காரட் சாதம்


தேவையானவை

பச்சரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பெரிய சைஸ் காரட் – 3
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* அரிசியை வேக வைத்து சாதத்தை உதிரியாக ஆற வைக்கவும்.

* வாணலியில் எண்ணைய் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு வதக்கவும் காரட்டை துருவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* பச்சை வாசனை போகும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். சிறிதுஎண்ணையில் தனியா, சீரகம், வரமிளகாய், தேங்காய் துருவலை வறுத்து பொடியாக்கவும். ஆறிய சாதத்துடன் வதக்கிய காரட் மசாலா பொடி உப்பு சேர்த்து அனலில் சில நிமிடங்கள் வைத்து சூடாகப் பரிமாறவும். வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

%d bloggers like this: