Monthly Archives: ஒக்ரோபர், 2011

திருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்கு..?!

திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் எவ்வளவோ நச்சரித்தாலும் சில இளைஞர் கள் பிடிவாதமாக மறுத்துவருகிறார்கள். `திருமணம், ஒரு மனிதனை அடிமையாக்கி விடும், அவனது எல்லா மகிழ்ச்சி, சுதந்திரத்தையும் பறித்துவிடும், திருமணத்தால் பலன் பெறுபவர்கள் பெண்களே’ என்பது திருமணத்தை மறுக்கும் இளைஞர்களின் திடமான நம்பிக்கை.

திருமணமë என்ற பொறுப்புச் சிலுவையைத் தூக்கித் திரிவதைவிட, திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் `லிவ்-இன்’ முறையை நாடலாம் என்ற மனோபாவம் இளைஞர்களிடம் பெருகி வருகிறது. எப்படியோ முடிந்தவரை திருமணத்தைத் தள்ளிப் போட நினைக்கிறார்கள்.

ஆனால் இளைஞர்களின் இந்த எண்ணம் சரியா?

– இல்லை என்பதே வாழ்வியல் நிபுணர்களின் கருத்து.

திருமணம் என்பது, ஆண்களின் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது என்பது அவர்கள் கருத்து. காரணம், மனைவிகள் கணவன்மார்களின் நலத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கணவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதால், மனைவியால் துணைவரின் இதய நோய், சர்க்கரைநோய் போன்றவற்றுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை உடனடியாக உணர்ந்துகொள்ள முடிகிறதாம்.

திருமணம், மனஅழுத்தத்தில் இருந்து ஆண்களைக் காக்கிறது, அதேநேரத்தில் மணமான ஆண்களுடன் ஒப்பிடும்போது மணமான பெண்கள் இருமடங்கு மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அனைத்து வயதினரிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், மனைவிகளை விட கணவன்மார்கள் திருமண வாழ்வில் அதிகபட்சத் திருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்களை விட அதிக சந்தோஷத்தை அனுபவிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஆண்கள் விஷயத்தில் இது அப்படியே நேரெதிராக இருக்கிறது.

மனைவியுடன் வாழும் ஆண்களைவிட மனைவியை இழந்த ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதவையாவது பெண்களின் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையாம்.

1994-ம் ஆண்டில் அமெரிக்காவில் செக்ஸ் வாழ்க்கை தொடர்பாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் மகிழ்ச்சிகரமான செக்ஸ் வாழ்வை அனுபவிப்பவர்கள் திருமணமான ஆண்களே (88 சதவீதம் பேர்) என்று தெரியவந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டுக்கு மேற்பட்ட செக்ஸ் துணையைக் கொண்டிருந்த ஆண்கள் குறைவான சந்தோஷத்தையே அனுபவிக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது, ஜோடியாக வாழ்வது மனிதகுலத்தின் `டிரேட்மார்க்’ என்று காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமண வாழ்க்கை மீதான வெறுப்பு, மனித சமூகத்தை மிரட்டிக் கொண்டி ருக்கும் ஐந்து பெரும் அபாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சரி, ஆண், பெண் இருவருமே திருமண வாழ்க்கையை இனிக்கச் செய்வது எப்படி?

உங்களைப் பிடிக்காத நபரைத் திருமணம் செய்யாதீர்கள். உங்களுடன் கரம் கோர்ப்பவர், உங்களை விருமëபுபவராக இருக்க வேண்டும். திருமணத்துக்குப் பின் எல்லாம் சரியாகிவிடும் என்று கற்பனைக்கோட்டை கட்டாதீர்கள்.

உங்களுக்கும், உங்கள் வருங்காலத் துணைக்கும், அவரது பெற்றோருக்கும் எந்தளவுக்குப் பொருந்திப் போகும் என்று திருமணத்துக்கு முன்பே சோதித்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் திருமண வாழ்வில் எப்படி இருப்பார் என்பதற்குச் சரியான அடையாளம், அவர் பிறந்த குடும்பத்தில் எப்படி இருக்கிறார் என்பது.

ஆண் செய்யும் வேலைகளைத்தான் ஆண் செய்ய வேண்டும், பெண் செய்யும் வேலைகளைப் பெண்ணே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உதறுங்கள். மனைவியே எப்போதும் சமைத்து, வீட்டைப் பெருக்கி, கழுவித் துடைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. இன்று, கணவன், மனைவியின் பொறுப்புகள் மாறியுள்ளன அல்லது மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிதர்சனத்தை உணராவிட்டால் உங்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சும்.

வாழ்க்கைத் துணையுடனான உரையாடலில் வெளிப்படையாக இருங்கள்.

கணவன்- மனைவிக்கும், மனைவி- கணவனுக்கும் விசுவாசமாக இருப்பதில் மாறாத உறுதி காட்ட வேண்டும். பார்வையையும், மனதையும் அலைபாய விடுவது, நிம்மதியைக் குலைக்கும், குடும்ப அமைதியைத் தகர்க்கும். ஒரே துணையுடன் வாழ்வதுதான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சி தரும்.

நன்றி-தினத்தந்தி

வலிகளைப் போக்கும் வர மிளகாய்

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் இந்திய சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்

விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது.. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.
உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

தோல் நோய்களை போக்கும்

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.
பாக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது.

வலிகளைப் போக்கும்

சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. மேடைப் பேச்சாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு மிகவும் உதவும். வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.
இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.

இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ

விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக “மாங்கோ’ என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.
விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் “மாங்கோ’ தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.
இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.
சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.
பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.
ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் – விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் – விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

கம்ப்யூட்டர் கிராஷ்

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில்
Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

பக்கோடா குழம்பு

தேவையானவை

கடலைப்பருப்பு – 2 கப்
பொட்டுக்கடலை – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 4
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 10
தக்காளி – 3
தேங்காய் – 1
எலுமிச்சம் பழம் – 1
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
பட்டை கிராம்பு, சோம்புத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 4 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி இவற்றைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

* தேங்காயைத் துருவி நைசாக அரைக்கவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்புத்தூள் போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு சிவக்க வதக்கவும்.

* தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்த தேங்காயை விட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியான பதம் வந்ததும் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கி வைக்கவும்.

* கடலைப் பருப்பை ஊற வைத்து பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வெந்ததும் எடுத்து குழம்பில் போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.

* சூடான சாதத்துடன் பரிமாற, பக்கோடா குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

வெற்றி நமதே!-ஆக். 31 கந்தசஷ்டி!

முருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்; இதை சமஸ்கிருதத்தில், “ஸுப்ரஹ்மண்ய’ என்பர். “ஸு’ என்றால் “உயர்ந்த’, “ப்ரஹ்மண்யம்’ என்றால், “இறைவன் அல்லது சத்திய சொரூபம்’ என்று பொருள். “உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்’ என்று பொருள் கொள்ளலாம்.
ஆம்… மனிதன் பிறக்கிறான். உலகத்திலுள்ள காட்சிகளைக் கண்டும், தன் வாழ்வில் நடப்பவற்றை நினைத்தும் பெருமைப்படுகிறான், சந்தோஷம் கொள்கிறான், கவலைப்படுகிறான். இப்படி, உணர்ச்சிக் கொந்தளிப்பாக வாழ்கிறான். இதைத்தான் ஆன்மிகம், “அஞ்ஞானம்’ என்கிறது. ஆனால், சத்திய சொரூபமான இறைவனை மறந்து விடுகிறான். அவன் தான் எல்லாவற்றுக்கும் அதிகாரி, இங்கே நாம் பிறக்கக் காரணமான அவனே, நம் இறப்புக்கும் காரணமாக இருக்கிறான். எனவே, எங்கிருந்து வந்தோமோ, அங்கே செல்வதற்கும், அவனுடைய உலகத்தில் பசி, தூக்கம், துக்கம் எதுவுமே இல்லாமல் நித்யானந்த வாழ்வு வாழ்வதற்கும் உரிய வழி வகைகள் பற்றி சிந்திப்பதே இல்லை. தற்காலிக வாழ்வுக்காக பல பாவங்களைச் செய்கிறான். இதனால், இறைவனின் கோபத்துக்கு ஆளாகி, பல பிறவிகளை எடுக்கிறான்.
எனவே தான், மகான்கள் பிறப்பற்ற நிலை வேண்டும் என்பதற்காக, பல பயிற்சிகளை மேற்கொண்ட னர். பிறவிப் பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளில் சரணடையும்படி கூறினர்.
கஷ்யபர் என்ற முனிவருக்கு, இரண்டு மனைவியர். அவர்களுக்கு தேவ பிள்ளைகளும், அசுரப் பிள்ளைகளும் பிறந்தனர். தாய் வேறு என்பதால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அசுரப் பிள்ளைகளின் தலைவனான சூரபத்மன், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்தான். சிவபெருமானிடம், 108 யுகங்கள் வாழ, அவன் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பல கொடுமைகள் செய்தான்.
எனவே, சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். தன் வரத்தைத் தவறாகப் பயன்படுத்திய சூரபத்மனை அழிக்க, சிவன் முருகப் பெருமானையும், அவருக்கு உதவியாக நவவீரர்களையும் பிறப்பித்தார். நவவீரர்களின் தலைவனாக வீரபாகுவை நியமித்தார் முருகன். அவர்கள் துணையுடன், முருகப் பெருமான் சூரபத்மன் முன் வந்து நின்றார்.
முருகனைப் பார்த்ததுமே சூரபத்மனுக்கு ஞானம் வந்து விட்டது. நல்லவர் தரிசனம் நன்மையையே தரும் என்பதை இதன் மூலம் உலகத்துக்கு உணர்த்தினார். அவனுக்கு, பல நல்லுரைகளை எடுத்துரைத்தார் முருகர். பின், தன் மாயையால் அவற்றை மறக்கடித்து அவனை இருகூறாகப் பிளந்தார். ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி, தன் வாகனமாகவும், இன்னொரு பகுதியை சேவலாக்கி தன் கொடியிலும் ஏற்றார். இதன்மூலம் சூரனைக் கொல்லாமல் அவனை ஆட்கொண்டார்.
விநாயகர், கஜமுகாசுரனைக் கொன்றார். துர்காதேவி, மகிஷாசுரனைக் கொன்றாள். ராமன், ராவணனைக் கொன்றார். கண்ணன், கம்சனைக் கொன்றார். சிவன், திரிபுர அசுரர்களைக் கொன்றார். இப்படி தெய்வங்களால் அசுரர்கள் கொல்லப்பட்ட வரலாறைப் படித்திருக்கிறோம். முருகப் பெருமான் சூரனை ஆட்கொண்டார். அவனை தன் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றதில் இருந்து அவர் எதிரிக்கும் அருள் செய்யும் கருணைக் கடலானார். அதனால் தான், சுப்பிரமணியர் என்ற பெயரில் உயர்ந்த தெய்வமாக அவரை வணங்குகிறோம்.
ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால், அம்மாத சஷ்டி சிறப்புக்குரியதாயிற்று. இந்நாளில், குழந்தை இல்லாத பெண்கள் விரதம் இருந்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி சஷ்டியில் துவங்கும் விரதத்தை தொடர்ந்து வரும் சஷ்டி திதிகளில் கடைபிடிப்பவர்கள், முருகப் பெருமானுடன் ஐக்கியமாகும் பாக்கியத்தைப் பெறுவர்.”ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே நமஸ்தே…’ என தினமும் ஒருமுறை சொல்லி, முருகனைப் பிரார்த்திப்பவர்கள், ஒரு கோடி முறை முருகனை வணங்கிய பாக்கியம் பெறுவர். “நமஸ்தே, போற்றி, ஜெய…’ என்ற பிரார்த்தனை வார்த்தைகளை, ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தினால், அது, கோடி முறை பயன்படுத்தியதற்கு சமம்.
வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வெற்றியல்ல. பிறப்பற்ற வாழ்வைப் பெறுவதே நிஜமான வெற்றி. அந்த வெற்றி நமதாக வேண்டுமானால், சுப்பிரமணியரின் திருவடியில் சரணடைவோம்.

உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள்

ஆர்வம் அதிகரிக்கும் இருபது

இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.

20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.

இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்கும் என்கிறார் டிரேஸி.

பறக்கும் வயது முப்பது

வாழ்க்கையைப் பற்றிய அச்சம் அகன்று வேலை, திருமணம் என்று செட்டிலாகும் வயது முப்பது. இந்த வயதில் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம். வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும்புவார்களாம்

இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்களாம்.

30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாக கூறியுள்ளார் டிரேஸி காக்ஸ்.

இந்த வயதுக்காரர்கள் ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம். அதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் முப்பது வயதுக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

நாலும் தெரிந்த வயது நாற்பது

நாற்பதை கடந்த ஆண்கள் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களாம். ஆனால் பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம்.

மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறைவாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம்.

டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம் இந்திய தேசத்திற்கு எந்த அளவிற்கு பொருந்தி வரும் என்பது தெரியவில்லை.

ஆங்கில மொழி அறிவுச் சோதனை

ஒரு மொழியில் நாம் கொண்டி ருக்கின்ற புலமை, அம்மொழி யின் சொற்களை நாம் எப்படி அறிந்து வைத்துள்ளோம் என்பதில் தான் உள்ளது. மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக் கள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் ஆங்கில மொழி பயன்படுத்துவதில் நாம் கொண்டுள்ள திறமையினை சோதனை செய்து கொள்ள இணைய தளம் ஒன்று இயங்குகிறது. இதன் பெயர் Knoword. சொல் சோதனை மட்டுமின்றி, அதனைச் சரியான எழுத்துக்களில் அமைக்கிறோமா என்பதனையும் இது நம்மிடம் எதிர்பார்க் கிறது. இந்த விளையாட்டு தரப்படும் இணைய தள முகவரி http://www.knoword. org/home.php.
இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் நம் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களுடன், இதற்கென யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை அமைக்க வேண்டும். பின்னர், இதில் லாக் இன் செய்து விளையாடலாம். சொல் ஒன்றுக்கான விளக்கம் அளிக்கப்பட்டு, முதல் எழுத்து மட்டும் தரப்படும். நீண்ட கட்டத்தில் அந்த சொல்லை டைப் செய்திட வேண்டும். சரியாக டைப் செய்துவிட்டால், அடுத்த சொல் தரப்படும். சொல் தெரியாவிட்டால், அதனை ஸ்கிப் செய்திடலாம். அடுத்த சொல்லுக்கான எழுத்தும் விளக்கமும் தரப்படும்.
சொற்களை அறிந்து வைத்தல் மட்டுமின்றி, விரைவாகச் சிந்தித்து ஒரு சொல் எது என அறிவதும் முக்கியமாகிறது. சரியான எழுத்துக்களை டைப் செய்திடும் திறனும் வேண்டும். சொற்களைச் சரியாக டைப் செய்து கொண்டே சென்றால், அடுத்தடுத்து சொற்கள் கிடைக்கும். முதலில் ஒரு நிமிடம் தரப்படுகிறது. பின்னர் இது தொடர்கிறது. ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிகிறீர்கள் என்பதே இந்த கேம். பலர் சொற்களைக் கண்டறிவார்கள்; ஆனால் எழுத்துக்கள் சரியாக அமைக்க முடியாமல், தவறுகளை ஏற்படுத்துவார்கள். உங்களின் சொல் சரியாக அறியும் திறன், வேகம் ஆகியவை கணக்கிடப் படுகின்றன.
முடியாதபோது, நீங்கள் எத்தனை சொற்கள் சரியாக அமைத்தீர்கள் என்ற முடிவு காட்டப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இது பதிவு செய்யப் படும். அதிகச் சொற்களைக் கண்டறிந் தவர்கள் பட்டியலையும் பார்க்கலாம். உங்கள் ரேங்க் என்ன என்பதனையும் கண்டறியலாம். இதுவரை மிக அதிகமாக, 91 முறை விளையாடி, 7,76,075 புள்ளிகள் எடுத்து ஒருவர் முதல் இடத்தில் உள்ளார். இவர் சரியாகக் கண்டறிந்த சொற்கள் 38,260. அடுத்த இடத்தில் உள்ளவர் 4,89,760 புள்ளிகள் எடுத்துள்ளார். இவர் விளையாடியது 10 கேம்கள் மட்டுமே. இவர் சரியாகக் கண்டறிந்த சொற்கள் 24,003.
நீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிந்தாலும், நீங்களும் இந்த பட்டியலில் இணைத்துக் காட்டப்படுவீர்கள். இதுவரை இந்த தளத்தில் விளையாடப்பட்ட கேம்ஸ் எண்ணிக்கை பத்து லட்சத்தினைத் தாண்டிவிட்டது.
ஒவ்வொரு நாளும் எத்தனை கேம்ஸ் விளையாடப்பட்டது, எத்தனை சொற்கள் சரியாகக் காணப்பட்டன, புதியதாக எத்தனை உறுப்பினர்கள் பதிவு செய்தனர் என்ற தகவல்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு காட்டப் படுகின்றன. அவசியம் அனைவரும் அடிக்கடி பார்க்க வேண்டிய ஓர் இணைய தளம்.
உங்களிடம் ஐபோன் இருந்து, அதில் இந்த சொல் விளையாட்டினை விளையாண்டு பார்க்க ஆசைப்பட்டால், அதற்கான அப்ளிகேஷனை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான தள முகவரி http://itunes.apple.com/us/app/ knoword/id436304807?mt=8/

சமையலறை ‘சத்தாக’ இருந்தால் கட்டிலறை ‘கலகலக்கும்’!

மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று பாலுணர்வு. இயற்கையாக தோன்றும் இந்த உணர்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதில்தான் இருக்கிறது மனிதர்களின் வெற்றி. தம்பதியர்களிடையே ஆரோக்கியமான உறவு மேம்பட இந்த பாலுணர்ச்சியே முக்கிய காரணியாக இருக்கிறது. இதனை சிறப்பாக வெளிப்படுத்த நமது சமையலறையே முக்கிய சாதனமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.

ஒருவரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, இளமையை தக்க வைப்பதில் தாம்பத்யத்தின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் ஹார்மோன் மற்றும் இளமையியல் சிறப்பு வல்லுநர் சிசில்லா டிரிகியர். லண்டனின் மருத்துவமனை வைத்துள்ள அவர் 25 ஆண்டுகளாக தனது மருத்துவமனைக்கு வந்த தம்பதியர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியர் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், உடல் வனப்புடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரியவந்ததாக டெய்லி மெயில் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய தெர்மா மீட்டர்

பாலுணர்ச்சியும், அது தொடர்பான ஆர்வமுமே நமது உடல் நலத்தை அளக்கும் தெர்மா மீட்டர் என்று டிரிகியர் குறிப்பிட்டுள்ளார்.

பாலுணர்ச்சியை தூண்டுவது என்பது அவர்கள் உட்கொள்ளும் உணவு முறையை சார்ந்ததாக இருந்துள்ளது. சத்தான உணவு உடல் நலத்திற்குத் தேவையான ஹார்மோன்களை சிறப்பாக செயல்பட வைப்பது தெரியவந்துள்ளது. அதன் மூலம் பாலுணர்ச்சியை தூண்டுவதற்கான ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்தது கண்டறியப்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதன் மூலமே தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபட முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி உறவு என்பது உடற்பயிற்சி செய்வதைப்போல அவசியமானது என்று கூறும் மருத்துவர், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்கிறார். அதற்கான முக்கியமான மூன்று வழிமுறைகளை அவர் தெரிவித்துள்ளார்.

மூளைக்கு உற்சாகம்

எந்த செயலுமே முதலில் தொடங்குவது மூளையில் இருந்துதான். மனித உறுப்புக்களில் மிகப்பெரிய பாலுணர்ச்சியை தூண்டக்கூடிய ஆர்கன் மூளைதான் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனும், ரசாயனமாற்றமும்தான் பாலுணர்வின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம்தான் உறவின் போது வெளிப்படும் காதல், அளவுகடந்த கற்பனா சக்தியுடன் துணையை கவர மேற்கொள்ளும் சாகசம், அதனால் பெண்கள் அடையும் உச்சநிலை ஆகியவை ஏற்படுகின்றன. இவை எல்லாம் நாம் உண்ணும் உணவில்தான் இருப்பதாக தெரிவிக்கின்றார் மருத்துவர்.

எனவே முதலில் உண்ணும் உணவுமுறையில் அக்கறை கொள்ளவேண்டும். இதன் மூலம் சக்தியானது நரம்புகள் வழியே மூளையை அடைகிறது. சிறப்பாக செயல்பட முடியும் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உறவில் ஈடுபட மூளையானது தூண்டுகிறது.

ஹார்மோன்களின் ஒத்துழைப்பு

பாலுணர்ச்சியை தூண்டுவதில் ஹார்மோன்களின் பங்கு அவசியமானது. அவைதான் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை சீராக வைக்க உதவுகிறது. இதில் மூன்று ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென். டெஸ்ட்டிரோஜென், ஆகிய ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படுவதை சரிவிகிதமாக வைப்பதில் மீன், இறைச்சி, ஆகியவற்றில் உள்ள நல்ல கொழுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஹார்மோன்களை தூண்டி அவற்றை சீரான முறையில் சுரக்கச்செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கிறார் டிரிகியர்.

சக்தியின் ரகசியம்

ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும். அதற்கு ஆரோக்கியமான அவசியமான உணவுகள் உதவுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். இதன் மூலம் மனித வளர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன் (Human Growth Hormone (HGH).) சுரப்பு சீராவதோடு பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பினை அதிகரிக்கச்செய்கிறது. தொடர்ச்சியான ஆரோக்கிமான உறவுக்கு புரதச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, மீன், பன்றி இறைச்சி ஆகியவை உதவுகின்றன என்று கூறுகின்றார் மருத்துவர்.

ஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி

உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி! ஏன்என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம். ஏன்?

இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன. எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக தயாரித்து உண்டார்கள். நீர் நிலைகளில் நீச்சல் அடித்து குளித்தார்கள். கிராமிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத் தூங்கினார்கள்.

இந்தியர்களின் உழைப்பு நிறைந்த இந்த வாழ்க்கை முறை இன்று படிப்படியாக மறைந்து, சினிமாவில்கூட பார்க்க முடியாததாகிவிட்டது. சிறுவர்களாக இருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்குள்ளும், வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். உடல் இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை. டெலிவிஷன் முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் சிறுவயது பருவத்தை தொலைக்கும் அவர்கள், இளைஞர்கள் ஆகும்போது முழு நேரமும் படிப்பு. பின்பு `ஒயிட் காலர் ஜாப்’ எனப்படும் அலுவலக இருக்கை வேலை. வேலையில் ஏற்படும் மன உளைச்சல், எந்திரத்தனமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் அவர்கள் மன, உடல் ஆரோக்கியம் கெட்டு ஆண்மைக் குறைபாடு தோன்றுகிறது. ஆண்மைக் குறைபாடு என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும்!

சமீபத்தில் `இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்சுவல் தெரபி’ எடுத்த சர்வேபடி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருக் கிறார்கள். அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

உடல் உழைப்பின்மைதான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான காலங்கள் மனித இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை தரும் வாய்ப்பாக இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சாப்பிடும்போது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில் படிந்திருக்கும். பட்டினிக்காலங்களில் அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது. அதை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள்.

ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான் விரும்புகிறார்கள். சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது.

உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்ணுகிறோம். அதனால் உடலுக்குள் எண்ணை அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.

ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..

* உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

* மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

* முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.

* தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

* அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.

* இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.

இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும் முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.

மன உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலு டன் இருப்பதாக குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது. மூளைக்கும், உடலின் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி பார்ப்பது, சரியாக தூங்காமல் தவிப்பது, குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது போன்றவைகளெல்லாம் மனஉளைச்சலுக் கான அடையாளங்கள். திருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக் கிறது இன்னொரு புள்ளிவிபரம்.

வாழ்வியல் சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க மருத்துவ உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ் தெரபியும், 1980-களில் உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு மூலம் மேம்படுத்தும் முறையும் உருவாகின.

இதில் புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல் உருவாக்கப்பட்ட அது, 1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய் மாத்திரையான அது, பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது. ஆயினும் அந்த நேரத்திற்கு அது எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி, வளப்படுத்தும் சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள் இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் ஆண்கள் முன்வர வேண்டும்.

முறையாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும். ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.

விளக்கம்: டாக்டர் டி. காமராஜ்,

(பிரபல செக்ஸாலஜிஸ்ட்) சென்னை.

நன்றி-தினத்தந்தி