Daily Archives: ஜூலை 27th, 2011

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க

அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.

இல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :

எதிர்பார்ப்பில்லாத அன்பு

அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.

தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.

அரவணைப்பு அவசியம்

தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.

கட்டிப்பிடி வைத்தியம்

ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.

தூக்கம் ஏன் ஏற்படுகிறது?

தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.

நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக் கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.

மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.

வைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்

கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.
மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று, தவறாக, கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில இமெயில்களைத் திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.
இரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள், இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கிவிட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்தவரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.
சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை. பின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேராக கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன. இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொண்டு தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.
யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப் படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதே இதன் வழிமுறையாகும்.
தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும். கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?

தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும்.