Daily Archives: மே 28th, 2011

அலுவலகக் குறிப்பு `மினிட்’ எனப்படுவது ஏன்?


அலுவலகக் கூட்டங்களில் எடுக்கப்படும் குறிப்புகளை ஏன் `மினிட்’ என்கிறோம் தெரியுமா? குறிப்பு எடுப்பவர் சுருக்கெழுத்து அல்லது சுருக்கமான சொற்களில் அலுவலக அல்லது ஆலோசனைக் கூட்டங்களில் நடைபெறுபவற்றை குறிப்பு எடுத்துக்கொள்வார்.

அவை சுருக்கமானவை என்ற பொருளில் `மைன்யூட்’ என்று குறிப்பிடப்பட்டன. நிமிடத்தைக் குறிப்பதும் இதே சொல்தான்.

இரண்டும் ஒரே எழுத்து களாலான சொற்கள் என்பதால் `மைன்யூட்’ என்பது ` மினிட்’ என்றே சொல்லப்படுகிறது.

ரத்த சோகையை தடுக்கும் கீரைகள்

கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை..

கீரையில் அப்படி என்ன இருக்கிறது…

* கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.

* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

* கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

சாப்பிட வேண்டிய அளவு

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்…

* பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.

* பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.

* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.

* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.

சத்துக்கள் முழுவதும் கிடைக்க…

* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.

* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.

* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.

* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.

* நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!

எச்.சி.எல். தரும் புதிய டேப்ளட் பிசி

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியாவில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறுவனம் அண்மையில் மூன்று புதிய “Me” டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.14,990 லிருந்து ரூ.32,990 வரை உள்ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப்ளட் பிசி இருப்பதால், இதனை வாங்கிப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்த எண்ணுபவர்கள் தயக்கமின்றி வாங்க எண்ணுவார்கள்.
இவற்றில் விலை குறைந்தது HCL Me AE7A1 என்ற டேப்ளட் பிசி ஆகும். ஏழு அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், 800 x 480 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. இதன் டிஸ்க் கொள்ளளவு 2 ஜிபி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.எஸ். ரிசீவர், 2400 ட்அட திறன் உள்ள பேட்டரி ஆகியன உள்ளன.
மேலே சொல்லப்பட்ட மூன்றில், சிறந்தது எனப் பலராலும் கருதப்படுவது HCL Me AM7A1 டேப்ளட் பிசியாகும். கேலக்ஸி டேப் டேப்ளட் பிசியின் விலையை ஒட்டி ரூ.22,990 என இது விலையிடப் பட்டுள்ளது. ஏழு அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 1024×600 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் செயல்படுகிறது. இதன் உள் நினைவகம் 512 எம்பி ராம். 8 ஜிபி டிஸ்க் கொள்ளளவு உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 இயங்குகிறது. ஹை டெபனிஷன் வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது. இதன் பேட்டரி திறன் 4200 mAh.
HCL Me AP10A1 டேப்ளட் பிசி, இந்த மூன்றில் விலை கூடுதலானதும், பெரிய அளவிலா னதுமாகும். 10 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை உள்ளது. இதில் இயங்கும் Cortex A9 ப்ராசசர் 1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. உள் கொள்ளளவும் 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் சப்போர்ட்டும் கிடைக்கிறது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 3650 mAh திறன் உள்ள பேட்டரி அதிக நேரம் பவர் தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ. இதன் அதிக பட்ச விலை ரூ.32,990. இவற்றை http://www.hclstore.in/ME_tablet என்ற முகவரியில் இயங்கும் இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.