Advertisements

Daily Archives: ஜூலை 21st, 2011

செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு

Seducing Red

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு

பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர்.

காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்

பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்

ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்

அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது.

உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர்.

பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்

சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

Advertisements

`பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

பிளாஸ்மா என்பது இயற்பியல் பொருளின் நான்காவது நிலை. திடப்பொருளைச் சூடாக்கினால் திரவப் பொருளாகிறது. அதை மேலும் சூடுபடுத்தினால் ஆவியாகிறது. அதாவது, வாயுப் பொருளாகிறது. அந்த வாயுவை மேலும் சூடுபடுத்தினால் என்ன ஆகும்?

வாயுவில், அணுக்களும், மூலக்கூறுகளும் கட்டுப்பாடின்றித் திரிகின்றன. அந்த வாயுவை மேலும் சூடுபடுத்தும்போது அதில் உள்ள அணுக்களும், மூலக்கூறுகளும் தறிகெட்டு ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொண்டு ஓடுகின்றன. அவ்வாறு அவை மோதும்போது அணுக்களில் அடங்கியுள்ள துகள்கள் சிதறிப் பரவுகின்றன. சில அணுக்கள் எலக்ட்ரான்களை இழக்கின்றன. சில, ஏற்கின்றன.

அணுக்கள் மின்னூட்டமில்லாதவை. எதிர்மின்னூட்டம் உடைய எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள், நேர்மின்னூட்டம் உடைய புரோட்டான்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் நேர்மின்னூட்ட அயனிகளாக மாறிவிடுகின்றன. அதேபோல் எதிர்மின்னூட்டமுள்ள எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள், எலக்ட்ரான்களின் அதிக எண்ணிக்கை காரணமாக எதிர் மின்னூட்டமுடைய அயனிகளாக மாறிவிடுகின்றன.

பிளாஸ்மாவில், எலக்ட்ரான்களும், நேர் மின்னூட்டம் உடைய அயனிகளும், எவ்வித மின்னூட்டமும் இல்லாத அணுக்களும் அடங்கியுள்ளன. பொதுவாக பிளாஸ்மாவை, மிக உயர்ந்த வெப்பநிலையில் அயனிகளாக மாறிய வாயு அணுக்களின் தொகுதி என்று சொல்லலாம். பொருள்களின் மற்ற நிலையில் இருந்து இது வேறுபட்டு நிற்பதன் காரணம், இத்தொகுதியில் மின்புலமும் அடங்கியுள்ளது. காந்தப்புலமும் அடங்கியுள்ளது. தவிர இத்தொகுதியில் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடுவினைச் செயல்களும் இந்த பிளாஸ்மாவை தனியாகப் பிரித்துக் காட்டுகின்றன.

மிக உயர்ந்த வெப்பநிலையில் பிளாஸ்மா உண்டாகிறது. அணு ஆற்றலை மின் ஆற்றலாகப் பயன்படுத்த அணுப்பிளப்பு உலைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதைவிட, அணுப்பிணைப்பு மூலம் அதிக ஆற்றலைப் பெறலாம் என்ற கருத்து, இத்துறையில் ஆய்வாளர்களைக் கவனம் செலுத்தத் தூண்டியது.

அணுப்பிணைப்பு என்றால், அணுக்கருவை மிக அதிக வெப்பநிலையில் உருகச் செய்து பிணைப்பது. அப்போது வெளியாகும் ஆற்றலை மின்னாற்றலாகப் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் பிளாஸ்மாவின் மீது கவனம் திரும்பியது.

மிக உயர்ந்த வெப்பநிலையில் உண்டாகும் இந்தப் பிணைப்பைக் கட்டுப்படுத்தி செயல்முறைக்குக் கொண்டு வந்துவிட்டால், மின்னாற்றலைத் தங்கு தடையின்றிப் பெறலாம். அந்த முயற்சியின் நுழைவாயில்தான் பிளாஸ்மா. எனவேதான் தற்போது உலகெங்கும் இதன் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

`டை’ தோன்றிய விதம்!

ரோமாபுரிப் படை வீரர்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஒரு சிறு துணியை அணிந்தார்கள்.

அது, குளிர் காலத்தில் இதமாக இருக்கும். வெயில் காலத்தில் வியர்வையை உறிஞ்சும்.

காலப்போக்கில் மற்ற படை வீரர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினர். பிரெஞ்சுப் புரட்சியின்போது அவரவர் சார்ந்த கட்சியைக் குறிக்கும் விதத்தில் வெவ்வேறு நிறங்களில் `டை’ அணிந்துகொண்டனர்.

குரோஷிய ராணுவத்திடம் இருந்து டையின் அமைப்புகளையும், `க்ரேவட்’ (Cravat) என்ற சொல்லையும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இது நாகரிக உடையின் ஆடையாளம் ஆனது. அலுப்பூட்டும் உடைகள் இடையே, வண்ணத்தை அள்ளித் தெளிப்பதாக டைகள் வடிவமைக்கப்பட்டன.

எக்ஸெல் டிப்ஸ்-செல்லில் கோடு போட ஷார்ட்கட்

செல்லில் கோடு போட ஷார்ட்கட்
எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்படும் ஒர்க்ஷீட்டுகளில் உள்ள செல்களில், அதனைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, செல்களைச் சுற்றி கோடுகளை வரையலாம். எக்ஸெல் 2003ல் பார்மட் மெனு சென்று, அதில் செல்களுக் கான டேப்பைத் தேர்ந்தெடுத்து இந்தக் கோடுகளை உருவாக்குவது குறித்து ஏற்கனவே இங்கு விளக்கப்பட்டுள்ளது.
எக்ஸெல் 2007ல் ரிப்பன் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் ஹோம் டேப் சென்று இதனை மேற்கொள்ளலாம்.
இவையும் இல்லாமல் உடனடியாக மேற்கொள்ள ஒரு வழி உள்ளது. செல்களை ஒரு குரூப்பாகத் தேர்ந்தெடுத்தும் இதனை அமைக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களைச் சுற்றி, ஒற்றைக் கோட்டில் பார்டர்களை அமைக்க, Ctrl + Shift + 7 கீகளை அழுத்தவும். இந்தக் கோடுகளை நீக்க Ctrl + Shift + என்ற கீகளை அழுத்தவும். 7 மற்றும் – குறியீடுகளை அமைக்க, நம்லாக் கீ பேடினைப் பயன்படுத்தாமல், மெயின் கீ போர்டில் மேலாக உள்ள கீகளையே பயன்படுத்த வேண்டும்.
பார்மட் மெனு சென்று நோ பார்டர்ஸ் தேர்ந்தெடுத்தால், அனைத்து பார்டர்களும் நீங்கிவிட வாய்ப்பு உண்டு. இந்த கீகளைப் பயன்படுத்தி, நாம் விரும்பும் செல்களில் மட்டும் பார்டர் கோடுகளை நீக்கலாம்.

சில அதிரடி டிப்ஸ்
* பிரிண்ட் மெனு கிடைக்க பைல் மெனு போய் பிரிண்ட் எல்லாம் கொடுக்க வேண்டாம். CTRL+P கொடுத்தால் போதும். இதே பிரிண்ட் மெனு பெற இன்னொரு கீ காம்பினேஷனும் உள்ளது. அது: CTRL+SHIFT+F12 ஆகும்.
* பிரிண்ட் செலக்ட் செய்த பின்னர் பிரிண்ட் பிரிவியூ வேண்டுமா? மீண்டும் மெனு செல்ல வேண்டாம். ALT+F கொடுத்து பின் V கொடுத்தால் போதும்.
* நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல்+ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும்.
* படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift+Spacebar) அழுத்தவும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
* Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப் படும்.
* ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
* கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.