Daily Archives: ஜூலை 28th, 2011

கிளியோபாட்ராவை கவர்ச்சியாக்கிய கற்றாழை-சருமப் பளபளப்புக்கு அரு மருந்து

முகஅழகினையும், தோலையும் பாதுகாக்க பண்டைய காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு இயற்கை பொருள் கற்றாழை. எகிப்திய அழகி கிளியோபாட்ரா, தனது கவர்ச்சிக்கு கற்றாழையே காரணம் என்று குறிப்பிட்டுக்கிறார்.

வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வளரும் இந்த கற்றாழை பல பருவங்கள் வாழக் கூடிய குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இலைகள் தரையினை ஒட்டி ரோஜா இதழ்கள் போன்று கொத்தாக காணப்படும். சதைப்பற்று மிக்க இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை.

வசீகரத் தோற்றத்திற்கு

– இலைகளில் காணப்படும் ஜெல் இயற்கை முக அழகு கிரீமாக பயன்படுகிறது. தோலினை பளபளப்பாக்குவதில் இந்த இந்ந ஜெல் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட இந்த கற்றாழை ஜெல்லை பயன் படுத்துவதால் முகப்பொலிவு கூடும்.

– இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.

– இலையின் சோறு டை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலையில் ஏற்படும் பொடுகு, தொல்லைகளை நீக்குகிறது.

– இலைகளில் காணப்படும் ஜெல் போன்ற பொருளில் ஆலோக்டின் B எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டுகிறது.

தீப்புண்களை குணமாக்க

– கற்றாழை ஜெல்லில் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளன.

– தீப்புண், சிராய்ப்புப் புண்கள், சூரிய ஒளியின் தாக்கம், ஆகியவற்றிர்க்கு முதலுதவி செய்வதில் பயன்படுகிறது.

– இலையினை உடைத்தால் வெளியேறும் ஜெல்லினை புண்கள் மீது தடவினால் அது காயங்களின் மீது ஒரு படலம் போல படர்ந்து புண்களை விரைவில் ஆற்றுகிறது.

– இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.

வயிற்று உபாதைகளுக்கு

– பெப்டிக் அல்சர், மற்றும் எரிச்சல் தரும் வயிற்று வலியினை குணப்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்குண்டு.

– கற்றாழை இலையின் அடிப்பகுதியில் கிடைக்கும் மஞ்சள் வண்ண சாறு சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. இதனை ‘ஆலோ கசப்பு” என்ற மருந்துப்பொருளாக பயன்படுத்தலாம்.

– இதில் உள்ள ஆந்ரோகுயின்கள் மலமிளக்கி பண்பினை கொண்டவை, பெருங்குடலை சுருங்கவைத்து மலம் வெளியேற உதவுகின்றன.

– ஒரு சில துளி உட்கொண்டால் ஜீரணத்தினை தூண்டும்.

– இந்திய மருத்துவத்தில் பேதி மருந்தாகவும், மாதவிடாய் திருத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பைபாஸ் சிகிச்சையை விட எளிதானது இதய மாற்று சிகிச்சை

பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல ஓபன் ஹார்ட் சிகிச்சையை விட, பைபாஸ் மிகவும் சுலபமான அறுவை சிகிச்சை. இன்று, சென்னையில் இந்த பைபாஸ் சர்ஜரி, 10 மருத்துவமனைகளில், விரைவீக்கம், குடல் இறக்க சிகிச்சை போல, எளிமையாகி விட்டது.

இந்த பைபாஸ் சர்ஜரி பிரபலமாக காரணம், நடுத்தர வயதினர், குடும்ப தலைவன், தலைவிக்கு வருகிறது. மரண பயத்தில், ஆஞ்சியோகிராம் செய்து, ஸ்டென்ட் அல்லது அடைப்பை, “பைபாஸ்’ செய்து விடுகின்றனர். இவ்வளவு பிரபலத்திற்கு காரணம், பெரும்பாலான மருத்துவமனை, கார்பரேட், தனியார் டிரஸ்ட்டில் பல கோடிகளை போட்டு, கோடிகளை எடுக்க வேண்டும் என்பது தான். மருத்துவமனை கட்டமைப்பு, ஊழியர்கள், டாக்டர், நர்ஸ், கருவிகள் என்ற பலவற்றிற்கு ஏற்படும் மாதாந்திர செலவு, வட்டியை கட்ட, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தான், நுகர்வோர் ஆகின்றனர்; மருத்துவமனை, வியாபார நிறுவனங்களாகின்றன; டாக்டர்கள், டெக்னிஷியன்களாகின்றனர்.

ஓபன் ஹார்ட் சர்ஜரி, சற்று சிக்கலான அறுவை சிகிச்சை. இது, நிதானமாக, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஏனெனில், இங்கு இதயத்தை பிளந்து, உள்ளே வால்வை “ரிப்பேர்’ செய்வதும், வால்வை மாற்றுவதும், ஓட்டையை அடைப்பதும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இதயத்திலுள்ள தசைகள் சில நேரங்களில் பழுதடையும்; பைபாசை விட சிக்கல். பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல. இதய மாற்று சிகிச்சையில், இதயத்தை கிழிப்பது கிடையாது. இதயத்தின் மேல் பைபாஸ் செய்வது போலவும் கிடையாது. வாகனத்திற்கு, புதிய ஸ்டெப்னி டயரை பொருத்தி, சரி பார்ப்பது போல தான். ஆனால், பின்விளைவுகள், மாற்று இதயம் பொருத்திய பிறகு தான். பின் விளைவுகளைச் சீராக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.

இதய மாற்று சிகிச்சையின் வெற்றி?

மாற்று சிகிச்சைக்கு பிறகு, 85 சதவீதம் பேர், ஓராண்டும், 80 சதவீதம் பேர் மூன்றாண்டும், 70 சதவீதம் பேர் ஐந்தாண்டும் வாழ்ந்துள்ளனர்.

நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்தவர்கள்:

*அமெரிக்காவின் டோனி ஜஸ்மான்: இதய மாற்று சிகிச்சை செய்து, 31 ஆண்டுகள் வாழ்ந்தார். 20 வயதில், வைரஸ் நிமோனியா வந்து, இதனால், இதயமும் பாதிக்கப்பட்டு, 1979ல், மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. ஆக., 2009ல், புற்றுநோயால் இறந்தார்.

*கெல்லி பெர்க்கின்ஸ் என்ற பெண்மணி, வைரல் காய்ச்சலால், இதயம் பாதிக்கப்பட்டு, இதய மாற்று சிகிச்சை செய்து, கிளிமஞ்சாரோ மலை, மட்டகாம் மலை என்ற மலைகளை நடந்து வென்றவர்.

*ஆஸ்திரேலியாவின் பயோ கூல் என்ற பெண்மணி, 14 வயதில் மாற்று இதயம் பெற்றவர். இவருக்கு, வைரஸ் மயோகார்டைட்டிஸ். இன்று, சமூகப் பணியாற்றி வருகிறார்.

* நம் நாட்டில், அறுவை சிகிச்சை செலவு, 35 லட்ச ரூபாய் மற்றும் மருத்துவ செலவு மாதத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய். இவ்வளவும் செய்து கொண்டு வாழ, ஏழை இந்திய நாட்டில், யார் முன்வருவர்? இவ்வளவு பணம், மனைவி, மக்களுக்கு உபயோகப்பட்டால் போதும் என்று நினைத்து, அறுவை சிகிச்சை செய்து கொள்ள பெரும்பாலோர் முன் வருவதில்லை.
டாக்டர் எஸ்.எஸ். அர்த்தநாரி,
இதய ஊடுருவு சிகிச்சை நிபுணர்.

புரோகிராம் விண்டோ அளவு

ஒவ்வொரு புரோகிராமிற்கும் அதற்கான விண்டோ எப்படி அமைய வேண்டும் என்பதனை நம் விருப்பத்திற்கேற்ப செட் செய்திடும் வசதியினை விண்டோஸ் நமக்குத் தந்துள்ளது. இதனால், ஒரு விண்டோவினைப் பார்த்த வகையில், அதில் எந்த புரோகிராம் இயங்குகிறது என்பதனை நம்மால் உணர முடியும். இதனை விரிவாக இங்கு காணலாம்.
விண்டோஸ் இயக்கத்தில், டெஸ்க் டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகான் மீது கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப் படும் அளவு, மேக்ஸிமைஸ்/ மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும். அவ்வாறின்றி, அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்றால், அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள். திறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும். இதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி, அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.

அஸ்திவாரம் இல்லாத வீடு!

ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமானால் முதலில் அஸ்திவாரம் அமைப்பது வழக்கமான நடைமுறை. அஸ்திவாரம் அமைக்காமலே கட்டிடம் கட்டும் முறை ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

யூரி விளாசவ் என்பவர் கண்டுபிடித்த இந்த முறை, `மண்ணை அழுத்துதல்’ என்று கூறப்படுகிறது.

1968-ம் ஆண்டு, நோவாசி பிர்ஸ்க் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடம், களிமண்ணும், மணலும் கொண்ட பரப்பு உடையது. எனவே அங்கு 16 மீட்டர் ஆழத்துக்கு அஸ்திவாரம் தோண்டினால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும் என்று தீர்மானித்தனர்.

ஆனால் 11 மீட்டர் அளவுக்குத் தோண்டும்போதே அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அதற்குக் கீழே கடும் பாறையாக இருந்ததுதான் காரணம். உடனே மண்ணைப் பற்றி ஆராயத் தொடங்கினர்.

அந்தச் சமயத்தில்தான், 16 மீட்டர் ஆழத்துக்குத் தோண்டாமல் மண்ணை அழுத்திக் கடினமாக்கி, அதன் மூலம் கட்டிடம் அதனை அழுத்தும்போது மண் மிக உறுதியாக இருந்து கட்டிடத்தைத் தாங்கும் என்று விளாசவ் கண்டுபிடித்து உதவினார். அது நல்ல பலனைத் தந்தது.

விளாசவ் முறைப்படி, 12 அல்லது 14 டன் எடையுள்ள உலோக சிலிண்டரை ஒரு கிரேனுடன் இணைக்க வேண்டும். கிரேன் சுழன்று, சிலிண்டரை 15 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே போடும்.

அப்போது மணற்பரப்பில் 3 மீட்டர் ஆழமுள்ள துளை விழும். அதை அடைத்துவிட்டு, மீண்டும் அதே முறையில் பரப்பை அழுத்த வேண்டும். இநëத அதிஅழுத்த சக்தியால் பரப்பில் இருந்து நீர் நன்கு வெளியேற்றப்படும். (பூமிப் பரப்பின் அடியில் உள்ள நீர்க்கசிவே கட்டிடம் பலவீனம் அடைவதற்குக் காரணம். எனவே பரப்பை நீர் வற்றி உலரச் செய்ய வேண்டும்.) அப்போது அந்தப் பரப்பு, 300 டன் எடையுள்ள கட்டிடத்தையும் தாங்கும் வலுவை அடைந்துவிடும்.

இதனால் கட்டிடம் கட்டும் செலவு, நேரம் குறைகிறது. அதே நேரம் உறுதி அதிகரிக்கிறது.