Daily Archives: நவம்பர் 10th, 2011

கர்ப்பகால கவனிப்பின் 10 வழிகள்

1.தகுந்த அளவு உணவு

தானியவகைகள்,,முடை,இறைச்சி,பால்,பழவகைகள்,காய்கறி வகைகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்

2.உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள்

நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் ஆரம்பத்திலிருந்து கற்பம் தரித்த 12வாரங்கள் போலிக் அமில மாத்திரையை தினமும் 400அப  மாத்திரையை தவறாமல் எடுக்க வேண்டும்.ஏனெனில் முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

3.மது அருந்துவதை நிறுத்த வேண்டும்

மது அருந்துவது குழந்தைக்கு தீங்கு விளைவிக்ககூடிய தொருசெயல்.அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும்.

4.புகை பிடித்தலை தவிர்த்தல்

நீங்கள் கற்பம் தறிக்க எண்ணிய நேரத்திலிருந்து புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும்.புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

5.டோக்சோ பிளாஸ்மோசிஸ்

இது கற்பகாலங்களில் ஒட்டுண்ணியால் ஏற்படகூடிய ஒரு வகை நோய்.இந்நோய் கற்பங்காலங்களில் ஏற்படின் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான நோய்களை ஏய்படுத்தும்.அனைத்து விதமான உணவுகளை உண்ணும் போதும் நன்கு கழுகி,வேகவைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

6.பரிசோதனை நேரம்:

கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

7.தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

8.ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.

9.தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

10.மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

ட்ரைவர் புரோகிராம் பேக் அப்

சில வேளைகளில் உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது விண்டோஸ் சிஸ்டத்தில் மாறா நிலையில் (by default) இல்லாத சில ட்ரைவர் புரோகிராம்களும் தேவையாயிருக்கும். நம்மிடம் ஒரு காலத்தில் தரப்பட்ட ட்ரைவர் சிடிக்கள் காணாமல் போயிருக்கும். அல்லது இடம் மாறி, தேடினாலும் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்திலிருந்து தான் அவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில நமக்குப் பயன்படுத்தும் நிலையில் கிடைக்காது. சில இயங்காது. இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்குப் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும்.
இது போன்ற சிக்கல்களில் நமக்கு உதவிட ஈணிதஞடூஞு ஈணூடிதிஞுணூ என்ற இலவச புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து ட்ரைவர்களையும் தேடிக் காட்டுகிறது. அத்துடன் அவற்றை பேக் அப் செய்து பின்னாளில் பயன்படுத்தத் தருகிறது. இது நிச்சயமாய் நமக்குப் பெரிய உதவியாய் தான் இருக்கும். இது எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம்.
1. முதலில் http://doubledriver.en.softonic. com/?gclid=CLycloHVjawCFU0a6wodbmCrng என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து Double Driver என்னும் இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதியவும். இதனை முதலில் திறக்கையில், காலியாக ஒரு விண்டோ காட்டப்படும்.
2. இந்த விண்டோவில் மெனு பார் கீழாகக் காணப்படும் “Scan” என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். உடனே உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும். அப்போது, காலியாகக் காட்டப்பட்ட விண்டோவில்,கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ட்ரைவர் புரோகிராம்கள் காட்டப்படும். உங்களிடம் விண்டோஸ் இன்ஸ்டலேஷன் சிடி இருந்தால், அதில் உள்ள மைக்ரோசாப்ட் தந்துள்ள ட்ரைவர் புரோகிராம்கள் தவிர்த்து மற்ற புரோகிராம்களின் ட்ரைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.
3. அனைத்து ட்ரைவர் புரோகிராம்களையும் பேக் அப் எடுக்க, backup டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். உடன் அனைத்து ட்ரைவர் புரோகிராம்களும் ஸிப் செய்யப்பட்டு ஒரு பைலாகத் தயார் செய்யப்படும்.
இதனை சிஸ்டம் ட்ரைவ் இல்லாத இன்னொரு ட்ரைவ் அல்லது ஸ்டோரேஜ் மீடியாவில், சேவ் செய்து வைத்திடலாம். பின்னர், எப்போது தேவைப் பட்டாலும், இந்த பைலை விரித்து, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!

கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம், சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது. படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட, வலியை ஏற் படுத்தி, கழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம். கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவது, வெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம். ஒரே கோணத்தில், வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால், சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து நேராகவும், முதுகுப் பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும். இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது. தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும், கழுத்து வலி ஏற்படும். “போம்’ தலையணைகளை விட, இறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான், கழுத்து, தலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.

கம்ப்யூட்டர் முன், மணிக் கணக்காக அமர்ந்து பணிபுரிவோர், கழுத்தை சாதா நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர், வேலையில் அதீத கவனம் செலுத்தும்போது, கழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர்.
நெடுநேரம் இப்படி வைத்திருந்தால், கழுத்தில் வலி ஏற்படும். நாள்பட்ட இந்த பழக்கம், கழுத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்ப, உங்கள் டேபிள், மானிட்டர், நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.

சிலர், காலுக்கு, உயரம் குறைந்த பெஞ்ச் போட்டு அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்க, கம்ப்யூட்டர் மானிட்டரை முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக் கொண்டால், பார்வை கெடும்; அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம். தேவைப்பட்டால், கண்ணாடி அணிந்து கொள்ளலாம். நீங்கள் சரியான முறையில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதை, உங்கள் உடலியல் சிகிச்சை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை சீராக இயக்கும் வகையில், அவற்றின் மீது பாதம் வைத்துக் கொள்வதும் அவசியம் என்பதால், அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் சீட்டை சரி செய்து கொள்ள வேண்டும்.

வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? கழுத்தில் ஐஸ் கட்டி, சூடு ஒத்தடம் ஆகியவற்றை, மாறி மாறி வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள், ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும், வீக்கமும் சீக்கிரம் குறையும். நாற்பது நிமிட இடைவெளியில், 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
– டாக்டர் பி.நாகராஜ்
வலைதளம்: www.pmnspeciaality.com