Daily Archives: மே 23rd, 2011

மாற்று உறுப்புகளைப் பொருத்துவதில் முன்னேற்றம்!

உறுப்பு பொருத்துதல் சிகிச்சையின் (உறுப்பு மாற்றச் சிகிச்சை) வரலாறு இருபதாம் நூற்றாண்டில் தொடங்கவில்லை. கி.பி. முதல் நூற்றாண்டுகளுக்குப் பல நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்தியர்களிடம் அது தோன்றியது எனலாம். உறுப்புப் பொருத்துதல் பற்றிய குறிப்புகள் அன்று முதல் இன்று வரை கிடைக்கின்றன.

தொடக்க காலத்தில் வெற்றிகரமாக அமைந்த அறுவை முறைகள் `தன்னொட்டுகள்’ என்று அழைக்கப்பட்டன. அந்த அறுவை முறையில், ஒரு மனிதரின் உடம்பின் ஒரு பகுதி, அவரது உடம்பின் இன்னொரு பகுதியில் வைத்து ஒட்டப்படும்.

தோல், ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவற்றை ஒட்டுதலில் இவ்வகைச் சிகிச்சை மிகவும் மதிப்புடையதாக இருந்தது. ஆனால் ஒருவரின் நோய்வாய்ப்பட்ட இதயம் அல்லது ஈரல் மாற்றப்பட வேண்டும் என்றால், அந்த மாற்றம் மற்றொரு உறுப்பிலிருந்து செய்யப்பட வேண்டும். இவ்வாறு பெறப்படும் உறுப்பும், பெறுபவரின் உறுப்பும் ஒரே இனத்தைச் சார்ந்ததாக இருந்தால், அதை ஓரின ஓட்டு என்பார்கள். ஒரு மனிதனின் இதயத்தை மற்றொரு மனிதனுக்குப் பொருத்துவது ஓரின ஒட்டு. இறந்த நாயின் சிறுநீரகத்தை உயிருள்ள மற்றொரு நாய்க்குப் பொருத்துவதும் ஓரின ஒட்டே ஆகும்.

நாயின் உறுப்பை ஆட்டுக்கும், சிம்பன்சி குரங்கின் உறுப்பை மனிதனுக்கும் ஒட்டுகிற சிகிச்சையையும் மருத்துவர்கள் செய்து பார்த்துள்ளனர். இவ்வகை ஒட்டு, வேறின ஒட்டு எனப்படும்.

1950-ல் இருந்துதான் மனிதர்களுக்கு இடையேயான உறுப்பு மாற்றம் வெற்றிகரமாகச் செய்யப்பட்டு வருகிறது. 1954 அக்டோபர் மாதம், 24 வயது அமெரிக்க இளைஞரான ரிச்சர்டு ஹெரிக், சிறுநீரகப் பழுதால் பாஸ்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தார். அப்போது அவரது சகோதரரான ரொனால்டு (இருவரும் இரட்டைப் பிறவிகள்) தனது ஒரு சிறுநீரகத்தை அளித்தார். இரண்டு மணி நேர அறுவைச் சிகிச்சையில் ரொனால்டின் சிறுநீரகம் அகற்றப்பட்டு ரிச்சர்ட்டின் வயிற்றில் வைத்துப் பொருத்தப்பட்டது.

அதற்கு முன் நடந்த சிறுநீரகப் பொருத்தும் முயற்சிகள் தொழில்நுட்ப அளவில் வெற்றிகரமாக அமைந்தது என்றாலும் புதிதாகச் சிறுநீரம் பெற்றவர்கள் சில வாரங்களுக்குள் இறந்து போயினர். புதிய சிறுநீரகத்தோடு நíண்ட நாட்கள் வாழ்ந்த முதல் நோயாளி ரிச்சர்டுதான்.

அன்றாட வாழ்வில் வேதியியலின் பங்கு

2011-ம் ஆண்டு சர்வதேச வேதியியல் ஆண்டு. காலையில் பற்பசையில் பல்துலக்குவது முதல் இரவில் தூங்குவதற்குப் பிளாஸ்டிக் பாயைப் பயன்படுத்துவதுவரை நம் அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் வேதியியல் முக்கிய பங்கு வகிக்கிறது.  வேதியியலின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தவும், நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் பின்னுள்ள வேதியியல் தத்துவத்தைப் புரிந்துகொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தவும் இந்த ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.  ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி க்யூரி அம்மையாருக்கு வேதியியல் துறையில் நோபல் பரிசு கிடைத்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த சர்வதேச வேதியியல் ஆண்டு அமைவதால் அறிவியல் வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை உணரவும், உணர்த்தவும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  நமக்கும், வேதியியலுக்கும் உள்ள உறவு நம் மூச்சுக்காற்றிலேயே கலந்துள்ளது. காற்றிலுள்ள ஆக்சிஜன் நாம் உயிர் வாழக் காரணம். எனினும், தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனைக் கொண்டு மீன்கள் சுவாசிக்கும்போது நம்மால் தண்ணீரில் சுவாசிக்க முடிவதில்லை. இன்று, வேதியியல் வளர்ச்சியால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கடலின் அடிஆழத்தையும், இமயமலை சிகரங்களையும், காற்று மண்டலமே இல்லாத விண்வெளி மற்றும் நிலவையும் எட்டிப்பிடித்திருக்கிறோம். இவ்வாறு தன்னைச் சுற்றியுள்ள வேதியியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டதே, மனித இனம் இந்த அளவுக்கு வளர்ச்சியடையக் காரணமாகும்.  நாம் சுவாசிக்கும் காற்று மட்டுமன்றி, குடிக்கும் தண்ணீரும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் இணைந்த வேதிப் பொருளாகும்.  இதேபோல் நாம் உண்ணும் உணவுப் பொருள்களும், பயன்படுத்தும் மருந்துப்பொருள்களும் வேதிப்பொருள்களால் ஆனவை ஆகும். வேதியியலுக்கும், நமக்குமான உறவு கருவிலிருக்கும்போதே தொடங்கி விடுகிறது, கருவிலிருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளைத் தருகிறார் மருத்துவர். கால்சியம், எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.  இரும்புச்சத்து, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி ரத்தசோகை வராமல் காக்கிறது. ஃபோலிக் அமிலம், புதிய ஆரோக்கியமான செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது.  கருவுற்ற சில தாய்மார்கள் சத்து மாத்திரை சாப்பிட்டால் கருவிலிருக்கும் குழந்தை குண்டாகி, பிரசவம் சிரமமாகிவிடும் என தவறாக நினைத்து மாத்திரை சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள்.  கருவிலிருக்கும்போதும், வளரும் பருவத்திலும் குழந்தைகளுக்கு இந்த சத்துகள் மிகவும் அவசியம். உண்மையில் இந்த சத்துகள் குறைந்தால் குழந்தையின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். இதுகுறித்து தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட் மற்றும் பிஸ்கட்டுகளில் இந்த சத்துகளைக் குறிப்பிட்ட அளவில் கலந்தே தயாரிக்கிறார்கள்.  அதேபோல கருவுறும் வயதிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. நமது நாட்டிலும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.  உடல்நலம் குன்றும்போது நம் உயிர்காக்கும் அனைத்தும் வேதியியலின் நன்கொடையே ஆகும். சாதாரண தலைவலி, காய்ச்சலைக் குணமாக்கும் பாரசிட்டமால் மாத்திரைகள் முதல் கொடிய பாம்பு கடியிலிருந்து நம் உயிரைக் காப்பாற்றும் விஷமுறிவு மருந்து வரை வேதியியல் மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகளாக உதவுகின்றன. அதேநேரம், இவற்றை நாம் கவனமாகப் பயன்படுத்தாவிடில் உயிர் குடிக்கும் எமனாகவும் மாறிவிடக்கூடும்.  எடுத்துக்காட்டாக, பாம்பு கடிக்குக் கொடுக்கப்படும் விஷமுறிவு மருந்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி நாமே மருந்துகள் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது.  அதேபோல பாம்பு கடிக்கு ஆளானவரை எந்த வகைப் பாம்பு கடித்தது என்று மருத்துவரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், நல்லபாம்பின் விஷம் நரம்புமண்டலத்தை செயலிழக்கச்செய்யும் புரதத்தாலானது. விரியன் பாம்பின் விஷமோ ரத்த சிவப்பணுக்களை அழித்து திசுக்களைச் செயலிழக்கச்செய்யும் புரதத்தாலானது. எனவே அவற்றுக்குக் கொடுக்கப்படும் விஷமுறிவு மருந்துகளும் வெவ்வேறு வகையானவைகளாகும்.  2011 – சர்வதேச வேதியியல் ஆண்டின் மையக்கரு “”வேதியியல் – நம் வாழ்வு, நம் எதிர்காலம்” (இட்ங்ம்ண்ள்ற்ழ்ஹ் – ஞன்ழ் ப்ண்ச்ங், ஞன்ழ் ச்ன்ற்ன்ழ்ங்) என்பதாகும். ஆதிகாலம் தொட்டே மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய செம்பு, இரும்பு போன்ற உலோகங்களிலிருந்து இன்று நம் வாழ்வை ஆக்கிரமித்துள்ள பாலித்தீன் வரை மனித இனத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் வேதியியலின் பங்கு முக்கியமானதாகும். சிந்தித்துப் பார்த்தோமானால் நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் வேதியியலின் துணையின்றி உருவாக்கியிருக்க முடியாது.  நமது எதிர்கால முன்னேற்றமும் வேதியியலைச் சார்ந்தே இருக்கும். எனவே பொதுமக்களிடம் வேதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இளம்பருவத்தினரிடம் வேதியியலின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை ஆய்வுகள் செய்யத் தூண்டுவதும், நம் வாழ்விலும், வளர்ச்சியிலும் வேதியியல் ஆற்றியுள்ள பங்கினை அனைவருக்கும் உணர்த்துவதும் இந்த சர்வதேச வேதியியல் ஆண்டில் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும்.  வேதியியல் என்ற ஒளிவிளக்கை அழிவுக்காகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஆக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்துவோம்.

கோழி கொழுப்பில் விமான எரிபொருள்!

பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை ஏறி வருகிறது. அதற்காக கார், பைக் ஓட்டாமல் இருக்க முடியுமா? எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை. அதே நேரம்.. ‘பயன்பாட்டை குறையுங்கள், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது’ என்கிறார்கள் ஆர்வலர்கள். மாற்று எரிபொருள் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விலங்குகளின் கொழுப்பில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விமான எரிபொருள் தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நாசா ட்ரைடன் விமான ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பாக தீவிர ஆய்வு நடத்தியது. கோழி மற்றும் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ எரிபொரு ளை விமானத்தில் பயன்படுத்தி சோதனை நடத்தியது.

முதல் கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக எரிபொருளில் உள்ள நச்சுத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற் றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருள் பயன்பாட்டு அங்கீகாரம் நிராகரிக்கப்படும். இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த பரிசோதனையிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது.

இறுதிக்கட்டமாக நிறம், தரப் பரிசோதனைக்கு எரிபொருள் உட்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்பேட், ஆர்கானிக் ஏரோசால், உள்ளிட்ட ஜெட் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்ப டுகிறது.

சிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்

உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப்யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செயலில் இறங்க வேண்டாம். இந்த வகை சிக்கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம், கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவைகளைக் காணலாம். கம்ப்யூட்டரின் திறனை இதன் மூலம் கண்காணித்து, நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம் களை மூடலாம். நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு இருந்தால், அதனுடன் இணைக்கப் பட்ட பயனாளர்களின் செயல்பாடு களைக் காணலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஒரே நேரத்தில் எத்தனை புரோகிராம் களையும் இயக்கலாம். கம்ப்யூட்ட ரில் உள்ள மெமரி மற்றும் ப்ராசசர் திறன் அளவுதான், ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய்திடும். விண்டோஸ் இயக்கமானது, எப்போது எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது, திடீரென முடங்குகிறது. இந்த வேளையில் தான், நாம் டாஸ்க் மானேஜரின் உதவியை நாடலாம்.
டாஸ்க் மானேஜரை இயக்கும் வழி: பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். Ctrl-Shift-Esc அழுத்தலாம். Ctrl-Alt-Del அழுத்திப் பின்னர் Start Task Manager இயக்கலாம். அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager தேர்ந்தெடுக்கலாம்.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில், எந்த டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தாலும், கீழாக, கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப் படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.
டாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில், Applications, Processes, Services, Performance, Networking, and Users ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் Applications, Processes, Services ஆகிய டேப்கள்தான் நாம் கம்ப்யூட்டரின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டி ருக்கின்றன. முதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும்போது, Applications டேப் நமக்குக் காட்டப் படும். கம்ப்யூட்டரில் இயக்கப் பட்டு, டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோகிராம்கள் (எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ்,யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்பட மாட்டாது. ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால், அதனைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து மெனுவில் உள்ள End Task பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில், மிக முக்கிய மானது, அதில் உள்ள Status பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங்கிக் கொண்டிருக் கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டாத புரோகிராம்கள் “Not Responding” எனக் காட்டப்படும். இது போன்ற இயக்கத்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை, அதன் வலது மூலையில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம், புரோகிராமினை நிறுத்தலாம்.
டாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு Processes டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன்படுகின்றன. இதன் மாறா நிலையில், Image Name (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), User Name (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), Memory (செயல்முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்), மற்றும் Description (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப்படுகின்றன. இதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால், கீழே காட்டப்படும் தகவல்கள், வரிசைப்படுத் தப்படும். பயனாளர் எனில், அகர வரிசைப்படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில், அதிக அல்லது குறைவாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களிலிருந்து வரிசைப்படுத்தப் படும். கம்ப்யூட்டர் மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால், அல்லது நம் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், மெமரி டேப் கிளிக் செய்து, ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால், அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து, அதன் இயக்கத்தினை இங்கேயே மூடலாம். இதே முறையில் சி.பி.யு. பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.
இதே போல Services டேப் மூலம், சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். (“stopped” or “running”) இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம்; நிறுத்தப்பட்டிருப்பதைத் தொடங்கலாம். பிரச்னைகள் ஏற்படுகையில், ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி, பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்துகையில், பிரச்னை தீர்க்கப்பட்டு, கம்ப்யூட்டர் வழக்கமான இயக்கத்திற்கு வருகிறதோ, அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு, அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொடங்கலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர், பல பயன்களைத் தரும் ஒரு சாதனமாகும். பொறுமையாகக் கையாண் டால், பல தீர்வுகளை இதன் மூலம் பெறலாம்.

உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’

`கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்று நமக்கு தெளிவாகத் தெரியாது. ஆனால், `நாம் இருக்கிறோம்’ என்பது நமக்கு நன்கு தெரியும். அதனால், முதலில் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நம் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, `நான் யார்?, எனது செயல்கள் எப்படிப்பட்டவை? எனது குறிக்கோள் என்ன? அதை அடைய நான் செய்து கொண்டிருக்கும் முயற்சி என்ன?’ என்பது போன்ற கேள்விகளுக்கு விடை!

இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் போது இறுதியில், அந்த `நான்’ என்பதற்கான விடை உங்களுக்கு கிடைக்கிறது. அப்போதுதான் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவரோடு நாம் ஒன்றாயிருக்கிறோமா, அவருடைய அம்சமாக இருக்கிறோமா அல்லது வேறாக தனித்து இருக்கிறோமா என்று தெரியவரும்.

எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம். ஒரே ஒரு நினைப்பை மட்டும் விடாப்பிடியாக எண்ணத்தில் வைத்து, அப்படியே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால், மற்ற நினைவுகள் அகன்று விடும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது மனவலிமையை பெற்று விடலாம்.

ஒவ்வொருவருடைய இயல்புக்கு தக்கவாறு தியான முறைகள் மாறுபடுகின்றன. அகப்பயிற்சி செய்து வருபவர்கள் நேரடியாக ஆன்ம விசாரணையைத் தொடங்கலாம். இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால், வேறு எந்த எண் ணங்களும் மனதில் எழுவதில்லை. ஒவ்வொரு வருடைய எண்ண அலைகளின் ஆற்றலானது அவற்றின் முக்கிய விருப்பத்திற்கேற்ப, நன்மை அல்லது தீமையை உண்டாக்கும். அதேபோல், அந்த எண்ணங்களைப் பற்றிய நினைப்பில் உள்ளவர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என்கிறார், ரமணர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒருவன் செயல்களில் மட்டும் அல்லாது எண்ணங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். “ஒரு பெண்ணைக் காமம் கலந்த பார்வையுடன் பார்ப்பதும் பாவம். அது அந்தப் பெண்ணுடன் கூடா ஒழுக்கம் கொள்வதற்குச் சமம்” என்கிறார், இயேசு.

நேரடியான ஆன்மவிசாரணைக்கு சிறந்த வழி, அதற்கு முதலில் நாம் யார் என்பதைத் தெரிந்து கொள்வது தான்.

நாம் தூங்கிக் கொண்டு இருக்கும்போது உலகம் மறைந்து விடுகிறது. எழும்போது மனம் விழித்துக் கொள்கிறது. அதனால், உலகம் வந்து விடுகிறது. அதனால், உலகமே மனதை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகிறது. ஆனால், மனமற்ற ஆழ்ந்த தூக்க நிலையிலும் நாம் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த நிலையில் இருப்பதைப் போல நாம் எல்லா நிலைகளிலும், தொடர்ந்து இருக்கும்போது தான் தன்னை உணர முடியும்.

கலைஞர் டிவியின் பங்குதாரராக நான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருணாநிதி

கனிமொழி விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருக்க ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும்போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது சொல்லப்போவது அதைப்போன்ற “சுய புராணம்” அல்ல. சுயபுராணத்தைத்தான் “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பில் ஐந்து பாகங்கள் எழுதி முடித்திருக்கிறேனே. இப்பொழுது நான் எழுதப்போவதை அடுத்த பாகத்தின் முன்னுரை என்று கருதிக்கொண்டாலும் சரி, அதற்கிடையே எழுந்துள்ள “மன ஓலம்” என்று எண்ணிக் கொண்டாலும் சரி, இந்தச் சூழலில் இவற்றை நான் ஞாபகப்படுத்தியே தீர வேண்டும்.

நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக்கொண்ட தொகுதிகளின் கணக்கா? தமிழ்நாட்டிற்கென்றே தனியான “ஜபர்தஸ்து”களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார “பாட்டை” வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ்நாட்டிலேயே அதிகார செல்வாக்கைப் பெருக்கி – “ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம்” என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல, இப்போதும்கூட அந்த பிரச்சாரத்தை ஏடுகள் வாயிலாக, ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக்கொண்டிருக்கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப்புழுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன். தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்தி கொண்டு, ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவசாயியாகவும் இசைமேதைகளில் ஒருவராகவும் இருந்த – முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான்.

நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

பதினான்கு வயதிலேயே “பனகல் அரசரை” படித்து “படிக்க முடியாது கட்டாய இந்தியை” என்று மொழிப்போரில் புகுந்து, அதற்கு அடுத்தடுத்த தொடர் களங்கள் பலவற்றைச் சந்தித்து ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், 12 முறை தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று – பொன்விழாக்கள், பவளவிழாக்கள் கொண்டாடியும்கூட, இலக்கியவேந்தர், கலை வேந்தர் என வேந்தர் பட்டங்களை பெற்றாலும்கூட, வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான்தொடும் மாளிகைகளுக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக்கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமல்ல

அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், “தமிழுக்கு தொண்டு செய்வோன்”, “தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்” என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்ப சம்பாதித்தேன். என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை, பொருளீட்டியது உண்டு. அந்தப்பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.

நான் முதலில் எழுதி, நானும் நடித்த “சாந்தா அல்லது பழனியப்பன்” எனும் நாடகத்தை – 1940-களில் நூறு ரூபாய்க்கு விற்று, அந்தப்பணத்தை என் குடும்பச்செலவிற்கு மட்டுமல்லாமல், அடுத்த நாடகத்திற்கான முன் செலவுகளுக்கும் ஆரூர் நடிகர் கழக அமைப்புக்கும் அளித்தேன். அதைத்தொடர்ந்து, கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த “ராஜகுமாரி” படத்திற்கும், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மந்திரி குமாரி”, “தேவகி” போன்ற படங்களுக்கும் நான் வாங்கிய பணம் மாதச்சம்பளமாக இருந்ததால் அந்த ஊதியத்தை, வருமானவரி போக மிச்சப்பணத்தை தான் தந்தார்கள்.

பின்னர் “பராசக்தி”, “மனோகரா”, “மலைக்கள்ளன்”, “இருவர் உள்ளம்”, “மருதநாட்டு இளவரசி” – “திரும்பிப் பார்”, “பணம்”, “நீதிக்குத் தண்டனை”, “இளைஞன்” என்றெல்லாம் தொடர்ந்து தற்போது “பொன்னர்-சங்கர்” வரையில் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன்.

பிரசாத் இயக்கத்தில் உருவான “தாயில்லா பிள்ளை” மற்றும் “இருவர் உள்ளம்” படங்கள் நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக பிரசாத் வாக்களித்து, அவ்வாறே நூறுநாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர் தந்த பத்தாயிரம் ரூபாயை கொண்டு என்னை பெற்றெடுத்த திருக்குவளையில் – “முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி” கட்டி அந்நாள் முதல்-அமைச்சர் பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்புவிழா நடத்தினேன்.

அப்பொழுது நான் எழுத்தாளர் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினரும் கூட (எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தவன்). இதே போல நான் எழுதிய படங்கள் அனைத்திலும் பெற்ற ஊதியத்தில் திருவாருக்கு அடுத்த காட்டூரில் சிறிதளவு நஞ்செய் நிலம் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டது போக மிச்சத்தை நலிந்தோருக்கே வழங்கினேன். காட்டூரில் ஆரம்பப் பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அப்போதே நிதியளித்து அந்தக் கிராமப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன்.

கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது அண்ணாவின் ஆணைப்படி, தமிழகத்தில் ஊர்தோறும், நகர்தோறும், பட்டி தொட்டி, குக்கிராமம் என செல்லாத இடமில்லை என்ற அளவிற்குச் சென்று – கழகக் கொடியேற்ற, கழகத்தினர் இல்லத்தில் உணவருந்த என்பதற்கெல்லாம் கட்டணம் விதித்து – சென்னை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அண்ணாவிடத்தில், மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி.ராமமூர்த்தி, பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே.மூக்கையா தேவர் ஆகியோர் முன்னிலையில் 11 லட்சத்தை தேர்தல் நிதியாக அளித்தேன். வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி, இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும்-வசூலித்து தந்தும் தொண்டாற்றியவன்தான் நான்.

2004-2005-ம் ஆண்டில் “மண்ணின் மைந்தன்” திரைப்படத்திற்காக 11 லட்சம் ரூபாயும், “கண்ணம்மா” திரைப்படத்திற்காக 10 லட்சம் ரூபாயும் கிடைத்ததை சுனாமி நிவாரண தொகையாக -அப்போதிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் மூலமாக நேரடியாக கொடுக்க செய்தேன். 9-7-2008-ல் “உளியின் ஓசை” திரைப்படத்திற்காக எனக்கு தரப்பட்ட 25 லட்சம் ரூபாயில் ஏழு லட்சம் ரூபாய் வருமானவரிபோக மீதத்தொகை 18 லட்ச ரூபாயை அன்று கலையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவிநிதியாக – கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன்.

17-9-2009இல் “பெண் சிங்கம்” திரைப்படத்திற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத்தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததை யொட்டி, அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 லட்சம் ரூபாய் என்று கூறிய போது என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 லட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29-10-2009 அன்று வழங்கினேன். 27-4-2010 அன்று “இளைஞன்” திரைப்படத்துக்காக வருமானவரி போக 45 லட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்த தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து பிறகு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்த தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது.

“பொன்னர் -சங்கர்” திரைப்படத்திற்காக 8-9-2009-ல் 10 லட்சம் ரூபாயும், 6-6-2010-ல் 121/2 லட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்த படத்திற்காக தரப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாயில் வரியாக 21/2 லட்சம் ரூபாய் போக எஞ்சியத்தொகை 221/2 லட்சம் ரூபாயாகும். இந்த தொகையிலிருந்து காவல் துறையிலே விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.

கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக, நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெயரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளிலும், மாலைக்கு பதிலாகவும், பொன்னாடைகளுக்கு பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலே சேர்த்திருக்கிறேன்.

ஈழத்தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன் “சன்” தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப்பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்கு கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை” ஒன்றினை கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது.

11-1-2007 அன்று நடைபெற்ற 30-வது புத்தக கண்காட்சி விழாவில் நான் பேசும்போது -இந்த 5 கோடி ரூபாயிலிருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே அந்த சங்கத்துக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு-அந்த சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் பொற்கிழி வழங்கிட கூறியுள்ளேன்.

இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக்கொண்டு “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.கழக சார்புடைய “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை”க்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித்தொகையிலிருந்து-கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மேமாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது.

“சன்” தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில்-“கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை”க்கு அளித்த 5 கோடி ரூபாய் போக எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வைப்புநிதிக்கு கிடைத்த வட்டித்தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச்செம்மொழி நிறுவனத்திற்கு 26-7-2008 அன்று வழங்கி அந்த தொகையிலிருந்து கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.

கோவையில் நடைபெற்ற உலக தமிழ்மாநாட்டின்போது முதன் முறையாக இந்த விருது பின்லாந்து நாட்டு தமிழ்அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு பத்து லட்ச ரூபாய் பொற்கிழியாக நன்கொடையுடன் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக்கூட ஏழை-எளியவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

“சன்” தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி – 18-10-2005 அன்று “சன்” தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் – 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி – புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் “தர்ப்பைப் புல்” முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

உடன்பிறப்பே, உனக்கும் இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், உன் தமையன் நான் “சுயபுராணம்” இது என்றாலும் சுயமரியாதைப் புதினமாக இதைக் கருதி இந்தக் கடிதத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒவ்வொரு வரியாக நீ படித்து, சிந்தித்து, புரிந்துகொண்டு, செயல்படுத்துவாயானால் தன்மானக் கழகமாம் தமிழர்நலம் தேடும் இந்தப் பாசறை அறப்போர்க் கணைகளை ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வடிவில், தம்பி தங்கைகள் உருவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது திண்ணம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி-Oneindiatamil

எக்ஸெல் டிப்ஸ்-பைலை மறைக்கவும் திறக்கவும்

பைலை மறைக்கவும் திறக்கவும்
எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும். நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டு விடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.
சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து பணியாற்றலாம்.
இப்போது ஒரு சந்தேகம் உங்களூக்கு வரலாம்? மறைக்கப்பட்ட பைலை மீண்டும் கொண்டு வராமல் எக்ஸெல் புரோகிராமை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அடிப்படையில் பார்க்கையில் எக்ஸெல் புரோகிராமை மூடும்போது, அப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைலை பதியவா என்று கேட்கும். மற்ற பைல்களை மூடும்போது சேவ் செய்ய அல்லது வேண்டாம் என நினைத்தால் அதற்கேற்றார்போல் யெஸ் / நோ கொடுத்து வெளியேறலாம்.
இங்கே வேறுபாடு என்னவென்றால் நீங்கள் மறைத்து பின் மீண்டும் திறக்காமல் விட்ட பைலைத் திறக்க பின்னொருமுறை கட்டளை கொடுத்தால், பைல் திறந்து உடனே மறைக்கப் பட்டுவிடும். மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் பட்டனை அழுத்த பைல் மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கும். எனவெ அய்யோ போய் விட்டதே! என்ற கவலை வேண்டாம்.

ஒர்க்ஷீட்டின் இறுதி வரிசை
எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க்ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் அமைத்த ஒர்க் ஷீட் ஒன்றில் A20 செல் கீழாக, இறுதியானதாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் மூன்று படுக்கை வரிசைகளையும், ஒரு நெட்டு வரிசையினையும் இடையே நீக்குகிறீர்கள். இப்போது Ctrl+End கீகளை அழுத்தினால், கர்சர் A17 செல்லுக்குத் தானே செல்லும் என்று எதிர்பார்க் கிறீர்கள். இல்லை. அதற்குப் பதிலாக A20 என்ற செல்லுக்கே செல்லும். இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றம், பைலில் பதியப்படாததே ஆகும். எனவே, மாற்றத்திற்கேற்ற வகையில் இறுதி செல் காட்டப்பட வேண்டும் என்றால், பைலை சேவ் செய்தால் போதும். மாற்றத்தின் அடிப்படையில் கடைசி செல்லைக் காட்டும்.

பைலை மற்றவர்கள் மாற்றாமல் இருக்க
எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.
Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இரண்டு அடிக்கோடுகள்
எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான யு ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + யு அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அன்டர்லைன் அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அண்டர்லைன்களை Underline பகுதியில் காணலாம்.

என்னதான் செய்யும் திமுக!

இந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை விட இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை.÷””தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்” என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.÷””நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்” என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.÷””தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் “இதுதான் எனது கடைசித் தேர்தல்’ என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது” என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை.  அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். “கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்?’ என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், “20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்?’ என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.÷””இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்” என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.÷””ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். “”2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?’ ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.÷””ராசா ஒரு “தலித்’ என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?” தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த “தலித்’ ஒருவரின் குமுறல் இது. ÷””தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள்.  சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்” என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.÷””ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்” என்பதுதான் பரவலான கருத்து.÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது “ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற கதையாகத்தான் இருக்கும்.÷””தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை” என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.÷திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது. கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை. திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, “விதிவிட்ட வழி’ என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்று வலியுறுத்தினார்? என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்!

நன்றி-தினமணி

பழமொழி பலவிதம் – அர்த்தமுள்ள பழமொழிகள்!

பந்திக்கு முந்து படைக்கு பிந்து
தமிழர்கள் வீரம் மிகுந்தவர்கள். அக்காலத்தில், பிறந்த குழந்தை இறந்தால் கூட. அதன் மார்பை கீறித் தான் புதைப்பார்கள். அவ்வளவு வீரம் விளைந்த மரபில் படைக்கு பிந்து என்ச் சொல்லியிருப்பார்களா?
பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்தி (முன்னதாக) உணவு பரிமாற வேண்டும்.
படைக்கிறவர்கள் (அதாவது விருந்து படைக்கிறவர்கள்) பிறகு சாப்பிடலாம் என்பதை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து எனக் கூறினார்கள்.
போருக்குச் செல்பவன் நேரமாகவே சாப்பிட்டு விட்டு (சாப்பிட்டவுடன் போருக்குச் சென்றால் களைப்படைந்துவிடுவான்) படை நடத்துபவனுக்கு பின்புலத்திலிருந்து ஆயுதங்களைக் கொடுத்து உதவி செய்யவும்; தேவைப்படும்போது தேவையான ஆயுதங்களைக கொடுக்கும் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பது இதன் இன்னொரு அர்த்தம்.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்
சமைக்கும் போது பத்திப்போன சாப்பாடாக இருந்தாலும், பசியோடு இருப்பவன் கவனிக்காமல் சாப்பிட்டு விடுவான் என்பது போல தோன்றினாலும், ஈகை, இன்சொல், அறிவுடைமை, காதல், தவம், தொழில், தானம், கல்வி, மானம், குலப்பெருமை ஆகிய பத்து குணங்களும் பசி வந்திட பறந்து போகும் என்பதுதான் உண்மை.
இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆறு வயதிலும் மரணம் வரலாம்; நூறு வயதிலும் மரணம் வரலாம். ஆற்றில் போய் விழுந்தவனும் செத்தான்; நூல் நூற்று (கயிறு திரித்து) கழுத்தில் மாட்டியவனும் செத்தான். சாவை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளலாம் என்போர் சிலர். கர்ணன் கதையில் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாக நான் இருந்தாலும் எனக்கு சாவுதான்; நூறு கௌரவர்களோடு இருந்தாலும் எனக்கு சாவுதான் என குந்திதேவியிடம் கர்ணன் சொன்னதாக கர்ண பரம்பரை கதைகள் உண்டு.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
மேலோட்டமாகப் பார்த்தால் இதற்கு எதற்கு ஒரு பழமொழி? இது எல்லோருக்கும் தெரிந்தது தானே எனத் தோன்றும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என இதற்கு உண்மையான விளக்கம் தருகிறார், வாரியார் சுவாமிகள்.
இதையே ஒருவன் வேடிக்கையாக இவ்வாறு குறிப்பிட்டார். குழந்தை இல்லாதவர்கள் சந்தான லட்சுமியை வேண்டுவார்கள். அந்த லட்சுமி கையில் ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கும். அதனால்தான் அவள் பெயர் “SON’ தான லட்சுமியாம். அந்த அழகான குழந்தையைத் தானமாக தருவாளாம்.