Advertisements

Daily Archives: ஜூலை 22nd, 2011

காகிதமாகப் பயன்பட்ட பொருட்கள்!


ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. பண்டைய இந்தியாவில், வாழைப்பழத் தோல் முதல் பட்டைகள் முதல் பலவற்றில் மனிதர்கள் எழுதினர். அதற்கு மூலிகைச் சாறைப் பயன்படுத்தியதால் பல நாட்கள் அழியாமல் இருந்தன.

அதேநேரத்தில் உலகின் மற்ற நாடுகளிலும் எழுதுவதற்கு வேறு பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. புராதன எகிப்தியர்கள் பேப்பர் போன்ற ஒரு பொருளை விதைகள் மூலம் தயாரித்தனர்.

ஐரோப்பியர்கள் எழுதுவதற்கு மிருகங்களின் தோலைப் பயன்படுத்தினர். உடையாமல் மடித்துவைக்க முடியும் என்பதால் அதற்கு அதிக `மவுசு’ இருந்தது.

பல நாடுகளிலும் பல மிருகங்களின் தோல்கள் எழுதப் பயன்படுத்தப்பட்டன. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் மனிதத் தோலில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளில் மக்கள் எழுதினார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாய்லுன் என்ற சீனர் மூங்கில் நாரைப் பயன்படுத்திக் காகிதத்தைத் தயாரித்தார். அதுதான் தற்போதைய பேப்பரின் முன்னோடி.

Advertisements

சாதாரண விமானமும், `ஜெட்’ விமானமும்!


ஜெட் போர் விமானம் சாதாரண விமானமும், `ஜெட்’ விமானமும் எப்படிப் பறக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

சாதாரண விமானத்தில் என்ஜின், சுழல் விசிறி, இறக்கைகள் இருக்கின்றன. என்ஜின், சுழல் விசிறியை இயக்குகிறது. அது சுழலும்போது காற்றை முறுக்கித் திருப்புகிறது. அதன் விளைவாக விமானம் முன்னோக்கி இழுக்கப்படுகிறது.

நமக்குக் கைகள் இருப்பதைப் போல விமானத்துக்கு இறக்கைகள் இருக்கின்றன. காற்றைப் பற்றிக் கொண்டு நிலையாகப் பறப்பதற்கு இறக்கைகள் உதவுகின்றன. இவ்வாறுதான் சாதாரண விமானம் பறக்கிறது.

`ஜெட்’ விமானம் பறப்பதற்குச் சுழல் விசிறி தேவையில்லை. அதன் என்ஜினில் எரிபொருள் எரியும்போது சூடான வாயுக்கள் விமானத்தை முன்னோக்கித் தள்ளுகின்றன. விமானத்துக்குப் பின்னால் வால் மாதிரி நெருப்புத் தெரியும். வாயுக்கள் எரிவதால் அந்தத் தோற்றம் ஏற்படுகிறது.

பயணிகள் விமானம் எல்லா `ஜெட்’ விமானங்களும் ஒலியைவிட அதிக வேகமாகப் பறக்கின்றன. எனவே `ஜெட்’ போர் விமானத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. `ஜெட்’ விமானத்தின் இறக்கைகள் அம்பைப் போல் இருக்கின்றன. அதன் உடற்பகுதி நத்தையின் ஓடு போலத் தோற்றம் அளிக்கிறது. என்ஜின், ராக்கெட்டைப் போல் அமைந்திருக்கிறது.

விண்வெளி வீரர் அணிந்திருக்கும் உடையைப் போலவே `ஜெட்’ விமானியும் உடை அணிந்திருக்கிறார். ஏன் அந்த உடை? கற்பனைக்கு அப்பாற்பட்ட வேகத்தில் விமானம் செல்லும்போது விமானி மீது சுழல்விசை அழுத்தம் ஏற்படாமல் அந்தச் சிறப்பு உடை தடுக்கிறது.

ஜெட் விமானம் சில வினாடிகளில் மேகங்களைத் தாண்டிச் சென்றுவிடுகிறது. அது சென்றபிறகுதான் அதன் இடியோசை போன்ற உறுமலைக் கேட்க முடிகிறது.

ஆடிப்பெருக்கு `புளியோதரை’

டிப் பெருக்கு ஒரு அன்புப் பண்டிகை. காவிரியை தாயாகப் போற்றி காவிரிக்கரையை தாய்மடியாக பாவித்து சொந்தம் சூழ அமர்ந்து விதவிதமான சித்ரான்னங்கள் செய்து மகிழ்ச்சியாக பகிர்ந்துண்ணும் பண்டிகை ஆடிப்பெருக்கு.

சொந்த ஊர்களைவிட்டு வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் மக்களும், அவரவர் இருக்கும் இடத்தையே காவிரித்தாயின் மடியாக பாவித்து சித்ரான்னங்கள் செய்து படைத்து நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து உண்பது இன்றளவிலும் பழக்கத்தில் உள்ளது.

ஆடிப்பெருக்கின் சிறப்பு சித்ரான்னங்களில் ஒன்று புளியோதரை. புகழ்மிக்க புளியோதரை பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான சிற்றுண்டி. புளிப்பு சுவை உற்சாகம் தரக்கூடியது.

புளியோதரை செய்து ஆடிப்பெருக்கை சுவைப்போமா!

தேவையான பொருட்கள்

பச்சரிசி சாதம் – 1 கப்
நல்லெண்ணை – 12 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 6
புளி – பெரிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

* அடிகனமான வாணலியில் நல்லெண்ணை ஊற்றி காய வைத்து வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

* பிறகு எண்ணையில் கடுகு பொரிக்கவிட்டு, கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய் வற்றல், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம், தனியாத்தூள், வெந்தயம் போட்டு வதக்கவும்.

* ஒரு கப் நீரில் கரைத்த புளி விழுதை வடிகட்டி ஊற்றி, உப்பு போட்டு கெட்டியாக கொதிக்க விடவும்

* கொதித்த புளிக்கரைசலை உதிரி உதிரியாக வடித்த பச்சரிசி, சாதத்தில் போட்டு குழையாமல் மெல்ல கலந்து கறிவேப்பிலை, வேர்க்கடலை தூவி பரிமாறவும்.

* கமகம புளியோதரை தயார்.