Advertisements

Daily Archives: ஜூலை 29th, 2011

எந்த வயதில் பெண்கள் அழகு?

ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

ஐஸ்வர்யா ராயின் அழகு நாளுக்கு நாள் கூடுவதற்கும் இதுதான் காரணமோ…?

Advertisements

ரத்தப் பரிசோதனைக்கு தடை

காச நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை முறையை, மத்திய சுகாதாரத் துறை தடை செய்துள்ளது. இந்தியாவில், ஆண்டுதோறும் 15 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், காசநோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனையின் மூலம், நோய் உள்ளதா என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடிவதில்லை என, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே, இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது என, அந்நிறுவனம், அனைத்து நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்திய சுகாதாரத் துறையின், காசநோய்ப் பிரிவுத் தலைவர் அசோக் குமார் கூறுகையில், “”நம் நாட்டில், தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், காசநோயைக் கண்டறிய, ரத்தப் பரிசோதனையை மட்டும் மேற்கொள்கின்றன. இந்தப் பரிசோதனை பெரும்பாலும், தவறான கணிப்பையே கூறுகிறது,” என்கிறார். “காசநோயைக் கண்டறிய, நோய் உருவாக்கும் கிருமியான மைகோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ், ரத்தத்தில் உண்மையிலேயே உள்ளதா, அது வளர்கிறதா ஆகியவை, உன்னிப்பாக ஆராயப்பட்டு, பின்னரே, நோய் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என, கனடாவில் உள்ள, மான்ட்ரீல் பல்கலை, தொற்று நோய்ப் பிரிவுத் துணை பேராசிரியர் மதுகர் பாய் கூறுகிறார். உலகளவில், 18 வகையான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை அனைத்தும், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் உருவாகி, உலகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எந்தப் பரிசோதனையுமே, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படாதவை.

நன்றி-தினமலர்

விண்டோஸ் டாஸ்க்பார்

டாஸ்க் பாரில் என்ன செய்யலாம் என்று பலமுறை இந்த பக்கங்களில் டிப்ஸாகத் தரப்பட்டுள்ளது. என்னவெல்லாம் செய்யலாம் என அனைத்தையும் ஒரே இடத்தில் தந்தால் என்ன என்று கேட்டு எழுதிய வாசகரின் விருப்பத்தை நிறைவேற்ற, கீழே தகவல்கள் தரப்படுகின்றன.
டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “Taskbar” என்னும் டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
Autohide the taskbar – இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறியலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்டால், டாஸ்க் பாரினை நீங்கள் மாற்றவோ, சுருக்கவோ முடியாது. இடமும் மாறாது. தவறுதலாக, நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க் பாரில் வைத்து இழுத்துவிட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறிவிட்டதே என்ற பிரச்னை எல்லாம், இந்த டூல் மூலம் டாஸ்க் பாரை லாக் செய்துவிட்டால் வராது.
Use small icons – உங்கள் டெஸ்க்டாப் முழுவதும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா! அப்படியானால், இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம் தேவை. இதனைக் கிளிக் செய்தால், டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மானிட்டருக்குக் கீழாக இருக்கும். டாஸ்க் பார் வழக்கமாக இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்றால், சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல, டாஸ்க் பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்சரை அந்த இடத்திலிருந்து எடுத்துவிட்டால், உடனே டாஸ்க் பார் மறைந்துவிடும்.
க்ண்ஞு ண்ட்ச்டூடூ டிஞிணிணண் – உங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இதில் கிளிக் செய்திடுங்கள். ஐகான்கள் அனைத்தும் சிறியதாக மாறிவிடும்.
விண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக் கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் டாஸ்க் பாரினை, மானிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க் பாரின் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று, விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

அதிசய வேர்!

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.

இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது.

1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார். உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.

ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.