Daily Archives: ஜூலை 18th, 2011

தொலைநோக்கியும், நுண்ணோக்கியும்

தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது.

1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர் களும் இதன் வழி வந்தன. 18-ம் நூற்றாண்டில்,
கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர்.

நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார்.

கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப்பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார். ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார்.

இதே காலகட்டத்தில், பிரிட்டீஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் `மைக்ரோகிராபியா’ என்ற நூலை வெளியிட்டார். அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

ஆயுர்வேதம் – வாத பித்தம் சீற்றமடைந்த இதய நோய்

ஆயுர்வேதத்தில், இதயத்தின் செயல்பாடுகளை சரிப்படுத்துவதற்கு, மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. மிக நல்ல முறையில், இதய நோயாளிகள் சிகிச்சை பெற்று, நிவாரணம் அடைந்து வருகின்றனர். அலோபதி மருந்துகள் உட்கொள்ளும் இதய நோயாளிகளுக்கு, அம்மருந்தை சிறிது சிறிதாக குறைத்து, ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், அவர்களுடைய ஆரோக்கியம் நல்ல முறையில் தேறி வருகிறது.
60 வயது நபர் ஒருவருக்கு, புகைப் பழக்கம், குடிப் பழக்கத்தால், வயிற்றில் எரிச்சல், வலியிருந்தது. உணவில் மாமிசமும், எண்ணெயும் மிக அதிகம். 1980ல், அவருக்கு நெஞ்சுவலி வந்தது. Myocardial infection. உடல் வியர்த்து, வாந்தியும் எடுத்தார்.
அப்போது, திண்டுக்கலில் உள்ள, அலோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2010ல், செங்கல்பட்டில், வயலில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருந்தபோது, தேனீக்கள் அவரை கொட்டின. தேனீக்களிடம் இருந்து தப்ப ஓடிய போது, அவருக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. தேனீக்கள் கொட்டியதால், முகத்தில் வீக்கமும், வலியும் ஏற்பட்டது. திருப்போரூரில் உள்ள அலோபதி மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு, ஊசி போடப்பட்டது.
மாலை 4 மணி வரை ஒன்றும் சாப்பிடவில்லை. 15 நிமிடம் கழித்து, ஆட்டோவில் செல்லும் போது, தீவிர நெஞ்சுவலி ஏற்பட்டது. அவ்வலி, இடது கைக்கும் பரவியது. உடல் வியர்த்துக் கொட்டியது; வாந்தியும் எடுத்தார்.
உடனே, அருகிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். “ஆஞ்ஜியோபிளாஸ்டி’ செய்யுமாறு அங்கு அறிவுறுத்தியதால், மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஐ.சி.யூ., வில் அனுமதிக்கப்பட்டு, “ஆஞ்சியோ பிளாஸ்டி’ செய்ய தயார் செய்யப்பட்டார்.
அலோபதி மருத்துவ விதிமுறைகளுக்கு முரணாக, அவர், அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி, என்னிடம் வந்தார். அப்போது அவருக்கு வலியும், குமட்டலும், தலை சுற்றலும் இருந்தது. அவருடைய உணவு பழக்க வழக்கங்களையும், நோயின் அறிகுறிகளான, தீவிர வலி, தலை சுற்றல், வியர்வை, தாகம், எரிச்சல், புளித்த ஏப்பம் இவற்றையும் வைத்து, இது வாதபித்தம் சீற்றமடைந்த இதய நோய் என கண்டறியப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்., 1ம் தேதி, நோயாளிகள் பிரிவில் தங்க வைத்து, அவருக்கு தான்வந்திரம் குடிகா, வாயு குடிகா, அர்சுன (மருதம்பட்டை) தவக் கஷாயம், ஹ்ருத்ய சூர்ணம், ப்ரபாகரவடி ஹ்ருத்யாவரண ரசம் கொடுக்கப்பட்டன. இதே மருந்துகள், மூன்று வேளை வீதம், 10ம் தேதி வரை தரப்பட்டன. 4ம் தேதி, தலைச்சுற்றல் குறைந்தது. 7ம் தேதி நடக்க ஆரம்பித்தார். 10ம் தேதி, எந்த தொந்தரவும் இல்லாமல், நீண்ட தூரம் நடக்க முடிந்தது. 12ம் தேதி படியேறி, இறங்கினார்.
மேற்கூறிய மருந்துகளை, சிறிது நாட்கள் சாப்பிடுமாறும், புகை பிடித்தல், குடிப்பழக்கம் இவற்றை அறவே நிறுத்துமாறும், உணவில் உப்பு, புளிப்பு, காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்தபோது, அவர் பழையபடி வேலை செய்வதாகக் கூறினார். இவருக்கு இந்த முறை வந்த மாரடைப்பின் காரணம், இவருக்கு போடப்பட்ட ஊசியாகவும், இவருடைய உணவு பழக்க வழக்கங்களும் இருக்கலாம்.

டாக்டர் பி.எல்.டி., கிரிஜா.
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்,

தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ், சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தமிழ்நாட்டு சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி உள்ளது. அதற்கு என்ன செய்யலாம்?

தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் பூண்டு நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.

இதனால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கு குளிக்கும்போது நல்லெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது பூண்டும் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

விண் பெட்ரோல்

நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலை நமக்குத் தருகிறது. எந்த புரோகிராம் குறித்து சந்தேகம் நமக்கு எழுகிறதோ, அதன் மீது கிளிக் செய்தால், அது பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. வேண்டாதவற்றை தொடங்க விடாமல் முடக்கி வைக்கவும் நமக்கு வசதி செய்து தருகிறது.
சில புரோகிராம்களை, கம்ப்யூட்டர் பூட் ஆகிச் சில நிமிடங்கள் கழித்துத் தொடங்கும்படி அமைத்திடலாம். இதனால், கம்ப்யூட்டரை வேகமாக பூட் செய்திடச் செய்து, நமக்கு உடனே தேவையான புரோகிராம்களை மட்டும் நம்மால் இயக்க முடியும்.
மறைவாக இயங்கும் புரோகிராம் களையும் கண்காணிக்க முடியும். குக்கி புரோகிராம்களை வடிகட்டலாம்; அவை எதற்காகக் கம்ப்யூட்டரில் பதியப்பட்டன என்று அறியலாம்.
மொத்தத்தில் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த புரோகிராம் நமக்குத் தேவையான ஒன்றாகும். இதனைப் பெற http://www.winpatrol.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.