Daily Archives: ஜூலை 30th, 2011

லேட்’டானாலும் ‘கிரேட்’டா…!

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் ‘பிராக்டிகல்’ வாழ்க்கையில் பார்க்கலாம்.

இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது பலவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும். ஆனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழி கோலும் என்பது அவர்களின் கருத்து.

எடுத்த எடுப்பிலேயே ‘டாப்’ கியருக்குப் போனால் அது ‘ஆக்சிடன்ட்’டில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி ‘டாப்’புக்குப் போனால் ‘எக்சலன்ட்’ ஆக இருக்கும். திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

இப்படி அவர்கள் சொல்வதற்கு முக்கிய காரணம் – எடுத்த எடுப்பிலேயே இருவரும் செக்ஸில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தினால், யாராவது ஒருவருக்கு திருப்தி ஏற்படாமல் போய் விட்டால், அது ‘பார்ட்னர்’ மீதான வெறுப்புணர்வை உள்ளூர வளர்த்து விடும். அது உடனடியாக வெளியே தெரியாது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் செக்ஸ் வாழ்க்கையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி கசக்க ஆரம்பித்து விடும்.

எனவே இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே அன்பில் ஆழமாக வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

அமெரிக்காவில் இதுதொடர்பாக ஒரு சர்வே நடத்தினர். அதில், செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கை (அல்லது சேர்ந்து வாழுதல்) அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம்.

வலுவான திருமண பந்தம் என்பது இருவரது மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது. வெறுமனே உடல் சேர்க்கையில் இது சாத்தியப்படாது. உணர்வுப் பூர்வமாக, உள்ளப் பூர்வமாக இருவரும் முதலில் இணைய வேண்டும். நீ என்பதில் நானும் அடங்கும், நான் என்பதில் நீயும் அடங்கும் என்ற வைரமுத்துவின் வரிகளைப் போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புக வேண்டும். அதன் பிறகு உடல்களின் கூடலுக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் அது உண்மையான பந்தமாக இருக்க முடியுமே தவிர, செக்ஸ் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் எழுந்தால் அது நிச்சயம், கூடலுக்குப் பிந்தைய ஊடலுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

சும்மாவா சொல்லி வைத்தார்கள் அந்தக் காலத்தில் – மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று. அது நிச்சயம் உண்மைதான். ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்க வேண்டுமானால் திட்டமிடுதலுடன் கூடிய உறவைக் கடைப்பிடிப்பது அவசியம்.

காதல் என்பது…!

காதல். இதற்கு இதுதான் அர்த்தம் என்று இன்று வரை யாருமே வகுத்து வைக்கவில்லை. அது முடியாத காரியமும் கூட.

சிலர் காதலை புதிரானது என்கிறார்கள். அது ஒரு மாயம் என்பது சிலரின் கூற்று. சிந்தனையைத் தூண்ட உதவும் காதல், காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது சிலரின் வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் காதலுக்கு சிலர் வகுத்துள்ள இலக்கணங்கள்.

தத்துவ ஞானி பிளேட்டோ காதல் குறித்து என்ன கூறுகிறார் என்றால்- காதல் ஒருவரைத் தொடும்போது அவர் கவிஞராகிறார்.

அதையே வால்டேர் கூறும்போது, இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல். அதில், கற்பனையும் சேரும்போது அழகான காவியமாகிறது என்கிறார்.

காதலில் விழுந்தவர்கள் முதலில் கவிஞராகிறார்கள். பிறகு அவர்கள் பேசினாலே கவிதை மழைதான்.

”நிலவு சுடும்
சூரியன் சுகமாகும்
காதல்”

காதலியை நினைத்து இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கும் காதலனுக்கு நிலவு கூட தகிப்பை, தவிப்பைத் தருகிறது. ஆனால் அவளை சந்திக்கப் போகும் பகலை நினைத்தால் சூரியனின் அனல் கூட எனக்கு சுகமாகத் தெரிகிறதாம்.

”உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது
நான் பலம் பெற
மீண்டும் ஒரு முறை சிரியேன்”

அவளின் புன்னகையில் வீழ்ந்து போன அவனுக்கு மீண்டும் பலம் பெற அதே சிரிப்பு தேவைப்டுகிறது. காதலின் வினோதம் இது.

”தெளிவான வானமாய்
என் மனம் இருந்தும்
நீ
காதல் மேகமாய் நினைவில் வந்ததால்
எனக்குள் மழை”

இப்படி கவிதை அருவியில் அவர்கள் நனைகிறார்கள் உலகக் காதலர்கள்.

மார்ட்டின் லூதர் கிங்கிடம் காதல் குறித்து கேட்டபோது, வெறுப்புணர்வு வாழ்க்கையை முடமாக்குகிறது, காதல் வாழ்க்கையை உணர வைக்கிறது என்றார்.

கண்கள் சந்தித்த நொடியில் என் இதயத்தில் அவள் விழுந்தாள் என்பதுதான் காதல் வயப்பட்ட அத்தனை ஆண்களும் சொல்லும் ஒரே வார்த்தையாக உள்ளது. இப்படி காதலுக்கு உயர் மரியாதை கொடுத்தே அத்தனை பேரும் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர்.

அதேசமயம், இன்றுள்ள இளைஞர்களும் சரி, இளைஞிகளும் சரி காதல் எது, நட்பு எது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். ஆறுதலாக, பரிவாக, பாசமாக, தோழமையோடு யாராவது ஒரு பெண் பேசினால், உடனே அந்தப் பெண் மீது காதல் கொள்பவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். இன்னும் சிலருக்கு காதல் கொண்ட வேகத்திலேயே காமத்தின் தாக்கமும் ஏற்பட்டு குழப்பமாகி, கடைசியில் அந்தக் காதல் முறிந்து போய் சோகத்தில் மூழ்கிப் போய் விடும் நிலையையும் இன்று காண்கிறோம்.

காதல் பொறுமையானது, இரக்கமானது. பொறாமைக்கும், வெறுப்புக்கும் இங்கு இடமில்லை. பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள் கலந்ததுதான் காதல். பெருமைக்காக காதலைப் பயன்படுத்துவோர் பலர் உண்டு. அது காதலுக்கு பெரிய அவமரியாதை என்பதை அவர்கள் உணர்வதில்லை.

உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். காதலின் அடிப்படையும் கூட அதுதான். ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்? இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினேகிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.

முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.

காமம் இல்லாத காதல் தவறா என்று கேட்கலாம். காதல் என்பது பால் என்றால், காமத்தை சர்க்கரை என்று கூறலாம். வெறும் பாலை சாப்பிட முடியும், ஆனால் வெறும் சர்க்கரையை எவ்வளவு தூரம் சாப்பிட முடியும்?. பாலும் வேண்டும், சர்க்கரையும் வேண்டும்-அளவோடு. அது காதலுக்கும், காமத்திற்கும் பொருந்தும்.

காதல் ஒரு மனிதனை முழுமையாக்க உதவுகிறது. ஏனோதானோவென்று இருக்கும் ஒருவன் காதல் வயப்பட்டவுடன் மாறிப் போவதை நாம் பார்க்கலாம். காதலுக்கு மட்டும்தான் அந்த சக்தி. அது ஏன் காதல் வயப்பட்டால் மட்டும் மாறுகிறார்கள். காதல் வயப்படுபவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுகிறது, புதிய அந்தஸ்து கிடைத்த சந்தோஷத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் ஏற்படுவதே இந்த மாற்றம்.

ஆண், பெண் இருவரின் உள்ளங்கள் நம்பிக்கை, நேசம், பாசம் ஆகிய இழைகளால் பிணைக்கப்படும்போது இருவரும் சேர்ந்து உயருகிறார்கள். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது.

சரி உண்மையான காதலை எப்படி உணர்வது?

”நீ சிரித்தால்
எனக்குள் எதிரொலிக்கும்
காதல்”

இப்படித்தான் இருக்க வேண்டும், உண்மையான காதல் வயப்பட்டவர்களாக இருந்தால்.

உடல் ஈர்ப்பாக மட்டுமல்லாமல் மன ஈர்ப்பு ஏற்படும்போதான் உண்மையான காதலை உணர முடியும். நட்போடு பேசினால், நாலு வார்த்தை ஆசையாகப் பேசினால் உடனே காதல் என்று கூறி விட முடியாது. கவிதை எழுதுவது, பிடித்த பொருட்களை வாங்கித் தருவது, ‘அவுட்டிங்’ கூட்டிச் செல்வது, பணத்தை தாறுமாறாக செலவிடுவது- இதெல்லாமும் கூட காதலாகி விட முடியாது.

உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.

காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். அதையும் உணர்ந்து, அதை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம்.

உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல்.

எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்.

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.

“ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள். எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும், சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும், இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுத் தாருங்கள்.

பொறுமையின்றி இருக்கும் துணிச்சலும், துணிவோடு இருக்கும் பொறுமையும் அவனுக்கு வேண்டும். தன்னிடம் நம்பிக்கை வைப்பதை கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அப்போது தான் மனித சமுதாயத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.”

இது லிங்கன், கடிதத்தின் முக்கியமான பகுதி மட்டுமே.

உங்கள் குழந்தையும் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற விரும்புவீர்களானால், குழந்தைகளை சரிசெய்வதைவிட- பெற்றோர்களாகிய உங்களை நீங்களே சீர்படுத்திக்கொள்வது அவசியம்.

அதற்காக இந்த கேள்விகளைப் படியுங்கள்…

* வேறு வேலையாக இருக்கும்போது உங்கள் குழந்தைகள் விளையாட அழைத்தால் செல்வீர்களா?

* குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் உடையை அணிய விடுவீர்களா?

* குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்தால் மன்னிப்பு கேட்பீர்களா?

* இந்த டி.வி. சேனல்தான் பார்க்க வேண்டும், இவ்வளவு நேரம்தான் டி.வி. பார்க்க அனுமதி என்ற கட்டாயம் உண்டா?

* வீட்டுப்பாடத்தை குழந்தை முடிக்கவில்லையென்றால் நான் அதை செய்து கொடுக்க மாட்டேன். பள்ளியில் அதற்கான தண்டனையை பெறட்டும், அப்படியென்றால்தான் அடுத்த முறை தவறு நடக்காது என்று விட்டுவிடுவீர்களா?

* ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, நான் குழந்தையை கண்டிக்கிறேன் என்கிறீர்களா?

* குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மாட்டேன். அடம்பிடிக்கும்போது அன்பாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை?

* ஆசிரியர் உள்பட மற்றவர் மீது குழந்தை புகார் கூறினால் அதில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்?

* குழந்தை வளர்ந்ததும் அவன் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடத்தை சொல்கிறான். ஆனால் அது அவனுக்கு சரிப்படாது என்றோ, தேவையில்லை என்றோ கருதுகிறேன். இருந்தாலும் அவன் இஷ்டப்படி படிக்க வைப்பேன்?

இந்த கேள்விகளில் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது `ஆம்’ என்ற பதில் வந்திருந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். இல்லாவிட்டால் உங்களையே நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்து சரிசெய்துகொள்ளவேண்டும். நல்ல பெற்றோரால்தான் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க முடியும்.

‘ஷேவ்’ செய்வது எப்படி?

‘சேவிங்’ குறித்து நிறையவே தெரியும். ஆனால் ‘ஷேவிங்’ விஷயத்தில் பலரும் பல முக்கிய அம்சங்களை மறந்து விடுகிறோம்.

ஷேவ் செய்வதில் என்ன பெரிசா இருக்கு, ரேசரை எடுத்தோமா, ஷேவ் செய்தோமா என்று போக வேண்டியதுதானே என்று சிலர் கூறலாம். ஆனால் அதிலும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. கேளுங்க…

காலையில் எழுந்ததுமே ஷேவ் செய்ய உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள்தான் எழுந்திருக்கிறீர்கள், உங்களது தோல் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்காது. இரவு முழுவதும் தூங்கியிருப்பதால் உங்களது கன்னம் சற்று உப்பியிருக்கும். அதற்குக் காரணம், உங்களது தோலின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள திரவம். அது குறையும் வரை காத்திருப்பது அவசியம். அப்போதுதான் உங்களால் சிறப்பாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவ் செய்வதற்கு முன்பு பேஷியல் கிளன்சர் அல்லது ஸ்கரப்பை வைத்து லேசாக கன்னத்தை தேய்த்துக் கொடுத்துக் கொள்வது நல்லது. அப்படி செய்வதால் எல்லா முடிகளையும் எழுப்பி விடலாம். இதன் மூலம் அனைத்து முடியையும் முழுமையாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவிங் செய்வதற்கு முன்பு இதமான சுடு நீரால் நமது முகத்தை அல்லது எங்கு ஷேவ் செய்கிறோமோ அந்த இடத்தில் தடவி ஈரமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் முடியின் கடினத்தன்மை குறைந்து, தோலை வெட்டிக் கொள்ளாமல் முடியை மட்டும் ஷேவ் செய்ய உதவியாக இருக்கும்.

ஷேவிங் கிரீமை முகத்தில் தடவும் போது அது நன்கு முடி முழுவதும் ஊடுறுவும்படி பூச வேண்டும். அப்போதுதான் ஷேவ் செய்யும் போது முடி முழுவதும் அகல வழி கிடைக்கும்.

எப்போதுமே கூரிய பிளேடையே பயன்படுத்துங்கள். இதன் மூலம் விரைவில் ஷேவ் செய்யலாம், அத்தோடு, தோல் முரட்டுத்தனம் அடைவதையும் குறைக்க முடியும். ‘மொட்டை’யான பிளேடைப் பயன்படுத்தினால் பலமுறை ‘வறட் வறட்’ என்று இழுக்க நேரிடும். அது தோலுக்கு பாதிப்பைக் கொடுக்கும்.

எப்போதுமே முடியின் இயல்புக்கேற்பவே ஷேவ் செய்ய வேண்டும். எதிர்புறமாக செய்தால் அது முடியின் வேர்ப் பகுதியைப் பாதிக்கலாம். தோலில் புண்ணை ஏற்படுத்தி விடலாம், முரட்டுத்தனமானக தோல் மாறவும் வாய்ப்பு ஏற்படுத்தலாம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.

ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகரமாக்கலாம்.

லேப்டாப் கவனம்

இன்னும் சில மாதங்களில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் கரங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர் தவழப் போகிறது. பள்ளிகளில் இறுதி நிலையில் பயிலும் இவர்களின் வாழ்க்கையில் நிச்சயமாய் இவை ஒரு புதிய வாழ்க்கைத் திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்றால், அது மிகையாகாது.
பொதுவாக லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படக் கூடிய வாழ்நாள், பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் சற்றுக் குறைவு என்றாலும், நாம் சற்றுக் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டால், அதன் வாழ்நாளை நீட்டித்து, அதிக பட்ச பயன்களை அடையலாம். கீழே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், லேப்டாப் கம்ப்யூட்டரை வேகமாக இயங்கச் செய்திடலாம்.
1. டிபிராக்: வாரம் ஒருமுறையேனும், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை டிபிராக் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் உங்கள் பைல்களை, ஹார்ட் டிஸ்க்கில் பதிகையில், அவற்றைப் பல துண்டுகளாக்கி, ஆங்காங்கே பதித்து வைக்கும். டிபிராக் செய்திடுகையில், இந்த துண்டுகள் அனைத்தையும், கம்ப்யூட்டர் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வைக்கிறது. இதனால், இந்த பைல்களைப் படிக்க லேப்டாப் அதிக சிரமப்படத் தேவை இல்லை. செயல்படும் நேரமும் குறையும்.
2. ரெஜிஸ்ட்ரி கிளீன்: விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படை கோப்பாக அமைவது ரெஜிஸ்ட்ரி. இதில் நாம் பதியும் புரோகிராம்களை இயக்குவதுகுறித்த குறியீடுகள் எழுதப்படும். இந்த புரோகிராம்களை எடுத்த பின்னரும், ரெஜிஸ்ட்ரியில் அந்த குறியீடுகளின் சில பகுதி தங்கிவிடும். இவையும் லேப்டாப் இயக்கத்தை மந்தப்படுத்தும். எனவே ரெஜிஸ்ட்ரியை அவ்வப்போது கிளீன் செய்திடும் புரோகிராம்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
3. ஹார்ட் ட்ரைவின் சுமை: மியூசிக், பொழுதுபோக்கு, படங்கள், வீடியோக்கள் எனப் பலவகையான பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் நாம் குவித்துக் கொண்டே போவோம். அதே போல சிறிய புரோகிராம்களை, ஓரிரு முறை பயன்படுத்தவதற்காகப் பதிந்துவிட்டு நீக்காமலே இருப்போம். இவை எல்லாம் ஹார்ட் டிஸ்க்குக்குச் சுமையை அளிக்கும். டிஸ்க் இயங்கும் நேரத்தை நீட்டிக்கும். எனவே தேவையற்ற பைல்களையும், புரோகிராம்களையும் நீக்க வேண்டும்.
4. வைரஸ் பாதுகாப்பு: எந்த நேரமும், எவ்வழியிலும் வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் லேப்டாப்பிற்குள் நுழையலாம். எனவே வைரஸ்களிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றைக் கட்டாயம் நிறுவ வேண்டும். அதனை அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். அடிக்கடி முழுமையாக இயக்கிக் கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டும். இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் தாமாக இயங்கி, லேப்டாப்பினைச் சோதனை செய்திடும் வகையிலும் செட் செய்திடலாம்.
5. ரீசைக்கிள் பின்: நாம் நீக்கும் பைல்கள் ரீ சைக்கிள் பின்னில் தங்குகின்றன. நம்மை அறியாமல் அழித்துவிட்டால், பின்னர் மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்ள விண்டோஸ் இந்த ஏற்பாட்டினைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு பைல் அழிக்கப்பட்ட பின்னரும் தேவையா என்பதை நாம் உடனே அறிந்து கொள்ள முடியும். எனவே ரீசைக்கிள் பின்னில் உள்ள நீக்கப்பட்ட பைல்களை, அதிலிருந்தும் நீக்க வேண்டும்.
6. தற்காலிக இணைய பைல்கள்: இன்டர்நெட்டில் நாம் தளங்களைப் பார்க்கும்போது, அவை சார்ந்த பல பைல்கள், தற்காலிக பைல்களாக நம் லேப்டாப்பில் சேவ் செய்யப்படும். இவை அனைத்தையும் உடனுடக்குடன் நீக்க வேண்டும்.
7.தேவையற்ற ஸ்டார்ட் அப் புரோகிராம்கள்: கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போதே, சில புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். நாளடைவில் நமக்குத் தேவைப்படாத, அல்லது சில நாட்கள் மட்டும் தேவைப்பட்ட புரோகிராம்களும் இயங்கியவாறே இருக்கும். இவற்றை நீக்குவது, கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வழி வகுக்கும்.
8. கூல் கூல்: உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை, உங்கள் படுக்கை, சோபா, குஷன் ஆகியவற்றின் மீது வைத்து இயக்க வேண்டாம். லேப்டாப்பில் உருவாகும் வெப்பம் சுதந்திரமாக வெளியேற வேண்டும். இப்போது இதற்கெனவே சிறிய ஸ்டாண்டுகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி, அதன் மீது வைத்துப் பயன்படுத்துவது, வெப்பத்தை வெளிச் செலுத்த உதவும். இதனால், லேப்டாப்பின் பாகங்கள் விரைவில் கெட்டுப் போவது தடுக்கப்படும்.

பார்வையற்றோர் `பார்க்க’ உதவும் கண்ணாடி!

சிறப்புவாய்ந்த `பயானிக்’ மூக்குக் கண்ணாடியை உருவாக்கி வருவதாவும், சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் இவை, பார்வையற்றோருக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் இன்ப அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இந்தக் கண்ணாடியைத் தயாரித்து வருகிறது. இதனுடன் இணைந்த மிகச் சிறிய காமிராக்களும், பாக்கெட் கம்ப்யூட்டரும், கண்ணாடி அணிந்திருப்பவருக்கு எதிரேயுள்ள பொருட்கள், ஆட்கள் பற்றி உஷார்ப்படுத்தும்.

இந்த விலை மலிவான, அதிக எடையற்ற கண்ணாடி, வெற்றிகரமான சோதனைக்குப் பின் 2014-ம் ஆண்டு வாக்கில் சந்தைக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்தக் கண்ணாடி அணிந்தால் பார்வையற்றவர்களால் நெருக்கடிமிக்க சாலைகளிலும் எளிதாகச் செல்ல முடியும், பஸ் நம்பரைக் கூட படிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதைப் போன்ற மூக்குக்கண்ணாடியை உருவாக்கும் முயற்சி ஏற்கனவே நடைபெற்றிருக்கிறது. ஆனால் அவை பெரிய கறுப்புக் கண்ணாடிகளாகவும், ஒழுங்கற்ற காமிராக்களையும், புடைத்துத் தெரியும் கம்ப்யூட்டர்களையும் கொண்டதாக இருந்தன. ஆனால் தற்போதைய நவீனத் தொழில்நுட்பத்தால், சாதாரண மூக்குக் கண்ணாடிகளைப் போலவே தோன்றும் இந்த `பயானிக் ஸ்பெக்டக்கிள்கள்’ உருவாக்கப்பட்டிருக்கின்றன.முக்கியமாக, இதன் விலை அதிகமாக இருக்காது என்பதால், தேவையுள்ள அனைவரும் இதை எளிதாக வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது மகிழ்ச்சியூட்டும் செய்திதான்.

மதியம் தூங்கணும்

மதியம் தூங்கணும்

மதிய நேரத்தில் தூங்கினால், உடல் எடை கூடும் என்று சொல்லப்படுகிறது. உண்மையா இது? வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால் ஆபத்து தான். ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும்.

 

அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

 

செப்பு பாத்திரத்தில் குடிநீர்

 

செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:

* கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.
* செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.
* ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.
* இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
* உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.

சத்து வீணாகிறது

கடையில் வாங்கிய, பதப்படுத்தப்பட்ட பழச்சாறு புட்டியின் மூடியைத் திறந்து விட்டால், அந்த பழச்சாற்றை, ஒரு வாரத்திற்குள் குடித்து விட வேண்டும். ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருந்தால், அதில் வைட்டமின் சி சத்து குறைந்து விடும். பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள் மீது, ப்ளோரோசென்ட் விளக்கு ஒளி பட்டால், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ரிபோப்ளாவின் சத்து குறைந்து விடும். எனவே, ஒளி புகாத வகையிலான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் பொருட்களையே வாங்க வேண்டும்.

 

வெறும் வயிற்றில் மருந்து?:

வயிற்றில் உணவு உள்ள நிலையில், ஒரு சில மருந்துகள், ரத்தத்துடன் கலப்பதில் தடை ஏற்படும். அத்தகைய மருந்துகளை, உணவு சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவிற்கு பிறகு 2 மணி நேரம் கழித்தோ சாப்பிடுவதால், அவை தடையின்றி உடலால் உறிஞ்சப்படுகிறது. டி.பி.,க்கான ரிபாம்பிசின், எலும்புகளில் கால்சியம் குறைபாடு நீக்கும் மருந்தான, பைபாஸ்போனேட்ஸ் மற்றும் சில மருந்துகளை, வெறும் வயிற்றில் தான் உட்கொள்ள வேண்டும்.

 

பைபாஸ்போனேட்ஸ்?:

“ஆஸ்டியோபோரோசிஸ்’ எனப்படும், எலும்புகளில் கால்சியம் குறைப்பாட்டிற்காக, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளே, “பைபாஸ்போனேட்ஸ்’ அடங்கியவை என்று கூறப்படுகின்றன. இந்த மாத்திரையை வெறும் வயிற்றிலேயே உண்ண வேண்டும். வயிற்றில் சிறிதளவு உணவு இருந்தால் கூட, இந்த மருந்து, ரத்தத்தில் கலப்பதில் தடை ஏற்பட்டு, அதன் வீரியம் குறைந்து போகும். இரவில் உண்ணக் கூடாது. மாத்திரை சாப்பிட்டவுடன், 45 நிமிடங்கள் வரை உறங்கக் கூடாது.