ஹெல்த்கைடு: மந்திரம் 1,3 ஹார்ட்கேர்

உங்க மனசுக்குள்ளே ஆத்திரம், டென்ஷன், போட்டி, பொறாமை, எரிச்சல் எல்லாம் வச்சிருக்கீங்களா? அப்ப நிச்சயம் உங்களுக்கு இதயப் பிரச்னை வரும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் டாக்டர் வீ. சொக்கலிங்கள், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் இதய நோய் நிபுணர். மனத்தில் நெகடிவ் வண்ணங்கள் உதிக்கும்போது மூளைக்குச் செல்லும் அலைகள் பாதிப்புகுள்ளாகின்றன. உடனே மூளை என்ன செய்கிறது தெரியுமா? அட்ரினலின,ஞூ கார்டிஸால் என்ற ஹார்மோன்களை அதிவேகமாக சுரக்க ஆணையிடுகிறது. இவை ரத்தத்துக்குள் வேக வேகமாகப் பம்ப் செய்யப்படுகிறது. விளைவு..? அழுத்தம் தாங்காமல் ரத்தக் குழாய்கள் (அதன் விட்டம் ரெண்டு மில்லி மீட்டர்தாங்க!) சுருங்குகின்றன.. ரத்த ஒட்டம் தடைப்படுகிறது… இங்கிருந்து தான் பல பிரச்னைகள் ஆரம்பாகின்றன. திடீரென்று பண இழப்பு, உறவுகளின் பிரிவு இவை போன்ற அதிர்ச்சிகள் தாக்கும்போது வருவது, அக்யூட் ஸ்ட்ரெஸ்.. நீண்கால சர்க்கரை, ரத்த அழுத்தம், இவற்றால் ஏற்படுவது க்ரானிக் ஸ்ட்ரெஸ். 19 வயசு கல்லூரி மாணவனுக்கு நடுநிசியில் திடீரென மாரடைப்பு! தீவிர சிகிச்சையில், அவன் உடனடியாகச் சேர்க்கப்பட்டதால், காப்பாறி விட்டோம்..’’ என்கிறார் சொக்கலிங்கம்… எதிர்பார்க்கும் வேலையில் தேர்வு செய்யப்படுவோமா என்கிற அதிதடென்ஷன் மற்றும் ஒரு வருடகாலமாக அவனுக்கு ஏற்பட்டிருந்த சிகரெட் பழக்கம்.. இவற்றால் ரத்தக் குழாயில் திடீரென்று ஸ்பாஸ்ம் அடைப்பு ஏற்பட்டதால் இந்த விபரீதம். உலகிலேயே இந்தியாவில்தான் மாரடைப்பு சாவு அதிகம்..ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் 90பேர் மாரடைப்பில் இறக்கிறார்கள்.. இதற்கு மன அழுத்தம்தான் காரணம்!..
மனஅழுத்தம் இல்லாமல் வாழ என்ன செய்யணும்? மூன்று மந்திரங்கள் சொல்கிறார் சொக்கிலிங்ம். எண்ணும் எண்ணம், உண்ணும் உணவு, உடற்பயிற்சி இவை சரியாக இருந்தால் எங்களுக்கு வேலையே இல்லை! பாஸிட்டிவ் எண்ணங்கள், வருடத்துக்கு நூறுமணி நேர தியானம், நூறு மணி நேர உடற்பயிற்சி.. இவை தருமே என்றும் ஆரோக்கியம்!..என்கிறார் டாக்டர். சொக்கலிங்கம்.

நன்றி-மங்கையர்மலர்

%d bloggers like this: