Daily Archives: நவம்பர் 16th, 2011

சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான “டிப்ஸ்”

திருமணம் என்பதை “ஆயிரம் காலத்து பயிர்” என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள்  சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற  பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.
ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய  திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால்  நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.
பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. (ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை). கணவனது  குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை  அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர்வீட்டார் கூறும் பொய்கள்தான் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.
இதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண்,  ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம்  ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.
பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்
பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க  வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை  இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி  தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.
விட்டு கொடுங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து  கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம்  வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது  வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை,  நிதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர்  விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.
ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து  கொள்கிறேன்.
அன்பு / அரவணைப்பு
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது “I LOVE YOU” சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள்,  அதற்க்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில  ரொமான்ஸ்களை செய்யுங்கள்.
இல்லற சந்தோஷம் பொங்க 
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

அன்பும் அரவணைப்பும் அவசியம்

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு வரும் பெண்களுக்கு கிடைக்கும் மன அமைதியே கணவரின் அணைப்பில் கிடைக்கும் தாம்பத்ய சுகம்தான். அதிலும் அவசரத்துடன் செயல்பட்டால் ஆண்கள் மீது கோபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரியம் முடிந்ததென்று கால்நீட்டி படுத்துவிடும் கணவர்கள் மீது நாளுக்கு நாள் வெறுப்புதான் அதிகமாகும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ‘தி ஜர்னல் ஆப் செக்ஸூவல் மெடிசின்’ என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

சுயநலம் மிக்க ஆண்கள் 

5600 ஜப்பானிய பெண்களிடம் இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் பேர், செக்ஸ் உறவுக்குப் பின்னரும் கூட நீண்ட நேரம் தங்களது பார்ட்னர் தங்களுடன் சேர்ந்திருப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

44 சதவீதம் பேர் ‘முன் விளையாட்டை’ அதிகம் விரும்புவதாக கூறியுள்ளனர். அதாவது கிளைமேக்ஸை விட முன் விளையாட்டுதான் தங்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

38 சதவீதம் பேர் நீண்ட நேர உடலுறவே தங்களுக்குப் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 38.8 சதவீதம் பேர் செக்ஸ் விளையாட்டுக்கள், முறைகள் குறித்து தங்களது பார்ட்னர்களுடன் விவாதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், தங்களது பார்ட்னர்கள், செக்ஸ் விஷயத்தில் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் பொதுவாக உள்ளதாம். கருத்துக் கணிப்பி்ல கலந்து கொண்டவர்களில் 30 சதவீதம் பேரில், 25.5 சதவீதம் பேர் தங்களது பார்ட்னர்கள், சுய நலம் மிக்கவர்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். 6.9 சதவீதம் பேர் அதிக சுயநலம் என்கிறார்கள்.

கணவர் மீது கோபம்

காதல் கனிந்து உறவைத் தொடங்கும்போது நடத்தப்படும் முன் விளையாட்டு க்கள் ஒரு ஆரம்பம்தான். ஆனால் விளையாட்டு முடிந்த பின்னர்தான் பெண்களின் உணர்வுகள் பொங்கிப் பெருகுமாம்.

அந்தசமயத்தில், அதை பொருட்படுத்தாமல் அல்லது கவனிக்காமல், அரவணைத்து அமைதிப்படுத்தாமல், தூங்கப் போகும்போதுதான் ஆண்கள் மீது பெண்களுக்கு கோபம் கோபமாக வருமாம்.

அன்பும் அரவணைப்பும்

முன் விளையாட்டு மட்டுமல்ல, உறவுக்குப் பிந்தைய நெருக்கமும், அன்யோன்யமும், அரவணைப்பும் கூட ரொம்ப முக்கியமாம். அப்போதுதான் அவர்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படுகிறதாம்.

ஆண்களுக்கு உடலுறவு மட்டுமே முக்கிய நோக்கம். அந்த ‘டார்கெட்’டை முடித்தவுடன் ‘ரிடயர்ட்’ ஆகி விடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது.
அதேசமயம், உடலுறவை முடித்த பின்னரும் கூட நீண்ட நேரம் தலையைக் கோதியபடியோ அல்லது அரவணைத்தபடியோ இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

இப்படிப்பட்ட உறவுதான் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் பெண்கள் கருதுகிறார்கள். அப்படிச் செய்யும் ஆண்கள் மீதுதான் பெண்களுக்கு காதல் உணர்வு பொங்கி வழியுமாம்.

கோடாக மாறும் ஹைபனை நீக்க

வேர்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஹைபன்களை டைப் செய்கையில் அது நீண்ட படுக்கைக் கோடாக மாறிவிடும். இதில் என்ன பிரச்னை என்றால் இதனை பேக் ஸ்பேஸ் அல்லது வேறு கீகளால் அழிக்க முடியாது. அப்படியே நிற்கும். ஏனென்றால் வேர்டைப் பொறுத்தவரை அது ஒரு பார்டர் லைன். இதனை நீக்க வேண்டுமென்றால் அந்த கோட்டிற்கு மேலாக இடது தொடக்கத்தில் கர்சரை வைத்துப் பின் Format | Borders and Shading, எனச் சென்று None என்பதனை செலக்ட் செய்திடவும். கோடு நீங்கிவிடும். மீண்டும் இந்த பிரச்னை வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். Tools மெனுவில் | Auto Correct Options தேர்ந்தெடுக்கவும். விரியும் விண்டோவில் Auto Format As You Type என்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில் Apply as you type என்ற பிரிவில் Border Lines என்பதற்கு அருகில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் அடிக்கும் ஹைபன்கள் அப்படியே தான் இருக்கும். பார்டர் லைனாக மாறாது.

உங்கள் முதலீடுகளை கண்காணியுங்கள்

சேமிப்பு, இன்சூரன்ஸ், எதிர்கால தேவைகள் என்று பல்வேறு அடிப்படையில் ஒவ்வொருவரும் பணத்தை சேமிக்கின்றனர். இந்த சேமிப்பின் ஒருவகையாக சிலர் பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்டு, மற்றும் இன்சூரன்சு திட்டங்களில் முதலீடு செய்வதுண்டு.

சிலர் இந்த நிதி முதலீடுகளை கவனமாக கண்காணித்து வருவார்கள். சிலர் வருமான வரி நெருக்கடியை தீர்க்க அந்த நேரத்தில் எந்த திட்டம் வசதியாக இருக்கிறதோ அதில் பணத்தை செலுத்தி விடுவார்கள். பின்னர் அதுபற்றி மறந்து போவதும் உண்டு.

எந்த திட்டத்தில் எப்போது சேர்ந்தோம் என்பது உங்களுக்கு மறந்து போகிறதா? அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவது எப்படி? என்பது போன்ற தகவல்களை இந்த வாரம் பார்க்கலாம்.

என்ன நடக்கிறது?

சிலர் வருமான வரி சலுகைகள் (Tax Concessions) பெறுவதற்காக, பங்கு முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (Equity linked mutual fund schemes) முதலீடு செய்வதுண்டு. இவ்வாறான முதலீடுகள் வருடத்திற்கொரு முறை வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80சி யின் கீழ் செய்யப்படுபவை. இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளை 3 ஆண்டுகளுக்கு திரும்பப்பெற இயலாது (lock in period) என்ற நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கும். எனவே, முதலீடு செய்பவர்கள் அந்த முதலீடு குறித்த எந்த தகவல்களையும் முறையாக பாதுகாப்பதில்லை.

மேலும், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் (Mergers and Acquisitions) என்ற பெயரில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைகிற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்ட ஒன்று. நிறுவனங்களின் இணைப்புக்குப்பின் திட்டங்களின் பெயர்கள் மாறலாம்; அல்லது ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட திட்டங்களை இணைக்கலாம். அவ்வாறே, ஒரே பரஸ்பர நிதி நிறுவனமே கூட திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும் உண்டு.

இது போன்ற மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் பரஸ்பர நிதி நிறுவனங்கள், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மாற்றம் குறித்த தகவல்களை கடிதமாக அனுப்பி வைப்பது வழக்கம். இந்த மாற்றம் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் திட்டத்தில் தொடரலாம்; இல்லையெனில் அபராதங்கள் ஏதுமின்றி திட்டத்தை விட்டு வெளியேறலாம். அது உங்கள் விருப்பம்.

இனி என்ன செய்வது?

திட்டத்தில் நீங்கள் தொடர விரும்பினால், உங்களுக்கு வந்த அந்த தகவல் தொடர்பை கண்டிப்பாக பத்திரப்படுத்துங்கள். அதன்பின், உங்களுக்கு வரும் அனைத்து கடிதங்களும் திட்டத்தின் தற்போதைய, அதாவது புதிய பெயருடனேயே வரும்.

கடிதங்கள் காணாமல் போனால்….?

துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு பாதுகாக்க நீங்கள் தவறி விட்டீர்களென்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் திட்டத்தின் பழைய பெயரிலுள்ள முதலீட்டு சான்றிதழோ (Investment Certificate) அல்லது கணக்குப்பட்டியலோ (Statement of Account) அல்லது ஏதாவது குறிப்புக்களோ கிடைத்தால், இணைய தளத்தில் அந்த பழைய பெயரை குறிப்பிட்டு தேடுங்கள், அநேகமாக இணையதளம் உங்களுக்கு உதவக்கூடும்.

ஒருவேளை இது பலன் தரவில்லை என்றால், நாட்டிலுள்ள 45 பரஸ்பர நிதி நிறுவனங்களையும் தேடி அலைவதை விடுத்து, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ், கார்வீ கம்ப்யூட்டர் ஷேர், பீ என் பி பரிபா நிதி சேவை போன்ற முக்கியமான பெரிய ஒரு சில பதிவாளர்களை (Registrars) அணுகுங்கள். அல்லது, அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் (Agents or Financial Consultants) விசாரித்துப்பாருங்கள். உங்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள்.

விலாச மாற்றத்தை தெரிவிக்கவும்

ஏதாவது ஒரு விலாசத்தில் குடியிருக்கும் போது முதலீடு செய்திருப்பீர்கள்; குடியிருக்குமிடமும் அலுவலகமும் மாறியிருக்கும்; அப்போதெல்லாம் உங்கள் முதலீடு உங்களை பின் தொடர்வதில்லை. ஏன்? முகவரி மாற்றத்தை நீங்கள் நிதி நிறுவனங்களுக்கு தெரிவிப்பதில்லை. உங்கள் முதலீட்டுக்கணக்கு பட்டியல் உங்களது பழைய முகவரிக்கே வந்து கொண்டிருக்கும்.

இதற்கு தீர்வு…..?

உங்கள் வாடிக்கையாளர்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் கே. ஒய். சி. (Know your customer K Y C) என்கின்ற கோட்பாடு இன்று அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி, உங்கள் முகவரி மாற்றத்தை தெரிவிக்கலாம். எனவே, உங்களது தகவல்களில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் கே.ஒய்.சி. தான் ஒரே வழி, மாற்றங்களை அறிவிப்பதற்கு.

மாற்றாக, மின்னஞ்சல் முகவரியை முதலீட்டுக்காக மனு செய்யும் போதே பதிவு செய்யுங்கள். அப்போது விடுபட்டிருந்தால், இப்போது கூட மேற்சொன்ன பதிவாளர்கள் இதற்கான வழிகளை ஏற்படுத்தி தர முடியும்.