அட்லான்டிஸ் இன்று கடைசி பயணம்

 

சர்வதேச விண்வெளிமையத்துக்கு அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இத்துடன் நாசாவின் கைவசம் உள்ள விண்கலங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசா விண்கலங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வீரர்களையும், பொருட்களையும் எடுத்துச் சென்று வந்தது. அனைத்து விண்கலங்களும் கடந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. டிஸ்கவரி, எண்டவர் விண்கலங்கள் ஏற்கனவே கடைசி பயணத்தை முடித்துவிட்டன. அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை தொடங்குகிறது. இதில் 4 வீரர்கள் செல்கின்றனர். புளோரிடாவின் கேப்கேன வரால் ஏவுதளத்தில் வானிலை தற்போது மோசமாக உள்ளது.  எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் திட்ட மிட்டபடி அட்லான்டிஸ் இன்று புறப்படும். இரு வாரங்களுக்கு பின் பூமி திரும்பியதும் பணியிலிருந்து அட்லான்டிஸ் விடுவிக்கப்படும்.

அதன்பின் அனைத்து விண்கலங்களும் அமெரிக்க மியூசியங்களில் காட்சிக்கு வைக்கப்படும். புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று வருவார்கள்.

%d bloggers like this: