Daily Archives: மே 29th, 2011

தாவரங்களின் நுண்ணறிவு!

தாவரங்களுக்கும் நுண்ணறிவு உண்டு என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் கிளி பாக்ஸ்டர் என்பவர் தற்செயலாக தாவரங்களின் மர்மங்களை அறிந்துகொள்ள நேரிட்டது. ஒருசமயம் அவர் காவல் துறையினருக்கும், பாதுகாப்புப் பணிபுரிபவர்களுக்கும் பொய்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு விந்தை நிகழ்வை அவர் கண்டார்.

பொய்யைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் `பாலி கிராப்’ (Polygraph) என்னும் கருவி இணைக்கப்பட்ட தாவரத்தைப் பற்றி பாக்ஸ்டர் எண்ணியபோதெல்லாம் அந்தக் கருவியில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அவருடைய எண்ணங்களை தாவரம் பெற்றுக் கொண்டு தனது உணர்ச்சிகளைக் கருவிக்கு அனுப்பியிருக்கிறது. அவருடைய எண்ணங்களைத் தாவரம் நன்கு புரிந்துகொண்டு, கருவி மூலமே சரியான முறையில் விளக்கமும் அளிக்க ஆரம்பித்தது.

தாவரத்தின் உணர்ச்சியை அறிவதற்கு பாக்ஸ்டர் மற்றொரு சோதனையை நடத்தினார். அந்தத் தாவரத்தைக் கொளுத்திவிடலாம் என்று அவர் நினைத்தபோதெல்லாம் கருவியில் உள்ள ஊசி நடுங்க ஆரம்பித்தது. தாவரம் தனது பயத்தைத் தெரிவிப்பது போலத் தெரியும் அதன் உணர்ச்சியைக் கருவியின் ஊசியிலே காண முடிந்தது. ஆக, எண்ணங்களைக் கண்டுபிடிக்கும் திறன், தாவரத்திடம் அமைந்திருந்ததை பாக்ஸ்டர் கண்டுபிடித்தார்.

அறிவியல் காரணம்


டந்த நான்கு நூற்றாண்டுகளை அறிவியலின் அதிதீவிர வளர்ச்சிக் காலமாக கூறலாம். இருபதாம் நூற்றாண்டை அறிவியல் நூற்றாண்டு என்றே சிறப்பித்துக் கூறுவார்கள். நியூட்டன் புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது, கோபர்நிகஸ் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தது, டார்வின் பரிணாம வளர்ச்சியை விளக்கியது, எடிசன் மின்விளக்கால் உலகை ஒளிரச் செய்தது என ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மனித சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவை. ஆனால் நமக்கு இன்னும் பல சாதாரண நிகழ்வுகளுக்கு கூட சரியான அறிவியல் காரணம் தெரியாது!

***

சி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால் சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா? தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் வேறுபடுவதுதான் காரணம். சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ஈர்ப்பு மைய உயரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலின் எடை, இடைப்பகுதியில் அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் உடல் சோர்வை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறோம்.

***

லங்கரை விளக்கு ஒளி நீண்ட தொலைவு தெரிவதால்தான் கப்பல்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்புகிறது. கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதால் மட்டும் அதன் ஒளி நீண்ட தூரம் தெரிவதில்லை. அதற்கு வேறு அறிவியல் காரணம் இருக்கிறது. கலங்கரை விளக்கில் ஒளிதரக்கூடிய விளக்கு ஒன்று குழி ஆடியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழி ஆடி ஒளிக்கதிரை இணைக்கற்றையாக எதிரொளிக்கிறது. இப்படிப்பட்ட இணைக் கற்றை ஒளிதான் நீண்டதூரம் சென்றாலும் திண்மை குறையாமல் செல்லும். அப்படி இருந்தால்தான் தூரத்தில் வரும் கப்பல்கள்வெளிச்சத்தை உணர முடியும். கலங்கரைவிளக்க ஒளி சுமார் 5 கி.மீ. தொலைவுக்குத் தெரியும்.

***

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிறப்புக்குரிய கோபுரங்களை இடிமின்னலில் இருந்து காப்பவை கலசங்கள் தான். மின்னேற்றம் பெற்றுள்ள மேகங்கள் காற்றைக் கடக்கும்போது உராய்வினால் இடி-மின்னல் உருவாகிறது. கூர் முனையுடைய உலோகம் மின்னேற்றத்தை தன்பால் இழுத்து கடத்தும். இடி-மின்னல் ஏற்படும்போது உலோகத்தால் செய்யப்பட்ட கலசம் மின்சாரத்தை ஈர்க்கிறது. கலசத்தில் இருந்து தரைக்குள் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வழியாக அந்த மின்சாரம் கடத்தப்பட்டு பாதுகாப்பாக தரைக்குள் அனுப்பப்படுவதால் கோபுரங்கள் இடி தாக்குதலுக்கு பாதிக்கப்படுவதில்லை.

***

னிதனின் கண்ணீரும், வியர்வையும் உப்புக்கரிக்கும். ஏனெனில் அவை உணர்வுப்பூர்வமானவை என்று இயல்பான விளக்கம் தரலாம். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? மனிதனின் தோற்பரப்பு சுமார் 18 சதுர அடி. இந்த தோற்பரப்பில் லட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் கழிவுப் பொருட்களான நீர், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் கழிவு உப்புகள் போன்றவை வியர்வை சுரப்பிகள் வழியாக வெளியேறும். இது உடல்வெப்பத்தை சமநிலைப்படுத்தும். கண்ணீரிலும் சோடியம் குளோரை உப்பு உள்ளது. எனவே கண்ணீர், வியர்வை இரண்டுமே உப்புக் கரிக்கிறது.

***

சையென்றால் எல்லா உயிர்களுக்கும் ஒரு கிறக்கம் உண்டு. அது ஏன் தெரியுமா?. இசை உணர்வுப்பூர்வமானது. உடற்செயலியல் முறையில் சொல்வதானால் மனித மூளை வலது அரைக்கோளத்தின் நெற்றிக் கதுப்பில்தான் இசையை உணரும் மையம் உள்ளது. இந்த உணர்வு மையத்தை இசை ஒரு தாளலயத்தில் தூண்டும்போது இசை நம்மால் முழுமையாக உள்வாங்கப்பட்டு கிறங்கச் செய்கிறது. வலது பக்க நெற்றிக்கதுப்பின் வளர்ச்சியால் இசைத்திறனும், படைப்புத்திறனும் அதிகமாகும் என்பது ஆய்ந்தறிந்த உண்மையாகும்.

***

டாக்டர்கள் நோயாளிகளின் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பது உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை வெளிக்காட்டும் தன்மை நாக்கிற்கு இருக்கிறது என்பதால்தான் டாக்டர்கள் இப்படி செய்கிறார்கள். சில நேரங்களில் நாக்கு சுவை அறிவதில் கோளாறு செய்யும். நாக்கு மாறுபட்டு சுவை அறிவதை `டைஜென்சியா’ என்றும், குறைவான சுவை உணர்வதை `ஹைபோஜென்சியா’ என்றும் கூறுவர். உடலில் துத்தநாகம் என்ற உப்புச்சத்து குறைவதால் இந்த பிரச்சினைகள் ஏற்படும். காய்ச்சலின்போது அதிகமாக துத்தநாகம் இழப்பு ஏற்படுவதால்தான் அப்போது வாய் கசப்பதாக உணர்கிறோம்.

***

குழந்தைகள் தூங்கும்போது புலம்புவதை அதிகமாக காண முடியும். இது ஏன் தெரியுமா? தூக்கத்திற்கான கட்டுப்பாட்டு மையமாக மூளையின் முகுளம் பகுதி செயல்படுகிறது. இருந்தாலும் தலாமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு, மூளைத்தண்டுப் பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது. ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில் உணர்வு நரம்பின் தூண்டுதலால் தானாகப் பேசுவதும் புலம்புவதும் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளிடம் ஆழ்ந்த தூக்க வகை காணப்படுவதால் அவர்களே அதிகம் புலம்புகிறார்கள்.

***

னிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது ஸ்டைலுக்காக அல்ல. சூரிய ஒளி பனிக்கட்டிகளின் மேல்பட்டு பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பின் ஒளி கண்ணை பாதித்து பார்வைத்திறனை குறைக்கச் செய்யும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ளத்தான் பனிச்சறுக்கு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிகிறார்கள்.

கோடை காலங்களில் உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே ஆபத்து இருக்கிறது. அவர்களும் கண்ணாடி அணிந்து கொண்டால் பார்வைத்திறன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அதிகாரம் தந்த அக்னி!-ஹிட்லர்

ஜெர்மனியின் பார்லிமெண்ட் கட்டிடம் 1933-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27ம்தேதி தீப்பிடித்து எரிந்தது. இதுதான் ஹிட்லர் சர்வதிகாரியாக ஆவதற்கு காரணமாக அமைந்தது என்றால் ஆச்சரியம் தானே! மாரியாஸ் லூபே என்ற வாலிபர் வைத்த தீயால் பார்லிமெண்ட் கட்டிடம் எரிந்ததாக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்ததால், அவர் பிரதமராக வந்தார். ஆனால் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அவரால் நினைத்தபடி ஆட்சியை நடத்த முடியவில்லை.

இந்த தீ வைப்பு சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஐந்தாயிரம் பேரை சிறையில் அடைத்தார். மேலும் பார்லிமெண்ட் நிகழ்ச்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தடைவிதித்தார். இதனால் நாஜிக் கட்சியினர் மட்டுமே பார்லிமெண்ட் நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஹிட்லர், அதிகாரம் அனைத்தையும் தன்னிடம் மட்டுமே இருக்கும்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். இதன் மூலம் நாட்டின் சர்வதிகாரியானார். தமக்கு எதிரியாக இருந்த கம்யூனிஸ்ட்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, அடுத்து யூதர் இனத்தை அழிக்க முயற்சித்தார்.

இதன் மூலம் ஹிட்லர் சர்வதிகாரியாக மாறியதற்கு காரணம் பார்லிமெண்ட் மீது வைக்கப்பட்ட அக்னிதான் என்று, இன்றும் கூறுகின்றனர் ஜெர்மானியர்கள்!

Docx பைல்களைப் படிக்க

கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைல்களை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோகிராம் பல ஆண்டுகளாக அனைவராலும் பயன் படுத்தப்படும் ஓர் அப்ளிகேஷனாக அமைந்து பெயரெடுத்துள்ளது. அறிமுக மான ஆண்டு முதல் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது.
அண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராசசர் புரோகிராமில், வழக்கமான வேர்ட் பைல்கள், மாறா நிலையில் Docx என்ற வடிவில் அமைக்கப்படுகின்றன. இதனைப் பழைய வேர்ட் 2003 மற்றும் அதற்கு முந்தைய புரோகிராம்களில் திறந்து படிக்க இயலாது. எனவே,இந்த தொகுப்பினைத் தங்கள் கம்ப்யூட்டர் களில் இன்ஸ்டால் செய்யாத வர்கள், இத்தகைய டாகுமெண்ட் களைப் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல இணைய தளங்கள் இலவசமாக இந்த பைல்களை Doc பார்மட்டில் மாற்றித் தரும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இது குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே தகவல்கள் தரப்பட்டுள்ளன.
இருப்பினும் ஒவ்வொரு முறையும் இது போல இணைய தளம் சென்று பைல்களை அப்லோட் செய்து, மாற்றிய பின்னர், அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தும் நிலைக்குப் பதிலாக, மாற்றித் தரும் புரோகிராமினையே நாம் கொண்டிருந்தால், நமக்கு நேரம், வேலை மிச்சம் தானே. இந்த எண்ணத்தில் நமக்கு இலவசமாகக் கிடைப்பது Docx Viewer. இதன் மூலம் நாம் Docx பார்மட்டில் உள்ள பைல்களை, நம் கம்ப்யூட்டரில் வைத்தே, திறந்து படிக்கலாம். இதற்கு நம் கம்ப்யூட்டரில் வேர்ட் அல்லது வேர்ட் போன்ற புரோகிராமும் தேவையில்லை. இந்த புரோகிராமில் திறந்து படித்த பின்னர், அதனைக் காப்பி செய்து, அப்படியே நாம் பயன்படுத்தக் கூடிய டெக்ஸ்ட் புரோகிராமில், நாம் பயன்படுத்தும் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.
Docx Viewer- ஒரு சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம். இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இந்த புரோகிராமை டவுண்லோட் செய்து, ஸிப் பைலை விரித்து வைத்து இயக்கினால் போதும். உடனே, நமக்கு Docx பார்மட்டில் உள்ள பைலைத் திறப்பதற்கான மெனு கிடைக்கிறது. அதே புரோகிராமில் பார்மட்டில் சேவ் செய்திட முடியாது. அதனைப் படிக்கலாம்; திருத்தலாம் மற்றும் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு போகலாம். பின்னர் கிளிப் போர்டில் இருப்பதை, டெக்ஸ்ட் ப்ராசசருக்குக் கொண்டு செல்லலாம். இவ்வளவு எளிதாக நம் தேவையை நிறைவேற்றும் இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://download. cnet.com/DocXViewer/300018483_475179715.html?tag=mncol;2 என்ற முகவரிக்குச் செல்லவும்.

மீன்கள் உண்ணும் முறை


மீன்களின் உணவுப்பழக்கம் வித்தியாசமானது. ஒவ்வொரு வகையான மீனும் உணவு உட்கொள்வதில் ஒவ்வொரு முறையைக் கடைப்பிடிக்கின்றன. இருந்தாலும், அவற்றை வகைப்படுத்தி, 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.

1. பகை மீன்கள்

இவை, பெரிய விலங்கினங்களைப் பிடித்து உண்ணுபவை. அதற்கு ஏற்ப பிடிக்கவும், கடிக்கவும் இவை பற்களைப் பெற்றுள்ளன. சுறா, பராக்குடா, பைக் போன்ற மீன்கள் இவற்றைச் சேர்ந்தவை. இந்த மீன்களுக்கு முறையான வயிறு என்ற அமைப்பு உண்டு. அதில், அமிலங்களும் சுரக்கின்றன. இருந்தாலும், இவற்றின் குடல் தாவர உண்ணிகளுக்கு இருப்பதைவிடச் சிறியதாக இருக்கும். போமட்டோமஸ் மீன், தன்னுடைய உணவை வேட்டையாடிப் பிடிக்கும்.

எப்பிநேப்பிலஸ் என்னும் கலவா மீன் இனங்கள், இரை வரும்வரை காத்திருந்து, வந்ததும் அவற்றைப் பிடித்து உண்ணும். ஆங்கிளர் மீன், தன்னுடைய உடலில் ஒளியை ஏற்படுத்துவதன் மூலம் இரையைக் கவர்ந்து பிடிக்கும். ஆர்ச்சர் மீன், தாவரங்களில் உள்ள பூச்சிகளை, சுடுவது போல எச்சிலைத் துப்பி பிடிக்கும். நீருக்கு வெளியிலும் தெளிவாகப் பார்க்கும் கண் அமைப்பு இந்த மீனுக்கு உண்டு. இந்தக் கண்கள் தான் இரையைப் பிடிக்க உதவுகின்றன.

2. மேயும் மீன்கள்

ஆடு, மாடுகள் போல சில மீன்கள் உணவைக் கடித்து, மேய்ந்து உண்ணும். இவற்றுக்கு நுண்ணுயிர் மிதவைகளும், நீருக்கு அடியில் காணப்படும் உயிரினங்களும் உணவாக அமைகின்றன. கிளி மீன்களும், பட்டர்பிளை மீன்களும் பவளப்பாறைகளில் உள்ள பாலிப்புகளை (Polypsகடித்து, மேய்ந்து உண்ணுகின்றன.

3. வடித்து உண்ணும் மீன்கள்

நீரில் உள்ள நுண்ணுயிர் மிதவைகளையும், சிறிய உணவுகளையும் தன்னுடைய செவுள்களால் வடித்து இந்த மீன்கள் உண்ணுகின்றன. களுப்பியாய்ட், மென்ஹேடன் போன்ற மீன்கள் இந்த முறையில் தான் உண்ணுகின்றன. நன்னீரில் வாழும் கட்லா, ரோகு, வெள்ளிக்கெண்டை போன்றவையும் இப்படித்தான் உண்ணுகின்றன.

4. உறிஞ்சி உண்ணும் மீன்கள்

உணவை வாயால் உறிஞ்சி உண்ணும் மீன்களும் உள்ளன. நீருக்கு அடியில் உள்ள உணவுகளை உண்ணும் மீன்களான ஸ்டர்ஜியன் மற்றம் உறிஞ்சி மீன்களில் இந்த உணவுமுறை காணப்படுகிறது.

5. ஒட்டுயிர் முறையில் உண்ணும் மீன்கள்

தான் ஒட்டி வாழும் மீன்களின் உடலில் காயத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக அந்த மீன்களின் உடலில் உள்ள திரவத்தை உறிஞ்சி உண்ணுகின்றன. ஆழ்கடலில் உள்ள விலாங்கு மற்றும் விளக்கு மீன்கள், லேம்ப்ரேஸ், ஹாக் மீன்கள் போன்றவை இப்படித்தான் உண்ணுகின்றன.

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது

டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படுகிறது. விலை குறித்து முடிவு செய்வதற்காக, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டம், ஜூன் 9ம் தேதி கூடுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவேண்டும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரி வந்தன. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு அரசு வசம் இருந்து வந்தது. இது கடந்தாண்டு நீக்கப்பட்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து, பலதடவை பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது. சமீபத்தில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இருப்பினும் இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளிப்போட்டு வந்தன. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. உயர்வு இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ஐந்து ரூபாய் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை மட்டும் மத்திய அரசு உயர்த்தவில்லை.

இது பற்றி முடிவு செய்வற்கு, நிதி அமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த குழுவின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மானியம் அளிக்கப்பட்ட போதிலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையால் பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், இவற்றின் விலையை உடனடியாக உயர்த்தியே ஆக வேண்டும் என்று இந்த நிறுவனங்கள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன.

டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை, கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் தான் உயர்த்தப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் ரூ. 3,500 ஆக இருந்தது. இருப்பினும் டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாயும், காஸ் சிலிண்டர் ரூ.35ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.3ம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயை ரூ. 5,500 கொடுத்து இந்தியா வாங்கியுள்ளது. இந்நிலையில் விலையை உயர்த்தாமல் இருப்பதால், நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு வருகிறது. இதை சமாளிக்க, விலை உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறின. எண்ணெய் நிறுவனங்கள் டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதால், இது பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் குழு, ஜூன் மாதம் 9ம் தேதி கூட உள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,” இதுவரை நாங்கள் தாக்குப்பிடித்து வந்தோம். இப்போது தப்பிக்க முடியாது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த உடனடியாக முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார். டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும், காஸ் சிலிண்டர் விலையை ரூ25ம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என தெரிகிறது.

பெட்ரோல் விலை குறையுமா? புதுடில்லி: ஜூன் மாதத்தில், அரசு வாங்கும் கச்சா எண்ணெயின் ஒட்டுமொத்த விலைக்குறியீடு இறங்கும் பட்சத்தில், பெட்ரோல் விலையை தங்கள் நிறுவனம் குறைக்கும் என்று இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் தலைவர் ராய்சவுத்ரி நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பெட்ரோல் விலையானது சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதால், கச்சா எண்ணெய் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப அதன் விலை மாற்றப்படும். இன்றுள்ள நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால் அடுத்த மாதத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்வரை குறைக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

நன்றி-தினமலர்

ஜல் ஜீரா

உடல் வெப்பத்தை சீராக்கும் சீரகம்

அகத்தை சீராக்க வல்லது சீரகம். வெயிலினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்கி உடலைக் குளிர்விக்க உதவுபவை புதினா, கொத்தமல்லித் தழை. நாவிற்கு விரும்பத்தக்க ஸ்பைசி சுவையைத் தரும் கறுப்பு உப்பு, ஆம்ச்சூர் பொடி (காய்ந்த மாங்காய்த்தூள்) வைட்டமின் `சி’ சத்து நிறைந்து புத்துணர்ச்சி அளிக்கவல்ல எலுமிச்சம் பழம். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தயாரிக்கப்

படும் `ஜல் ஜீரா’வைப் பருகி கோடையை ஜில்லென்று குளிர்ச்சியாக எதிர்கொள்ள முடியும்.

ஜல்ஜீராவை மிகவும் சுலபமாக தயாரிக்க இயலும். மிகவும் குறைந்த செலவுதான் பிடிக்கும். அப்படியென்றால் உடலுடன் மனமும் குளிர்ச்சி பெறும் என்பது நிஜம்.

வாங்க, ஜில்ஜில் ஜல்ஜீரா செய்து பருகுவோம்…!

ஜல் ஜீரா

தேவையான பொருட்கள்

சீரகம் – 4 டேபிள் ஸ்பூன்
ஆய்ந்த புதினா இலைகள், கொத்தமல்லி தழை – 1 கப் (தலா)
ஆம்ச்சூர் பொடி – 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டீ ஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் – 8 கப்புகள்

அலங்கரிக்க

ஐஸ் கியூபுகள் – 8
புதினா இலைகள் – சிறிதளவு

செய்முறை

* வெறும் வாணலியில் மிதமான தீயில் சீரகத்தை நன்கு வாசனை வர வறுத்து, ஆறியதும் மிக்சியில் நைசாகப் பொடிக்கவும்.

* புதினா, கொத்தமல்லி இலைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் மைய அரைக்கவும். அரைத்த பின்னர் ஒரு உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.

* இதனுடன் சீரகப்பொடி, ஆம்ச்சூர் பொடி, கறுப்பு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஐஸ் தண்ணீர் ஊற்றவும்.

* இப்போது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும்.

* கண்ணாடித் தம்ளர்களில் ஊற்றி மேலே புதினா இலைகள், ஐஸ் கியூபுகள் போட்டு பருகக் கொடுக்கலாம்.

* வெயிலை எதிர்கொள்ள ஆரோக்கியமும், குளிர்ச்சியும் நிறைந்த ஜல்ஜீரா தயார்.

கீதா பாலகிருஷ்ணன்

சுகப்பிரசவம் அருளும் தாயுமானவர்

திருச்சி என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை. இந்த மலைக்கோட்டையில் 258 படிக்கட்டுகள் ஏறினால், தாயாகி பக்தை ஒருவருக்கு பிரசவம் பார்த்த இறைவன் தாயுமானவர் கோவிலை சென்றடையலாம். இங்குள்ள இறைவன் தாயுமானேஸ்வரர், மாத்ரு பூதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமங்கள் மட்டுவார் குழலி, சுகந்த குந்தளாம்பிகை.

தாயுமானவர் மீது மிகுந்த பக்தி கொண்ட பெண் ஒருவர் காவிரியின் வடகரையில் வாழ்ந்து வந்தாள். இவளுடைய பிரசவ காலத்தில் காவிரியில் வெள்ளம் பெருகியதால் தாய், தந்தையரால் உதவி செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் தன் இஷ்ட தெய்வமான தாயுமானவரை மனம் உருக வேண்டினாள். அந்த பக்தையின் கூப்பிட்ட குரலுக்கு, அவளது தாய் உருவத்திலேயே ஓடோடி வந்தார் இறைவன். பரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்தார்.

இதன் காரணமாக, இத்தலத்து இறைவனை கர்ப்பிணிப் பெண்கள் வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

கர்ப்பிணிப் பெண்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற “நன்றுடையானை” எனத் தொடங்கும் பதிகத்தை ஓதினால் பிரசவம் இனிதே நடைபெறும். அந்த பதிகம் உங்கள் பார்வைக்கும்…

“நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே.”