Daily Archives: நவம்பர் 5th, 2011

வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்டுப் பிடிங்க!

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.

வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று பார்ப்போம்,

தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.

சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.

நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.

என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.

சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.

வெளியே எங்கும் செல்ல விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.

சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள் உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.

காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க…!

வசீகரிக்கும் புருவத்திற்கு…

உடல் அமைப்பில் ஒவ்வொரு பகுதியும் அழகு நிறைந்தது தான். அவற்றை சரியான முறையில் பேணிக் காக்கும் போது, அழகு இன்னும் கூடுதலாகிறது. அவ்வகையில், கண்களின் கவர்ச்சியில் புருவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிலருக்கு அடர்த்தியான புருவங்களும், சிலருக்கு அடர்த்தி குறைவான புருவங்களும் இருக்கும். அளவுக்கு அதிகமான புருவம் உடையவர்கள் அதை, “திரெட்’ செய்து கொள்ள வேண்டும். அடர்த்தி குறைவான புருவம் உடையவர்கள், புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், நாளடைவில் முடி வளரத் தொடங்கி விடும். ஒவ்வொருவரும் புருவ அமைப்பை, அவர்களின் முக அமைப்பிற்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். வட்டமான முக அமைப்பை கொண்டவர்கள், புருவத்தின் ஆரம்பத்திலிருந்து நேராக, “திரெட்’ செய்து நுனியில் செல்லும் போது, சற்று வளைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களின் வட்டமான முகம், மேலும் வட்டமாக தெரியாமல், வசீகரிக்கும் முகமாக காட்சியளிக்கும். நீளமான வட்ட முகத்தைக் கொண்டவர்கள், புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து, “திரெட்’ செய்து கொள்ளலாம். இதனால், அவர்களின் நீளமான முகம் மேலும் நீளமாகத் தெரியாமல், சற்று வட்ட வடிவமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தரும். சதுரமான முக அமைப்பை உடையவர்கள், புருவங்களின் நடுவில் வளைவாக, “திரெட்’ செய்து கொண்டால் வட்ட வடிவமான முக அமைப்புடன் வசீகரமாக காட்சியளிக்கலாம்.

டிமாண்ட் டிராப்ட், தேவை குறைகிறது

உலகெங்கிலும், வங்கிகளின் நீண்ட நெடும் பயணத்தில் அண்மை காலம் வரை தொடர்ந்து, தற்போது தன் பிரயாணத்தை கிட்டத்தட்ட முடித்துக்கொண்டுள்ளது பண விடை எனப்படும் டிமாண்ட் டிராப்ட், சுருக்கமாக டி.டி.

இப்போது இருக்கிறதா டிமாண்ட் டிராப்ட்?

இருக்கு… ஆனா இல்லை… அதாவது டிமாண்ட் டிராப்ட்டின் தேவை குறைந்து கொண்டே வருகிறது.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை வேலை தேடும் லட்சக்கணக்கானோரின் உயிர் நாடியாக இருந்தது இந்த டிமாண்ட் டிராப்ட்.

ரெயில்வே சர்வீஸ் கமிஷனில் தொடங்கி பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வங்கி நுழைவு தேர்வுகள், ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், மாநில சர்வீஸ் கமிஷன், கல்லூரி பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் இறுதித்தேர்வுகள் என பெரும்பாலான கல்வி-வேலைவாய்ப்பு விண்ணப்பங்களில் இணைப்பாக இருந்தது டிமாண்ட் டிராப்ட்.

கல்விக்கோ வேலைக்கோ உரிய நுழைவு தேர்வு, கல்லூரி, பல்கலைக்கழக சேர்க்கை என எதற்குமே கட்டணங்கள் செலுத்த இன்று டிமாண்ட் டிராப்ட் கேட்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பணப்பரிவர்த்தனைக்கு நெட் பேங்கிங், கிரிடிட்/டெபிட் கார்டு, நேஷனல் பண்ட் டிரான்ஸ்பர், ஆர்.டி.ஜீ.எஸ். போன்ற தொழில் நுட்ப கருவிகளின் அறிமுகத்துக்குப் பின்னர், டிமாண்ட் டிராப்டை விரும்புவார் யாருமில்லை என்றாகி விட்டது.

வங்கி கிளைகள் ஒவ்வொன்றும் நாளொன்றுக்கு 300- க்கும் குறையாத எண்ணிக்கையில் டி.டி. வழங்கின. ஆனால், இன்று இந்த எண்ணிக்கை 100 கூட இல்லை என்கிறார்கள்.

நெட் பேங்கிங், கிரிடிட்/டெபிட் கார்டு, நேஷனல் பண்ட் டிரான்ஸ்பர், ஆர்.டி.ஜீ.எஸ். போன்ற வசதிகளை பயன்படுத்தினால் கட்டணமில்லை; கால தாமதம் இல்லை; கிளியரிங் தொடர்பான பிரச்சனைகள் இல்லை; உரியவருக்கு பணம் உடனே அவரது வங்கிக்கணக்கில் சேருகிறது. இவை காரணமாக, டிமாண்ட் டிராப்ட் தன் புகழை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

எஸ்.எம்.எஸ், ஈமெயில் வசதிகள் வந்த போது அஞ்சல் அட்டை (போஸ்ட் கார்டு) தனது மவுசை இழந்தது போல தன்னையும் இழந்து கொண்டிருக்கிறது டிமாண்ட் டிராப்ட்.

அறிவியல் தொழில் நுட்பம் தான் உருவாக்குகிற ஒன்றை அதே தொழில் நுட்பம் தான் அழிக்கவும் முடியும் என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது.

நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதிக்கான 29 புதிய மரபணுக்கள் கண்டுபிடிப்பு

மனிதர்களில் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதி மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ். இந்த வியாதி, நரம்பிழைகளை சூழ்ந்து அதற்கு பாதுகாப்பு அளிக்கும் மைலின் ஷீத் என்ற பாதுகாப்பு வளையத்தை தாக்கி நரம்பின் பணிகளை முடக்குகிறது. இதனால் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளான பார்த்தல், நடத்தல், எண்ணுதல் மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வியாதியால் உலகம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேருக்கும் மேல் அவதியுறுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், நோயால் பாதிக்கப்பட்ட 9,772 நபர்களின் 6 இலட்சம் மரபணு பகுதிகள் சோதனை செய்யப்பட்டன. பின்னர் இவை ஆரோக்கியமான 17 ஆயிரம் பேரிடம் ஒப்பீடு செய்யப்பட்டன. இதில், முன்பு கண்டறியப்பட்ட 23 மரபணுக்களோடு மேலும் புதிதாக 29 மரபணுக்கள் கண்டறியப்பட்டன. இவை நோய் எதிர்ப்பு சக்தியோடு தொடர்புடையவை. மரபணுவியலின் புதிய பரிணாமமாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவானது, வருங்காலத்தில் நோய் உருவாவதை முற்றிலுமாக தடுக்கவும் மற்றும் புதிய சிகிச்சை முறைகளும் ஏற்பட வழிவகுக்கும் என தெரிய வருகிறது.

டாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை

விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.
டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.
1. Ctrl Shift Esc கீகளை அழுத்துங்கள்.
2. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதில் கிளிக் செய்திடுக.
3. Ctrl Alt Delete கீகளை அழுத்தி பெறுக.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் ஐந்து டேப்கள் இருப்பதைக் காணலாம். இவற்றின் பயன்பாட்டினை இங்கு காணலாம்.
1. அப்ளிகேஷன்கள் (Applications): இதன் கீழ் உங்கள் கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் (பணிகள்) காட்டப்படும். இதில் சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டிருக்கும், ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் காட்டப்பட மாட்டாது. இந்த டேப்பினைப் பயன்படுத்தி, இயங்கிக் கொண்டிருக்கும் இடைப் பொழுதில், உறைந்து செயலற்று நின்று போன, புரோகிராம்களை மூடலாம். அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, End Task பட்டனை அழுத்தினால் போதும். நம் கட்டளைகளுக்கு எந்தவித செயல்பாடும் காட்டாமல் அப்படியே நின்று போன புரோகிராம்களை மூட இது மிகவும் உதவும். ஆனால், அந்த புரோகிராம் மூலம் சேவ் செய்யப்படாத டேட்டா, பின்னர் நமக்குக் கிடைக்காது. எடுத்துக்காட்டாக, வேர்ட் புரோகிராமில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கையில், வேர்ட் இயங்காமல் போனால், அதன் இயக்கத்தினை டாஸ்க் மேனேஜர் மூலமாக முடிவிற்குக் கொண்டு வந்தால், இறுதியாக எப்போது சேவ் செய்தோமோ, அல்லது வேர்ட் செட் செய்தபடி எப்போது சேவ் செய்ததோ, அதுவரை மட்டுமே பைல் கிடைக்கும்.
2. இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் ஒன்றினை முன்னுக்குக் கொண்டு வர, அதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர், Switch To என்பதில் கிளிக் செய்திடவும்.
3. புதிய புரோகிராம் ஒன்றை இயக்க, முதலில் New Task. என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து புரோகிராமிற்கான கட்டளை வரியைத் தரவும். அல்லது Browse பட்டனில் கிளிக் செய்து, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். இது ஸ்டார்ட் மெனுவில் ரன் (Run) கட்டம் மூலம் இயக்குவதற்கு இணையானது.
2. ப்ராசெஸ்ஸஸ் (Processes): இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இயக்க பைல்களையும் காணலாம். ஏதேனும் ஒன்றை மூடினால், சேவ் செய்யப்படாத டேட்டா தொலையலாம். உறைந்து போன புரோகிராமின் செயல்பாட்டினையும் இதன் வழியாகவும் நிறுத்தலாம். ஆனால், நாம் எதனை நிறுத்த முயற்சிக்கிறோம் என்பதனைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான கோப்பு எது என்று உணர்ந்திருக்க வேண்டும். சில வேளைகளில், இதனைச் சரியாக அறியாதோர், சிஸ்டம் பைல்களில் ஏதேனும் ஒன்றை நிறுத்தி விடுவார்கள். இதனால் சிஸ்டம் இயங்கு வதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, இதனைச் சரியாக அணுகுவது எப்படி எனப் பார்க்கலாம்.
1. அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த, அப்ளிகேஷன்ஸ் டேப் கிளிக் செய்து, அதில் அந்த புரோகிராமின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், கிடைக்கும் மெனுவில், Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். உடனே Process டேப் திறக்கப்பட்டு, அந்த புரோகிராமிற்கான இயக்க பைல் ஹைலைட் செய்து காட்டப்படும். இதன் இயக்கத்தினை நிறுத்த, End Process என்பதில் கிளிக் செய்திடவும். அப்ளிகேஷன்ஸ் டேப் அழுத்தி, ஒரு புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த முடியாத போது, இந்த வழியைப் பின்பற்றலாம். Process ஒன்றில் ரைட் கிளிக் செய்து, பின்னர் End Process Tree என்பதில் கிளிக் செய்தால், அந்த இயக்கம் சார்ந்த அனைத்து பைல் இயக்கங்களும் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.
3. சர்வீசஸ் (Services): சர்வீசஸ் என்பவை, பின்னணியில் இயங்கும் சப்போர்ட் புரோகிராம்களாகும். இதில் பெரும் பாலானவை, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போதே, இயங்கி பின்னணியில் செயல்படும்.
1.ஒரு சர்வீஸ் புரோகிராமினை இயக்க, நிறுத்தப்பட்ட சர்வீஸ் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர், Start Service என்பதில் கிளிக் செய்திடவும்.
2. ஒரு சர்வீஸை நிறுத்திட, இயங்கிக் கொண்டிருக்கும் சர்வீஸில் ரைட் கிளிக் செய்து, Stop Service என்பதில் கிளிக் செய்திடவும்.
3. சர்வீஸ் ஒன்றுடன் சார்ந்த இயக்கங்களைக் காண, அதன் மீது ரைட் கிளிக் செய்து, Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம், ஒரு சர்வீஸ், கம்ப்யூட்டரின் பிற திறன் செயல்களை இயங்கவிடாமல் அழுத்திக் கொண்டுள்ளதா எனத் தெரியவரும்.
4. பெர்பார்மன்ஸ் (Performance): இந்த டேப் சிஸ்டம் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளைக் காட்டும்.
1. மேலாக, சிபியு பயன்பாட்டினைக் காட்டும் மீட்டர் ஒன்று இயங்கியவாறு இருக்கும். அருகிலேயே CPU usage history line கிராப் ஒன்று காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வரைபட வரிகள் இருப்பின், அது சிபியுவின் பல செயல்பாடுகளைக் காட்டும்.
2. சிபியு பயன்பாடு மீட்டர் மற்றும் சிபியு பயன்பாடு லைன் கிராப் கீழாக, அதே போன்ற மெமரி பயன்பாட்டிற்கான அளவீடுகள் காட்டப்படும்.
3. இன்னும் கீழாகப் பார்த்தால், கம்ப்யூட்டர் இயக்கிக் கொண்டிருக்கும் பைல்கள் மற்றும் மெமரி பயன்பாடு ஆகியவை காட்டப்படும்.
5. நெட்வொர்க்கிங் (Networking): நெட்வொர்க் இயக்கத்திற்கான லைன் கிராப் இதில் காட்டப்படும். வரை வரிகள் கீழாக கூடுதல் புள்ளி விபரங்கள் காட்டப்படும்.
6. யூசர்ஸ் (Users): இந்த டேப்பில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரின் பட்டியல் காட்டப்படும்.
1. இதில் ஒரு யூசரை ஹைலைட் செய்து, Log off என்பதில் கிளிக் செய்தால், அந்த யூசரின் பயன்பாட்டு காலம் முடிக்கப்படும்.
2. ஏதேனும் ஒரு யூசரை கிளிக் செய்து, Disconnect என்பதில் கிளிக் செய்தால், பயனாளரின் பணிக்காலம் முடிக்கப் படும். ஆனால் அது மெமரியில் காத்து வைக்கப்படும். இதனால், பின்னர், அந்த பயனாளர், மீண்டும் லாக் ஆன் செய்து, தான் விட்ட பணியினைத் தொடரலாம்.
7. டாஸ்க் மேனேஜர் டிப்ஸ்: ப்ராசசஸ், சிபியு பயன்பாடு, மெமரி அளவு ஆகிய அனைத்தும் டாஸ்க் மேனேஜரின் கீழாகக் காட்டப்படும் தகவல்களாகும். இந்த மிக அடிப்படையான தகவல்கள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வளவு கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக் கிறது அல்லது பணியே ஆற்றாமல் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதில் செயல்திறன் சார்ந்த எண்கள் அதிகமாக இருந்தால், பிரச்னைகளை அறியும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
1. கட்டளைக்குச் செயல்படாத அப்ளிகேஷன்களைக் கண்டறிய அப்ளிகேஷன்ஸ் டேப்பினைக் கிளிக் செய்திட வேண்டும்.
2. கம்ப்யூட்டரின் திறனை அதிகம் எடுத்துக் கொள்கிறதா என்பதனை அறிய ப்ராசசஸ் டேப்பினை செக் செய்திடலாம். ப்ராசஸ் ஒன்றினை முடிவிற்குக் கொண்டு வரும் முன், அது குறித்துத் தீவிரமாக அறியவும். இந்த வகையில் மெனு பாரில் உள்ள வியூ மெனு மூலமும் தகவல்களை அறியலாம். மேலதிகத் தகவல்களுக்கு அல்லது டாஸ்க் மானேஜர் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், டாஸ்க் மேனேஜரைத் திறந்து மெனு பாரில் Help என்பதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் விண்டோவில் Task Manager Help Topics என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பிரித்தறிந்து படிக்கவும்.