சைகைகளால் பேசிக்கொள்ளும் சிம்பன்சிகள்!

சிம்பன்சி குரங்குகள் சைகைகளில் பேசிக்கொள்ளும் என்பதை நாம் முன்பே அறிவோம். ஆனால், நமக்குத் தெரிந்ததை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையில், சுமார் 66 வகையான மேனரிசங்களை அவை பயன்படுத்துகின்றன என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்திலுள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளன. உகண்டாவில் சிம்பன்சிகளுக்கான சரணாலயம் ஒன்று உள்ளது. இங்கு தான் நடத்தப்பட்டது அந்த ஆய்வு.

தன் முதுகின் மீது ஏறிக் கொள்ளும்படி குட்டியிடம் சொல்வதற்கும், குட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு விளையாட கற்றுத் தருவதற்கும் என வெவ்வேறு காரணங்களுக்கு வெவ்வேறு உடல் அசைவுகள், சைகைகளை அவை பயன்படுத்துகின்றன.

ஆனால், காடுகளில் வசிக்கும் சிம்பன்சிகள் மற்ற குரங்குகளை வேட்டையாடுவதும், பெண் சிம்பன்சிகளை சிறைவைப்பதும், தங்களுக்குள்ளேயே கோஷ்டி மோதல்களில் ஈடுபடுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.

நம்ம ஊர் தாதாக்கள் கோஷ்டி மோதல்களை கற்றுக் கொண்டதும் இங்கிருந்து தானோ?

 

One response

  1. தகவலுக்கு நன்றி
    ஹரிஹரன்.
    hariharans87

%d bloggers like this: