Daily Archives: ஜூலை 9th, 2011

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.

மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன்  சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.

அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா…? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்…. மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஹையா ஜாலி! ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.

100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

சக்தி  70 கிலோ கலோரிகள்

கார்போஹைட்ரேட்  17.00 கிராம்
சர்க்கரை        14.08 கிராம்
நார்ச்சத்து           1.08 கிராம்
கொழுப்பு           0.27 கிராம்
புரதம்              0.51 கிராம்
வைட்டமின் ஏ       38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன்    445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி)      0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2)     0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3)     0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5)         0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6       0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9)      14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி        27.7 மில்லி கிராம்
கால்சியம்             10 மில்லி கிராம்
இரும்புச் சத்து         0.13 மில்லி கிராம்
மக்னீசியம்            9 மில்லி கிராம்
பாஸ்பரஸ்             11 மில்லி கிராம்
பொட்டாசியம்         156 மில்லி கிராம்
துத்தநாகம்            0.04 மில்லி கிராம்

அட்லான்டிஸ் இன்று கடைசி பயணம்

 

சர்வதேச விண்வெளிமையத்துக்கு அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இத்துடன் நாசாவின் கைவசம் உள்ள விண்கலங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசா விண்கலங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வீரர்களையும், பொருட்களையும் எடுத்துச் சென்று வந்தது. அனைத்து விண்கலங்களும் கடந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. டிஸ்கவரி, எண்டவர் விண்கலங்கள் ஏற்கனவே கடைசி பயணத்தை முடித்துவிட்டன. அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை தொடங்குகிறது. இதில் 4 வீரர்கள் செல்கின்றனர். புளோரிடாவின் கேப்கேன வரால் ஏவுதளத்தில் வானிலை தற்போது மோசமாக உள்ளது.  எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் திட்ட மிட்டபடி அட்லான்டிஸ் இன்று புறப்படும். இரு வாரங்களுக்கு பின் பூமி திரும்பியதும் பணியிலிருந்து அட்லான்டிஸ் விடுவிக்கப்படும்.

அதன்பின் அனைத்து விண்கலங்களும் அமெரிக்க மியூசியங்களில் காட்சிக்கு வைக்கப்படும். புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று வருவார்கள்.

யு.எஸ்.பி. 2 மற்றும் 3

கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி. சாதனங்களே. கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக் கப்பட்டு வருகின்றன. தற்போது யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் சில இங்கு தரப்படுகின்றன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பம் 1996 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப் பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3, அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணரா முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் எக்ஸ்ட்ரா ஹார்ட் டிஸ்க்குகள் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம். மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடீயோ பைல்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில், இந்த இரண்டு தொழில் நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3, ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது. யு.எஸ்.பி.2, ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை, யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும், யு.எஸ்.பி. சாதனத்தை மற்ற சாதனங் களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனால், செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பொறுத்த வரை, இரு சாதனங்களுக் கிடையே டேட்டா பரிமாற்றம் ஏற்படுகையில், ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும், ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, பழைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில், கம்ப்யூட்டரின் செயல் திறன் மெதுவாக இருந்தால், யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில் நுட்பங்களுக் கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு, டேட்டா செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 டேட்டாவை அனுப்பும் அதே நேரத்தில், டேட்டாவினைப் பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் டேட்டாவை அனுப்ப முடியும். இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில் நுட்பம் ஹார்ட் டிஸ்க்குகளுக்கிடையே டேட்டாவினைப் பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி. சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால், அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.

ஹெல்த்கைடு: மந்திரம் 1,3 ஹார்ட்கேர்

உங்க மனசுக்குள்ளே ஆத்திரம், டென்ஷன், போட்டி, பொறாமை, எரிச்சல் எல்லாம் வச்சிருக்கீங்களா? அப்ப நிச்சயம் உங்களுக்கு இதயப் பிரச்னை வரும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் டாக்டர் வீ. சொக்கலிங்கள், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் இதய நோய் நிபுணர். மனத்தில் நெகடிவ் வண்ணங்கள் உதிக்கும்போது மூளைக்குச் செல்லும் அலைகள் பாதிப்புகுள்ளாகின்றன. உடனே மூளை என்ன செய்கிறது தெரியுமா? அட்ரினலின,ஞூ கார்டிஸால் என்ற ஹார்மோன்களை அதிவேகமாக சுரக்க ஆணையிடுகிறது. இவை ரத்தத்துக்குள் வேக வேகமாகப் பம்ப் செய்யப்படுகிறது. விளைவு..? அழுத்தம் தாங்காமல் ரத்தக் குழாய்கள் (அதன் விட்டம் ரெண்டு மில்லி மீட்டர்தாங்க!) சுருங்குகின்றன.. ரத்த ஒட்டம் தடைப்படுகிறது… இங்கிருந்து தான் பல பிரச்னைகள் ஆரம்பாகின்றன. திடீரென்று பண இழப்பு, உறவுகளின் பிரிவு இவை போன்ற அதிர்ச்சிகள் தாக்கும்போது வருவது, அக்யூட் ஸ்ட்ரெஸ்.. நீண்கால சர்க்கரை, ரத்த அழுத்தம், இவற்றால் ஏற்படுவது க்ரானிக் ஸ்ட்ரெஸ். 19 வயசு கல்லூரி மாணவனுக்கு நடுநிசியில் திடீரென மாரடைப்பு! தீவிர சிகிச்சையில், அவன் உடனடியாகச் சேர்க்கப்பட்டதால், காப்பாறி விட்டோம்..’’ என்கிறார் சொக்கலிங்கம்… எதிர்பார்க்கும் வேலையில் தேர்வு செய்யப்படுவோமா என்கிற அதிதடென்ஷன் மற்றும் ஒரு வருடகாலமாக அவனுக்கு ஏற்பட்டிருந்த சிகரெட் பழக்கம்.. இவற்றால் ரத்தக் குழாயில் திடீரென்று ஸ்பாஸ்ம் அடைப்பு ஏற்பட்டதால் இந்த விபரீதம். உலகிலேயே இந்தியாவில்தான் மாரடைப்பு சாவு அதிகம்..ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் 90பேர் மாரடைப்பில் இறக்கிறார்கள்.. இதற்கு மன அழுத்தம்தான் காரணம்!..
மனஅழுத்தம் இல்லாமல் வாழ என்ன செய்யணும்? மூன்று மந்திரங்கள் சொல்கிறார் சொக்கிலிங்ம். எண்ணும் எண்ணம், உண்ணும் உணவு, உடற்பயிற்சி இவை சரியாக இருந்தால் எங்களுக்கு வேலையே இல்லை! பாஸிட்டிவ் எண்ணங்கள், வருடத்துக்கு நூறுமணி நேர தியானம், நூறு மணி நேர உடற்பயிற்சி.. இவை தருமே என்றும் ஆரோக்கியம்!..என்கிறார் டாக்டர். சொக்கலிங்கம்.

நன்றி-மங்கையர்மலர்