Daily Archives: நவம்பர் 6th, 2011

அணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்

கூடன்குளம் அணுமின்நிலையம் முழு பாதுகாப்பானது என சுற்றி்பார்த்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கூறினார்.பீதியை ஏற்படுத்தி பெரும் போராட்டக்களமாக மாறியிருக்கும் கூடன்குளத்தி கலாம் முகாமிட்டுள்ளார். இவர் அணுமின் நிலையம் முழுவதும் சுற்றிப்பார்ப்பதுடன், போராட்டக்குழுவினர் அச்சம் தீர்க்கும் வகையில் மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ‌அணுமின் நிலையத்திற்கு ஆதரவு அளி்ப்போர் கலாம‌ை சந்தித்து பேசினர். எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்குழுவினரை சந்திக்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் என்னை சந்திக்க வந்தால் சந்திப்பேன் நானாக செல்ல மாட்டேன் என்றார். கலாம் கருத்துக்கு போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அணுமின் நிலையம் பாதுகாப்பானது : அணு மின்நிலையத்தை சுற்றிப்பார்த்துவிட்டு அப்துல்கலாம் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அவர் அப்போது கூறுகையில்: பாதுகாப்பு பணிகள் முழு திருப்தி அளிக்கிறது. நான் இந்த அணு மின் நிலையத்திற்கு தற்போது 2 வது முறை வந்திருக்கிறேன். இன்று அணுமின் நிலைய அதிகாரிகளுடன் பல மணி நேரம் ஆலோசித்தேன். இந்த அணுமின் நிலையம் முழு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கழிவுகள் 75 சதம் மறு சுழற்சி மூலமும், ஏனைய 25 சதம் ஆலையில் வைக்கப்படும். அதி நவீன பாதுகாப்பு இருப்பதால் கதிர்வீச்சு வெளியாகாது. சுனாமி, பூகம்பம் போன்ற நிகழ்வின்போதும் எவ்வித பாதிப்பையும் தராது. இது இப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார்.

மத்திய அரசின் தூதராக வந்துள்ளீர்களா என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கலாம், யாருடைய கோரிக்கையின் படியும் தான் இங்கு வரவில்லை என்றும், அணுசக்தி சுத்தமான சக்தி என்றும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனர்ஜி இன்டிபென்டன்ட் என்று சொல்லக்கூடிய சக்தி சுதந்திரத்திற்காக பாடுபட்டு வருவதாகவும், இதற்காக காற்றாலை மின்சக்தி, சூரிய ஒளி மின்சக்தி, பயோ மின்சக்தி மற்றும் அணுமின் சக்தி ஆகியவை மேம்பட தான் முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மின்சாரத்தின் அருமையை தான் அறிந்துள்ளவன். இப்பகுதி மக்களின் சந்ததிகள் சிறப்பாக வாழ கூடங்குளம் அணுமின் நிலையம் கண்டிப்பாக தேவை என்றும் கூறினார்.

கலாம் கருத்துக்கள் ஏமாற்றம் அளிக்கிறது – போராட்டக்குழு : அப்துல் கலாம் கூறிய கருத்துக்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; அப்துல் கலாம் கூறிய கருத்துக்கள் எல்லாம் கேள்விப்பட்டதுதான். கேட்டு, கேட்டு புளித்து போனதுதான். புதிதாக ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் விஷயம் இல்லாமல் போனது. இவரது பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது. பல நாட்களாக போரடி வரும் எங்களை சந்திக்காமல் இவ்வாறு பேட்டி அளிப்பது அவரது அந்தஸ்துக்கு ஏற்புடையது அல்ல என்றார். அவருடைய பேச்சு வருத்தத்தை தருகிறது. கழிவுகள், கழிவுகள் செயலிழப்பு குறித்து விளக்கம் வேண்டும். 12 லட்சம் பேர் வசிக்கின்றனர் அவர்களை அப்துல்கலாம் நினைத்து பார்க்க வேண்டும். எங்கள் மக்களை இழக்க தயராக இல்லை. ரஷ்யாவில் போய் வைக்க வேண்டியதுதானே. இந்தியாவில் வளர்ச்சி தேவை. 15 முதல் 20 மெகாவாட் மின்சாரம் காற்றாலை, சூரிய ஒளி மூலம் தயாரிக்கலாமே, அணு சக்தி திட்டத்தினால்தான் நாம் வாழுகிறோம் என்பது அப்பட்டம், இந்த அணுமின் நிலையம் எங்களுக்கு வேண்டாம் என்றார்.

கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு பிரச்னையை முன்வைத்து பல நாட்களாக போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் மற்றும் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பு போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மக்களின் அச்சத்தைப் போக்க விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோரை கொண்ட 15 பேர் கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், போராட்டக் குழுவை சந்தித்து, மக்களின் அச்சத்தைப் போக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் கலாம் அணுமின் நிலையத்திற்கு சென்றார். இவருடன் இந்திய அணுசக்தி கழக தலைவர் ஜெயின் , திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி, நிலைய இயக்குனர் சுந்தர், தலைமைப் பொறியாளர் ஜின்னா மற்றும் விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினார். அணு நிலையம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். மின்சாரம் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் நிருபர்களை சந்தித்து பேசினார்.

அணு எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அப்துல் கலாமை சந்தித்து பேசினாலும் அவரது கருத்தை ஏற்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் முன்னதாக கூறியிருந்தனர். கலாம் வருகையையொட்டி மத்திய, மாநில பாதுகாப்புப் படை போலீசார், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

.4 அடுக்கு பாதுகாப்பு உள்ளது மத்திய அமைச்சர் : கூடன்குளம் அணுமின்நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று கூறுகையில்; கூடன்குளம் அணுமின்நிலையம் தொடர்பான அப்பகுதி மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எவ்வித பிரச்னையும் எற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித சர்ச்சையும் எழாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாத சுனாமி தாக்குதல் வந்தாலும் இந்நேரத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருக்கின்றன என்றார்.

`பளீர்’ ஒளிவீசும் மக்னீஷியம்!

இந்தத் தீபாவளியின்போது நீங்கள் கம்பி மத்தாப்புக் கொளுத்தி மகிழ்ந்திருக்கக்கூடும். அப்படி `பளீர்’ ஒளியைத் தருவது மக்னீஷியம்தான்.புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் `பிளாஷ்’ விளக்குகளில் தோன்றும் நீலநிறப் பிரகாசமான ஒளி, பல்பில் உள்ள மக்னீஷியக் கம்பி எரிவதன் காரணமாகத்தான் ஏற்படுகிறது.

மக்னீஷியம் மிகவும் இலேசான உலோகமாகும். அலுமினியத்தை விட இது இலேசானது.

இந்தக் காரணத்தால், வானில் செல்லும் விமானங்களிலும், கடலில் செல்லும் கப்பல்களிலும் கட்டுமானப் பணியில் அலுமினியத்துடன் மக்னீஷியம் பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

உலகில் அதிகமாகக் கிடைக்கும் உலோகங்களில் மக்னீஷியம் நான்காவது இடத்தில் உள்ளது. கடல், பூமி போன்ற எந்த இடத்திலும் மக்னீஷியம் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் இது தனியாகக் கிடைப்பதில்லை. மற்ற பொருட்களுடன் சேர்ந்தே கிடைக்கிறது.

சாதாரணமாக ஒரு கன மைல் கடல் நீரில் அறுபது லட்சம் டன் மக்னீஷியம் இருக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நமக்குத் தேவையான மக்னீஷியத்தை நம்மைச் சூழ்ந்திருக்கும் கடலில் இருந்தே பெற்றுவிட முடியும்.

அலுமினியத்தைத் தனியாகப் பிரித்து எடுப்பதற்கு முன்னரே 1808-ம் ஆண்டில் சுத்தமான மக்னீஷியம் பிரித்தெடுக்கப்பட்டது.

ஆனால் பெருமளவுக்குத் தொழில்நுட்ப முறையில் மக்னீஷியத்தைப் பிரித்தெடுக்கும் பணி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள்தான் வளர்ச்சி அடைந்திருக் கிறது.மக்னீஷியம் துரிதமாக ஆக்சிஜனுடன் சேரக்கூடிய இயல்புகொண்டது. இதன் காரணமாக இந்த உலோகத்தில் இருந்து ஏற்படும் ஒளி கண்களைப் பறிக்கும் விதத்தில் உள்ளது.

மக்னீஷியத்தின் இந்த இயல்பு காரணமாக இதை ஆரம்பத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. மேலும் இலேசாக இருப்பதும் இது வளர்ச்சி அடைய இடையூறாக இருந்தது.

ஆனால் ஆகாய விமானம், கப்பல்கள் போன்றவை நவீனப் போக்குவரத்துச் சாதனங்களாகப் பிரபலமடைந்தபிறகு, மக்னீஷியத்தின் மூலம் கிடைக்கும் பயன் அதிகரிக்கத் தொடங்கியது. விமானம், கப்பல் போன்றவை மிகவும் இலேசான உலோகத்தைக் கொண்டு அமைக்கப்பட வேண்டியிருந்ததால் மக்னீஷியத்தைத் தேடத் தொடங்கினார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த கார்லஸ் மார்ட்டின் ஹால் எப்படி மின்பகுப்பு முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தாரோ, அதைப் போல மற்றொரு அமெரிக்கரான டாக்டர் பெர்ட் ஹென்றி டோவ், கடல் தண்ணீரில் இருந்தும், பிற உப்புத் தண்ணீரில் இருந்தும் மக்னீஷியத்தை மின்பகுப்பு முறையில் அதிக அளவில் தயாரிப்பதற்கு வழிகாட்டினார்.

அணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் கொடுத்தார் சர்டிபிகேட்

கூடன்குளம் அணுமின்நிலையம் முழு பாதுகாப்பானது என சுற்றி்பார்த்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கூறினார்.பீதியை ஏற்படுத்தி பெரும் போராட்டக்களமாக மாறியிருக்கும் கூடன்குளத்தி கலாம் முகாமிட்டுள்ளார். இவர் அணுமின் நிலையம் முழுவதும் சுற்றிப்பார்ப்பதுடன், போராட்டக்குழுவினர் அச்சம் தீர்க்கும் வகையில் மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார். ஆனால் போராட்டக்குழுவினருடனோ , அந்தப்பகுதி மக்களுடனோ சந்தித்து பேசும் திட்டம் இது வரை வகுக்கப்படவில்லை.

கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு பிரச்னையை முன்வைத்து பல நாட்களாக போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் மற்றும் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பு போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களின் அச்சத்தைப் போக்க விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோரை கொண்ட 15 பேர் கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், போராட்டக் குழுவை சந்தித்து, மக்களின் அச்சத்தைப் போக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் கலாம் அணுமின் நிலையத்திற்கு சென்றார். இவருடன் இந்திய அணுசக்தி கழக தலைவர் ஜெயின் , திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி, நிலைய இயக்குனர் சுந்தர், தலைமைப் பொறியாளர் ஜின்னா மற்றும் விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினார். அணு நிலையம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். மின்சாரம் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் நிருபர்களை சந்தித்து பேசுகிறார்.

அணு எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டாலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் இல்லை. அப்துல் கலாமை சந்தித்து பேசினாலும் அவரது கருத்தை ஏற்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.

கலாம் வருகையையொட்டி மத்திய, மாநில பாதுகாப்புப் படை போலீசார், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முற்றிலும் பாதுகாப்பானது அணுமின் நிலையம்: கூடன்குளம் அணுமின்நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று கூறுகையில்; கூடன்குளம் அணுமின்நிலையம் தொடர்பான அப்பகுதி மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எவ்வித பிரச்னையும் எற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித சர்ச்சையும் எழாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாத சுனாமி தாக்குதல் வந்தாலும் இந்நேரத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருக்கின்றன என்றார்.

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்

படுத்ததும் தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100…. 200….. 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது, இது குறித்த ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க

கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.
1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.
3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல் பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக் கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.
4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.
5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு, அது வளைவாக இருக்கும். இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்து வது இயற்கைக்கு முரணானது.
6. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் பெரிதாக மாற்றி, ஏற்கனவே நாம் கம்ப்யூட்டர் மலரில் எழுதிய கார்பல் டனல் பிரச்சினையை உருவாக்கும்.
8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்து வார்கள். இவ்வாறு பயன்படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில் கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்னையைத் தரும்.
9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன் பாட்டிலிருந்து மாறுபட்டது. கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப் பகுதியில் வைத்து ஓய்வளிக்கலாம். ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப் பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப் படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப் புள்ளி யாக வைத்து இயக்கப்பட வேண்டும். மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும்.
10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில், பெரும்பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இது போன்ற வளைவான மவுஸ் பயன்பாட்டிற்குச் சரியானதல்ல. இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.
11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது. இது ஒரு சிந்தனைதான்.