Daily Archives: நவம்பர் 2nd, 2011

மனைவியை காதலிப்பது எப்படி?

Husband and Wife

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா.

தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். வீட்டு வேலைகளை நீங்கள் செய்து அசத்துங்கள். நீங்கள் அவ்வாறு பெயருக்கு சொன்னால் கூட வேணாமுங்க, வாரம் முழுவதும் ஓயாது உழைக்கிறீங்க. சனி, ஞாயிறு நிம்மதியா ஓய்வு எடுங்க, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி உங்களை வேலை செய்யவிடமாட்டார்.

அது தான் மனைவியே சொல்லியாச்சுல நாம் போய் கால் மேல காலப்போட்டு டிவி பார்ப்போம் என்று சென்றுவிடாதீர்கள். நீயும் தான கண்ணு தினமும் உழைக்கிற இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு என்று சொல்லி வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார்.

எதிர்பாராத நேரத்தில் கட்டித் தழுவி அன்பாக ஒரு முத்தம் கொடுங்கள். ஆஹா, என் புருஷனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போய்விடுவார். திடீர் என்று ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள். மனைவி வேலைக்கு செல்பவரா? அவரை ஊக்குவியுங்கள். அதனால் அவர் இன்னும் திறமையாக பணிபுரிவார். அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் முடிந்தால் தீர்வு காண உதவுங்கள்.

மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்.

டிவி பார்க்கையில் எப்பொழுதுமே உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் மனைவிக்கு பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள். (நாங்க எங்க எங்களுக்கு பிடித்த சேனல் பார்க்கிறோம், எப்ப பார்த்தாலும் சீரியல் தான் ஓடுகிறது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.

நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.

உணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’!

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர்.

உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபியருக்கு ஒட்டக திமிழும்,ஸ்பெயின் நாட்டவருக்கு குங்குமப்பூவும்,சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

வைட்டமின்களும் தாது உப்புகளும்

ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது.

எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்

மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்

பிரசித்தி பெற்ற உணவுகள்

பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது. கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக கூறப்படுகின்றன.

ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது!

வாழைப்பழம்

பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.

சாக்லேட்

சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட். இதில் உள்ள தியோப்ரோமைன் வேட்கையை பெருக்கும். பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.

காதல் ஆப்பிள் 

வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.

பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள்.

மாமிச உணவுகள்

மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

தேன்

எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.

வாசனை திரவியங்கள்

ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.

பாலுணர்வை குறைக்கும் உணவுகள்

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை: அதி நுட்ப பரிசோதனை அறிமுகம்

ஸ்பேஸ் ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான காரணங்களை கண்டறியும் வசதியை பெரும் பொருள் செலவில் இங்கிலாந்து மருத்துவமனை ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த மருத்துவமனையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன. இனி, நோயாளிகளுக்கு வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும் என்று இந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர் ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நோயாளிகளின் பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை என்று கூறப்படுகிறது. சாதாரண அமீபியாக்கள் காரணமான வயிற்று வலி முதல் கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் வரை அனைத்துக்கும் இந்த கருவிகளை பயன்படுத்தலாம் என தெரிகிறது.

உப்பு போட்டா கம்ப்யூட்டர் டிஸ்க் சைஸ் ஜிவ் !

உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு, கம்ப்யூட்டரின் சைஸ் கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டரில் நாம் பதிவு செய்கிற போட்டோ, பாட்டு, சினிமா உள்ளிட்ட பைல்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன. கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், ஹார்ட் டிஸ்க்குகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. டிஸ்க் அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது.
இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது:கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.
டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்ச்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது.உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.இவ்வாறு ஜோயல் கூறினார்.

நன்றி-தினகரன்

இந்தியாவின் தேசிய பானம் டீ..?

சென்னையில் தினமும் 1 கோடி கப் டீ பருகிறார்கள்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொங்கோர்பில்லி கிராமத்தைச் சேர்ந்த வட்டத்தாரா குடும்பத்தினர், பால் சேர்க்காத `கறுப்பு காபி’ அடிமைகள்.

இவர்கள் மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்தக் கிராமமுமே அப்படித்தான். இங்கே இது இயல்பான விஷயம். காரணம் இக்கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் காபி விளைவிப்பவர்கள்.

இந்நிலையில், 40 வருடங்களுக்கு முன் வட்டத்தாரா குடும்பத்தில் இருந்து வி.எம். தாமஸ் என்பவர் பாதிரியார் படிப்புப் படிக்க அசாமுக்குப் புறப்பட்டுப் போனார்.

தாமஸின் மதக் கல்விப் பற்று, காபியை புதிய எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் என்று ஆசிரியரான அவரது தந்தை நம்பினார். ஆனால் நடந்ததோ வேறு. தீவிர டீ பிரியராகிவிட்டார் தாமஸ்.

“டீக்கு புகழ்பெற்ற அசாமில் 30 ஆண்டுகளைக் கழித்த நான், அந்தப் பானத்துக்கு மாறியதில் ஆச்சரியமில்லை. ஆனால் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வந்தபோது இங்கே ஏறக்குறைய எல்லோரும் டீ குடித்துக் கொண்டிருந்ததுதான் என்னை வியப்பில் விழவைத்தது” என்கிறார், தற்போது 60 வயதாகும் தாமஸ்.

கொங்கோர்பில்லி மட்டுமல்ல, இந்தியாவின் 5 லட்சத்து 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும், 4 ஆயிரத்து 378 நகரங்களும் அன்றாடம் டீ அருந்தி மகிழ்கின்றன.

சென்னை போன்ற பெருநகரங்களில் ஒருநாளைக்கு ஒரு கோடி டீக்கு மேல் அருந்தப்படுகிறது. பெருநகரங்கள், நகரங்களில் மட்டுமல்ல, சாலை வசதி இல்லாத கிராமத்தில் கூட ஒரு குட்டி டீக்கடை முளைத்திருப்பது உங்களுக்கும் தெரியும்.

ஏன், இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கூட ஒரு டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கலாம். இந்தியாவின் 83 சதவீதக் குடும்பங்கள் டீக்கு அடிமை என்கிறது ஒரு கணக்கெடுப்பு.

இதெல்லாம் சேர்ந்துதான், டீயை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றன.

சரி, டீயை தேசிய பானமாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது?

`பல நல்ல விஷயங்கள் நடக்கும்’ என்கிறார்கள், தேயிலை விளைவிப்போர்.

`டீக்கு ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு கிடைக்கும், சர்க்கரை, பாலுடன் அல்லது அவையின்றி (சில இடங்களில் வெண்ணையுடனும் கூட) இதை ஓர் ஆரோக்கிய பானமாகப் பிரபலப்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய பானம் என்பது ஒரு நாட்டின் அடையாளம், சுய மதிப்பு, வரலாறு, சூழலியல், கலாசாரம் ஆகியவற்றின் ஓர் அங்கம்’ என்கிறார்கள், தேயிலைக்காரர்கள்.

`டீ தேசிய பானம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருப்பது, வடகிழக்குத் தேயிலைச் சங்கம் (என்.இ.டி.ஏ). கிழக்கு அசாமில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த கோலாகாட் மாவட்டத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.

“இந்த விஷயத்தில் நாம் பாகிஸ்தானிடம் பாடம் படிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கரும்புச் சாறை தேசியப் பானமாக அறிவித்துவிட்டார்கள். தேயிலை உற்பத்தியில் உலகின் `நம்பர் 1′ நாடாக இருக்கும் சீனாவையும் எடுத்துக்கொள்ளுங்களேன். அங்கு `கிரீன் டீ’தான் தேசிய பானம்” என்கிறார், என்.இ.டி.ஏ.வின் தலைவர் வித்யானந்தா வர்க்ககோதி.

தொடர்ந்து அவரே, “இந்த நாடுகளை எல்லாம் கூட விட்டுவிடுங்கள். இங்கிலாந்தைப் பாருங்கள். அந்நாட்டுக்குப் பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய் பவர்கள் நாம்தான். ஆனால் இங்கிலாந்து தேசிய பானம், டீ! கடந்த 180 ஆண்டுகளாக பல்வேறு வகையான தேயிலையை உற்பத்தி செய்துவரும் நாம், டீக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது வினோதமே” என்று ஆதங்கப்படுகிறார்.

சொல்லப் போனால், இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் 50 சதவீதத்துக்குச் சொந்தமான அசாமிலும் கூட டீக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கடந்த 2005-ம் ஆண்டில், இம்மாநிலத்தின் விலங்காக காண்டாமிருகமும், மாநிலப் பறவையாக வெள்ளை இறக்கை மர வாத்தும் அறிவிக்கப்பட்டன. ஆனால் டீயை கண்டுகொள்ளவில்லை.

இதற்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி தருண் கோகோயைச் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாகக் கூறுகிறார், என்.இ.டி.ஏ. உறுப்பினர் சிங்கானியா. மாநிலப் பானமாக அறிவிப்பது, தேசிய பானமாக்குவதற்கான முதல் படியாக அமையும் என்பது இவரது கருத்து.

ஏறக்குறைய பாதி உலகத்துக்கு, `அசாம்’ என்ற பெயரை அறியச் செய்த டீயை அதிகாரப்பூர்வ பானமாக அறிவிக்காதது தவறுதான் என்று ஒத்துக்கொள்கிறார், அசாம் மாநில தொழில்துறை அமைச்சர் பிரத்யூத் போர்டோலோய். இந்த விஷயத்தில் தாங்கள் கவனம் செலுத்துவோம் என்கிறார் இவர்.

நாடு முழுவதும் உள்ள டீ நேசர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்!

டீ… சில துளிகள்

* தேயிலை உற்பத்தியில் உலகளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்.

* உலகிலேயே அதிகமாக தேநீர் பருகும் நாடு இந்தியா. நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் இந்தியர்கள் ருசிக்கிறார் கள்.

* இந்தியாவில் ஏறக்குறைய பாதி அளவு தேயிலையை உற்பத்தி செய்வது அசாம். உலக அளவில் இம்மாநிலத் தின் பங்கு 13 சதவீதம்.

* உலகளவில் தேயிலை ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடு இந்தியா. உலக ஏற்றுமதியில் நமது பங்கு 13 சதவீதம்.

* பல்வேறு வகையான மணம், திடம், குணம் கொண்ட தேயிலைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை- டார்ஜீலிங், அசாம் பராம்பரியம், அசாம் சிடிசி, டூரர்ஸ்-தேராய், நீலகிரி பாரம்பரியம், நீலகிரி சிடிசி, காங்ரா மற்றும் பச்சைத் தேயிலை.

* பூமியில் தண்ணீருக்குப் பின் விலை மலிவான பானம், டீ.

***

இன்னும் கொஞ்சம் டீ…

இந்தியாவில் தேயிலைத் தொழிலில் 10 லட்சத்து 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர்.

நாட்டில் இத்தொழிலில் 20 லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

தேயிலையில் நாட்டின் வருடாந்திர வரவு- செலவு ரூ. 10 ஆயிரம் கோடி.

நாட்டில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் எக்டேரில் தேயிலை விளைவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 10 எக்டேருக்கும் குறைவான பரப்பளவுள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 504 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

***

சில நாடுகளும், தேசிய பானங்களும்

கிரீஸ் – `ஊஸோ’ என்ற மதுபானம்

ஜப்பான் – `சேக்’ என்ற அரிசி மதுபானம்

பாகிஸ்தான் – கரும்புச் சாறு

சீனா – டீ

இங்கிலாந்து – டீ

ரஷியா – வோட்கா

ஸ்காட்லாந்து – விஸ்கி

 

 

நன்றி-தினத்தந்தி

இதயத்திலும் புற்றுநோய் வரும்!

உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.

செல்லின் வேலைகள்: இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி, தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி, அமர்கிறது. செல் பெருக்கம் நடப்பது இயற்கை. செல் இரண்டாக பிரிந்து, பின் அதுவே பன்மடங்காக பெருகி, கட்டியாக வளர்கிறது. இதில் இரண்டு வகை. தொல்லை தராத கட்டியை, “பினைன் கட்டி’ என்கிறோம். இக்கட்டியால், எந்தப் பாதிப்பும் இருக்காது. எனினும், அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். “மெலிக்னன்ட் கட்டி’ தான், ஆபத்தான கட்டி. பல மடங்கு செல்களாக குட்டி போட்டு, கட்டுக்கு அடங்காத வளர்ச்சியை கொடுத்து, எந்த உறுப்பிலிருந்து வளர்கிறதோ, அந்த உறுப்பை சீரழித்து, உயிரை அழித்து விடுகிறது. இக்கட்டியை ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்த வேண்டும்.

கேன்சர் வர காரணங்கள்

* சாதாரண நிலையில், செல்கள் தாறுமாறாக வளர்ச்சி கண்டு, டி.என்.ஏ.,வில் மாற்றம் ஏற்பட்டு, செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
* புகைப் பிடிப்பதால், புகையிலையால் ஏற்படும் விளைவு, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம். ஜங்க்புட்.
* பாரம்பரியத் தன்மை
* பென்சைன் போன்ற ரசாயனப் பொருட்கள்
* அதிக ரேடியோ கதிர்கள் படுதல்
* வைரஸ்இதய புற்றுநோய்கள்
* முதன்மையான புற்று நோய், இதய தசைகளிலிருந்து வருபவை. இவை பினைன் வகை.
* இரண்டாம் நிலை, மற்ற பகுதியில் வந்த புற்றுநோய், இதயத்திற்கு பரவுவதால் வருபவை.
* மூன்றாவது வகை, இதய வால்வுகளில் வரும், “பாப்பிலாரி பைப்ரோயலாஸ் டோமா’ என்ற வகை. இதனால் திடீர் மரணம் ஏற்படும்.

இதய கட்டிகளில், “மிக்சோமா’ என்ற இடது மேலறையில் வரும் கட்டி தான், பிரசித்தி பெற்றது. இதுதான் வழக்கமாக பெண்களுக்கு வரும். இதை, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறியலாம். 75 சதவீதம், இடது மேலறையில் தான் இந்த கட்டி வரும். வலது மேலறையில் வருவது குறை வே.

மிக்சோமாவின் அறிகுறிகள்: இடது மேலறை மிக்சோமா, “மைட்டிரல் ஸ்டெனோசிஸ்’ என்ற ஈரிதழ் வால்வு சுருக்கம் போல இருக்கும். மல்லாந்து படுக்கும் போது மூச்சிரைப்பு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது மூச்சிரைப்பு, மார்பு வலி அல்லது மார்பு அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், படபடப்பு, சிறிய வேலை செய்தாலும், மூச்சு வாங்குதல் என்பது, பெண்களுக்கு சாதாரணமாக வருவதால், அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுவான அறிகுறிகள்: கை விரல்கள் நீல நிறமாக தோன்றுதல், இருமல், நகங்கள் மேலே தூக்கி இருத்தல், அசதி, தன்னையறியாத எடை குறைவு, முட்டிகளில் வலி, வீக்கம். இந்த அறிகுறிகள், இதய உட்சுவரான எண்டோ கார்டியத்தில் ஏற்படும், “எண்டோ கார்டைட்டிஸ்’ என்ற நோய் போல இருக்கும். எண்டோ கார்டைட்டிஸ், விபரீதமான நோய்; கண்காணிக்க வேண்டும். வலது மேலறை மிக்சோமா, எந்தவித தொல்லை இல்லாமல், 15 செ.மீ., (5 அங்குலம்) வரை வளர்ந்து விடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நோயாளி வலம் வருவார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம், வெட்டி எடுக்க வேண்டும். அப்படி சரிவர எடுக்காவிட்டால், திரும்பவும் வரும்.

முக்கிய பரிசோதனைகள்: எக்கோ கார்டியோ கிராம், இ.சி.ஜி., டாப்ளர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ., இதய ஊடுறுவல் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம்.

மிக்சோமாவின் விளைவுகள்: தக்க சிகிச்சை செய்யாவிட்டால், இந்த மிக்சோமாவிலிருந்து கட்டிகள் வெளியேறி, மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தை அடைத்து, பக்கவாதம் உண்டாகலாம். மேலும், கண், கால் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு கட்டியாக வளரலாம். இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில், மரணம் ஏற்படலாம்.
இதய துடிப்பு மாறுபாடு, நுரையீரலில் நீர் சேர்தல், பல பாகங்களில் ரத்த குழாய் அடைப்பு ஆகியவை, ஈரிதழ் வால்வை முழுவதுமாக அடைத்து, மரணத்தை வரவழைக்கும். இந்த கட்டி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

– டாக்டர் அர்த்தநாரி,
எஸ்.ஏ.,ஹார்ட் கிளினிக், சென்னை.

மேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்?

மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான், அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயின்ட் அடித்த மாதிரி தெரியும்.

மேக்-அப் போட்டு கொள்வது பெரிய விஷயமில்லை. அது, உங்கள் முகத்தில் உள்ள சின்ன, சின்ன குறைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். எனவே, முதலில் அதை கற்றுக் கொள்ளுங்கள். விழாக்களுக்கு செல்லும் போது மட்டுமே பிளஷர் உபயோகிக்கவும். மற்றபடி, முக்கிய இடங்களுக்கு செல்லும் போது, அது வேண்டாம். செயற்கை கண் இமைகளை உபயோகிக்க வேண்டாம். மஸ்காரா உபயோகிப்பதை பழக்கிக் கொள்ளுங்கள். அதுவும் நிறைய கோட் தடவினால், செயற்கையாக தெரியும். ஒன்றிரண்டு கோட்டோடு நிறுத்திக் கொள்ளவும். தலையை விரித்தபடி விட்டுக் கொண்டு போகாதீர்கள். சிறிய கூந்தலாக இருந்தாலும், அதை குதிரை வாலாகக் கட்டிக் கொண்டோ, ப்ரென்ச் பின்னல் போட்டுக் கொண்டோ போனால், அழகோ அழகு.

மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான், அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயின்ட் அடித்த மாதிரி தெரியும். மேக்-அப் போடும் போது, நல்ல இயற்கை வெளிச்சத்தில் போடவும். லைட் வெளிச்சத்தில் உங்கள் மேக்-அப் சரியாக தெரியாமல், வேறு விதமாக காட்டக் கூடும். மேக்-அப் போட்டு முடித்த பிறகு, குளிர்ந்த ஜூஸ் ஏதாவது குடியுங்கள்; அது, உடலை குளிர்ச்சியாக வைக்கும். இன்டர்வியூ போகிற போது, உடைகளுக்கு மேட்ச்சாக ஐஷேடோ மற்றும் மஸ்காரா உபயோகிப்பதை தவிர்க்கவும். அது, உங்களை நவ நாகரிக பெண்ணாக காட்டினாலும், அந்த இடத்திற்கு ஒத்து வராது.

பகல் வேலைகளில் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது, அளவுக்கதிகமாக மேக்-அப் வேண்டாம். அதே மாதிரி அனைத்து மேக்-அப் பொருட்களும், சன் ஸ்கிரீன் கலந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது ஐலைனர், மஸ்காரா, லிப்ஸ்டிக் என எல்லாமே, “வாட்டர் புரூப்’ ரகத்தில் கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்தால், வியர்வையோ, தண்ணீரோ பட்டால், மேக்-அப் கலையாமல், அப்படியே இருக்கும். பவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர் போன்றவற்றை, கையில் வைத்திருங்கள். நீங்கள் போன காரியம் தாமதமாகும் என தெரிந்தால், மறுபடி ஒருமுறை டச்-அப் செய்து கொள்ளலாம். வேலை முடிந்து, அங்கிருந்து நேராக ஏதேனும் முக்கிய இடத்திற்கோ, தியேட்டருக்கோ விரைய வேண்டுமா? மேக்-அப் செய்ய நேரமில்லையா? கவலை வேண்டாம். கண்களுக்கு மட்டுமாவது மேக்-அப் போட்டுக் கொள்ளுங்கள்; புத்துணர்வோடு தெரிவீர்கள்.

முகத்துக்கேற்ற மேக்-அப் பற்றி சில குறிப்புகள்

முக்கோண வடிவம்: முக்கோண வடிவ முக அமைப்புள்ளவர்களுக்கு தாடை சற்று கூராக இருக்கும். இவர்கள் முகத்தின் இரு பக்கமும் காதுகள் மூடும் அளவுக்கு நெற்றியிலும் கொஞ்சம் முடி விழுமாறு ஹேர் ஸ்டைல் செய்யலாம்.

சதுர வடிவம் : இவர்கள் நெற்றியின் முன்பக்கம் முடி அதிக உயரமாகவும், பக்கங்களில் சற்று குறைவாகவும் வைத்து ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும்.

நீண்ட முகம் : நீண்ட முகம் உடையவர்கள் ஹேர் ஸ்டைலை உயர்த்தி செய்யக் கூடாது. பக்கங்களில் அதிக முடி தெரியும்படியும், நெற்றியில் முடி வரும்படியும் ஹேர் ஸ்டைல் செய்யலாம்.

உருண்டை முகம்: பொதுவாக வட்டமுகம் உள்ளவர்களுக்கு எந்த விதமான முன் அலங்காரம் செய்தாலும் சூப்பராக இருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க

ஜிமெயில் தளத்தில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மெயில் அக்கவுண்ட்களை வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு வேளையில், ஒரு அக்கவுண்ட்டை மட்டுமே திறந்து பயன்படுத்த முடியும். ஒன்றைத் திறந்து மெயில்களைப் படித்து முடித்த பின்னர், அந்த அக்கவுண்ட்டினை மூடிய பின்னரே அடுத்ததைத் திறந்து பயன்படுத்த முடியும்.
ஆனால், அண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறந்து பயன்படுத்தும் வசதியை, கூகுள் வழங்கியுள்ளது. இதனை multiple signin என அழைக்கிறது இதனைச் செயல்படுத்த கீழ்க்கண்டபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. ஜிமெயில் இணையதளத்தில், செட் அப் (setup) பக்கம் செல்லவும். உங்களுடைய வெப் பிரவுசரில், எந்த கூகுள் அக்கவுண்ட்டையும் இயக்கவில்லை எனில், உங்கள் அக்கவுண்ட்டிற்கான தகவலைத் தரச் சொல்லி, ஜிமெயில் கேட்கும்.
2. இப்போது On Use multiple Google Accounts in the same web browser என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு பல அக்கவுண்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏற்படும் விளைவுகள் வரிசையாகத் தரப்பட்டிருக்கும். அவற்றிற்கான செக் பாக்ஸ்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, புரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்ளவும்.
3. அடுத்து Save என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி multiple signin செயல்படுத்தப்பட்டதால், கூகுள் மெயில் பட்டியலில், நீங்கள் அடுத்த அக்கவுண்ட் களுக்கான தகவல்களைத் தரலாம்.
1. ஜிமெயில் தளம் செல்லவும். முதலில் நீங்கள் பயன்படுத்திய அக்கவுண்ட் மூலம் அதில் நுழையவும். இந்தப் பக்கத்தின் வலது மேல் மூலையில், உங்கள் பெயரின் மீது கிளிக் செய்தால், அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். கிடைக்கும் மெனுவில் Switch account என்பதைக் கிளிக் செய்திடவும். அடுத்து Sign in to another account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய லாக் இன் பக்கம் திறக்கப்படும்.
3. இங்கு புதிய அக்கவுண்ட்டிற்கான தகவல்களைத் தரவேண்டும். தந்த பின்னர், Sign in. என்பதில் கிளிக் செய்தி டவும். இப்படியே சேர்க்க வேண்டிய ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் தகவல்களைத் தரவும்.
உங்கள் அக்கவுண்ட்களின் தகவல் களைத் தந்த பின்னர், ஒவ்வொரு ஜிமெயில் அக்கவுண்ட்டினையும் அடுத் தடுத்து திறந்து பயன்படுத்தலாம். முதலில் திறந்தவற்றை மூட வேண்டிய தில்லை. முன்பு போல அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் பெற்று, அதில் நீங்கள் விரும்பும் அக்கவுண்ட்டில் நுழையலாம்.
எல்லாம் முடிந்த பின்னர், அக்கவுண்ட்களை மூட, ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. மொத்தமாக அனைத்தையும் மூடலாம்.

ஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்

வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற் கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.
2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.
4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டி யுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.