Daily Archives: நவம்பர் 9th, 2011

மனைவியைக் குஷிப்படுத்துவது எப்படி?

அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் வீட்டுவேலை

எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள்.

பேசுவதை கேளுங்கள் 

நான் என்ன சொன்னாலும் என் கணவர் கேட்டுக்குவார் என்று பெருமையாகக் கூறுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனர். மாத சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்க வேண்டுமாம். கேட்ட உடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவியின் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்குமாம்.

சிரித்த முகம் 

அலுவலகத்தில் இருந்து வரும்போதே டென்சனை சுமந்து கொண்டு வராமல் சிரித்த முகத்தோடு கணவர் வரவேண்டும் என்பதைத்தான் அநேகம் பெண்கள் விரும்புகின்றனர். மலர்ந்த முகத்துடன் வீட்டுக்கு வரும் கணவரை மகிழ்ச்சி பொங்க வரவேற்க பெண்களும் ரெடியாகத்தான் இருக்கின்றனர்.

எங்காவது வெளியில் சென்றால் அழகாக உடை அணிந்து செல்வதைப்போல வீட்டிற்குள் இருக்கும் போதும் கணவர் ரசனையாக உடை அணியவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்கு என்று கூறினால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.

பர்சேஸ் செல்வது முக்கியம் 

கடையில் சென்று என்ன பொருள் வாங்கினாலும் மனைவியை அழைத்துச்செல்லுங்கள் ஏனென்றால் ஒரு கைக்குட்டை வாங்க வேண்டுமென்றால் கூட என்னைக் கேட்காமல் என் கணவர் வாங்கமாட்டார் என்று பெண்கள் பெருமையாக பேசுவதற்கு அது உதவும்.

கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

மனைவிதானே சொல்றாங்க, கேட்டுக்குவோம்!

விண்டோஸ் 7 ட்யூனிங்

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி யிலிருந்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியுள்ளீர் களா! இந்த புதிய சிஸ்டத்தில் கிடைக்கும் சில ட்ரிக்ஸ்களை அறியாமல் இருப்பீர்கள். தெரிந்தாலும் அவற்றை எப்படி இயக்குவது எனத் தெரியாமல் இருப்பீர்கள். இங்கு சிலவற்றைப் பார்க்கலாம்.

ஐகான் மறைத்து பைல்களைப் பார்க்க:
டெஸ்க்டாப்பில் ஐகான்களை நீங்கள் அறிவீர்கள். விண்டோஸ் இயக்கத்தின் எந்த பதிப்பினை, விண்டோஸ் 7 உட்பட, இன்ஸ்டால் செய்தாலும், உடனே, டெஸ்க்டாப்பில் ஐகான்கள் காட்சி அளிக்கும். விண்டோஸ் 7 இயக்கத்தில், இந்த ஐகான்களை மறைக்கவும், விருப்பப்படும் போது காட்டவும் ஏற்பாடு செய்திடலாம். இந்த ஐகான்களை மறைத்து வைப்பதன் மூலம், விண்டோஸ் வேகமாக அதன் இயக்கத்திற்கு வருகிறது. மேலும், மற்றவர்களும் நம் கம்ப்யூட்டர் இயக்கத்தைப் பயன்படுத்தும் சூழ்நிலை யில், அல்லது பார்க்கும் சூழ்நிலையில், இவற்றை மறைப்பது நமக்கு ஒரு பிரைவசியைக் கொடுக்கும். எனவே, இவற்றை எப்படி மறைப்பது எனப் பார்க்கலாமா!

டெஸ்க்டாப் ஐகான்களை மறைக்க:
டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் context மெனுவில் “View” என்பதன் மீது கிளிக் செய்திடவும். அடுத்து மெனுவில், இப்போது ஐகான்கள் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கான “Show desktop icon” முன்னால் உள்ள செக் மார்க்கினைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். இதில் “OK” என்பதில் கிளிக் செய்து புதிய மாற்றங்களை அமல்படுத்தவும். இதனை மேற்கொண்டவுடன், டெஸ்க்டாப் திரையிலிருந்து, டெஸ்க்டாப் ஐகான்கள் மறைந்துவிடும்.

ஐகான்கள் மறைந்த பின்னர் பைல் களைப் பார்க்க:
முக்கிய சொற்கள், கட்டளைகள் அல்லது புரோகிராம் பெயர்களை அமைக்க கூடிய டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். அதில் “Oணீஞுண” டெக்ஸ்ட் பீல்டில் “ஞீஞுண்டுtணிணீ” என டைப் செய்து “உணtஞுணூ” அழுத்தவும். டெக்ஸ் டாப், அடுத்து எக்ஸ்புளோரர் விண்டோவில் உள்ளவற்றுடன் திறக்கப்படும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இயங்கு வதைத் தடுக்க:
வெகு காலமாய் நாம் பயன்படுத்தி வரும் பிரவுசர் அப்ளிகேஷன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர். மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்தே இது தரப்படுகிறது. அதனாலேயே அதற்கு முன் இந்த பிரிவில் முதல் இடத்தில் இருந்த நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் பிரவுசரைக் காலி செய்தது. ஆனால், இப்போது நாம் விரும்பும் வகையில், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், சபாரி எனப் பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன.
ஆனாலும், நாம் விண்டோஸ் சிஸ்டம் பதிகையில், நாம் கேட்காமலேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரும் நமக்கு இன்ஸ்டால் செய்யப்படுகிறது. வேறு பிரவுசரை நாம் பயன் படுத்தினாலும், இதுவும் இயக்கத்தில் இருக்கிறது. இதனை இயங்காமல் நிறுத்தி வைக்கும் வழியினை இங்கு பார்க்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். கீழ்க்காணும் செட்டிங்ஸ் வழிகளைப் பின்பற்றி இதனை மேற்கொள்ளலாம்.
Start மெனு திறந்து, All Programs என்ற பிரிவில் இருந்து Control Panel தேர்ந்தெடுக்கவும். இங்கு தரப்பட்டுள்ள “View By” என்ற கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் category என்பதற்குப் பதிலாக, சிறிய அல்லது பெரிய ஐகான் (small or large icons) என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது கண்ட்ரோல் பேனலில் இருந்து “Programs and Features” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் இடது பக்கம் உள்ளவற்றில் “Turn Windows features on or off” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி Windows Features திரை காட்டப்படும். இதில் நாம் இயக்கத்தில் வைக்கவும், மூடவும் என்ற ஆப்ஷனோடு, பல வசதிகள் (features) காட்டப்படும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ஐ இயங்கவிடாமல் செய்திட, “Internet Explorer 8” என்பதன் முன்னால் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இதன் பின்னர் “OK” கிளிக் செய்திடவும்.
நீங்கள் மேற்கொள்ளும் இந்த ஏற்பாடு, மற்ற சில இயக்கத்தையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கை செய்தியுடன் விண்டோ ஒன்று காட்டப்படும். தொடர்வதற்கு “OK” என்பதில் கிளிக் செய்திடவும்.
உடன் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். அதற்கான செயல் கட்டம் (Progress bar) ஒன்று நீளமாகக் காட்டப் படும். இந்த செயல்பாடு முடிந்தவுடன், “Restart Now” என்னும் பட்டனில் கிளிக் செய்தால், உடன் விண்டோஸ் ரீ ஸ்டார்ட் செய்யப்படும்.
ரீஸ்டார்ட் செய்யப்பட்டுக் காட்டப் படும் விண்டோஸ் சிஸ்டத்தில் இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 8 இனி கிடைக்காது. பிரவுசர் ஒன்றுடன் நீங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு வசதியும், இனி இதன் இடத்தில் நீங்கள் பயன் படுத்தும் பிரவுசருடன் கிடைக்கும். இதிலும் நீங்கள் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

ஸ்டார்ட் மெனுவில் மை டாகுமெண்ட்ஸ்:
விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், நாம் எந்த பைலை உருவாக்கினாலும் அது மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யப்படும். எந்த புரோகிராமினை டவுண்லோட் செய்தாலும், அது மை டாகுமெண்ட்ஸ் போல்டரின் துணை போல்டரான மை டவுண்லோட்ஸ் என்ற போல்டரில் சேவ் செய்யப்படும்.
எனவே எந்த ஒரு பைலை இயக்கத்தில் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்தாலும், நாம் மை டாகுமெண்ட்ஸ் போல்டரை அடிக்கடி திறந்து பயன் படுத்த வேண்டும். எனவே இதற்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் வைத்து விட்டால், இதனைத் திறப்பது எளிதாக இருக்குமே. அல்லது இதே மெனுவில் இதற்கென ஒரு பட்டனை அமைக்கலாம். அல்லது அந்த போல்டரையே ஒரு மெனுவாக அமைக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
Start மெனுவில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும். இதில் “Customize” பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இனி advanced setting என்ற விண்டோ திறக்கப்படும். இங்கு ஸ்டார்ட் மெனுவில் உள்ள போல்டர்களின் பட்டியல் ஒன்று காட்டப்படும். ‘Documents” என்பதன் கீழாக உள்ள “Display as a menu” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஸ்டார்ட் மெனுவில் டாகுமெண்ட் போல்டர் காட்டப்படும். இதன் துணை மெனுக்களையும் நாம் கிளிக் செய்து பைல்களைப் பார்க்கும் வகையில் இது அமைக்கப்படும்.
மாறாக, முதல் ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். அப்போது ஸ்டார்ட் மெனுவில், Document பட்டன் மட்டும் காட்டப்படும். இந்த பட்டனில் கிளிக் செய்கையில், டாகுமெண்ட் போல்டர், விண்டோஸ் எக்ஸ்புளோரரில் திறக்கப் படும். உங்கள் விருப்பப்படி ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து மேற்கொண்ட பின்னர், “OK” பட்டன் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் விண்டோஸ்7 ஸ்டார்ட் மெனுவில் மேற்கொள்ளப்படும்.
இனி, ஸ்டார்ட் மெனுவினைத் திறந்து, Document என்பதில் கிளிக் செய்தால், அந்த போல்டரின் உள்ளே, அனைத்து பைல்கள், போல்டர்கள் மற்றும் டாகுமெண்ட்ஸ் என அனைத்தையும் நீங்கள் காணலாம்.

எந்த வலிக்கும் இனிமேல் சொல்லலாம் குட்பை

சிலர் சாதாரணமா இருப்பாங்க. திடீர்னு முகத்துல ஷாக் அடிக்கிற மாதிரியான ஒரு வலி வரும். அந்த நோய்க்கு பெயர், “ட்ரைஜனமியல் நியூராலஜியா’ பாதிக்கப்பட்டவங்க துடிச்சுப் போயிடுவாங்க. சில நரம்புகள்ல பிரச்னை ஏற்பட்டா அந்த வலி வரும். அதை எங்க சிகிச்சையில குணப்படுத்தலாம்.

ஒரு ஆங்கில நாளிதழ் சமீபத்தில், ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்புக்குள்ளாகும் நோய், புற்றுநோயோ, நீரிழிவு நோயோ, எயிட்சோ கிடையாது. “ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்’ என்று சொல்லப்படுகிற மூட்டுவலி. இதை அனுபவித்தவர்களுக்குத் தான், அதன் தீவிரம் தெரியும். இந்த வலியை நீக்க முடியுமா?

“அல்ஜியாட்ரி’ என்ற, வலி நிவாரண சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபு திலக் சொல்வதைக் கேளுங்கள்: “உண்மைதான். இப்போ இந்தியாவுல மூட்டு வலியால பாதிக்கப்படுறவங்கதான் அதிகம். எங்க கிட்ட வர்ற நோயாளிகளில் பெரும்பாலானோர், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தான். “ஓசோன் தெரபி’ன்னு ஒண்ணு இருக்கு.”ஆக்சிஜன்’ங்கறது அறிவியல் படி O2. “ஓசோன்’ங்கறது O3. ஆக்சிஜனை ஓசோனாக மாத்தி, அதை சில பிரச்னைகளுக்கு தீர்வாக தர முடியும். ஓசோனை ஊசி மூலமா போட்டா, வலி போயிடும். குறைந்தது மூணு, நாலு ஆண்டுக்காவது வலி இருக்காது. சில பேருக்கு வலி வரலாம். மறுபடியும் ஊசி போட வேண்டி வரும். பெரும்பாலும், மூட்டுவலி முற்றிலும் குணமாகிறதுக்கு என்ன செய்யணுமோ, அதையும் நாங்க இந்தத் துறையில செஞ்சுக்கிட்டு இருக்கோம். அலோபதி மருத்துவத்தில், மூட்டு வலிக்கு ஏற்கனவே ஒருவித சிகிச்சை இருக்கிறது. ஆரம்பத்தில் மருந்து, மாத்திரை கொடுத்து பார்ப்பர். பிறகு பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொல்வர்.

இவையெல்லாம் செய்தும், குணப்படுத்தவே முடியாத நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை செய்வர். அதற்குப் பெயர் Total Knee Replacement. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குக் கூட, இந்த சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின், நோயாளிகளுக்கு மூட்டு வலி இருக்காது. ஆனால், நடக்கும்போது சரியாக நடக்க முடியாது. ரோபோ மாதிரி தான் நடக்க வேண்டியிருக்கும். சிலர் சாதாரணமா இருப்பாங்க. திடீர்னு முகத்துல ஷாக் அடிக்கிற மாதிரியான ஒரு வலி வரும். அந்த நோய்க்கு பெயர், “ட்ரைஜனமியல் நியூராலஜியா’ பாதிக்கப்பட்டவங்க துடிச்சுப் போயிடுவாங்க. சில நரம்புகள்ல பிரச்னை ஏற்பட்டா அந்த வலி வரும். அதை எங்க சிகிச்சையில குணப்படுத்தலாம்.சிலருக்கு அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போகும். தாங்க முடியாத தலைவலி இருக்கும். எப்ப பாத்தாலும் உடம்பு அசதியாகவே இருக்கும். ஞாபக மறதி ஏற்படும்.


இந்த நோயை ஆங்கிலத்தில் Fibronyalgia ன்னு சொல்லுவாங்க. இது, ஆண்களை விட பெண்களை அதிகமாகத் தாக்குற நோய். மருந்துக் கடைக்குப் போறப்போ, இந்த மாதிரி பெண்களைப் பாக்கலாம். யாரோ ஒரு பெண், “கை, கால் குடைச்சல். ஏதாவது மாத்திரை குடுங்க’ன்னு கேட்டுக்கிட்டு இருப்பாங்க. அந்தப் பெண்ணைப் பார்த்தா, வலியால் அவதிப்படுவது போல் தெரியாது. யாரிடமாவது சொன்னால், அவர்கள் நம்பக் கூட மாட்டார்கள். ஆனா, அந்தப் பெண் வலியால கடுமையா பாதிக்கப்பட்டிருப்பார். இந்த நோய்க்கும் வலி நிர்வாகத்துறை சிகிச்சையில Trigger Point Injections மூலமாக குணம் பெறலாம். மாதவிடாய் காலங்கள்லயும், மெனோபாசுக்கு அப்புறமும், பெண்களுக்கு ஏற்படுற தாங்க முடியாத வலிகளுக்கும் நிவாரணம் உண்டு.


இந்த சிகிச்சைகளில் Fluroscopy Guided Intervention, Ozone Discectomy/Ozone Injection, Radio Frequency/Pulse RF Abalation, Botox Injection Therapy, Spinal Cord Stimulatory Implant, Intrathecal Pump Implant, Advanced Physio Therapy போன்ற மருத்துவ சிகிச்சை முறைகள் அவற்றில் முக்கியமானவை.


– டாக்டர் பிரபு திலக்,
புதுடில்லி.
வலைதளம்: www.painwin.com

`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை!

இந்தியர்களாகிய நாம், கருகரு முடியைத்தான் விரும்புவோம். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் இயற்கை நமது கேசத்துக்கு வெள்ளையடித்தாலும், நாம் சாயம் பூசி `கறுப்புக் கிரீடம்’ சூடவே ஆசைப்படுகிறோம். கரிய முடி என்பது இளமையின் அடையாளம் என்பது நமது எண்ணம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். புதிதாக, தலைமுடி நரைப்பதைத் தடுக்கும் ஒரு மாத்திரையைப் பழச் சாறில் இருந்து தயாரித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.

சர்வதேச அழகுசாதன நிறுவனம் ஒன்று, பத்தாண்டு கால ஆய்வுக்குப் பின் இந்த மாத்திரையைத் தயாரித்திருக்கிறது. நான்காண்டுகளுக்குள் இது சந்தைக்கு வந்துவிடுமாம்.

இன்று உலகெங்கும் ஆண்களும், பெண்களும் தலைச்சாய பாட்டில்களை வாங்கிக் குவிக்கிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. இந்நிலையில், தங்களின் கண்டுபிடிப்பு ஒரு புதிய புரட்சியாக அமையும் என்று குறிப்பிட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வில் ஈடுபட்ட ரோம உயிரியல் துறைத் தலைவர் புரூனோ பெர்னார்டு கூறுகையில், “ஆண்கள், பெண்கள் மத்தியில் இது முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்கள் ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்வதைப் போல இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை ஒன்றும் அதிக விலையுள்ளதாக இருக்காது” என்கிறார்.

இந்த மாத்திரை, வெளியே கூறப்படாத ஒரு பழத்தின் கூட்டுப்பொருளைப் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட கூட்டுப்பொருளானது, நமது உடம்பில் நிறமி உற்பத்தியைப் பாதுகாக்கும் என்சைமான `புரோட்டீன் 2’வைப் போலவே செயல்படுகிறது.

`ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்ற நிலைதான் நமது தலைமுடியை நரைக்கச் செய்கிறது. அதாவது, முடிச் செல்கள் தீமை பயக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்களால் பாதிக்கப்படுவது.

நரைத்த முடியை மேற்கண்ட மாத்திரை திரும்பக் கருக்கச் செய்யாது, ஆனால் நரைப்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலன் தரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நன்றி-தினத்தந்தி

நல்லதையே சிந்திப்போம்!-நவ., 10 – ஐப்பசி பவுர்ணமி!

“அன்னம் பரப்பிரம்மம்’ என்பர். ஆம்… உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.
அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்…
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா’ என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது.
“அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… நேற்று விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்’ என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்.
“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…’ என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை!
முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.
ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே… அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?’ எனக் கேட்டான்.
“மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…’ என்றார்.
“சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…’ என்றான்.
“பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…’ என்றார் முனிவர்.
“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…’ என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.
உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பிரசாதத்தை “ப்ர+சாதம்’ என சொல்ல வேண்டும். “சாதம்’ சாதாரண உணவு; “ப்ர’ என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்’ ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.
தஞ்சை பெரிய கோவிலில், நூறு மூடை அரிசி சமைத்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும்.
பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் சாப்பிடும் சாப்பாடே பிரசாதம் ஆகிவிடும். இனியேனும் செய்வோமா!