Daily Archives: நவம்பர் 1st, 2011

நோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்

செப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் நோக்கியா 700, உலகிலேயே மிகச் சிறிய ஸ்மார்ட் போன் எனப் பெயர் பெற்றது. இதனை வடிவமைக்கையில், ஸீட்டா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் திரை கொரில்லா கிளாஸ் கொண்டு 3.2 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டது. 320 x 640 என்ற அளவில் பிக்ஸெல் திறன் கொண்டது. இந்த மொபைல் மறு சுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் மற்றும் பயோ பிளாஸ்டிக்ஸ் கொண்டு அமைக்கப்பட்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோவினை எடுக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள புளுடூத் 3.0 பதிப்பைச் சேர்ந்தது. இதனால், கூடுதல் வேகத்தில், நொடிக்கு 24 எம்.பி. டேட்டா பரிமாறப்படும். 1080 mAh திறன் கொண்ட பேட்டரி, 2ஜி அழைப்பு எனில் 7 மணி நேரம் பேசுவதற்கும், 3ஜி அழைப்பில் 4.5 மணி நேரம் பேசுவதற்கும் சக்தி தருகிறது. இவற்று டன் ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ்., காம்பஸ், அக்ஸிலரோமீட்டர், வை-பி நெட்வொர்க் இணைப்பிற்கான சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டது. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கின்றன.
நோக்கியா 701, முதலில் ஹெலன் என அழைக்கப்பட்டது. மிகவும் பிரகாசமான அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதிலும் கொரில்லா கிளாஸ் திரை 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. 360×640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன், இரண்டு எல்.இ.டி.பிளாஷ் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளில் பயன்படுத்த முன்பக்கமாக ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் 3.0., 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதன் 1300 mAh திறன் கொண்ட பேட்டரி, 7 மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது. மூன்று வண்ணங்களில் நோக்கியா இதனைத் தருகிறது.
மூன்றாவதான நோக்கியா 600 அதிக சத்தமுள்ள ஸ்மார்ட் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குகையில் சிண்டி என இதனை நோக்கியா பெயரிட்டிருந்தது. திரை 3.2 டி.எப்.டி. எல்சிடி திரையாகும். 360×640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோ வினை எடுக்கும் திறன் கொண்டது. குறைந்த மின்சக்தி செலவில், கூடுதல் வேகத்தில் டேட்டா பரிமாறும் திறன் கொண்ட யு.எஸ்.பி. 3.0 இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
வை-பி நெட்வொர்க், எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர், 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 15மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்திலும் அண்மைக் கள தொலை தொடர்பு (NFC – Near Field Communication) கொண்டுள்ளதால், இந்தியா வில் தற்போது தொடங்கப்பட்டிருக்கும், மொபைல் வழி நிதி பரிமாற்றத்தில் இந்த போன்கள் மிகவும் உதவும். நோக்கியா 600 ரூ.12,000, நோக்கியா 700 ரூ. 18,000 மற்றும் நோக்கியா 701 ரூ.12,000 என அதிக பட்ச விலையைக் கொண்டுள்ளன.

கூகுள் டாக்ஸ் அவசியமா?

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ்வள வாக கூகுள் டாக்ஸ் பயன் படுத்துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர். ஆனால், கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு நாம் தேடும் பைல் காட்டப்படும்.
ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன் படுத்தலாம் என்று தெரியவரும். அவை:
1) இலவசம்: கூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல, பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.
2) இணைய வெளியில் இயக்கம்: கூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால், இன்டர் நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்தி லும், உங்கள் பைல்களை, ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும், எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் அக்கவுண்ட் தான். பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமின்றி, மொபைல் போன், நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.
3) பகிர்ந்து கொள்ளல்: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணைய தளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், இதன் மூலம் நாம் நம் தகவல்களை, பைல்களை, உருவாக்கங் களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால், இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் பைல்களை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
4) பயன்படுத்த எளிது: மைக்ரோசாப்ட், ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன. அதுவரை, பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல், பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பி லிருந்து, கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.
5) இணைவமைவு: எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு பைலை உருவாக் கினாலும், எந்த பார்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.

#### – எதற்காக இந்த குறியீடு?

எக்ஸெல் நெட்டு வரிசை ஒன்றில், அமைய வேண்டிய எண்ணின் அகலத்திற்கு, செல்லின் அகலம் இல்லை என்றால், #### என அந்த செல்லில் எக்ஸெல் போட்டுக் கொள்ளும். எனவே செல்லின் அகலத்தைச் சற்று அதிகப்படுத்தினால் உடனே அதில் என்ன எண் உள்ளதோ அது காட்டப்படும். எப்படி இந்த செல்லினை அகலப்படுத்தலாம்? எளிய வழி தருகிறேன். ஒவ்வொரு நெட்டு வரிசைக்கும் ஒர் எழுத்து, அதன் பெயராகத் தரப்படுகிறதல்லவா? அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். ஒவ்வொரு எழுத்து உள்ள நெட்டு வரிசையும் ஒரு சிறிய கோட்டால் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த பிரிக்கும் நெட்டுக் கோட்டில் உங்கள் கர்சரை வைக்கவும். உடன் அது இரு பக்கமும் அம்புக்குறி கொண்ட சின்னமாக மாறும். இப்படி மாறியவுடன் கிளிக் செய்து அழுத்திப் பிடித்துக் கொண்டு அப்படியே வலது பக்கமாய் இழுக்கவும். நெட்டு வரிசையின் அகலம் பெரியதாகிவிடும். தேவையான அளவு கிடைத்தவுடன் அதில் உள்ள எண் காட்டப்படும். பெரிதாகிவிட்டது எனத் தோன்றினால் கர்சரை விட்டுவிடவும்.
இன்னொரு வழியும் உள்ளது. அந்த பிரிக்கும் நெட்டுக் கோட்டின் அருகே கர்சரைக் கொண்டு சென்றவுடன் டபுள் கிளிக் செய்திடவும். இப்போது நெட்டு வரிசை தானாக எண்ணுக்கேற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இதனை செட் அப் வழியிலும் மேற்கொள்ளலாம். முதலில் Format மெனு செல்லவும். இதில் Width என்னும் துணை மெனு கிடைக்கும். இதில் ஙிடிஞீtட என்னும் ஆப்ஷன் கொடுத்துக் கிடைக்கும் விண்டோவில் நெட்டு வரிசையின் அகலத்தை அகலப் படுத்தலாம்.

பாகற்காய் ஸ்டடு ரோஸ்ட்

தேவையானவை

நீள பாகற்காய் – 1/4 கிலோ
கடலைமாவு – 1/2 கப்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
ரீபைண்ட் எண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* பாகற்காயை விரல் நீளத்திற்கு குறுக்காக மூன்று துண்டுகளாக நறுக்கவும், அவை ஒவ்வொன்றையும் நான்காக வகிர்ந்து கொள்ளவும். முழுவதுமாகக் கீறாமல் சிறிது நீளத்திற்கு மட்டும் கீற வேண்டும்.

* சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு சுளை புளி போட்டு அரை வேக்காடாக வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

* கடலைமாவை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி, ஒவ்வொரு பாகற்காய் துண்டுக்குள்ளும் நன்றாகத் திணித்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஸ்டடு பாகற்காய்களைப் போட்டு சில நிமிடங்கள் மூடி வைத்து வெந்ததும், திருப்பிவிட்டு முறுகவிட்டு எடுக்கவும். கறிவேப்பிலை இலைகளை பொரிய விட்டுத் தூவி சுவை சேர்க்கலாம்.

குறிப்பு

* நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

* முறுகலாக வறுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி