை சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கதை வேங்கடாசலபதி மஹாத்மியத்திலும் இடம் பெற்றுள்ளது.
அதாவது விஷ்ணுவின் மனதை லட்சுமி கோயிலாகக் கொண்டுள்ளாள் என்பதே இதன் தத்துவம். ஆசாரியர்கள், மகாவிஷ்ணுவின் மார்பில் லட்சுமியின் கால்களில் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளம் இபுருப்பதால் அதைக் கொண்டே அவர் “லட்சுமிபதி’என்பதும், பரதேவதை என்பதும் முடிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

ஆன்மீக கதைகள் – பாபா சொன்ன கதைகள்!

பூரண சரணாகதி
கலப்பட நெய் விற்றதாக ஒரு வியாபாரிக்கு நீதிபதி தண்டனை விதித்தார்.
தீர்ப்பு:
அந்த நெய் முழுவதையும் அவனே குடிக்க வேண்டும். இல்லையேல் 100 கசையடி அல்லது 100 வராகன் அபராதம்.
மூன்றினுள் நெய் குடிக்கவே அவன் விரும்பினான். மூட்டை நாற்றம் வீசும் நெய்யைக் குடிக்க முடியவில்லை. கசையடியே பரவாயில்லை என்றான். ஒரு டஜன் கசையடிக்கு மேல் தாங்க முடியவில்லை. அபராதத்துடன் விட்டுவிடக் கோரினான்.
இதை அவன் முதலிலேயே வேண்டியிருந்தால் நாற்றம் பிடித்த நெய்யைக் குடிப்பதையும், பொறுக்க முடியாத வலியையும் தவிர்த்திருக்கலாம்.
இதுபோல் தான் துன்பம் வாட்டும்போது முதலிலேயே கடவுளை அணுகி பலன் பெறாமல் வேறு பல யுக்திகளைக் கடைப்பிடித்து, தோற்று, இறுதியில் இறைவனிடம் சரணாகதி அடைகிறார்கள்.

வியந்தேன். பயந்தேன்!
உலகத்தைச் சுற்றிவிட்டு திரும்பிய நாரதரிடம் பிரம்மா, “உலகில் நீ பார்த்த ஆச்சரியமான விஷயம் ஏதாவது உண்டா?’ என்று கேட்டார்.
“உண்டு. எல்லோரும் பாவத்தின் விளைவை எண்ணி பயப்படுகிறார்கள். அப்படி இருந்தும் பாவம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் புண்ணியத்தின் விளைவை கண்டு அதன்மேல் விருப்பம் கொள்கிறார்கள். ஆனால் புண்ணியச் செயல் செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதுதான் எனக்கு வியப்பாக இருந்தது!’ என்றார் நாரதர்.

ஆதாரம் தப்பினால் சேதாரம்!
அரசனும் தளபதியும் மந்திரியும் பெரிய வெள்ளத்திலிருந்து தப்பிக்க ஒரு படகில் ஏறிச் சென்றனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதைக் கண்டு மந்திரி பயந்து நடுங்கினான்.
அரசனும் தளபதியும் தைரியம் கூறினர். மந்திரி பயம் நீங்காமல் படபடப்போடு என்னென்னவோ சொன்னான். அவன் பேச்சைக் கேட்டு மற்றவர்களையும் பயம் தொற்றிக் கொண்டது.
இனியும் மந்திரி படகில் இருந்தால் சூழ்நிலைக் கெடுத்து விடுவான் என்று எண்ணிய தளபதி, அவனை வெள்ளத்தில் தள்ளிவிட்டார்.
தண்ணீரில் தத்தளித்த அவன், உடனே படகில் தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்று கத்த ஆரம்பித்தான்.
படகில் இருந்தவரைக்கும் அதன் பாதுகாப்பை உணராத அவன், படகிலிருந்து ஆற்றில் தூக்கி எறியப்பட்டதும் படகின் அருமையை உணர்ந்து கொண்டான். ஆதாரத்தின் மதிப்பினை உண்மையிலேயே அறிந்து கொண்டான்.
கடவுளே ஆதாரம், அடிப்படை பக்க பலம். உலகம் “ஆதேயம்’. அதாவது துணையாகப் பயன்படுவது. நம் மீது சுமத்தப்பட்டது.